அறிவுக் கனிகள்/உலோபம்
765. செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.
லா புரூயர்
766. உலோபியிடம் எது உண்டு? எது இல்லை? அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா
பப்ளியஸ் ஸைரஸ்
767. உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான்.
பென்
768. உயர்ந்த நன்மைகள்—அவைகளைப் பணத்தால் பெற முடியாது. பெரிய தீமைகள்—அவைகளைப் பணத்தால் பெற முடியாது. இதை உணர்ந்துவிட்டால் பணஆசை என்னும் நோய் எளிதில் நிவர்த்தியாய்விடும்.
கோல்ட்டன்
769.திருடரில் திருடன் இங்கே உளன், அவன் தன்னையே கொள்ளையிட்டவன்.
உலோபியின் கல்லறை எழுத்து
770.உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், —மனிதப் பிறவிகளுங்கூட ஆகார்.
லா புரூயர்
771.உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர்.
லெஸ் ஜெனஸ்கி
772.சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும்.
புல்லர்