தமிழ்நாடும் மொழியும்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

அ. திருமலைமுத்துசுவாமி M.A.,BT.,Dip.Lib.Sc.

தமிழ்நாடும்
மொழியும்

ஸ்டார் பிரசுரம்

சென்னை-5 : : மதுரை

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

மங்கை வெளியீடு-1
முதற் பதிப்பு : சூன், 1959
உரிமை ஆசிரியருக்கு







விலை ரூ. 4

.










லலிதா பிரிண்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், வடக்கு வெளிவீதி, மதுரை

தமிழ்ப் பெரும் புலவர்
ஆபிரகாம் அருளப்பன் பி.ஏ.,
தமிழ்ப் பேராசிரியர்

தூய சவேரியர் கல்லூரி,
பாளையங்கோட்டை
27-5-59

வாழ்த்துரை


நம் வண்டமிழ் நாடு, செந்தமிழ் மொழி பற்றிய வரலாறு இன்றளவும் தகுந்த முறையில் வெளிப்படவில்லை இக் குறையைக் குறைப்பதற்குப் பல அறிஞர் முயன்று ஆராய்ந்து தக்க கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளுள் சிறந்த வொன்றக நண்பர் திரு அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் எழுதியுள்ள ’தமிழ் நாடும் மொழியும்’ என்ற இந்நூல் மதிக்கத்தக்கது.

காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல் அறிவுடையார் கடமை என்ற உண்மையை உள்ளத்தில் அடிப்படையாகக் கொண்டு மேனாட்டாரும் நம் நாட்டாருமாகிய அறிஞர் கருத்துக்களையும் அறிந்து, தமிழ் நாட்டு வரலாறு, தமிழ்மொழி வரலாறு இவை பற்றிய தம்முடைய கருத்துக்களை இவ்வாசிரியர் அமைக்கும் முறை பெரிதும் பாராட்டத்தக்கது. சங்ககாலம், பல்லவர்காலம், பிற்காலம், அரசியல், வாழ்வியல், சமயவியல், இலக்கியம் இவை பற்றிய கால வரையறையும் பிறவுங் குறித்து எழுந்துள்ள பல்வேறு வகையான முரண்பட்ட கருத்துக்களிடையே நடுவு நிலையோடு இயன்ற மட்டும் உறுதியுடன் நின்று படிப்போர் தெளிவுபட உணரும் வழியில் இவ்வாசிரியர் கூறியிருப்பது கற்று மகிழ்தற்குரியது.

தமிழ் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டாற்றும் நண்பர் அ. திருமலைமுத்துசுவாமி அவர்களுடைய நல்ல முயற்சியைச் செய்நன்றியறிவோடு பாராட்டி மனமார வாழ்த்தி மேலும் நற்பணியாற்ற ஊக்குவிப்போமாக.

ஆபிரகாம் அருளப்பன்

வித்துவான்

ந. சேதுரகுநாதன்
தமிழ் விரிவுரையாளர்,
செ. நா. கல்லூரி.

விருதுநகர்,
29–5-59.


அணிந்துரை

நாட்டுக்கும் மொழிக்கும் இலக்கிய உணர்வுக்கும் உயிரின் அடித்தள உண்மையாக இலங்குவது வரலாறு. அதன் கண் உண்மை உண்மையாகவே மிளிர வேண்டும். பொய்மை பொய்மையாகவே போக்கப்பெறல் வேண்டும். எனவே வரலாற்றைப் பலரும் விரும்பிப் படித்தும் உணர்ந்தும் வரலாற்றுத் தெளிவு உடையவராக ஆவதற்கு மிகப்பல தெளிந்த நூல்கள் நம் தென்னகத்துச் செந்தமிழின் கண்ணே எழுதப்பெறல் வேண்டும். இத்தகைய அவா எனக்குத் தோன்றியதுபோல் பலருக்கும் தோன்றுவது இயல்பே. திரு அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் 'தமிழ் நாடும் மொழியும்' என்ற இந்த நூலைத் தெளிவாக எழுதி வழங்கியுள்ளார்கள்.

தொகுத்துச் சுட்டியும் வகுத்துக்காட்டியும் தெளி பொருள் விளக்கமாகவும் பல்வேறு பேரறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக் காட்டியும் காலவரையறைகளை நிறுவியும் மறுக்க வேண்டிய கருத்துக்களை முறையாக மறுத்தும் பொருள்களைக் கால வரிசையில் நிரல்பெற நிறுத்தியும் இலக்கண இலக்கிய வரலாற்றுடன் நுட்பமாக விளக்கியும் திராவிட மொழிகளின் பொதுவியல்பு புலப்படுத்தியும் எழுதப்பெற்ற இந்த நூல் சொற்பொழிவின் ஆற்றலுடன் அமைந்து விளங்குகின்றது. உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்கும் மாணவர்கட்கும், பொதுவாக வரலாற்றுத் தெளிவுபெற விரும்பும் அறிஞர்க்கும், அரசியற்பணிமனை அலுவற்குத் தேர்வு எழுத விரும்பும் மாளுக்கர்கட்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உதவும் பாங்காக இந்நூல் இலங்குகின்றது. இந்நூலின் ஆசிரியர் இன்னும் இதுபோல் பல திட்ப நுட்பமான நல்ல நூல்கள் எழுதித் தமிழுக்கும் உலகுக்கும் தமக்கும் நற்பயன் விளையும் வண்ணம் இலங்க எங்கும் நிரம்பிய திருவருளை நினைந்து வாழ்த்துகின்றேன்.

ந. சேதுரகுநாதன்

முன்னுரை

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் தமிழினச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயிலும் மாணவர்கள், சென்னை அரசினர் நடத்தும் பொதுப்பணித் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆகியவர்களுக்குப் பெரிதும் பயன்படும் முறையில் 'தமிழ்நாடும் மொழியும்' என்னும் இந்நூலை நான் எழுதி, தமிழன்னையின் பாதங்களில் சூட்டுகின்றேன். மேலும் இந்நூல் தமிழ்நாடு, தமிழ் மொழி இவற்றின் வரலாற்றை அறிய விரும்பும் பொது மக்களுக்கும் துணைபுரியும் என்பது என் எண்ணம். தமிழ் மக்கள் நலம் கருதியே இதனை வெளியிடுவதல் அவர்களது முழு ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

இந்நூல் உருவாகுங்கால் என்ன ஊக்குவித்த எனது பேராசிரியர் அ. மு. ப. அவர்களுக்கும், இந்நூலிற்கு வாழ்த்துரையும், அணிந்துரையும் அன்புடன் அளித்த பேராசிரியர்கள் ஆ. அருளப்பன் அவர்களுக்கும், ந. சேது ரகுநாதன் அவர்களுக்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன். இந்நூல் நல்ல முறையில் வெளியாவதற்குத் துணைபுரிந்த நண்பர்களுக்கும், இந்நூலில் வெளியிட்டுள்ள படங்களைத் தந்துதவிய திரு. கி. பழநியப்பன் அவர்களுக்கும், இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டுக் தந்த "லலிதா பிரிண்டர்ஸ்” உரிமையாளர்க்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்.

வாழ்க தமிழ்!

அ. திருமலைமுத்துசுவாமி

பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை திருத்தம்
1 21 வாணிபம் வாணிகம்
2 20 காலத்திலே காலத்தில்
4 6 அது அவை
14 26 அவை அது
20 6 சாருலும் சாற்றலும்
23 2 தோன்றுவது தோன்றுவன
25 10 இருந்த இருந்து
30 24 கூறுக்கு கூற்றுக்கு
25 நாளிகை நாழிகை
31 26 நிரையை ஆநிரையை
39 24 வள்ளண்மை வள்ளன்மை
47 15 பன்டை பண்டை
48 1 கிளி இளி
20 ஒங்கிய ஓங்கிய
49 13 பெரிய பெயரிய
16 செபியன் செம்பியன்
50 11 கோட்டையையும் கோட்டையும்
27 செய்தது செய்தன
66 29 சோழ சோழனை
80 8 இதனுல் இவற்றால்
87 9 அளிக்கப்பட்டது அளிக்கப்பட்டன
95 17 கோட்டங்களிலும் கோட்டத்திலும்
118 13 சமய குரவர்கள் சமயக்குரவர்களால்
146 10 ஆட்கி ஆட்சி
148 8 வாணிப வாணிக
150 25
166 23 வாய்ந்தது வாய்ந்தன
174 21 வளரலாயிற்று வளராயிலன
176 8 தமிசையே தமிழிசையே

'குறிப்புகள்', 'கரடுமுரடான' என்ற சொற்கள் வருமிடங்களில் முறையே ’குறிப்புக்கள்', 'கரடுமுரடான' என்று திருத்திக் கொள்க.




ஆசிரியரின் பிற நூல்கள்
1. யாப்பருங்கலக் காரிகை வினா-விடை
2. இலக்கண வழிகாட்டி
3. அறிவியற் சோலை
4. முதலுதவி
5. நீலமலை (மலைவாழ் மக்கள்)
6. இலக்கியத்தில் பறவைகளும் விலங்குகளும்
7. நூல் நிலையம்
8. நூலக ஆட்சி
9. நூலக அமைப்பியல்
10. தமிழ் இலக்கிய வரலாறு
11. தேசிய நூலகங்கள்
12. உரிமைப் போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்நாடும்_மொழியும்&oldid=1711493" இலிருந்து மீள்விக்கப்பட்டது