திருநீற்றுப்பதிகம்

(திருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திருஞானசம்பந்தர் பாடியது

தொகு

திருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம்

இரண்டாந்திருமுறை

தொகு

பண்:காந்தாரம்

பாடல்: 01 (மந்திரமாவது)

தொகு

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே (01)செம் துவர் வாய் உமை பங்கன் திரு ஆல வாயான் திரு நீறே. (௧)

பாடல்: 02 (வேதத்திலுள்ளது)

தொகு

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு| வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறு| போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு| ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே (02)| சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திரு நீறே. (௨)

பாடல்: 03 (முத்திதருவது)

தொகு
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே (03)

பாடல்: 04 (காண வினியது)

தொகு
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் றிருநீறே (04)

பாடல்: 05 (பூச வினியது)

தொகு
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் றிருநீறே (05)

பாடல்: 06 (அருத்தமதாவது)

தொகு
அருத்தமதாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே (06)

பாடல்: 07 (எயிலது)

தொகு
எயிலது வட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்றிரு நீறே (07)

பாடல்: 08 (இராவணன்)

தொகு
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே (08)

பாடல்: 09 (மாலொடயன்)

தொகு
மாலோ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலமு துண்டமி டற்றெம் மாலவா யான்றிரு நீறே (09)

பாடல்: 10 (குண்டிகைக்)

தொகு
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவருபணிந் தேத்து மாலவா யான்றிரு நீறே (10)

பாடல்: 11 (ஆற்றலடல்)

தொகு
ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றை
போற்றிப் புகலிநி லாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. (11)
திருச்சிற்றம்பலம்


பார்க்க

தொகு
திருஞானசம்பந்தர்- 'தோடுடைய செவியன்'
திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
நமச்சிவாயத்திருப்பதிகம்
மாலை மாற்று
"https://ta.wikisource.org/w/index.php?title=திருநீற்றுப்பதிகம்&oldid=1526475" இலிருந்து மீள்விக்கப்பட்டது