உணர்ச்சி வெள்ளம்
உள்ளடக்கம்
- சுதந்திரத் திருநாள்
- சமாதானத்துக்கு ஓர் அரங்கு
- தமிழகத்தின் அறிவுக் கோட்டம்
- சுருங்கிய உள்ளம்
- உண்மையை உணர்ந்திருந்தால் ஊர்ச் சண்டை ஏது?
- காக்கும் கரங்கள்
- சீர்திருந்தும் கூவம்
- சீர்மிகு சீரணி
- நூல்கள் இன்னும் தேவை
- சீக்கியர் மாண்பு
- புரட்சிக் கனல்
- தமிழுக்குத் தொண்டாற்றியவர்
- அழுத்தக்கார மனிதர்
- எதிர்நீச்சலடித்த இரட்டையர்
- இனிய மனிதர்
- பிறந்த பொன்னாட்டை மறக்கக் கூடாது
- ஏழைகளின் இதயத்தலைவர் ஜீவா
- மனித இதயத்தின் ஊதியம்
உணர்ச்சி வெள்ளம்
பேரறிஞர் அண்ணா
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கிச் செட்டி தெரு,
சென்னை-600001.
- முதற் பதிப்பு : ஜனவரி 1972.
- இரண்டாம் பதிப்பு: 1982.
- (c) அறிவுப் பண்னை
- விலை ரூ.5-00
- அச்சிட்டோர்:
- ராம்ஶ்ரீ பிரிண்டர்ஸ்
- 27, தெற்கு தண்டபாணி தெரு
- தி. நகர், சென்னை-600 017.
பதிப்புரை
மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் பேரறிஞர் அண்ணா. கோடையிலே இளைப்பாறிக்கொள்ள வகை கிடைத்த குளிர்தருவைப் போல—ஓடையிலே ஊறிவரும் தீஞ்சுவைத் தண்ணீர் போல — அவரது மேடைப் பேச்சு விளங்குகிறது.
தத்துவச் சிந்தனையும் தமிழ் விருந்தும் பண்பாட்டு நலனும் அவரது சொற்பொழிவில் மிதந்து வருவதை அனைவரும் அறிவர். அவரது உரை — பலரைக் கவிஞர்களாச்கியிருக்கிறது — இன்னும் பலரை நாடக ஆசிரியர்களாக்கியிருக்கிறது.
தமிழக அரசின் முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின்னர் — அவரது சொற்பொழிவைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியத் திருநாடே ஆவலுடன் கேட்கத் தொடங்கியுள்ளது. அயல் நாடுகளிலும் அவரது புகழ் பரவி வருகிறது.
அவரது நா — அசைந்தால் அது நாதத் தமிலாக மலருகிறது — இனிய சங்கீத அலையாக அது உருமாறி அனைவரையும் ரசனை உலகுக்கு அழைத்துச் செல்கிறது.
அவர் தொட்டுப் பேசாத துறையில்லை. அவரால் பேசப்படாத பொருள், ஒரு பொருளே இல்லை.
தமிழக முதல்வராக இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வப்போது பல விழாக்களிலும்; பல திட்டங்களின் அறிமுக விழாக்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்து ‘உணர்ச்சி வெள்ளம்’ என்ற தலைப்பில் நூலாக உலா வரச் செய்திருக்கிறோம்.
தமிழ்ச் சமுதாயம் இந்த நூலை வாங்கிப் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.
15—1—69அன்பன்
தமிழ்ப்பித்தன்
எமது வெளியீடுகள்
- புதிய வரலாறு
- உணர்ச்சி வெள்ளம்
- அண்ணாவின் உயில்
- தென்பாண்டிச் சிங்கம்
- குறளோவியம்