விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், கி.மூர்த்தி!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:24, 17 ஜனவரி 2016 (UTC)

அங்கும் இங்கும்தொகு

தாங்கள் மிகுந்த ஈடுபாடோடு அங்கும் இங்கும் புத்தகத்தை மெய்ப்பு பார்த்ததில் மகிழ்ச்சி. அந்த புத்ததின் முதல் பகுதியை நான் முழுமையாக சிரிபார்த்து transclude செய்துவிட்டேன். அதனை இங்கு காணவும். நேரம் கிடைக்கும் பொழுது முழு புத்தகத்தையும் முடித்துவிடுவேன். தாங்களும் அப்பக்கத்தைப் பார்த்தை தங்கள் கருத்தினை தெரிவிக்கவும். ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டாலும் அணுகவும். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:42, 6 சூன் 2016 (UTC)

நன்றி. பாலாஜி. 99 சதவீதம் சரியாகவே மெய்ப்பு பார்த்துள்ளேன். வலது ஓரம் அல்லது இடது ஓரம் உள்ள எழுத்துக்கள் சரியாகத் தெரியாத பக்கங்களில் ஊகித்து நிரப்பியிருக்கிறேன். கடைசியில் ஒர் இடத்தில் மட்டும் முழு சொல்லே தெரியவில்லை. அங்கு **** என்று குறியிட்டுள்ளேன். சரி செய்து கொள்ளவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 01:59, 7 சூன் 2016 (UTC)

1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்தொகு

14 சுந்தரவடிவேலு நூல்களின் மெய்ப்பு அட்டவணையின் 1000 பைட்டு பக்கங்களை உருவாக்கி உள்ளேன். காணவும். ஆசிரியரின் பிற நூல்களின் பட்டியலை விக்கிப்பீடியாவில் பார்த்ததாக நினைவு. எனவே, இங்கு விடுபட்ட நூல்களை சுந்தரவடிவேலு பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். அவற்றை த. இ. க. க. விடம் இருந்து பெற முயற்சிக்கிறேன். வணக்கம்.-- உழவன் (உரை) 14:04, 28 ஆகத்து 2016 (UTC)

பக்கங்கள் காணவில்லைதொகு

Index:எல்லோரும் வாழ்வோம்.pdf என்ற புத்தகத்தில் 10 மற்றும் 11ம் பக்கங்கள் காணவில்லை. அதனால் வேறு புத்தகத்தை மெய்ப்பு பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:27, 1 செப்டம்பர் 2016 (UTC)

ws-exportதொகு

இவ்வுரையாடலில் கலந்து கொண்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இப்பக்கம் பதிவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு மின்னூலின் கடைசி பக்கத்தில் இடம் பெறும். ஆதலால் இப்பக்கம் சிறப்பாக அமைய தங்கள் உதவி தேவைப்படுகிறது. அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:48, 4 செப்டம்பர் 2016 (UTC)

உலகத்தமிழ்தொகு

உலகத்தமிழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. transclusion நீங்கள் செய்கிறீர்களா? அல்லது நான் செய்யட்டுமா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:16, 5 செப்டம்பர் 2016 (UTC)

நீங்களே செய்யுங்கள் பாலாஜி! எனக்கு எப்படி செய்வது என்று தெரியாது.--கி.மூர்த்தி (பேச்சு) 05:19, 5 செப்டம்பர் 2016 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:01, 5 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்தொகு

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தொடர்ந்து மெய்ப்பு பார்த்து மூன்று புத்தகங்கள் முழுமையாக மெய்ப்பு பார்த்து முடித்தமைக்கு தங்களுக்கு இவ்விருது.!! --பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:12, 6 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி பாலாஜி. --கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 6 செப்டம்பர் 2016 (UTC)

உங்கள் அயரா பங்களிப்புகளைக் காண பெரும் மகிழ்ச்சியும் தமிழ் விக்கிமூலம் திட்டத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் ஒருங்கே கூடுகிறது. மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 22:41, 27 செப்டம்பர் 2016 (UTC)

மெய்ப்பு பற்றிதொகு

தாங்கள் விடாமுயற்சியுடன் மெய்ப்பு பார்ப்பதில் மகிழ்ச்சி. மேலும் சிறப்பாக செய்ய சில குறிப்புகள்.

  • ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புது பத்தியாக இருந்தால் இரண்டு காலி வரி விடவும். ஒரு பக்கதின் தொடக்கத்தில் முந்தய பக்க பத்தியின் தொடர்ச்சியாக இருந்தால் ஒரு காலி வரி தொடக்கத்தில் விட்டால் மட்டும் போதும்.
  • மெய்ப்பு பார்க்கும் பொழுது ! ? போன்ற குறிகளில் கவனம் கொள்ளுங்கள். மேலும் புத்தகத்தில் “ ” ‘ ’ போன்ற குறிகள் இருந்தால் இதனையே பயன்படுத்தவும். ' " பயன்படுத்தவேண்டாம். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை காணவும். “ ” ‘ ’ போன்ற குறிகளை உள்ளீடு செய்ய, மெய்ப்பு பெட்டியில் மேம்பட்ட --> குறியீடுகள் என்னும் இடத்தில் காணலாம்.

இப்படி செய்தால் புத்தகம் படிப்பதற்கு அருமையாக இருக்கும். தாங்கள் மெய்ப்பு பார்த்த புத்தகத்தை குறைந்த நேரத்தில் சரிபார்ப்பும் செய்துவிடலாம். நன்றி. அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:32, 24 செப்டம்பர் 2016 (UTC)

ஒரு தொடரின் ஆரம்பத்தில் இதையும் தொடரின் முடிவில் இதனையும் பயன்படுத்தவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:49, 24 செப்டம்பர் 2016 (UTC)

formattingதொகு

தாங்கள் மெய்ப்பு பார்த்த பின்பு நான் செய்யும் மாற்றங்களை தாங்கள் கவனித்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு formatting புலப்படும். எடுத்துக்காட்டு பார்க்கவும். முடிந்த அளவு punctuation marks, bold, center முதலியவை சரியாக செய்துவிட்டால் பெறும்பாலான பணி முடிந்துவிடும். படிப்படியாக தாங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:19, 28 செப்டம்பர் 2016 (UTC)

double quote and singleதொகு

தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது double quote மற்றும் single quote களில் கொஞ்சம் கவனம் கொண்டால் சிறப்பாக இருக்கும். புத்தகத்தில் “ ” ‘ ’ போன்ற குறிகள் இருந்தால் இதனையே பயன்படுத்தவும். ' " பயன்படுத்தவேண்டாம். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை காணவும். “ ” ‘ ’ போன்ற குறிகளை உள்ளீடு செய்ய, மெய்ப்பு பெட்டியில் மேம்பட்ட --> குறியீடுகள் என்னும் இடத்தில் காணலாம். அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:34, 29 செப்டம்பர் 2016 (UTC)

மெய்ப்புதொகு

தாங்கள் மெய்ப்பு பார்த்த அனைத்து நூல்களும் transclude செய்யப்பட்டுவிட்டன. தாங்கள் விருப்பப்பட்டால் ம்மேலும் மெய்ப்பு செய்யக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:31, 26 சூன் 2017 (UTC)

சரி பார்க்கும் பொழுது கவனம்தொகு

இங்கு உள்ள மாற்றத்தைப் பார்க்கவும். ஒரு நடுப்பகுதியில் வரவேண்டிய ஒரு பத்தியே மேலடியில் சென்றுவிட்டது. அதனையும் பார்க்காமல் சரிபார்க்கப்பட்டது என்று குறிக்கப்பட்டுவிட்டது. சரிபார்க்கும் பொழுது கவனமாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 02:33, 18 சூன் 2019 (UTC)