விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு

பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்

தமிழ்நாட்டில் முதன்முதலில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இத்திட்டப்பக்கத்தில், இந்நிகழ்வு குறித்தவை ஆவணப்படுத்தப்படுகின்றன. மேலும், இந்நிகழ்வான கலந்து கொள்ளும் பங்களிப்பாளர்களுக்கு நேரடியாக நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் பயனர்:Neyakkoo ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, m:CIS-A2K/Requests/Projects#One day workshop for College Assistant Professors of Tamil Community என்ற பக்கத்தில் காணலாம்.

பயிற்சியின் நோக்கம்

தொகு
  • விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு CIS-A2K-வின் நிதி நல்கையுடன் ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

பயிற்சிக் காலம்

தொகு
  • நாள் - 08.04.2023
  • நேரம் - முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 5.30 வரை

பயிற்றுநர்

தொகு

பயிற்சி நிகழிடம்

தொகு

பயிற்சிகள்

தொகு
 
விக்கிமீடியா இலக்குகள்
 
மகளிருக்கு முக்கியத்துவ ஆய்வு
 
இப்பயிலரங்கில் கலந்து கொண்டோர்
  • தொடக்கவிழா: 9.30-10.00

அமர்வு - 1 (10.00-11.15)

தொகு
  • 10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம்
  • 10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம்
  • 10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் (2015 முதல் புள்ளிவிவரங்கள்)
  • 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை

அமர்வு - 2 (11.15-2.00)

தொகு
  • 11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் (காண்க)
  • 11.30 - 11.45 - செயல்முறை
  • 11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும்
  • 12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
  • 12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி
  • 12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
  • 1.00 - 2.00 - உணவு இடைவேளை

அமர்வு - 3 (2.00-4.10)

தொகு
  • 2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 (கவிதை வடிவமைப்பு)
  • 2.20 - 2.40 - செயல்முறை
  • 2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 (பத்தியமைப்பு, கீழடி, பக்க ஒருங்கிணைவு)
  • 3.00 - 3.20 - செயல்முறை
  • 3.20 - 4.00 - விக்கிமூலக் கருவிகள் 3
  • 4.00 - 4.10 - தேநீர் இடைவேளை

அமர்வு - 4 (4.10-5.00)

தொகு
  • 4.10 - 4.30 - கலந்துரையாடல்
  • 4.30 - 5.30 - எதிர்காலத் திட்டமிடல்
  • நிறைவு விழா: 5.30-6.00

பயிற்சி நூல்கள்

தொகு
  1. அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf (முதன்மை இலக்கு நூல்) - மொத்தமுள்ள 52 தொகுதிகளும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பயனுள்ளவையாகும்.
  2. அட்டவணை:அறப்போர், அண்ணாதுரை.pdf (மின்வருடல் பயிற்சி)

பயில்க

தொகு


பயில்வோர்

தொகு
 
விக்கிமீடிய அறிமுகம்
 
தனிநபர் பயிற்சி
 
  1. --Rajendran Nallathambi (பேச்சு) 17:37, 26 மார்ச் 2023 (UTC)
  2. --Kavitha Packiyam (பேச்சு) 17:40, 26 மார்ச் 2023 (UTC)
  3. --நேயக்கோ (பேச்சு) 05:15, 8 ஏப்ரல் 2023 (UTC)
  4. --Selviprabha (பேச்சு) 05:18, 8 ஏப்ரல் 2023 (UTC)
  5. --Nishanth9578 (பேச்சு) 05:18, 8 ஏப்ரல் 2023 (UTC)
  6. --Ramajayamsrini (பேச்சு) 05:20, 8 ஏப்ரல் 2023 (UTC)
  7. Geethabharathi (பேச்சு) 05:20, 8 ஏப்ரல் 2023 (UTC)
  8. --SSangeethaS (பேச்சு) 05:21, 8 ஏப்ரல் 2023 (UTC)
  9. --நுட்பா 05:22, 8 ஏப்ரல் 2023 (UTC)
  10. --Muneesmoorthy muthu (பேச்சு) 05:23, 8 ஏப்ரல் 2023 (UTC)
  11. --Gunathamizh (பேச்சு) 05:24, 8 ஏப்ரல் 2023 (UTC)
  12. ----VINOTHKS86108 (பேச்சு) 05:26, 8 ஏப்ரல் 2023 (UTC)
  13. --Tamilvasan (பேச்சு) 05:27, 8 ஏப்ரல் 2023 (UTC)
  14. --AMSAVENI CHINNASAMY (பேச்சு) 05:27, 8 ஏப்ரல் 2023 (UTC)
  15. ---Sridharrv2000 (பேச்சு) 05:32, 8 ஏப்ரல் 2023 (UTC)
  16. ----Rajesh Panneerselvam (பேச்சு) 05:33, 8 ஏப்ரல் 2023 (UTC)
  17. ---Dr.R.Satheeshmohan (பேச்சு) 05:34, 8 ஏப்ரல் 2023 (UTC)
  18. ----Mythily Balakrishnan (பேச்சு) 06:01, 8 ஏப்ரல் 2023 (UTC)
  19. --Logasarann (பேச்சு) 05:36, 8 ஏப்ரல் 2023 (UTC)
  20. --Dr.B. ARUNRAJ (பேச்சு) 05:37, 8 ஏப்ரல் 2023 (UTC)
  21. --Thamizhini Sathiyaraj (பேச்சு) 05:47, 8 ஏப்ரல் 2023 (UTC)
  22. --NithyaSathiyaraj (பேச்சு) 05:49, 8 ஏப்ரல் 2023 (UTC)
  23. --KarunyaRanjith (பேச்சு) 05:59, 8 ஏப்ரல் 2023 (UTC)
  24. ---SENTHAMIZHSELVI A (பேச்சு) 06:02, 8 ஏப்ரல் 2023 (UTC)
  25. ---Omraaja (பேச்சு) 06:03, 8 ஏப்ரல் 2023 (UTC)
  26. --Pavanar Sathiyaraj (பேச்சு) 06:05, 8 ஏப்ரல் 2023 (UTC)
  27. --தகவலுழவன் (பேச்சு). 08:51, 8 ஏப்ரல் 2023 (UTC)
  28. --R. Ariharasuthan (பேச்சு) 10:07, 8 ஏப்ரல் 2023 (UTC)

நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)

தொகு
  • திட்டமிட்ட நேரத்தில் பயிற்சி தொடங்கியது.
  • இந்த நிகழ்வில் இருபத்து இரண்டு கல்லூரிப் பேராசிரியர்களும், நான்கு கல்லூரி மாணவர்களும், தகவலுழவன், நிதானியா சாலோம், இராபியத்துல்லா ஆகிய விக்கிமூலப் பயிற்றுநர்களும், மூன்று விக்கிமீடிய முதன்மை அணுக்கர்களாகிய தன்வீர் (விக்கிமீடிய அறக்கட்டளையின் தென்கிழக்கு ஆசியத் திட்டங்களின் நிதிநல்கைப் பொறுப்பாளர்), மனவ்பீரித்தி (இந்திய விக்கிமீடியப் பங்களிப்பாளர்களின் இணையப் பாதுகாப்புப் பொறுப்பாளர்; இந்திய பெண் பங்களிப்பாளர் அணியின் வழிநடத்தும் குழு உறுப்பினர்), ஜெயந்தா (இந்தியமொழிகளுக்கான விக்கிமூல திட்ட ஆலோசகர், CIS-A2K குழு உறுப்பினர்) ஆகிய மூவரும் கலந்துகொண்டனர்.
  • இம்மூவரும் இணையவழியில் கலந்துகொண்டு விக்கிமூலத் திட்டத்தின் சிறப்புகளையும் வட்டாரக் கல்வி வளங்களை மேம்படுத்துவதற்கு விக்கிமீடியா அறக்கட்டளை உதவும் எனவும் எடுத்துரைத்தனர்.
  • இந்த ஒருநாள் பயிற்சியில் விக்கித்திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலத்தின் முக்கியத்துவம், விக்கிமூலர்கள் அறிமுகம், பயனர் கணக்கு உருவாக்கம், இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும், நூல் வருடல் செயல்முறைகள் (OCR), எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி, நுட்பப் பயிற்சி 1 (கவிதை வடிவமைப்பு), நுட்பப் பயிற்சி 2 (பத்தியமைப்பு, கீழடி, பக்க ஒருங்கிணைவு), விக்கிமூலக் கருவிகள் 3, கலந்துரையாடல், எதிர்காலத் திட்டமிடல் எனத் திட்டமிடலின் அடிப்படையிலே பயிற்சி நிறைவுற்றது.
  • இப்பயிற்சியில், அட்டவணை:பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 1,அட்டவணை:அறப்போர், அண்ணாதுரை.pdf ஆகிய இரு நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக் கொள்ளப்பெற்றன. இந்நூல்களைப் பயில்வோரால் வருடியும் மெய்ப்பும் செய்து பார்க்கப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • கலந்துரையாடலில் முனைவர் பா.அருண்ராஜ் (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி), கல்வெட்டுத் தரவுகளை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவையை எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி, கிரந்த எழுத்துக்களை வருடும் பொழுது எழுத்துணரியாக்கத்தில் ஏற்படும் சிக்கலையும் கூறினார்.
  • முனைவர் மு.முனீஸ் மூர்த்தி (பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி) விக்கிமூலம் முதற் பக்கத்தில், மெய்ப்புப் பார்க்கும் நடுப்பகுதி போன்ற இடங்களில் உள்ள மொழிப்பிழைகளைச் சுட்டிக் காண்பித்தார்.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த முனைவர் லோ.சரவணன் குறில், நெடில் குறித்த அச்சுத் தெளிவின்மையைத் தமிழ் படித்தோர்தான் அறிந்துகொள்ள இயலும். தவறாக அதனைத் திருத்தாவிட்டால் அயோத்திதாசர் போன்ற வரலாற்று ஆவணங்களில் பொருளே மாறி விடும் என்பதையும், பயிற்சி நூலில் வரும் திருக்குறளின் வரிசை எண்களுக்குரிய வடிவமைப்புக் குறித்தும் பேசியது பயிற்சி நடத்துனரும் தேடி கூறும் படியான கேள்வியாக இருந்தது.
  • 47-க்கும் மேற்பட்ட மொழிகளுக்குமேல் பயிற்சியுடைய ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களின் 52 தொகுதி நூல்களை விக்கிமூலத்தில் கொண்டு வருதலும், மெய்ப்பாக்கம் செய்தலும் வேண்டும் என முடிவெடுக்கப் பெற்றது.
  • s:ta:user:R. Ariharasuthan எனும் கல்லூரிப் பேராசிரியர் (டி.ஜே.வடிவமைப்புக் கல்லூரி, கோயமுத்தூர்), Index:Why I am an Atheist by Bhagat Singh.pdf என்பதும், அதன் தமிழ் நூலான அட்டவணை:நான் நாத்திகன் ஏன்?.pdf என்பதும் இரண்டு மணி நேரம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

விளைவுகள்

தொகு

நிழற்படங்கள்

தொகு

நிகழ்படங்கள்

தொகு