நன்னூல் சொல்லதிகாரம் 3. பொதுவியல்
3. பொதுவியல்
தொகு- (முன்னுள்ள பெயரியலுக்கும் வினையியலுக்கும் பின்வரும் இடையியலுக்கும் உரியியலுக்கும் உரிய பொதுவிலக்கணங்களைக் கூறும் இயல் ஆதலான் இது பொதுவியல் எனப்பட்டது. இப்பொதுவியல் சிங்கநோக்காகப் பெயர்வினையியல்களுக்கும், இடையுரியியல்களுக்கும் இடையே வைக்கப்பட்டது என்பர்.)
நூற்பா: 352
- இருதிணை யாண்பெணு ளொன்றனை யொழிக்கும்
- பெயரும் வினையுங் குறிப்பி னானே. (01)
நூற்பா: 353
- பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல்
- ஆவோ வாகலுஞ் செய்யுளு ளுரித்தே. (02)
நூற்பா: 354
- உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினுந்
- திரியா தத்தமீற் றுருபி னென்ப. (03)
நூற்பா: 355
- உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும்
- ஒருதம் மெச்ச மீறுற முடியும். (04)
நூற்பா: 356
- உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும்
- பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன. (05)
நூற்பா: 357
- எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும். (06)
நூற்பா: 358
- ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே. (07)
நூற்பா: 359
- பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
- மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே. (08)
நூற்பா: 360
- பெயர்வினை யும்மைசொற் பிரிப்பெண் வொழியிசை
- எதிர்மறை யிசையெனுஞ் சொல்லொழி பொன்பதுங்
- குறிப்புந் தத்த மெச்சங் கொள்ளும். (09)
தொகைநிலைத்தொடர்மொழி
தொகுநூற்பா: 361
- பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
- முதலிய பொருளி னவற்றி னுருபிடை
- ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு
- மொழிபோ னடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல். (10)
நூற்பா: 362
- வேற்றுமை வினைபண் புவமை யும்மை
- அன்மொழி யெனவத் தொகையா றாகும். (11)
நூற்பா: 363
வேற்றுமைத் தொகை
தொகு- இரண்டு முதலா மிடையா றுருபும்
- வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகை. (12)
நூற்பா: 364
வினைத்தொகை
தொகு- காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை. (13)
நூற்பா: 365
பண்புத்தொகை
தொகு- பண்பை விளக்கு மொழிதொக் கனவும்
- ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை. (14)
நூற்பா: 366
உவமத்தொகை
தொகு- உவம வுருபில துவமத் தொகையே. (15)
நூற்பா: 367
- (உவமவுருபுகள்)
- போலப் புரைய வொப்ப வுறழ
- மானக் கடுப்ப வியைய வேய்ப்ப
- நேர நிகர வன்ன வின்ன
- என்பவும் பிறவு முவத் துருபே. (19)
நூற்பா: 368
உம்மைத்தொகை
தொகு- எண்ண லெடுத்தன் முகத்த னீட்டல்
- எனுநான் களவை யுளும்மில தத்தொகை. (20)
நூற்பா: 369
அன்மொழித்தொகை
தொகு- ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி. (21)
நூற்பா: 370
- முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
- எனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள். (22)
நூற்பா: 371
- வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
- மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும். (23)
நூற்பா: 372
- உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே. (24)
நூற்பா: 373
- தொக்குழி மயங்குந விரண்டு முதலேழ்
- எல்லைப் பொருளின் மயங்கு மென்ப. (25)
தொகாநிலைத் தொடர்மொழி
தொகுநூற்பா: 374
- முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொருள்
- ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை. (26)
வழாநிலை, வழுவமைதி
தொகுநூற்பா: 375
- (எழுவகை வழுக்கள்)
- திணையே பாலிடம் பொழுது வினாவிறை
- மரபா மேழு மயங்கினாம் வழுவே. (27)
நூற்பா: 376
- (வழுவாமற் காத்தல்)
- ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும்
- மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப. (28)
நூற்பா: 377
- (திணைவழுவமைதி)
- உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
- அதனொடு சார்த்தி னத்திணை முடிபின. (29)
நூற்பா: 378
- (திணை பால் மரபு வழுவமைதி)
- திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
- மிகவினு மிழிபினு மொருமுடி பினவே. (30)
நூற்பா: 379
- (திணைபால் வழுவமைதி)
- உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும்
- இழிப்பினு பாறிணை யிழுக்கினு மியல்பே. (31)
நூற்பா: 380
- (பாலிட வழுவமைதி)
- ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும்
- ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே. (32)
நூற்பா: 381
- (இடம் வழுவாமற் காத்தல்)
- தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
- எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும். (33)
நூற்பா: 382
- (காலம்)
- இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலமூன்றே. (34)
நூற்பா: 383
- (கால வழுவமைதி)
- முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச்
- செப்புவர் நிகழுங் காலத் தானே. (35)
நூற்பா: 384
- விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும்
- பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி. (36)
நூற்பா: 385
- (அறுவகை வினா)
- அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை
- ஏவ றரும்வினா வாறு மிழுக்கார். (37)
நூற்பா: 386
- (எண்வகை விடை)
- சுட்டு மறைநே ரேவல் வினாதல்
- உற்ற துரைத்த லுறுவது கூறல்
- இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி
- நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. (38)
நூற்பா: 387
- (வினா விடைகளின் முதல்சினை வழுவாமை)
- வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல். (39)
நூற்பா: 388
- (மரபு)
- எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
- செப்பின ரப்படிச் செப்புதன் மரபே. (40)
நூற்பா: 389)
- (மரபுவழாநிலை)
- வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும்
- வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். (41)
நூற்பா: 390
- வினைசார் பினமிட மேவி விளங்காப்
- பலபொரு ளொருசொற் பணிப்பர் சிறப்பெடுத்தே. (42)
நூற்பா: 391
- எழுத்திய றிரியாப் பொருடிரி புணர்மொழி
- இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப. (43)
நூற்பா: 392)
- (மரபுவழாநிலையும் வழுவமைதியும்)
- ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி
- ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி. (44)
நூற்பா: 393
- திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
- குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ
- டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே. (45)
நூற்பா: 394
- படர்க்கைமுப் பெயரோ டணையிற் சுட்டுப்
- பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும்
- மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி. (46)
நூற்பா: 395
- அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
- இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும். (47)
நூற்பா: 396
- (மரபு வழாநிலை)
- இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந்திசையா. (48)
நூற்பா: 397
- ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையார். (47)
நூற்பா: 398
(மரபு வழுவமைதி)
- ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா. (48)
நூற்பா: 399
- இனைத்தென் றறிபொரு ளுலகினி லாப்பொருள்
- வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும். (49)
நூற்பா: 400
- செயப்படு பொருளைச் செய்தது போலத்
- தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே. (50)
நூற்பா: 401
- பொருண்முத லாறா மடைசேர் மொழியினம்
- உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும். (51)
நூற்பா: 402
- அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின். (52)
நூற்பா: 403
- அடைசினை முதன்முறை யடைதலு மீரடை
- முதலோ டாதலும் வழக்கிய லீரடை
- சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே. (53)
நூற்பா: 404
- இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். (54)
நூற்பா: 405
- காரண முதலா வாக்கம் பெற்றுங்
- காரண மின்றி யாக்கம் பெற்றும்
- ஆக்க மின்றிக் காரண மடுத்தும்
- இருமையு மின்றியு மியலுஞ் செயும்பொருள். (55)
நூற்பா: 406
- தம்பா லில்ல தில்லெனி னினனாய்
- உள்ளது கூறி மாற்றியு முள்ளது
- சுட்டியு முரைப்பர் சொற்சுருங் குதற்கே. (56)
நூற்பா: 407
- ஈதா கொடுவெனு மூன்று முறையே
- இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை. (57)
நூற்பா: 408
- முன்னத்தி னுணருங் கிளவியு முளவே. (58)
நூற்பா: 409
- கேட்குந போலவுங் கிளக்குந போலவும்
- இயங்குந போலவு மியற்றுந போலவும்
- அஃறிணை மருங்கினு மறையப் படுமே. (59)
நூற்பா: 410
- உருவக வுவமையிற் றிணைசினை முதல்கள்
- பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே. (60)
பொருள்கோள்
தொகுநூற்பா: 411
- (எட்டுவகைப் பொருள்கோள்கள்)
- யாற்றுநீர் மொழிமாற்று நிரனிரை விற்பூண்
- டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
- டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே. (61)
நூற்பா: 412
- (யாற்றுநீர்ப் பொருள்கோள்)
- மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள்
- அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே. (62)
நூற்பா: 413
- (மொழிமாற்றுப் பொருள்கோள்)
- ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
- மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாற்றே. (63)
நூற்பா: 414
- (நிரனிறைப் பொருள்கோள்)
- பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும்
- வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினும்
- நேரும் பொருள்கோ ணிரனிறை நெறியே. (64)
நூற்பா: 415
- (பூட்டுவிற் பொருள்கோள்)
- எழுவா யிறுதி நிலைமொழி தம்முட்
- பொருணோக் குடையது பூட்டுவில் லாகும். (65)
நூற்பா: 416
- (தாப்பிசைப் பொருள்கோள்)
- இடைநிலை மொழியே யேனை யீரிடத்தும்
- நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை. (66)
நூற்பா: 417
- (அளைமறிபாப்புப் பொருள்கோள்)
- செய்யு ளிறுதி மொழியிடை முதலினும்
- எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே. (67)
நூற்பா: 418
- (கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
- யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
- ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே. (68)
நூற்பா: 419
- (அடிமறிமாற்றுப் பொருள்கோள்)
- ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்
- யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை
- மாட்சியு மாறா வடியவு மடிமறி. (69)
நன்னூல் சொல்லதிகாரம் பொதுவியல் முற்றிற்று
தொகுபார்க்க:
- [[]]
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 1. பெயரியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்