விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்

அனைத்து நூல்களிலும் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டும், இங்கு உரையாடப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நூலுக்கான உரையாடல், அந்தந்த பகுதியில் தெரிவிக்கப்படும்

நாட்டுடைமை நூல்களில், நாற்பது இலட்சம் சொற்கள்

தொகு


பரிந்துரைகள்

தொகு

உரிமம்

தொகு
  1. அனைத்து மின்னூல்களிலும் உள்ள உரிமப் பக்கத்தினை மேம்படுத்த, இந்த மாதிரி பக்கம் பங்களிப்பாளர்களால் மெய்ப்புப் பார்க்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து நூல்களிலும் இணைக்க விரும்புகிறோம். மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும். உழவன் (உரை) 06:46, 27 மே 2016 (UTC)Reply
    @Balajijagadesh:உங்கள் தானியங்கி கணக்கு வழியே ஒவ்வொரு நாளும் 100 பக்கங்களாவது உரிமத்தை மேம்படுத்துங்கள். அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். விக்கிதானுலாவியல் ஒரு பதிவுக்குரிய நேரத்தை 15நொடிகள் என அமைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.-- உழவன் (உரை) 07:29, 13 சூன் 2016 (UTC)Reply

பதிப்பு

தொகு
  1. @Balajijagadesh, Tshrinivasan: மற்றும் அனைவருக்கும்: ஒரு நூலின் பதிப்பு எது என்று பொதுவகத்தில் குறிக்க வேண்டும். இங்கு Index இல்லை. ஏற்படுத்த எண்ணுகிறேன். உழவன் (உரை) 06:11, 28 மே 2016 (UTC)Reply
      ஆதரவு - செய்யுங்கள் - பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:16, 28 மே 2016 (UTC)Reply
      ஒரு நூலில் உள்ளது போலவே, இனி எழுத வகை செய்துள்ளேன். (எ.கா. இரண்டாம் பதிப்பு மாதம் வருடம்) உழவன் (உரை) 17:03, 28 மே 2016 (UTC)Reply

அனைத்து நூல்களின் முதற்பக்கம்

தொகு
  1. @Balajijagadesh: இந்த ஆங்கில விக்கிமூலப்பக்கத்தில் {{nop}.} என்ற வார்ப்புரு பயன்படுத்தப்படுகிறது. அதனை நாமும் அனைத்து அட்னட போன்ற படங்களுள்ள பக்கங்களில் பயன்படுத்தலாமென்று எண்ணுகிறேன். காண்க; page:வீர காவியம்.pdf/1-- உழவன் (உரை) 04:39, 1 சூன் 2016 (UTC)Reply
  2. ஒவ்வொரு மின்னூலிலும் முதற்பக்கம் அட்டை படமாக இருப்பதால், ஏறத்தாழ 2000 பக்கங்களில் இதுபோன்ற மாற்றத்தைத் தானியங்கி ஏற்படுத்த உள்ளது. அத்தோடு வேண்டிய பிற மாற்றங்கள் இருப்பின் குறிப்பிட கேட்டுக் கொள்கிறேன் உழவன் (உரை) 13:01, 1 சூன் 2016 (UTC)Reply
    நல்ல யோசனை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:58, 1 சூன் 2016 (UTC)Reply
    2000க்கும் மேற்பட்ட நூல்களில் முதற்பக்கம் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.-- உழவன் (உரை) 05:35, 4 சூன் 2016 (UTC)Reply
    நூலட்டைக்கு pdf கோப்பில் இருந்து அட்டைப்படத்தை *.pdf|page=1 என்ற நூலட்டை இணைப்பு மட்டும் கொடுத்தால் போதுமே. தாங்கள் இப்பொழுது மொத்த pdf புத்தகத்தையும் இணைப்பாக கொடுத்தால் பக்கங்கள் load ஆக மிகுந்த நேரம் எடுத்துக்கொள்கிறது. வீண் நேரம் மற்றும் தரவு செலவு. மேலும் transclude செய்யப்பட்ட புத்தக பக்கத்தில் இருந்து pdf ஆக பதிவிறக்க முயற்சி செய்யும் பொழுது pdfஆக முதல் பக்கத்தில் இருப்பதால் சில தொல்லைகள் வருகின்றன. எடுத்துக்காட்டு Page:அசோகர் கதைகள்.pdf/1 அனைத்துப் புத்தகங்களிலும் இப்படி செய்திருந்தால் மாற்றிவிடவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:59, 4 சூன் 2016 (UTC)Reply
    பதிவேற்றயவர் நிரல் மேலாண்மை மிக்கவர். அவரின் கவனித்திற்கு கொண்டு செல்கிறேன். இனி அவரவர் பேச்சுப்பக்கத்திலும் தெரிவித்தால், மேற்கொண்டு இது போன்ற விளைவுகள் வராதபடி, ஒரு பயனர் செயற்படுவார் என்பதால், அவரவர் பேச்சுப்பக்கத்திலும், பொதுவகத்தில் தெரிவிப்பது போல, தெரிவிக்கக்கோருகிறேன். மற்றொன்று எனக்கு நீங்கள் மேற்கூறியபடி எந்த இடரும் வரவில்லை. page= என்பதனை இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் அந்த இணையப்பக்க ஏற்றம் ஒரே மாதிரியாகத்தான் வருகிறது. நான் அறிந்தவரை, பட விக்கிநிரலில்(லினக்சு நிரல் அனைத்திலும்) பயன்படுத்தப்படும் நெடுங்குத்துக்கோடு(pipeline)என்பது வடிகட்டி போல செயற்படும். இரண்டிலுமே மின்னூல் தான் முதலில் வரும். அந்த முதல்பக்கம் வேண்டாம் என்பதை நெ.கோடு மூலம் சொல்லி, திரும்பவும் முதற்பக்கத்தை காட்டு என்று கூறுவதும் ஒன்றே. படம் விரைவாகத்தோன்ற, படவணுவை(px) குறைக்கலாம். அல்லது ஒவ்வொரு நூலுக்கும் நீங்கள் பயன்படுத்துவது போல, தனிப்படத்தை பொதுவகத்தில் ஏற்றி பயன்படுத்தலாம் என்றே நான் எண்ணுகிறேன். பிறரிடம், இது குறித்த நிகழ்நிலை இணையபக்க தொழில்நுட்பத்தை கேட்போம். பிறகு முடிவெடுப்போம். உழவன் (உரை) 02:42, 5 சூன் 2016 (UTC)Reply
    திட்டப்பக்கத்தில் ஒரு திட்டம் செயல் பட்டதால் தான் பேச்சு பக்கம் இல்லாமல் இங்கு பதிவு செய்தேன். மேலும் இப்பிரச்சனை குறித்து நிறைய பேர் பார்த்து இதற்கு தீர்வு கிடைக்கலாம். மேலும் *.pdf|page=1 என்று பயன்படுத்தினாலும் [இக்கருவி] மூலம் pdfஆக பதிவிறக்கம் செய்யும் பொழுது எழுத்துக்கள் பிரச்சனை வருகிறது. படமாக மாற்றி பதிவேற்றம் செய்வதுதான் சிறந்தது என்று கருதுகிறேன். மேலும் நுட்ப வல்லுநர்களைக் கலந்து விரைவில் ஒரு முடிவுக்கு வரலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:41, 5 சூன் 2016 (UTC)Reply
    @Balajijagadesh: இதுபோல இனி ஒரு பயனருக்குத் தெரிவிக்க பயன்படுத்தலாமென்றே எண்ணுகிறேன். ஒரு வாரம் சென்னையில் இருப்பேன். இதுபற்றி ஆலோசிக்கிறேன். சென்னையில் நீங்கள் இருப்பீர்களா?சென்னையில் இருந்தால், மின்னஞ்சல் செய்யவும். முடிந்தால் சந்திப்போம். உழவன் (உரை) 05:48, 5 சூன் 2016 (UTC)Reply

Free Serif என்ற எழுத்துரு

  1. @Info-farmer: பல நேர பரிசோதனைகளுக்கு பிறகு பதிவிறக்கும் பொழுது வரும் பிரச்சனை அக்கருவியில் Free Serif என்ற எழுத்துரு மூலம் ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை ஓரளவு சரிசெய்துவிட்டேன். இப்பிரச்சனை நான் pdf மூலமாகத் தான் வருகிறது என்று தவறாக எண்ணிவிட்டேன். முதல் பக்கத்தில் எவ்வாறு அமைத்தால் சிறந்தது என்பதை ஆலோசித்து தீர்மானிப்போம். இந்த மாதம் நான் சென்னை வர வாய்ப்பில்லை. வரும் பொழுது தங்களை தொடர்பு கொள்கிறேன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:42, 5 சூன் 2016 (UTC)Reply
    @Balajijagadesh:உங்கள் முயற்சிகள் கண்டு மகிழ்ச்சி. இதுபற்றிய, வழுவை phabricator-இல் பதிந்துள்ளனர் என்றே எண்ணுகிறேன். எங்குபடித்தேன் என்று நினைவில்லை. உழவன் (உரை) 07:02, 5 சூன் 2016 (UTC)Reply

நூலாசிரியர் அடிப்படையில் பகுப்பிடுக

  1. விக்கீப்பீடியாவில் தொடர்ந்து வேதியியல் கட்டுரைகள், த.இ.க. வில் சிறிது காலம் பணி, ஆசிய மாதம் போட்டியில் முதல் இடம், விக்கி கோப்பை போட்டியில் அநேகமாக இரண்டாமிடம் ஆகியவை நிர்பந்தம் ஏதுமின்றி தன்னார்வத்தின் அடிப்படையில் எனக்கு கிடைத்தவையாகும். இந்த அனுபவங்களின் அடிப்படையில் என்னுடைய ஆலோசனையையும் உங்கள் முன் வைக்கிறன். ஆசிரியர் வாரியாக , துறை வாரியாக பகுப்புகள் கொடுக்கப்பட்டால் பயனர்கள் அவரவர் விருப்பத்திற்கும் ஆர்வத்திற்கும் ஏற்றற வகையில் தேர்ந்தெடுத்து, பங்களித்து விக்கி மூலத்தை மேம்படுத்த இயலும் என நினைக்கிறேன். உதாரணமாக, நெ.து. சுந்தர வடிவேலுவின் நூல்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அவருடைய பெயரில் ஒரு பகுப்பு இருந்தால் என்னால் விரைவாகவும் சிறப்பாகவும் செயலாற்ற முடியுமென்று நம்புகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 15:58, 1 சூன் 2016 (UTC)Reply
    பரிந்துரைக்கு நன்றி. மூர்த்தி! தங்கள் வழிகாட்டுதல் படி, பகுப்பிடுகிறேன். இப்பக்கத்தில் நூலாசிரியர் அடிப்படையில் நூல்களைக் காண இயலும். அதுபோல, மெய்ப்பு காண வேண்டிய, உள்ளடக்க அட்டவணைகளுக்கும் பகுப்பிடுகிறேன். மேலும், எனக்குத் தெரிந்தவரை துறைவாரியாகப் பகுப்பிடுகிறேன். உயரிய இலக்குகள் பல இருப்பினும், பங்களிப்பாளர் பற்றாக்குறை இங்கும் நிலவுகிறது. கூடியவிரைவில் முடிக்கிறேன். உழவன் (உரை) 16:44, 1 சூன் 2016 (UTC)Reply
    @கி.மூர்த்தி: காண்க: பகுப்பு:நெ. து. சுந்தரவடிவேலு ஏற்படுத்தி உள்ளேன். பகுப்புரை படி பிற நூல்கள் தரப்படவில்லை. கேட்க உள்ளேன் உழவன் (உரை) 17:42, 2 சூன் 2016 (UTC)Reply

@Balajijagadesh:Index:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf என்ற நூலானது, பகுப்பு:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் என்பதன் ஒரு நூலாகும். பகுப்பின் பெயரானாது, த. இ. க. க. அளித்த மூலப்பக்கத்தில் உள்ளபடி அமைத்துள்ளேன்.் அப்பகுப்பின் உரையாடற்பக்கத்தில் மூல பக்கத்திற்கு இணைப்பு அளித்துள்ளேன். எனவே, கட்டுரை ஆசிரியர் பெயரினையும், மூலநூல் போலவே அமைக்க வேண்டும். விக்கிப்பீடியாவோ, எந்த அடைமொழியும், ஆசிரியர் பெயரில் இருக்கக் கூடாது என்கிறது. அது விக்கிமூலத்திட்டத்திற்குப் பொருந்தாது. நாம் தரப்படும் மூலபக்கத்தினையே பின்பற்றலாம் அல்லவா? மேலும், விரைவுபகுப்பியில் வழு இருப்பதால், ஆசிரியர் என்பதில் மூலஆசிரியரின் பெயரையே வைக்கலாம். உங்களின் எண்ணமென்ன?-- உழவன் (உரை) 04:43, 19 ஆகத்து 2016 (UTC)Reply

@Info-farmer: தாங்கள் கூற வருவது எனக்கு விளங்கவில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:22, 19 ஆகத்து 2016 (UTC)Reply
இந்த மாற்றத்தை விட, மூலஆவணத்தின் அடிப்படையில் பெயர் இருப்பதே சிறப்பாகும். இல்லையெனில் மேற்கூறிய நூலில் காட்டியபடி ஒரு நூலாசிரியருக்கு இரு பகுப்புகள் வரும். மேலும், விக்கிமூலம் என்பது மூலஆவணத்தைப் பேணும் திட்டம் என்பதால் இந்த வேண்டல். எனவே, அதனைப் பின்பற்றக் கோருகிறேன்.-- உழவன் (உரை) 08:05, 19 ஆகத்து 2016 (UTC)Reply
@Info-farmer: மூலநூலில் டாக்டர் ரா. சீனிவாசன் என்றே உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:46, 19 ஆகத்து 2016 (UTC)Reply
ஒவ்வொரு நூலிலும் பலவிதமாக பெயர்கள் உள்ளன. ரா.சீ. என்ற சுருக்கப்பெயர் அதிகமான நூல்களில் உள்ளன. நான் த.இ.க.க இணைய மூலபக்கத்தினைப் பின்பற்றுகிறேன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் உரிய இணைப்பை ஏற்கனவே கூறியபடி, அதன் உரையாடற்பக்கத்தில் இணைத்துள்ளேன். பார்க்க மறந்து விட்டீர்களா? உழவன் (உரை) 16:14, 19 ஆகத்து 2016 (UTC)Reply

ஆங்கில நூல்கள்

  1. Index talk:The story of saiva saints.pdf, பயனர் பேச்சு:info-farmer#English books உரையாடல்கள் படி, பொதுவகத்தில் பகுப்புகளும், அதற்குரிய எழுத்துணரித் தரவு நகர்த்தல்களும் செய்யப்பட வேண்டும் உழவன் (உரை) 04:43, 2 சூன் 2016 (UTC)Reply
  2. @Balajijagadesh:பகுப்பு:மெய்ப்பு வார்ப்புருக்கள் என்பதில் உருவாக்கப்படும் வார்ப்புருகளை, மறாவாமல் கோர்க்கவும். உழவன் (உரை)

05:35, 4 சூன் 2016 (UTC) 

வடிவியல்

  1. @Balajijagadesh: இந்த ஆங்கில பக்கத்தினை மாதிரியாகக் கொண்டு புரிந்து கொள்கிறேன். அதிலுள்ள படி, நாம் பின்பற்றும் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். உங்கள் எண்ணமென்ன?-- உழவன் (உரை) 06:15, 16 சூன் 2016 (UTC)Reply
  2. பக்க விவர அட்டவணை(index)களில், இயல்பிருப்பாக பதிப்பு, உள்ளடக்கம் என்பதை அமைத்துள்ளேன். இதனால் அட்டவணையை எளிமையாக அணுகி விரிவாக்கம் செய்யலாம். இங்கு உள்ளடக்கம் என்பது குறிசொல். இச்சொல் பல நூல்களில் பொருளடக்கம் என்றோ வேறு பெயிரிலோ(படலம்=Index:வீர காவியம்.pdf) இருக்கலாம்.விரிவுபடுத்துதலுக்கே இக்குறிசொல் உதவும் உழவன் (உரை) 02:54, 5 சூன் 2016 (UTC)Reply

அணுக்கம் உள்ளவருக்கான நிரலாக்கம்

  1. பல பக்கங்களை அணுக்கம் உள்ளவர்களை நீக்கவும், வேறு பெயரில் நகர்த்தவும் வசதிகள் மெய்ப்பு அட்டவணைக்களுக்குத் தேவைப்பட்டன. அதற்குரிய நிரலாக்கங்களை இரு வாரங்களுக்கு முன் சீனியிடம் பேசியிருந்தேன். அதற்குரிய ஆக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காண்க: பகுப்பு பேச்சு:மெய்ப்பு பார்க்கப்படாதவை#நிரல் குறிப்புகள்
      தீர்வு உழவன் (உரை) 15:28, 9 சூன் 2016 (UTC)Reply

1000பைட்டுகள்

  1. ஒவ்வொரு மின்னூலிலும் 1000பைட்டுகளுக்குக் குறைவான பக்கங்களில் தான், மெய்ப்பு அட்டவணையினை உருவாக்கத் தேவையான தரவுகள் அமைகின்றன. எனவே, மெய்ப்புப் பார்ப்பவர்கள், முதலில் அப்பக்கங்களை மெய்ப்புப் பார்த்தல் சிறப்பு. ஏனெனில், மெய்ப்பு அட்டவணையை உருவாக்குதல், சற்று நுட்பமான பணி. எனவே, அதற்குரிய தரவு, நிரல் வழியே எடுத்து, அதனதன் பேச்சுப் பக்கத்தில் இடுகிறேன்.@கி.மூர்த்தி: பகுப்பு:நெ. து. சுந்தரவடிவேலு என்பதிலுள்ள நூல்களின் பேச்சுப்பக்கங்களில், குறிப்பிட்டுள்ள பக்கங்களை, முதலில் மெய்ப்புப் பாருங்கள்.-- உழவன் (உரை) 18:26, 12 சூன் 2016 (UTC)Reply
  2. இந்த பக்கத்தைக கொண்டு வேண்டிய வடிவில், விக்கிமூல நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(phabricator-உரையாடல்) உழவன் (உரை) 04:02, 13 சூன் 2016 (UTC)Reply
  3. @Balajijagadesh: இந்த ஆங்கில பக்கத்தினை மாதிரியாகக் கொண்டு புரிந்து கொள்கிறேன். அதிலுள்ள படி, நாம் பின்பற்றும் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். உங்கள் எண்ணமென்ன?-- உழவன் (உரை) 05:37, 16 சூன் 2016 (UTC)Reply
    @Info-farmer: வேறு சிறப்பான முறை தெரியும் வரை தாங்கள் குறிப்பிட்ட பக்கத்தில் உள்ளது போலவே தொடரலாம். புத்தகத்தில் உள்ளடக்கம் இல்லாத பொழுது கூட உள்ளடக்க பெட்டகத்திலேயே நேரடியாக உள்ளடக்கத்தை சேர்த்துவிடலாம் தானே? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:54, 16 சூன் 2016 (UTC)Reply
    @Balajijagadesh:நானும் உங்களைப் போன்றே எண்ணுகிறேன். நம்மைப் போல பலரை ஈடுபடுத்தினால், உலக அளவில் பிற மொழிகளோடு தமிழ் போட்டியிடும் என்பது திண்ணம். எனவே, ஆக்கங்கள் அதிகமாக்கிட திட்டமிடுங்கள். நானும் எண்ணுகிறேன். சீனியிடம் அதுபற்றிய நிரலாக்க சிந்நனைகளைக் கூறியுள்ளா ர். வேறு சில திட்டங்களைப் பற்றியும் பேசினோம். செயற்படுத்தும் போது தெரிவிக்கிறேன். மற்றபடி பலர் கருத்துக்கூற வரலாம். கருத்துகள் மட்டுமே, இலக்கு நோக்கி நகர வைக்காது. பங்களிப்பு செய்யாதவரிடம் நான் உரையாடுவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன். த. இ. க. தரவுகளைப் பெற முறைப்படி அவர்களை அணுக உள்ளேன். அது நீங்கள் சென்னையில் இருக்கும் நாளாக அமைக்க எண்ணியுள்ளன். எனவே, சென்னை வந்தவுடன் தெரிவிக்கவும். அவசரமில்லை. --06:15, 16 சூன் 2016 (UTC)Reply

பொதுவகமும், மெய்ப்பு அட்டவணையும்

இன்று பொதுவகத்தில் வாழ்க்கைச் சுழல் என்ற மின்னூலை பதிவேற்றினேன். பிறகு, அங்கு நூலாசிரியர், தலைப்பு ஆகியவற்றை பொதுவகப்படிவத்திலேயே எழுதினேன். பின்பு, மெய்ப்பு அட்டவணையை உருவாக்க முனைந்த போது, தலைப்பும், ஆசிரியர் பெயரும் நான் எழுதாமலேயே இங்கு அவற்றின் எழுத்துக்கள் தோன்றின. மேலும், மெய்ப்பு அட்டவணையில் மேலடி(header) குறிப்புகளை ({{rh|{{{pagenum}}}|''வாழ்க்கைச் சுழல்''|{{{pagenum}}}}}{{rule}}) எழுதிய போது அது அனைத்து பக்கங்களிலும் தெரிந்தது. பிறகு எழுத்துணரியாக்கம் செய்தேன். எனவே, முதலில் பொதுவகப்படிவத்தில் குறிப்புகளை எழுத வேண்டும். பின்பே இங்கு அட்டவணையை உருவாக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அப்பொழுதே மெய்ப்பு அட்டவணைக் கூறுகள் தானாகவே, தரவுகளால் நிரப்பப்பட்டு, நமது வேளை எளிதாகும்.-- உழவன் (உரை) 11:01, 1 சூலை 2016 (UTC)Reply

மேலடி இப்பொழுது எந்த பக்கதிலும் காணப்படவில்லையே? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:17, 2 சூலை 2016 (UTC)Reply
கூகுளின் எழுத்துணரித்தரவு பதிவேறும் போது, ஏற்கனவே உள்ள தரவுகளை அழித்து விட்டு பதிவேறுகிறது. அதனால் தெரியவில்லை.இதனை நிகழ்படமாக பதிவு செய்துள்ளேன். குறைந்த அலைக்கற்றை என்பதால், பதிவேற்றவில்லை.-- உழவன் (உரை) 02:22, 2 சூலை 2016 (UTC)Reply
@Balajijagadesh: File:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf இந்த கோப்பினை எழுத்துணரியாக்கம் செய்து அணியமாக வைத்துள்ளேன். இன்னும் பதிவேற்றவில்லை. மேற்கூறிய சோதனையை செய்து பார்த்து அந்த அனுபவத்தினை பெறுங்கள். அதற்கு முதலில். பொதுவகபக்கம் போய், அந்த மின்னூல் விவரங்களை நிரப்புங்கள். பிறகு, அங்கிருந்து விக்கிமூலம் வந்தால், தலைப்பு இல்லை என்று வரும். அதை உருவாக்கும் போது, நீங்கள் நிரப்பிய தரவுகள் இங்கே தானாகவே, உரிய கட்டத்தில் நிரம்பிவிடும். மறவாமல், ({{rh|{{{pagenum}}}|''வாழ்க்கைச் சுழல்''|{{{pagenum}}}}}{{rule}}) என்பதை நிரப்பவும். பிறகு, சேமிக்கவும். செய்து முடித்த பின்,தெரிவிக்கவும். நான் எழுத்துணரித் தரவை நிரப்புகிறேன். தோன்றும் மாற்றும், மேற்கூறிய அனுபவத்தைத் தரும். நாம் அனைவரும் ஒரே மாதிரியான கற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்றே இதனைச் செய்யுமாறு கோருகிறேன். -- உழவன் (உரை) 12:57, 2 சூலை 2016 (UTC)Reply
@Info-farmer: செய்து பார்த்தேன். இப்பொழுது புரிகிறது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:08, 3 சூலை 2016 (UTC)Reply
சரி. இன்னும் சில நூல்களையும் பதிவேற்றி, எழுத்துணரி வேலையை முடித்துவிடுகிறேன். உங்கள் அனுபவங்களையும் இது போல ஆவணப்படுத்தினால், பலருக்கும் பயன்படும். உங்களிடம் நேரில் கற்று, ஆவணப்படுத்துவேன். வணக்கம்.-- உழவன் (உரை) 06:40, 3 சூலை 2016 (UTC)Reply

seperation of Index

பல நூறு பக்கங்கள் இருக்கும் மின்னூல்களை மெய்ப்பு பார்க்கும் பொழுது, Indexஇல் மேலும் கொஞ்சம் பக்கங்களின் விவரங்கள் இருந்தாதல் மெய்ப்பு பார்ப்பது எளிதாகிவிடும். எடுத்துக்காட்டாக பாண்டிமாதேவி நூலில் 750+ பக்கங்கள் உள்ளன. இப்பக்கதில் Indexஇல் பக்கங்களில் பிரித்துள்ளேன். இது போல் அதிக பக்கங்கள் உள்ள புத்தங்களில் செய்தால் நன்று என்று தோன்றுகிறது. @Info-farmer:. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:14, 5 சூலை 2016 (UTC)Reply

மெய்ப்புப் பார்ப்போருக்கு பெரிய நூல்களை காணும் போது அலுப்பு வராது. அருமையாக உள்ளது. நானும் எனது பகுப்பு பணியை முடித்து விட்டு அனைத்திலும் இதுபோன்று செய்வேன்-- உழவன் (உரை) 14:23, 5 சூலை 2016 (UTC)Reply

index vs hotcat

@Balajijagadesh:இந்த மாற்றங்களினால் விரைவு பகுப்பியும், அட்டவணைக் கட்டகமும் இணைந்து செயற்படுவத்தில் உள்ள வழுவை நீக்க வேண்டும் என்பதை கவனித்தேன்.-- உழவன் (உரை) 05:59, 7 சூலை 2016 (UTC)Reply

@Info-farmer: Indexஇல் பகுப்பு என்ற ஒரு பகுதியுள்ளது அல்லா? அதனை நீக்கிவிட வேண்டும். அது பிரச்சனை செய்கிறது என்று கருதுகிறேன். அதனை சோதனை செய்து பார்க்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:27, 7 சூலை 2016 (UTC)Reply
சரி. நான் அதனுள்ளே பகுப்பு அமைத்தற்கு காரணம், பகுப்புப் பணிக்காக விரைவு பகுப்பியை நாட பக்கத்தைச் சேமிக்க வேண்டும். பிறகு விரைவுபகுப்பியை செயற்படுத்த வேண்டும். அதனைத் தவிர்க்கவே அமைத்தேன். பல பகுப்புகளை அங்ஙனம் செய்துள்ளேன். மற்றொன்று அட்டவணையை சரியாக அமைத்துப் பூட்டி விட்டால், செய்த மாற்றத்தை, விரைவு பகுப்பியால் கூட களைவது முடியாது. ஏனெனில், அட்டவணை பணி என்பது சிரமமானது. புதிய பயனருக்கு சற்று புரியாது அல்லவா? மேற்கூறியவை சரியெனில், phabricator வழு பதியலாம்-- உழவன் (உரை) 06:37, 7 சூலை 2016 (UTC)Reply
சோதனை செய்து பார்த்தேன். எங்கே வழு உள்ளது என்று தெரியவில்லை. தானாக வரும் பகுப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவை எல்லாம் நீக்கிவிடுகிறது. இதுவரை சரிபார்ப்பு செய்தவை எல்லாம் வீணாக போய்விடும் :) -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:47, 7 சூலை 2016 (UTC)Reply
சரி. phabricator வழு பதியலாம். இதற்காகத் தான், நாம் யூவி பாண்டாவிடம் சென்னையில் பேசிய போது, முன்னணியில் இருப்பவர், தமிழ் விக்கி போன்ற வளரும் சமூகத்திற்கு தொழில்நுட்ப அனுபவ பகிர்வு செய்ய வேண்டும் என்று கூறி முடிவெடுத்தோம். பயிலரங்கு, விக்கி கூடல் இதற்காகத் தான் இருக்க வேண்டும். கூடி பிரிவதை விட, கூடி பகிர்ந்து பிரிதல் வேண்டுமென்றே எண்ணுகிறேன். இதன் தேவையை எண்ணுங்கள். இந்திய விக்கிமாநாட்டில் ஒரு கட்டுரை வாசிக்க எண்ணமிடுங்கள். விதைப் போடுவோம். முளைக்கிறதா பார்ப்போம். நாம் தான் இதுபற்றி ஒரு குழுமத்தை இந்திய அளவில் ஏற்படுத்த வேண்டும் போல் உள்ளது. தெலுங்கு விக்கிமூலத்தாரிடம் பேசிப் பார்த்தேன். சூழல் சரியில்லை. அனைவருக்கும் அனைத்தும் தெரிந்தால் தான், வளர்ச்சி ஏற்படும்; இல்லையெனில், எண்ணிக்கை அடிப்படையில் போட்டியே ஏற்படும் என்பது எனது முடிவு. இதுபற்றி கலந்து ஆலோசிக்க எப்பொழுது வேண்டுமென்றாலும் அழையுங்கள் எனது எண்ணை மின்னஞ்சல் செய்கிறேன். வணக்கம் உழவன் (உரை) 16:21, 7 சூலை 2016 (UTC)Reply

@Info-farmer: Indexஇல் உள்ள பகுப்பு பெட்டியில் எப்படி இரண்டு பெட்டிகளை சேர்ப்பது. ?? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:54, 8 சூலை 2016 (UTC)Reply

மீடியாவிக்கியில் உள்ள பகுப்பு என்பதிலுள்ள முன்னொட்டினையும், பின்னொட்டினையும் நீக்கினால், இங்கு ஒரே பகுப்பு கட்டத்தில், பல பகுப்புகளை இடலாம். ஆனால், ஒவ்வொரு முறையும், [[பகுப்பு: என்ற முன்னொட்டினையும், ]] என்ற பின்னொட்டினையும், ஒவ்வொரு பகுப்புக்கும் இணைக்க வேண்டும்.-- உழவன் (உரை) 17:27, 8 சூலை 2016 (UTC)Reply
@Info-farmer: மீடியாவிக்கியில் மாற்றம் செய்தால் பிறகு அனைத்து புத்தகங்களிலும் மாற்றம் செய்யவேண்டி வருமே! hot vs index வழு நீங்கீனால் நன்று. வழு பதித்தீர்களா? இந்த பிரச்சனை ஆங்கில விக்கிமூலத்திலும் உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:12, 8 சூலை 2016 (UTC)Reply
கவனித்தேன். வழு பதியவில்லை. ஆனால், ஒரு மாற்று வழியை பின்பற்றலாம். அதாவது 2=உரிமம் என்று குறித்து உள்ள கட்டத்தில் இரண்டாம், மூன்றாம் பகுப்பை பகுப்பு குறிகளோடு இணைத்து விடலாம். முதல் பகுப்பு எப்பொழுதும் போல இருக்கட்டும். அல்லது index வார்ப்புருவில் switch வசதி அமைத்து பல பகுப்புகளை ஆங்கில விக்சனரியில் இணைப்பர். ஒரு pipeline இட்டு, பகுப்பு எழுதினால் தோன்றும். எழுதாவிட்டால் தோன்றாது. அதுபற்றி எனக்கு தெரியாது. அணுக்கம் உள்ள இரவிக்கு தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. இணையதள வடிவமைப்பு அவருக்குத் தெரியும். நிரலும் எழுதுவார். ஆனால், இதில் அவர் ஈடுபடுவதில்லை. மேலாண்மையியலில் அதிக நாட்டம் கொண்டவராக உள்ளார்.-- உழவன் (உரை) 01:49, 9 சூலை 2016 (UTC)Reply

ஆங்கில மின்னூல்கள்-இற்றை

அட்டைப்படங்கள்

@Balajijagadesh, Tshrinivasan, Ravidreams:இந்த நடைமுறையால் நமது திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். -- உழவன் (உரை) 13:57, 25 ஆகத்து 2016 (UTC)Reply

[எனது பேச்சு] பக்கத்தையும் கவனியுங்கள். "தொந்தியை குறைப்பது எப்படி" என்ற புத்தகத்தில் உள்ள உடல் அசைவு படங்களை கூட நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி நீக்கிவிட்டால் விளக்கப்படம் இல்லாத அப்புத்தகத்திற்கு என்ன பயன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:19, 26 ஆகத்து 2016 (UTC)Reply

+@Thamizhpparithi Maari: மேற்கூறிய அனைத்து படங்களும் நீக்கப்பட்டுள்ளன. இனியும் அட்டைப்படங்கள், நூலில் இருக்கும் படங்கள் நீக்கப்படாமல் இருக்க, பாலாஜி கூறியபடி, த. இ. க. க. அளித்த ஆவணம் மேம்படுத்த வேண்டும். அதோடு பொதுவக விதிகளிலும் மாற்றம் ஏற்படுத்த கோர வேண்டும். இதுபோன்ற இடர்களால், இந்திய முழுமைக்குமான இந்த முன்னோடித்திட்டம் பின்தங்கும். பொதுவான விதிகளால், இதுபோன்ற குறிப்பான திட்டம் பின்னடைவை அடையாமல் இருக்க, விதிமாற்றங்களை எப்படி செய்ய வேண்டும்? திட்டங்கள் முழுவீச்சுடன் முன்னேறவே விதிகள் என்பதை பொதுவான விதிகளை உருவாக்குபவர் என்றுதான் உணரப்போகிறார்களோ. உழவன் (உரை) 08:15, 26 ஆகத்து 2016 (UTC)Reply

நூலினுள் இருக்கும் படங்கள்

@Balajijagadesh:எந்த வார்ப்புருவைப் பயன்படுத்தினால், epub வடிவத்தில் படங்கள் தெரியும்?

  1. {.{nop}} [.[File:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf|page=5|center|180px]] {.{nop}}
  2. {.{raw image|சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/5|180px}}

இரண்டு முறைகளையும் சோதிக்கலாமா?-- உழவன் (உரை) 03:37, 3 செப்டம்பர் 2016 (UTC)

தற்போதைக்கு எனக்கு தெரிந்த வரையில் முதலில் கூறிய முறை சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். நானும் அவ்வாறே செய்து வருகிறேன். இரண்டாவது முறையில் சில பிரச்சனைகள் உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:43, 3 செப்டம்பர் 2016 (UTC)
Page:தந்தை பெரியார்.pdf/20 என்பதில், முதல் விக்கிநிரலையும், அதன் பேச்சுப்பக்கத்தில் {.{raw image|சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/5|180px}} என்பதையும் பயன்படுத்த எண்ணியுள்ளேன். {.{raw image|ச}.} என்புத லுவா (Lua) நிரலாக்கத்தில் செயற்படுவதால், அது குறித்த உதவியைப் பெறும் போது, அந்த வார்ப்புருவால் தோன்றும் பகுப்பில் உள்ள படங்களின் எண்ணிக்கை, நிரலாக்க உதவி பெற உதவும். உழவன் (உரை) 05:04, 4 செப்டம்பர் 2016 (UTC)

நூல் விவர அட்டவணை

தொகு

@Balajijagadesh:ஒவ்வொரு நூலின் விவர அட்டவணையைப் பக்கத்தில் வரும் வடிவியல் குறியீடுகளை எளிமையாக்கி உள்ளேன். காண்க:Page:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/4 தொடர்ந்து இதனைப் பயன்படுத்தவா?-- உழவன் (உரை) 01:16, 25 செப்டம்பர் 2016 (UTC)

பயன்படுத்துங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:21, 25 செப்டம்பர் 2016 (UTC)
Return to the project page "நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்".