அறிவுக் கனிகள்/சிக்கனம்

44. சிக்கனம்

756. சிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.

ஸதே

757.சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.

ஜாண்ஸன்

758.தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச் சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.

பென்

759.சிக்கனம்—அதுவும் ஒரு வித வருமானமே.

ஸெனிக்கா

760.வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.

பிராங்க்லின்

761.தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று; குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.

பென்

762.வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.

ப்ளுட்டார்க்

763. சிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.

பழமொழி

764. செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.

ஜாண்ஸன்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/சிக்கனம்&oldid=1000084" இலிருந்து மீள்விக்கப்பட்டது