தமிழியக்கம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





தமிழியக்கம்


முல்லை வெளியீடு எட்டு

புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன்

முல்லைப் பதிப்பகம்
சென்னை மதுரை

முதற் பதிப்பு 1945
உரிமை கொண்டது

விலை அணா 12

Commercial Printing & Publishing House, G.T., Madras,
P. I, Card Q. H. No. 120 B. For Kamala Prachuralayam
P.I.Card Q H. MS 197

நல்வினை !


தமிழ்நாட்டில், நம் தமிழ் பல துறைகளிலும் தாழ்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துறைகளில் சிலவற்றையே இதில் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

மற்றும் சில துறைகள் பின்னர் ஆகட்டும். இதை நான் எழுதியதன் நோக்கம் என்ன எனில், தமிழார்வம் மிக்க இளைஞர்கள் இத்தகைய துறைகளில் தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான்.

ஓர் கூட்டம், கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப் பலகையை மாற்றியமைக்கச் சொல்லி- ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் கிளர்ச்சி செய்யின், தமிழ் விடுபடும். தமிழ் நாடு விடுபடும். எவ்விணையினும் “இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத நல்வினை ?

—பாரதிதாசன்

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுத்திரு !
பொன் மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய் !

—பாரதிதாசன்

தமிழ்நாட்டிலே தமிழ் தாழ்மைப் படுத்தப்பட் டிருக்கிறது! இது தமிழர்கட்கு அவமானம் இல்லையா? தமிழ் பிறரால் தாழ்மைப் படுவது ஒரு புறம், தம்மைத் தமிழரென்று சொல்லிக் கொண்டு, பிறமொழிக்கு அடிமையாகித் தமிழைத் தாழ்த்துகின்ற கூட்டத்தின் செயல் மற்றொரு புறம், இந்தத் திருப்பணி அறிந்தும்— அறியாமலும் நடைபெறுகிறது. இந்த இரு சாரார்களிடையே தமிழ் நலிவுறுகிறது ! இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை!

சென்ற ஆண்டு கானாடுகாத்தான் ‘இன்ப மாளிகை’யில் கவியரசர் அவர்கள், ஓரிரவு முழுதும் இமை கொட்டாதிருந்து பல கருத்துக்களை எடுத்துக்கூறினார்கள். அந்தக் கருத்துக்களைப் பாக்களாக்க வேண்டினேன். கவியரசர் அவர்கள் ஆக்கித் தந்தார்கள். அதுவே இந்தத் தமிழியக்கம்!

இந்நூலை ஊன்றிப் படிப்பார்க்குப் பல உண்மைகள் தெரியவரும்.

கவியரசர் அவர்கள் பொருளுக்கும் —புகழுக்கும் அடிமையல்லர். உண்மைக்கு உழைக்கும் உயர்ந்த தகைமையாளர் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாகும் !

கவியரசர் கூறுகின்ற புரட்சி தமிழ்த் துறையிலே ஏற்படுமானால் 'தமிழின் சீர்இளமைத்திறம், செயல் மறந்து வாழ்த்தப்பெறும்.

ப. முத்தையா

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழியக்கம்&oldid=1712761" இலிருந்து மீள்விக்கப்பட்டது