தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்








தொகுப்பாசிரியர்
வல்லிக்கண்ணன்






ஞானியாரடிகள் தமிழ் மன்றம்
ப.எண்.7, பு.எண்.17, நாகமணிதெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002.



★ பதிபாசிரியர் : அ. நா. பாலகிருஷ்ணன்

சென்னை - 600 002.
போன் : 28589314

★ உரிமை : பதிப்பாசிரியருக்கே


★ விற்பனையாளர்கள் :
விஜயா பதிப்பகம்
20. ராஜவீதி,
கோயமுத்தூர் - 641 001
போன் 2394614


கெளரா ஏஜென்சீஸ்
எண்.6. தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை-5.
போன் 28443791, 044-31019286


★ அட்டை பட வடிவமைப்பு :
எம்.ஏ.எஸ். கம்யூனிகேஷன்ஸ்
திருமலைபிள்ளை ரோடு,
தி.நகர், சென்னை - 17.
போன் 98400 - 25535

★ ஒளி அச்சுக்கோப்பு :
சுகன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சென்னை- 2
போன் 284159


★ ஒருங்கிணைப்பு :
ராஜ் எண்டர்பிரைசஸ்,
சென்னை-14 போன் 28111754

பக்கங்கள் : 208

விலை ரூபாய் : 60.00

உள்ளடக்கம்


பதிப்புரை

ஞானியாரடிகள் பற்றி புரிதல் தோன்றியது முதல் அவரைப் பற்றிய வரலாறுகளையும், அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்றும் ஆராய முற்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தின் நினைவில் வாழும் ஏழாம் குருநாதர், ஐந்தாம் பட்டத்து ஞானியாரடிகளின் நாற்றாண்டு நினைவு மலரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் தந்தார். மேலும் அடிக்கடி மடத்திற்கு செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. ஞானியாரடிகளின் குருபூசைச் சொற் பொழிவுகளில் நானும் கலந்து கொள்வதுடன் தீபம், நா. பார்த்தசாரதியையும் கலந்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடு செய்தேன். நா. பா. அவர்கள் ஞானியாரடிகளின் நினைவு மலரை படித்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஆழமான கருத்துக்களை தெளிவான நடையில் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சி என் மனதில் மேலும் தேடலை உருவாக்கியது.


நா.பா. அவர்கள் சிறிய வயதிலேயே, அதாவது 18வது வயதுக்குள், மதுரை தமிழ் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றவர். ஞானியாரடிகள் நடத்திய தமிழ் கல்லூரியில் பாலபாடம், நிகண்டு, நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்கள் முதலில் கற்பிக்கும் பணியை அவர் வெகுவாக பாராட்டி புகழ்ந்தார். நாற்றாண்டு மலரில் பாடல் பரிகப் பகுதியில் வரும் ஒரு வெண்பாவை நா. பா. ரசித்து விளக்கினார்.

ஞானியாரடிகள் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரவர்களிடம் தமிழ் நாற்களைக் கற்று வந்தார். ஆசிரியர் நாள் தோறும் குறிப்பிட்ட வேளையில் மடாலயத்திற்கு வந்து கல்வி கற்பித்தார். யாப்பிலக்கணம் கற்பித்த காலத்தில், ஆசிரியர் ஓர் வெண்பா எழுதி அதற்கு வாய்பாடு, சீர், தளை முதலியவெல்லாம் எழுதித் தயாராக வைத்திருக்கும்படி சொல்வார். அடுத்த நாள் அதை அவரிடம் காட்ட வேண்டும். அந்த வழக்கப்படி ஆசிரியர் ஒருநாள் ஓர் வெண்பாவை எழுதி வைத்து விட்டுச் சென்றார்.

நற்பாடலிபுரத்துநாதனேநாயினேன்
பொற்பாம் நினதடியைப் போற்றினேன்- தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்காக பத்து
ஈண்டு தருக இசைந்து”



என்பது அவர் புனைந்து எழுதி வைத்துவிட்டுச் சென்ற வெண்பா ஆகும்.

அடுத்த நாள் ஆசிரியர் வழக்கம் போல வந்து நோட்டைப் பிரித்துப் பார்த்தார். அவர் பாட்டெழுதியிருந்த பக்கத்தின் அடையாளம் போல, பத்து ரூபாய் நோட்டு ஒன்றை அடிகள் வைத்திருந்ததைக் கண்டார். உடனே ஞானியாரடிகளைப் பார்த்து ‘நான்பாட்டுக்கு (என் மனம் போனபடி) எழுதி வைத்தேன். உண்மையில் பணம் பெற வேண்டும் என்று இப்பாடலை எழுதிவைக்க வில்லை என்று ஆசிரியர் கூறினார்.

அதற்கு அடிகள் நான் பாட்டுக்குத் தான் (பாடலுக்குத் தான்) பொருள் கொடுத்தேனேயல்லாமல் வேறொன்றிற்காகவுமல்ல என்று சிலேடையாகப் பொருள் வரும்படி சொன்னார்.

இந்த சிலேடை நயத்தை வியந்து நா.பா. பாடலின் பொருளைக் கூறி, இருவர் பேச்சிலும் அமைந்திருந்த சிலேடைப் பொருளை விளக்கிக் கூறினார். அவருடைய பேச்சு இன்றும் என் செவிகளில் ஒலித்து நா.பா.வின் பேச்சாற்றலை நினைவுபடுத்துகிறது.

தீபம் நா.பா. அவர்கள் 1987ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ம் நான் மறைந்தார். அவர் ஆற்றிய தற்கால இலக்கிய பணியை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் கடந்த 15 ஆண்டுகளாக ஞானியாரடிகள் தமிழ் மன்றத்தின் வாயிலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஞானியாரடிகள் பற்றி ஓர் வாரப் பத்திரிகையில், ஞானியாரடிகள் பிறந்த குலத்தைப் பற்றி ஓர் தவறான செய்தி வெளிவந்தது. மடம்வெளியிட்ட நூற்றாண்டு மலரிலிருந்து (1973) ஆதாரத்துடன் மறுப்புக் கடிதம் எழுதி அப்பத்திரிகைக்கு அனுப்பினேன். இந்நிகழ்ச்சி ஞானியாரடிகள் பற்றி ஓர் ஆய்வு நரல் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.

ஞானியாரடிகள் தமிழ்மன்றத்தின் சார்பில் “தீபம் யுகம்” நூல் வெளியீட்டு விழாவில் திரு. ஜெயகாந்தன் ஞானியாரடிகள் பற்றி விரிவாகப் பேசினார். அவரது தாய்மாமா ஞானியாரடிகளிடம் பாடம் படித்தார் என்று செய்தியைக் குறிப்பிட்டார். அவரும் கடலூரில் தனது சிறிய வயதில் ஞானியாரடிகள் பார்த்ததை நினைவு கூர்ந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட “ஞான பீடம்” பரிசு வழங்கும் குழுவின் தலைவராக பணியாற்றிய திரு. கே. ஏ. மணவாளன் அவர்களும், ஞானியாரடிகள் வாழ்க்கை பற்றியும் அவரது தமிழ்ச் சமயப் பணி பற்றியும் மிக ஆழமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார்.

ஞானியாரடிகள் பற்றி திருஜெயகாந்தன் அவர்களிடம் ஓர் கட்டுரை கேட்டதற்கு ஞானியார் சுவாமிகளை தன்னை விட நன்றாக அறிந்த கே. ஏ. மணவாளன் ஐயாவிடம் வாங்கி கட்டுரைத் தொகுதியில் சேருங்கள், சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அவரின் விருப்பத்தை ஏற்று, கட்டுரையை மணவாளன் ஐயாவிடம் பெற்று “தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்” புத்தகத்தில் இணைத்துள்ளேன்.

ஞானியாரடிகள் மடத்திற்குச் சென்று புகைப்படங்கள் எடுத்ததோடு, மடத்தின் குருமூர்த்திகளின் சமாதி தோட்டத்திற்கு சென்று ஞானியாரடிகள் நினைவிடத்தையும் நிழற்படம் எடுத்து இப்புத்தகத்தில் இணைத்துள்ளேன். கவாமிகள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணியைப் பற்றி விரிவாக பல தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ளனர். பல புத்தகங்களில் ஞானியாரடிகள் பற்றி வெளிவந்த கட்டுரைகளை இப்புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நூலை சிறப்பாக கொண்டுவர ஏதுவான புத்தகப்பட்டியலை நன்றியுடன் தனியாக இந்நூலில் இணைத்துள்ளேன். தமிழ் சமுதாயத்திற்கு கடந்த நூற்றாண்டில் ஞானியாரடிகள் ஆற்றிய தமிழ்ப்பணியும், சைவப் பணியும் இன்று வரை ஆலமரம்போல் தழைத்து வேருன்றியுள்ளன என்பதை இப்புத்தகத்தில் உள்ளசெய்திகள் நன்கு புலப்படுத்தும். தமிழ் மொழியானது தற்காலக் கணினியையும், தன் வயப்படுத்தி வேகமாக வளர்கிறது என்பது கண்கூடு. மூன்று சங்கங்களைக் கண்ட தமிழ் மொழி இன்று கணினியிலும் நான்காவது சங்கமாக வளர்கிறது.

“தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்” எனும் இக்கட்டுரைத் தொகுதியை தயாரிக்கும் நேரத்தில் “முதல் குடி அரசு சில பிரச்சினைகள் விமர்சனங்கள்" என்ற நூல் எனது நண்பர் மூலம் கிடைத்தது.

இப்புத்தகம் முருகு இராசாங்கம் எம்.ஏ. அவர்ளால் எழுதப்பட்டுள்ளது. கும்பகோணத்திலுள்ள, செங்குயில் பதிப்பகம் அதை 1988ல் வெளியிட்டிருக்கிறது. முதல் ‘குடி அரசு’ இதழை ஞானியாரடிகள் வெளியிட்டுப் பேசிய பேச்சுப்பற்றியும், அதற்கு தந்தை பெரியார் ஆற்றிய பதில் உரையும் இதில் இடம் பெற்றுள்ளனர். இவ்வுரைகள்தான் இப்புத்தகத்தின் பின் பக்க அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “குடி அரக” முதல் இதழுக்காக ஓர் ஆய்வு நரல் எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது. அது இராசாங்கம் அவர்களின் விமர்சன ஆற்றலை நன்கு வெளிப்படுத்துகிறது. தமிழில் விமர்சனக் கலை வளர்ச்சியின் ஆழத்திற்கு சான்றாகத் திகழ்கின்ற க. நா. சு., தி. க. சிவசங்கரன் போன்றவர்களுடன் முருகு இராசாங்கத்தையும் இணைத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சிக்கு இலக்கியம் படித்தபிறகு இலக்கணம் படிப்பதா அல்லது இலக்கணம் படித்த பிறகு இலக்கியம் படிப்பதா என்பது மொழி நூல் அறிஞர்களின் விமர்சனத்திற்கு இன்றும் ஆட்பட்டு வருகின்றது. மொழிப்புலமை வேண்டுமானால் சொல்லாட்சி திறன் வேண்டும். நடைமுறையில் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் வாழும், வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. இது மேலும் வளர வேண்டும். இக்கட்டுரைத் தொகுப்பானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு வகை செய்ய மீண்டும் ஓர் ஞானியாரடிகள் போன்ற தமிழ் நாற்றங்காலுக்கு உரமாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகும்.

இந்நாலின் முகப்பு ஓவியத்தையும், பின்பக்க அட்டை ஓவியத்தையும் அமைத்திட இனாமாக உழைப்பை நல்கிய பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட, இனிய நண்பருக்கு என் நன்றி உரியது. கட்டுரைகளைப் பெற்றுமுறைப்படுத்தி செம்மைப் படுத்தி பதிப்பித்த மூத்த தமிழ்அறிஞர் வல்லிக்கண்ணன் ஐயாவுக்கும் சிவத்திரு ஞானியாரடிகள் வரலாற்று நூலை இக்கட்டுரைத் தொகுப்பில் இணைத்துக் கொள்வதற்கு இசைவை வழங்கிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் மடாலயத்தின் எட்டாம் குருநாதராக அருளாட்சி செய்யும் அடிகளுக்கும், ஒளி அச்சுக்கோப்பு செய்த சுகன் கம்ப்யூட்டர் சிஸ்ட்டத்தார்க்கும், நூலை தயாரித்து அளித்த ராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அ. நா. பாலகிருஷ்ணன்
சென்னை-2.



ஞானியாரடிகள் நினைவிட கல்வெட்டு
குருமூர்த்திகளின் நினைவிடத் தோற்றம்

மடாலயம் - முன்தோற்றம்

ஞானியாரடிகளுக்கு பாடம் கற்பித்த

ஆசிரியர் சாமிநாதய்யனின் நினைவாக

அமைக்கப்பட்ட நூலகம்

ஞானியாரடிகள் பயன்படுத்திய ஆசனம்,
கைத்தடி விபூதிச்சம்படம், கண்டிகை
ஞானியாரடிகள் பயணம் செய்த மேனா - II