பெருங்கதை/2 20 சண்பையுள் ஒடுங்கியது

(2 20 சண்பையுள் ஒடுங்கியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 20 சண்பையுள் ஒடுங்கியது

காதலின் குற்றத்தை உதயணனுக்குத் துணிவுடையோர் உணர்த்தி விலக்கல்

தொகு

துணிவுடை யாளர் துன்னினர் குழீஇ
அணியுடையண்ணற் கமைந்தமை காட்டிப்
படுதிரைப் பௌவத்துக் கடுவளி கலக்கப்
பொறியவிழ்ந்து கவிழ்ந்த பொருகலத் துய்ந்தோர்
நெறிதிரிந் தொரீஇ நீத்துயிர் வழங்காத் 5
தீவகம் புக்குத் தாவகங் கடுப்பப்
பெருந்துய ருழக்கு மருந்துபசி மூளத்
திண்ணிலை வரைப்பிற் சினைதொறுஞ் செறிந்து
கண்ணவை யுறூஉங் கனிபல கண்டவை
நயவரு நஞ்செனப் பெயர்தெரி வின்மையின் 10
ஊழுறுத் தக்கனி தாழ்விலர் வாங்கித்
துன்ப நீக்குந் தோற்றமு மன்றி
இன்ப நாற்றமு மியைந்தன விவையென
நச்சுபு தெரிந்த நாற்றமுஞ் சுவையும்
ஒப்புமை யின்மையி னுயிர்முத றாங்க 15
அமரர் காட்டிய வமுதுநமக் கிவையெனப்
பசிநோய் தீர வயிறலிற் கதுமெனத்
தசைபோழ்ந்து கழற்றித் தபுத்திசி னாங்குத்
தாமரைச் செங்கட் டகைமலி மார்ப
காமத் தியற்கையுங் காணுங் காலை 20
இறுதியி லின்பமொ டினியது போல
உறுபய னீனா வுடம்பு முத றபுத்தலிற்
பெறுபய மிதுவெனப் பேணார் பெரியோர்
வெற்றித் தானையொடு விசயம் பெருக்கிக்
கொற்றம் வேண்டாய் பற்றொடு பழகிய 25
ஆர்வப் புனலகத் தழுந்துவை யாயின்
ஊர்கடல் வரைப்பி னாருயிர் நடுக்குறீஇப்
பெரும்பே துற்று விளியுமற் றதனாற்
கரும்பேர் கிளவிக் கனங்குழை திறவயிற்
கழுமிய காதல் கைவிடல் பொருளெனக் 30
காமத்துக் கடையுங் காதற் குற்றமும்
ஏமாப் பிலவென வெடுத்துரை நாட்டி
அமைச்சத் தொழிலர் விலக்குபு காட்ட

யூகி முதலியோர் ஒரு மலைச்சாரலுக்குச் செல்லுதல்

தொகு

இகுப்ப மொடுங்கிய வியல்பின னாகிய
அண்ண னிலைமை திண்ணிதி னறிந்து 35
வண்ணக் கோதை வாசவ தத்தைக்குக்
காதற் கணவ னேத மின்மை
அறியக் கூறி யகல்வது பொருளெனப்
பொறியமைத் தியற்றிய பொய்ந்நிலம் போகி
வேண்டிய வளவிற் காண்டகக் கூட்டிக் 40
கரந்துநிற மெய்து மரும்பெறல் யோகம்
யாவரு மறியாத் தன்மைத் தாக
மூவரு முண்டு வேறுநிற மெய்தி
அந்தண வுலுவொடு சந்தனச் சாரற்
பெருவரை யடுக்கத் தருமைத் தாகிய 45
கல்சூழ் புல்லதர் மெல்லடி யொதுங்கிப்
பிரிவுதலைக் கொண்ட வெரிபுரை வெந்நோய்
தலைரை நீரிற் றண்ணெனத் தெளித்து
முலைமுதற் கொழுந னிலைபெற வேண்டும்
உள்ள வூர்தி யூக்கம் பூட்டக் 50
கள்ளக் காத றாங்கின ளாகி
இமிழ்வினை விச்சையி னிடுக்கட் பட்ட
மகிழ்மணி நாகர் மடமகள் போல
யூகி நீதியிற் பேதைபிணிப் புண்டு
வேண்டுவயிற் சென்ற காலை யாண்டே 55

ஓர் ஆச்சிரமத்தின் வருணனை

தொகு

தண்கோ லல்லது வெங்கோல் புகாஅச்
செங்கோ லாளன் சேதியம் பெருமலைத்
தாண்முதற் றழீஇ நாண்மதுக் கமழும்
கற்சுனை நீலமுங் கணிவாய் வேங்கையும்
நற்சினை நறவமு நாகமு நந்தியும் 60
பருவ மன்றியும் பயங்கொடுப் பறாஅப்
பலவு மாவுங் குலைவளர் வாழையும்
இருங்கனி நாவலு மிளமா துளமும்
ஒருங்குடன் கஞலி யுள்ளம் புகற்றும்
மாசின் முனிவரொடு மகளிர் குழீஇயதோர் 65
ஆசில் பள்ளி யறிந்துமுன் னாடி

யூகி முதலிய மூவரும் முனிவனாச்சிரமத்தில் இருத்தல்

தொகு

மற்றத னகவயிற் றெற்றெனத் தெரியும்
உருமண் ணுவாவின் பெருமுது குரவன்
அவமில் சூழ்ச்சித் தவமுது மகனொடு
கருமங் கூறிக் கண்ணுற்றுப் பிரியார் 70
அணித்துஞ் சேய்த்து மன்றி யமைவுற
மணிப்பூண் மாதரு மனம்புரி தோழனும்
காதற் செவிலியுங் கரந்தவ ணொடுங்கி
மாதவர்த் தெரீஇ மரீஇ யொழுகப்

சாங்கியத்தாயின் செயல்

தொகு

பள்ளியும் பதியு மலையுஞ் சேணிடத் 75
துள்ளவை யுரைத்துத் தள்ளாத் தவநெறி
அற்றந் தீர வுற்றுப்பிரிந் தொழுகிய
உருவுடை முதுமக ளொருவயிற் றியன்றமை
நீப்பிடந் தோறும் யாப்புற வறிவுறீஇ
நாட்ட வொழுக்கொடு நன்னுத லிவளை 80
வேட்டோன் விட்டுக் காட்டக நீந்திக்
குண்டுநீர்க் குமரித் தெண்டிரை யாடிய
போயின னென்னும் பொய்ம்மொழி பொத்தித்
தீவினை யாளரைத் தெளியக் கூறி
வாய்மொழி யாக வலித்தனள் வழங்கி 85
மறுவின் மன்னற் குறுதி வேண்டித்
தண்டழை மகளிரொடு தலைநின் றொழுகக்

காஞ்சனமாலையின் வரவு

தொகு

கண்டனி ருளிரோ காவலன் மகளையென்
றொண்டிடொடிக் காஞ்சனை யுயிர்நனி நில்லாச்
செல்ல நோக்கிச் செயற்பாற் றிதுவென 90
ஒல்லு நண்பி னுருமண் ணுவாவவட்
கொண்டனன் வந்து கோமகட் காட்டிக்
கருமக் காரண மவளவயிற் பேசி
விண்டலர் கழுநீர் வென்ற கண்ணியொடு
தலைப்படுத் தனனாத் தானவட் போகி 95
வண்டுள ரைம்பால் வயங்கிழை மாதரை
ஆற்றுவித் தோம்பிப் போற்றுபு தழீஇ
நீங்கல் செல்லா நெறிமையி னோங்கி

யூகி முதலிய நால்வரும் சண்பைநகருக்குச் செல்லுதல்

தொகு

யாங்கினி திருத்துமென் றறிவினிற் சூழ்ந்து
பற்றா ராயினு முற்றா ராயினும் 100
ஒற்றுவ ருளரெனி னறறந் தருமென
மற்றவ ணொடுங்கார் மறைந்தனர் போகி

சண்பை நகரின் சிறப்பு

தொகு

உருமண் ணுவாவின் பெருமுது குரவன்
அவமில் சூழ்ச்சித் தவறி றோழன்
பெரும்புனற் கங்கை பெருவளங் கொடுக்கும் 105
அங்க நன்னாட் டணிபெற விருந்த
தெங்குநிக ரில்ல தெழிற்கிடங் கணிந்தது
பொங்குமலர் நறுந்தார்ப் புனைமடிப் பொங்கழல்
விச்சா தரருந் தேவ குமரரும்
அச்சங் கொள்ள வாடுகொடி நுடங்கிச் 110
சத்திக் குடத்தொடு தத்துற லோம்பி
விளங்குபு துளங்கும் வென்றித் தாகி
அளந்துவரம் பறியா வரும்படை யடங்கும்
வாயிலும் வனப்பு மேவிவீற் றிருந்து
மதிலணி தெருவிற் றாகி மற்றோர்க் 115
கெதிரில் போக மியல்பமை மரபொடு
குதிரையுங் களிறுங் கொடுஞ்சித் தேரும்
அடுதிறன் மள்ளரும் வடுவின்று கரப்ப
நெடுமுடி மன்னருண் மன்ன னேரார்
கடுமுர ணழித்த காய்சின நெடுவேற் 120
படுமணி யானைப் பைந்தார் வெண்குடை
உக்கிர குலத்து ளரசரு ளரசன்
விற்றிறற் றானை விசயவர னென்னும்
நற்றிறன் மன்ன னாளுங் காக்கும்
சண்பைப் பெருநகர்ச் சால்பொடும் விளங்கிய 125

யூகி முதலியோர் மித்திரகாமன் வீட்டில் மறைந்திருத்தல்

தொகு

முட்டில் வாழ்க்கைச் செட்டியர் பெருமகன்
மித்திர காமன் மிக்குயர் பெருமனை
வத்தவன் காதலி வாசவ தத்தையென்
றத்தக வறிந்தோ ரவ்விடத் தின்மையின்
ஆப்புடை நண்பி னந்த ணாட்டியும் 130
நீப்பருங் காத னிலைமைத் தோழியும்
ஓங்கிய பெரும்புகழ் யூகியு முகவாக்
காப்பொடு புறநகர் மேற்படி பிழையாப்
பூங்குழன் மாதரொடு புகுந்தன ராகி
ஆங்கினி திருந்தன ரவ்வழி மறைந்தென். 135

2 20 சண்பையுள் ஒடுங்கியது முற்றிற்று. இரண்டாவது இலாவாணகாண்டம் முற்றுப்பெற்றது.