விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல்

இலக்குரை : பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை என்பதுள் ஏறத்தாழ.3.5 இலட்சம் பக்கங்கள் பிழைத்திருத்தப்பட வேண்டும். இந்த பக்கங்கள், கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. பல கோடி தமிழர்கள் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு பக்கம் பிழைத்திருத்தினால், எளிதில் அப்பணி முடியும். இன்னும் பல இலட்சம் பக்கங்களை கட்டற்ற முறையில் வெளிக்கொணரத் திட்டம் திட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தூய்மைப்படுத்தப்படும் தரவுகள், பல கணினியியல், மொழியியில், தமிழ் ஆய்வுகளுக்கு பயனாகி, ஆய்வுகள் மேம்பட்டு, நம் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனால் தமிழில் புதிய புதிய கணிய நுட்பங்கள் வெளிவரும். எனவே, நீங்களும் உங்கள் பங்குக்கு, தாய்தமிழுக்கு ஒரு பக்கமாவது, படவடிவ நூலினை எழுத்து வடிவமாக மாற்றுங்கள். ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!!

2016 ஆம் ஆண்டில் பெறப்பட்ட, தமிழ்நாடு நாட்டுடைமை நூல்கள் 2217 தொகு

தோற்றம்: தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் அளித்த, தமிழறிஞர்களின் நூற்பட்டியல் 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சியால் பெறப்பட்டன. முதற்கட்டமாக, இத்திட்டத்தின் வழியே நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில், 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. கீழ்காணும் பட்டியலில், ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியரின் மின்னூல்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் பதிவேற்றிய பொதுவுடைமை நூல்கள் 251 தொகு

வளர்ச்சி:தமிழ்நாடு அறிவித்த பெயர் நாட்டுடைமை நூல்கள் என்பதாகும். அது விக்கிமீடியாவிற்குள் பன்னாட்டு விதிகள்படி. பொதுக்கள உரிமம் பெறுவதால், பொதுவுடைமை நூல்கள் என்றும் அழைக்கலாம்.

2024 ஆம் ஆண்டில் பதிவேற்றிய பொதுவுடைமை நூல்கள் தொகு

நாட்டுடைமை நூல்களை மேம்படுத்தும் துணைத்திட்டங்கள் தொகு


 
இந்த பணி பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.