நன்னூல் சொல்லதிகாரம் 4. இடையியல்
நன்னூல் சொல்லதிகாரம் 4. இடையியல்
தொகுஇடைச்சொல்லின் பொதுவிலக்கணம்
தொகுநூற்பா: 420
- வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
- தத்தம் பொருள விசைநிறை யசைநிலை
- குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்
- பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்
- தொன்றும் பலவும் வந்தொன்றுவ திடைச்சொல். (01)
இடைச்சொற்பொருள்கள்
தொகுநூற்பா: 421
- தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப்
- பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
- பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள். (02)
ஏகாரவிடைச்சொல்
தொகுநூற்பா: 422
- பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம்
- இசைநிறை யெனவா றேகா ரம்மே. (03)
ஓகாரவிடைச்சொல்
தொகுநூற்பா: 423
- ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
- கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே. (04)
என, என்று- இடைச்சொற்கள்
தொகுநூற்பா: 424
- வினைபெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும்
- எனவெனு மொழிவரு மென்று மற்றே. (05)
உம்மையிடைச்சொல்
தொகுநூற்பா: 425
- எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை
- தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. (06)
முற்றும்மை
தொகுநூற்பா: 426
- முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும். (07)
எச்சவும்மை
தொகுநூற்பா: 427
- செவ்வெண் ணீற்றதா மெச்ச வும்மை. (08)
நூற்பா: 428
- பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனாவெண்
- ணான்குந் தொகைபெறு மும்மையென் றெனவோ
- டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும். (09)
நூற்பா: 429
- என்று மெனவு மொடுவு மொரோவழி
- நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும். (10)
நூற்பா: 430
- வினையொடு வரினுமெண்ணினைய வேற்பன. (11)
தில்லிடைச்சொல்
தொகுநூற்பா: 431
- விழைவே கால யொழியிசை தில்லே. (12)
மன்னிடைச்சொல்
தொகுநூற்பா: 432
- மன்னே யசைநிலை மொழியிசை யாக்கங்
- கழிவு மிகுதி நிலைபே றாகும். (13)
மற்றென்னுமிடைச்சொல்
தொகுநூற்பா: 433
- வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே. (14)
நூற்பா: 434
- மற்றைய தென்பது சுட்டிய தற்கினம். (15)
கொல்லிடைச்சொல்
தொகுநூற்பா: 435
- கொல்லே யைய மசைநிலைக் கூற்றே. (16)
ஒடு, தெய்ய
தொகுநூற்பா: 436
- ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே. (17)
அந்தில், ஆங்கு
தொகுநூற்பா: 437
- அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே. (18)
அம்மவிடைச்சொல்
தொகுநூற்பா: 438
- அம்ம வுரையசை கேண்மினென் றாகும். (19)
வியங்கோளசை
தொகுநூற்பா: 439
- மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். (20)
முன்னிலையசைச்சொல்
தொகுநூற்பா: 440
- மியாயிக மோமதி யத்தை யித்தை
- வாழிய மாளவீ யாழமுன் னிலையசை. (21)
அசைச்சொற்கள்
தொகுநூற்பா: 441
- யாகா பிறபிறக் கரோபோ மாதிகுஞ்
- சின்குரை யோரும் போலு மிருந்திட்
- டன்றாந் தாந்தான் கின்றுநின் றசைமொழி. (22)
நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இடையியல் முற்றும்
தொகுபார்க்க:
- [[]]
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 1. பெயரியல்
- [[]] :[[]]
- நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்