வணக்கம்.
தகவலுழவன்
(user:info-farmer)
3rd Wikiconference India 2023
விக்கிமீடியாவின் குடும்ப இலக்குகள்

என்னைக் குறித்து ..

தொகு
 
தொகு
 
முன்தோற்றம்
 
சேமி
 

  பயனர் பெயர் : தகவலுழவன் (404391 edits நேரடித் தொகுப்புகள்)

இயற்பெயர் : லோகநாதன் இரத்தினவேல்
புனைப்பெயர் : தகவலுழவன் / தகவல் உழவன் / த-உழவன் / தமிழ் உழவன்

எனது தானியங்கிகள் : (  )

  1. TamilBOT (745,220 தொகுப்புகள்)
  2. Info-farmerBot (419,519 தொகுப்புகள்)
  3.   AutoWikiBrowser புள்ளி விவரம் - ??? தொகுப்புகள்

  கலந்துரையாடுக : Info-farmer Talk Page

அறிமுகம்

தொகு

'தகவலுழவன்' என்ற புனைப்பெயரில் இணையத்தில் செயற்படும் இவரின் இயற்பெயர் இர. லோகநாதன். சேலம்மாவட்டம் ஆத்துரைச் சேர்ந்தவர். இளநிலைத் தாவரவியல் பட்டம்(B.Sc), நூலகத்தகவல் அறிவியலில் முதுநிலைப்பட்டம் (M.L.I.S.), இளநிலை சட்டம்(B.L.) பெற்றுள்ளவர். 2008 ஆம் ஆண்டு முதல் விக்கிமீடியத் திட்டங்களில் பங்களித்து வருகிறார்.

விக்கியில் உள்ள சிலகருவிகளின் மேம்பாட்டிற்குப் பங்களித்துள்ளார். குறிப்பாக அனைவரும் எளிதாகப் பங்களிக்கவல்ல நுட்பங்களை ஆய்ந்து, உரிய மென்பொருளாளர்களிடம் உதவியுடன், அவற்றை யாவரும் பின்பற்ற உதவுபவர். ஐயங்களையும், விக்கிப்பதிவுகளையும் தெளிவுப்படுத்த, பல கணியத்திரைப்படப் பதிவுகளை(Video tutorials) உருவாக்கித் தரும் வழக்கம் கொண்டவர்.

தமிழக அரசுடன் இணைந்து தமிழ்ச்சொற்களையும் (1.5 இலட்சம் + பிறருடன் 1 இலட்சம்), 2600 நாட்டுடைமை நூல்களையும் (ஏறத்தாழ 4 இலட்சம் பக்கங்கள்) விக்கித்திட்டங்களில் இணைத்தவர். இதற்குரிய சட்டத்தெளிவுரையை வழங்கி இணக்கம் ஏற்படுத்தியவர். கட்டற்ற உரிமம் சார்ந்த சட்டங்களைத் தெளிவு படுத்தும் பரப்புரையாளர்.

'விக்கிமீடியத் திட்டங்கள் பின்பற்ற வேண்டிய உத்திகள், 2030' என்ற பன்னாட்டு விக்கிமீடியர் கலந்தாய்வு கூட்டம் செருமனியில் நடந்தது. அதில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ் தவிர, பிற மொழியினரும் கலந்து கொள்ளும், பல இந்திய விக்கிக்கூடல்களில், தமிழ் சார்பாக கலந்து கொண்டு, நம் மொழியினர் பின்பற்றும் நுட்பத்தைப் பறைச்சாற்றியவர்.

தமிழ் விக்கிமீடியத்திட்டங்களான விக்சனரி, விக்கிப்பீடியா, விக்கிமூலம் ஆகியத் திட்டங்களில் நிருவாகியாகவும்(sysop=system operator), விக்சனரித் திட்டத்தின் அதிகாரியாகவும்(bureaucrat) தேர்ந்தெடுக்கப்பட்டுள்வர். விக்கிமீடியப் பொதுவக காப்புரிமை தன்னார்வ குழுவில் (c:Commons:Volunteer Response Team) இணைந்து தமிழ் நூல்களுக்குரிய காப்புரிமைச் சட்ட மேலாண்மை செய்பவர். இந்திய அளவில் அவ்வப்போது நடைபெறும், பலவகையான, உயர்மட்ட விக்கிப்பபயிற்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி பெற்றுள்ளவர். கட்டற்ற மென்பொருள் பரப்புரையாளர்; விக்கித்தானியங்கி நிரலர்; விக்கித் திட்டங்கள் குறித்து, பல கல்லூரிகளில், கல்லூரியினருடன் இணைந்து, பயிற்சி அளிப்பவர். அவ்வப்போது கணியம், நூலகம் அறக்கட்டளை, லிபரே ஆபிசு போன்ற கட்டற்ற தமிழ் திட்டங்களிலும் பங்களிப்பு செய்து இணையத் தமிழ் ஆற்றுகிறார்.

சான்றுகள்

தொகு
  • 2008 முதல் எனது பங்களிப்புகளால் எனக்குக் கிடைத்த சிறப்புரிமைகள்: விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி போன்ற தமிழ் திட்டங்களின் நிருவாகிகளில் (sysop = admin) ஒருவன். விக்சனரி என்ற விக்கி அகராதித்திட்டத்தின் அதிகாரியாகவும் (bureaucrat) இருக்கிறேன். கீழுள்ள இணைப்பின் வழியே அதனை உறுதி படுத்திக் கொள்ளவும்.
  • தானியங்கிகள் பங்களிப்புகள் (Automatic uploader)
  • உருவாக்கிய கணியத்திரைப்பட பதிவுகள் . இவற்றைக் கண்டு யாவரும் கற்கலாம்.
https://commons.wikimedia.org/wiki/Category:Instructional_videos_on_using_Tamil_Wikipedia

சமூக ஏற்புகளும், விருதுகளும்

தொகு
  • இந்திய விக்கிமீடிய கூடல்களில் எனக்குக் கிடைத்து ஊக்கங்கள்.
  1. NWR -2011 (Noteworthy Wikimedian Recognition File : NWR2011 and Jurymention V1.0.pdf - SEE PAGE NO: 18)]
  2. The barnstar-TTT. The skills in the Train the Trainer 2015 program
  3. The barnstar-VisualEditor ...your outstanding contributions to the recent 2nd VisualEditor Translathon.
  4. பிறவற்றை உரிய சான்றுகளுடன் விரிவு படுத்த வேண்டும்..
  5. .
  6. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Info-farmer/myFootPrints&oldid=1512624" இலிருந்து மீள்விக்கப்பட்டது