சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


73 (1)
புணர்வு தோய்ந்திடலிசைப்பாம் பொழில் புவிபெருமை சோலை
உணர்வென்ப தௌிவே யூடல் ஒழிதலே அறிவுமாகும்
குணமென்ப கயிறு பண்பு கும்பம் வின்னானி நாற்பேர்
கணமுடுநோய் திரட்சிகாலநுட்பம் பேய் வட்டம்.

74 (2)
ஆணமே குழம்போடன்பாம் அலநாஞ்சில் அமையுமென்றல்
ஓணமாயோனாளாறாம் ஊதிய மிலாபங் கல்வி
காணமே பரியூண் செக்கோர் காணம் பொற்காசு நாற்பேர்
கோணலே மாறுபாடுங் கூனுமாம் வளைவுமாமே.

75 (3)
குணில் குறுந்தடி கடிப்பாங் குல்லையே துளவு வெட்சி
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை
துணி சோதிநாளே துண்டந் துளி மழைத்துளி பெண் ணாமை
பிணி முக மயில் புட்பேராம் பிசிதம் நீ ரிறைச்சி வேம்பு.

76 (4)
நா ணிலச்சைப்பேர் தானே கயிறென்று நாட்டலாகும்
தோணியே கடைநாள் வங்கந்தொடு கணை தெப்பஞ் சேறு
வாணியே யோர்கூத்தின்பேர் வாக்கு நாமகளுமாமே
ஏணியே யுலகோடெல்லை யிறைவை மானென்றுஞ் சொல்லும்.

77 (5)
திணை நிலங் குல மொழுக்கஞ் செவி யென்ப காது கேள்வி
பிணை யாசை விலங்கின்பெண்பேர் பிலவங்கங் குரங்கு தேரை
கணை யம்பு திரட்சியும் பேர்கட்சியே காடுங் கூடும்
பணை வயல் பரியின் பந்தி பருத்தல் வே யரசு பீடாம்.

78 (6)
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை
பாணந்தான் மேகவண்ணக் குறிஞ்சி யெய்கணை பூம்பட்டாம்
சேணென் பதகலநீளஞ் செப்பிடி லுயர முப்பேர்
ஆணை மெய்யுடனே வென்றி சூ ளேவலாக நாற்பேர்.

79 (7)
அண்டமாகாய முட்டை அயிலென்ப வேலே கூர்மை
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதன மூக்காம்
கண்டமே கவசம் வெல்லங் கழுத் திடுதிரை வாள் துண்டம்
முண்டகந் தாழை கள்ளு முளரி மத்தக முள் மூலம்.

80 (8)
அண்டரே பகைவர் வானோர் ஆய ரென்ராகு முப்பேர்
சுண்டனே சதய நாளுஞ் சூரனும் வேறுகாட்டும்
கண்டல் கேதகை முள்ளிப்பேர் கரைதலே விளித்த லோசை
பண்டம் பொன் பணிகாரப்பேர் பாகு பால் குழம்பு பாக்காம்.

81 (9)
விண்டென்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்றாம்
தொண்டென்ப பழமை யொன்பான் றொழும் பொடு வழிபாடாமே
தண்டென்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி
வண்டென்ப சங்கு குற்றம் வளை யளி வாளி யைம்பேர்.

82 (10)
உண்டையே திரளை யாகம் உறுபடை வகுப்பு மென்ப
தொண்டை யாதொண்டை கொவ்வை தூங்கும் யானைத் துதிக்கை
கொண்டையெ மயிர் முடிக்கு மிலந்தையின் கனிக்குங் கூற்றாம்
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய்செப்பு.

83 (11)
தண்ண மோர்கட் பறைப்பேர் தறித்திடு மழுவுமாகும்
வண்ண மேர் சந்தம் பண்பாம் மறை யிராசியமே வேதம்
பண்ணென்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர்
மண் ணணு வொப்பனைப்பேர் முழவின் மார்ச்சனை யுமாமே.

84 (12)
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம்
துணங்கையே விழாப் பேய் கூத்தாம் ஆதிரைநாளுஞ் சொல்லும்
குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர்
துணங்கற லிருள் விழாவாந் தோன்றலே சுத னாதன் பேர்.

85 (13)
புணரியே வாரி நீரிற்பொருதிரை கரை முப்பேராம்
பணிலமே சலஞ்சலஞ் சங்கிருபெயர் பகரலாமே
கணி வேங்கை மரமதாகுங் கழனிசூழ் மருதமும் பேர்
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலு மாமே.

86 (14)
பாணி யூர் நீர் கையோசை பற்றுக்கான் போது நாடு
சேணுறு சோலை பண்டஞ் சிறந்த பல்லியம் பன்னொன்றாம்
தாணுவே சைலங் குற்றி சங்கர நிலை தூ ணைம்பேர்
வேணியே சடை விசும்பாம் வியாளமே புலியும் பாம்பும்.

87 (15)
குண்டலங் குழை விசும்பாங் குபேரனே தனதன் சோமன்
மண்டலம் பரி யூர் வட்டம் மந்தியே யூகம் வண்டு
கொண்டலே முகில் கீழ்காற்றாங் கோட்டியே வாயில் கூட்டம்
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயுமாமே.

88 (16)
புண்டரீகந் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம்
தண்டமே யானைசெல்லும்வழி தண்டாயுதங் குடைக்கால்
பிண்டி நென்மா வசோகாம் பிதாச் சிவன் பிரம னாரை
கண்டகஞ் சுரிகை முள் வாள் களவென்ப களாச் சோரப் பேர்.

89 (17)
பண்ணவன் முனிவன் தேவன் பகர்குரு யருக னார்ப்பேர்
தண்ணடை மருதஞ்சாரூர் நாடேன யிருபேர் சாற்றும்
வண்மையே வழங்கல் வாய்மை வளம்புகழ் வலியாமென்ப
ஓண்மையே மிகுதி நன்மை யொழுங் கறி வழ கைம்பேரே.

90 (18)
எண் வலி யெள் ளிலக்கம் எளிமை சோதிடம் விசாரம்
கண் ணிடங் கணுவே கண்ணாங் காஞ்சி மேகலை யோர்பண்ணாம்
விண் முகில் சுவர்க்கம் வானாம் விபுலம் பார் விரிவு பீடு
பண்ணையே வய னீர்த் தாழ்வு மருத மாத்துயிலும் பாழி.

91 (19)
காண்டமே திரை கா டம்பு கமண்டலங் கலன் பெய்செப்பு
நீண்டகோன் முடிவு தூசு நீர் படைக்கல மீரைந்தாம்
பாண்டி லே றூர்தி வட்டம் பணை கட்டில் விளக்குத் தாளம்
ஈண்டென்ப இவ்விடத்தோ டிப்படி சடிதியும்பேர்.

92 (20)
அண்டச முதலை யோந்தி அரணை புள் ளுடும்பு பல்லி
நண்டு மீன் தவளை யாமை நாக மிப்பியு மீராறாம்
சண்டன் கூற்ற வலி வெய்யோனாந் தாள் கதவுறுதாள் பாதம்
சுண்டையே சுண்டைக் கள்ளாஞ் சுவர்கமே சுவர்கங் கொங்கை.

93 (21)
பணமென்ப தரவின்பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர்
மணமென்ப வாசங் கூட்டம் வதுவையு மாகுமென்ப
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோயாம்
நுணவை யெண்ணோலை பிண்டி நுனியென்ப நுதி நுண்மைப்பேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/7-19&oldid=29069" இலிருந்து மீள்விக்கப்பட்டது