அட்டவணை பேச்சு:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf

தொகுத்தல் குறிப்புகள்

தொகு

மேலடி

தொகு
  • நூலட்டையை மெய்ப்பு அட்டவணையில் இணைப்பதைத் தவிர்ப்போம். ஏனெனில், அது கருப்பு வெள்ளை படமாக இருந்தால் ஓரளவு காப்புரிமையைத் தவிர்க்கும் என்றே எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 01:38, 24 அக்டோபர் 2024 (UTC)Reply
  • அச்சாகியுள்ள எண்ணுக்கும், உரலியெண்ணுக்கும் வேறுபாடு 1 (ஒன்று) ஆகும்.

எழுத்துணரியாக்கம்

தொகு
  • வேண்டுகோள் : @TI Buhari: இந்நூலுக்கு கீழ்கண்ட எழுத்துணரியாக்கத் தரவுகளை செய்து விட்டேன். இருப்பினும், இதனை மேம்படுத்துவரின் குறிப்பு அறிந்து மேலடிகளையும், இன்னும் சிறு மேம்பாடுகளையும் செய்ய உள்ளேன். எனவே, இந்நூலுக்கு எழுத்துணரியாக்கம் செய்வதைத் தவிரக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அட்டவணை பேச்சு:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf என்ற நூலுக்கு இருவரும் ஒரே நாளில் எழுத்துணரியாக்கம் செய்திருப்பதை உணர்ந்தேன். அதனால் இந்த வேண்டுகோள். மேலும், ஒரே நேரத்தில் பலர் ஒரு அட்டவணையைச் செய்யும் போது, எவற்றையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதலுக்காக, பலரையும் இந்த அட்டவணையில் ஈடுபடுத்த எண்ணுகிறேன். நிதி பெற்று, நம் விக்கிமூலத்திற்கான மேலதிக கற்றலுக்குத் திட்டமிட்டு வருகிறேன். அதற்கு இது ஒரு சோதனை ஓட்டமாக அமையும் என நம்புகிறேன்.
  • @Arularasan. G: Indic OCR முறையில் சோதனைக்காக 50 பக்கங்களுக்குச் செய்கிறேன். ஏனெனில் பத்தியாக்கம், மற்ற முறைகளை விட சிறப்பாக இருக்கும். யாரேனும் மேம்பாடு செய்திருந்தால் அப்பக்கத்தினைத் தவிர்த்து, தரவினை எனது தானியங்கி கணக்குகளில் ஒன்றான பயனர்:info-farmerBot ஏற்றும். பின்னூட்டங்களைப் பெற்ற பின்பே மீதமுள்ள தரவுகளை ஏற்றும்.--Info-farmer (பேச்சு) 02:30, 24 அக்டோபர் 2024 (UTC)Reply

தொடர்புடையன

தொகு

@Arularasan. G:

Info-farmer (பேச்சு) 00:39, 25 அக்டோபர் 2024 (UTC)Reply

இப்போது தொடங்கிய பணியையே முதலில் முடிக்கலாம் கு. அருளரசன் (பேச்சு) 00:43, 25 அக்டோபர் 2024 (UTC)Reply
சரி. பொதுவாக சனி. ஞாயிறு நாட்களில் பைத்தான் ஐயங்களை பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். இருப்பினும் அவ்வப்போது உங்களுடன் இணைந்து பங்களிப்பேன். Info-farmer (பேச்சு) 01:43, 25 அக்டோபர் 2024 (UTC)Reply
@Arularasan. G: @Info-farmer: ஐயன்மீர்

அட்டவணை:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf என்பது புதுமைப் பித்தனின் சிறுகதைகள் மட்டிலும் அன்று.

மாறாக, அவரின் சிறுகதைகள் குறித்து தொ.மு.சி அவர்களின் விமரிசனங்களும் மற்றும் “புதுமைப் பித்தன் ஒரு தழுவல் எழுத்தாளர்” என்பது போன்று புனையப்படும் பல்வேறு திட்டமிட்ட, தவறான பரப்புரைகளை முறியடித்தலுமே என்றே எண்ணுகின்றேன். ஏனென்றால், புத்தகத் தலைப்பே “புதுமைப்பித்தன் கதைகள்—சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்” என்பதாகும். இத்துடன், அவரது சிறுகதைகள் அனைத்தும் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

இந்நூலின் நோக்கம் என்ற தலைப்பில் தொ. மு. சி. ரகுநாதன் அவர்கள் நூலின் நோக்கம் குறித்து எழுதும் போது:

‘ஆனால் க.நா.சு.வும், அவரது சகபாடிகள் சிலரும், - புதுமைப்பித்தனின் இந்தத் தனிச் சிறப்பைப் புரிந்து கொள்ளவும் ஏற்கவும் முன் வராமல், முப்பதுகளில் எழுதி வந்த சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தனைக் காட்டிலும், திறமை மிகுந்த, அதிகமான சாதனைகள் புரிந்த சிறந்த கதாசிரியர்கள் சிலர் இருக்கவே செய்தனர். என்று வலியுறுத்தி, விமர்சனம் என்ற பெயரால் விஷமத்தனங்கள் புரிந்து, புதுமைப்பித்தனைப் பற்றிய சரியான மதிப்பீட்டையும், அவருக்கு உரிய அங்கீகாரத்தையும் வழங்குவதைத் தவிர்க்க முயன்றே வந்துள்ளனர் என்பதை அவர்களது எழுத்துக்களே நமக்குப் புலப்படுத்துகின்றன. அது மட்டும் அல்ல. புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா என்று முத்திரை குத்தும் முயற்சியையும் இவர்களில் சிலர் . மேற்கொண்டு வந்தனர்… (இந்தத் தழுவல் கதைகள் பற்றிய விவரங்களையும், உண்மை நிலைகளையும் இந்நூலில் பின்னர் பார்ப்போம்.) ’

‘புதுமைப்பித்தன் மீது புழுதி வாரித் தூற்ற முயன்று விஷமத்தனமாக எழுதி வந்த போக்கு எப்போது தொடங்கியது, என்னென்ன நோக்கங்களோடு தொடங்கியது, இத்தகைய போக்கும், நோக்கமும் இவ்வாறு எழுதி வந்தவர்களின் எழுத்துக்களிலும், கூற்றுக்களிலும் எவ்வாறு நேர்முகமாகவும், இலைமறை காய்மறையாக நாசூக்காகவும், நயவஞ்சகத்தனமாகவும் பிரதிபலித்தன என்பதையெல்லாம், தமிழ் வாசகர்களுக்கு, குறிப்பாக, புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட இலக்கிய ரசிகர்களுக்கு இனம் காட்டி உண்மை நிலைகளை எடுத்துரைப்பதே எனது இந்நூலின் நோக்கமாகும். ’

என்று புதுமைப் பித்தனைப் பற்றி, புனையப்பட்ட திட்டமிட்ட தவறான புரிதலைப் புலப்படுத்தலே / அம்பலப்படுத்துதலே தனது நூலின் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

TI Buhari (பேச்சு) 03:06, 25 அக்டோபர் 2024 (UTC)Reply
  • உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. ஆனால், அந்த அட்டவணையின் பேச்சுப்பக்கத்தில் இடுதலே மிகப்பொருத்தமாக இருக்கும், அங்கு எழுதி இங்கு இணைப்புத்தருதல் நன்று. ஏனெனில், அந்தந்த நூல் குறித்து, அதனதன் பேச்சுப்பக்கத்திலேயே இனி உரையாடுவோம்.
  • உங்கள் எண்ணங்களால் தூண்டப்பெற்றேன், நன்றி. அந்த நூலினை தானியக்க மேலடிச் சோதனைக்கு எடுத்துக் கொண்டு ஓரிரு நாட்களில் அதற்குரிய மேலடிகளை இடுவேன். நீங்களும் அந்நூலின் மேம்பாட்டு பணிகளை செய்து தாருங்கள். என் நண்பனின் மனைவியும், நண்பரும் ஒலிப்புத்தகமாக உருவாக்க உள்ளனர்.
Info-farmer (பேச்சு) 03:49, 25 அக்டோபர் 2024 (UTC)Reply
ஐயா,
தங்கள் புறமிருந்து, இந்நூலுக்குரிய பணிகள் நிறைவுற்றதும் தெரிவித்தால், .இன் ஷா அல்லாஹ், மெய்ப்புப் பணியில் ஈடுபட ஏதுவாக இருக்கும். மேலும், இந்த உரையாடல் அந்நூலின் பேச்சுப் பக்கத்தில்தானே இடம் பெற்றுள்ளது?

TI Buhari (பேச்சு) 04:05, 25 அக்டோபர் 2024 (UTC)Reply

படியிடல்

தொகு

ஆண்மை என்ற புதுமைப் பித்தனின் சிறுகதைத் தொகுப்பினை, 2010 ஆம் ஆண்டு தொடங்கி முடித்துள்ளனர். எளிமையாக முடிக்கலாமே என்றெண்ணி, அதனைப் படியெடுத்து பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/208 என்ற பக்கத்தில் இட்டேன். ஆனால், ஏறத்தாழ இருபது சொற்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருந்தது. எனவே, இதனை எண்ணி, ஒருமுறை சரிபார்த்து சேமிக்கக் கேட்டுக் கொள்கிறேன். Info-farmer (பேச்சு) 02:05, 25 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf" page.