நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
தொகுஉரை: களத்தூர் வேதகிரி முதலியார்
தொகுII.பொருட்பால்: 1.அரசியல்
தொகு[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]
இருபதாம் அதிகாரம் தாளாண்மை
[அஃதாவது, முயற்சி செய்தலாம்]
பாடல்: 191 (கோளாற்றக்)
தொகுகோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் ||
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப ||
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் ||
தாளாளர்க் குண்டோ தவறு. (01) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 192 (ஆடுகோடாகி)
தொகுஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉங் ||
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும் ||
வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் ||
றாழ்வின்றித் தன்னைச் செயின். (02) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 193 (உறுபுலி)
தொகுஉறுபுலி யூனிரை யின்றி யொருநாட் ||
சிறுதேரை பற்றியுந் தின்னு - மறிவினாற் ||
காற்றொழி லென்று கருதற்க கையினான் ||
மேற்றொழிலு மாங்கே மிகும். (03) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 194 (இசையா)
தொகுஇசையா தெனினு மியற்றியோ ராற்றா ||
லசையாது நிற்பதா மாண்மை - யிசையுங்காற் ||
கண்ட றிரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப ||
பெண்டிரும் வாழாரோ மற்று. (04) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 195 (நல்லகுல)
தொகுநல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் ||
சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பி ||
னொண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை ||
யென்றிவற்றா னாகுங் குலம். (05) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 196 (ஆற்றுந்)
தொகுஆற்றுந் துணையு மறிவினை யுள்ளடக்கி ||
யூக்க முரையா ருணர்வுடையார் - ஊக்க ||
முறுப்பினா லாராயு மொண்மை யுடையார் ||
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 197 (சிதலை)
தொகுசிதலை தினப்பட்ட வால மரத்தை ||
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் ||
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற ||
புதல்வன் மறைப்பக் கெடும். (07) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 198 (ஈனமாயில்)
தொகுஈனமா யில்லிருந் தின்றி விளியினு ||
மானந் தலைவருவ செய்பவோ - யானை ||
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா ||
ளரிமா மதுகை யவர். (08) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 199 (தீங்கரும்பீ)
தொகுதீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி ||
தேங்கமழ் நாற்ற மிழந்தாஅங் - கோங்கு ||
முயர்குடி யுட்பிறப்பி னென்னாம் பெயர்பொறிக்கும் ||
பேராண்மை யில்லாக் கடை. (09) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 200 (பெருமுத்)
தொகுபெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங் ||
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப் ||
பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை ||
நீரு மமிழ்தாய் விடும். (10) ||
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
இருபதாம் அதிகாரம் தாளாண்மை முற்றிற்று
நாலடியார் அரசியல் முற்றிற்று
பார்க்க
தொகுII.பொருட்பால்: 1.அரசியல்
- நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
- நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
II.பொருட்பால்: 2.நட்பியல்
II.பொருட்பால்: 3.இன்பவியல்
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]