நன்னூல் சொல்லதிகாரம் 2. வினையியல்
Vinai sollin ilakkanam
நன்னூல் சொல்லதிகாரம்
தொகு2. வினையியல்
தொகுவினைச்சொல்
தொகுநூற்பா: 320
- (வினை பொதுவிலக்கணம்)
- செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ்
- செய்பொரு ளாறுந் தருவது வினையே. (01)
நூற்பா: 321
- பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள்
- வினைமுதன் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. (02)
நூற்பா: 322
- (வினைவகை)
- அவைதாம்,
- முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி
- ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். (03)
முற்றுவினை
தொகுநூற்பா: 323
- பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்
- முதலறு பெயரல தேற்பில முற்றே. (04)
நூற்பா: 324
- (தெரிநிலை வினைமுற்று)
- ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும்
- ஒருமைப் பன்மையைத் தன்மை முன்னிலையினும்
- முக்கா லத்தினு முரண முறையே
- மூவைந் திருமூன் றாறாய் முற்று
- வினைப்பத மொன்றே மூவொன் பானாம். (05)
நூற்பா: 325
- (ஆண்பாற் படர்க்கை வினைமுற்று)
- அன்ஆ னிறுமொழி யாண்பாற் படர்க்கை. (06)
நூற்பா: 326
- (பெண்பாற் படர்க்கை வினைமுற்று)
- அள்ஆ ளிறுமொழி பெண்பாற் படர்க்கை. (07)
நூற்பா: 327
- (பலர்பாற் படர்க்கை வினைமுற்று)
- அர்ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
- பல்லோர் படர்க்கைமார் வினையொடுமுடிமே. (08)
நூற்பா: 328
- (ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று)
- துறுடுக் குற்றிய லுகர வீற்ற
- ஒன்றன் படர்க்கை டுக்குறிப் னாகும். (09)
நூற்பா: 329
- பலவின்பாற் படர்க்கை வினைமுற்று)
- அஆ வீற்ற பலவின் படர்க்கை
- ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும். (10)
இருதிணைப் பொதுவினை
தொகுநூற்பா: 330
- தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
- உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை. (11)
நூற்பா: 331
- (தன்மையொருமை வினைமுற்று
- குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ
- டல்லன் னென்னே னாகு மீற்ற
- இருதிணை முக்கூற் றொருமைத் தன்மை. (12)
நூற்பா: 332
- (தன்மைப்பன்மை வினைமுற்று)
- அம்மா மென்பன முன்னிலை யாரையும்
- எம்மே மோமிவை படர்க்கை யாரையும்
- உம்மூர் கடதற விருபா லாரையும்
- தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை. (13)
நூற்பா: 333
- செய்கெ னொருமையுஞ் செய்குமென் பன்மையும்
- வினையொடு முடியினும் விளம்பிய முற்றே. (14)
நூற்பா: 334
- (உளப்பாட்டுப்பன்மை முன்னிலை)
- முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை. (15)
நூற்பா: 335
- (முன்னிலை யொருமை வினைமுற்று)
- ஐயா யிகர வீற்ற மூன்றும்
- ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும்
- முப்பா லொருமை முன்னிலை மொழியே. (16)
நூற்பா: 336
- முன்னிலை முன்ன ரீயு மேயும்
- அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. (17)
நூற்பா: 337
- (முன்னிலைப் பன்மை வினைமுற்று)
- இர்ஈ ரீற்ற விரண்டு மிருதிணைப்
- பன்மை முன்னிலை மின்னவற் றேவல். (18)
(நூற்பா: 338)
- (வியங்கோள் வினைமுற்று)
- கயவொடு ரவ்வொற்றீற்ற வியங்கோள்
- இயலு மிடம்பா லெங்கு மென்ப. (19)
நூற்பா: 339
- வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன. (20)
பெயரெச்சம்
தொகுநூற்பா: 340
- செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
- காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
- செய்வ தாதி யறுபொருட் பெயரும்
- எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே. (21)
நூற்பா: 341
- செய்யுமெ னெச்ச வீற்றுயிர் மெய்சேறலுஞ்
- செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல்
- உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே. (22)
வினையெச்சம்
தொகுநூற்பா: 342
- தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை
- ஒழிய நிற்பது வினையெச் சம்மே. (23)
நூற்பா: 343
- (வினையெச்ச வாய்பாடுகள்)
- செய்து செய்பு செய்யாச் செய்யூச்
- செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
- வான்பான் பாக்கின வினையெச் சம்பிற
- ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும். (24)
நூற்பா: 344
- அவற்றுள்,
- முதலி னான்கு மீற்றின் மூன்றும்
- வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற. (25)
நூற்பா: 345
- சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும். (26)
நூற்பா: 346
- சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை. (27)
நூற்பா: 347
- (வினைக்குறிப்பு)
- ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா. (28)
நூற்பா: 348
(செய்யுமென் முற்று)
- பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
- செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே. (29)
நூற்பா: 349
(பாற்பொதுவினை)
- யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால். (30)
நூற்பா: 350
- எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால். (31)
நூற்பா: 351
- (புறனடை)
- வினைமுற் றேவினை யெச்ச மாகலுங்
- குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே. (32)
சொல்லதிகாரம் வினையியல் முற்றிற்று
தொகுபார்க்க:
- [[]]
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 1. பெயரியல்