வாருங்கள், Kanags!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக சிறீ அண்ணா. --கோபி 22:48, 11 மே 2007 (UTC)Reply[பதில் அளி]

கொ.ம.வா குறித்து.... தொகு

வணக்கம்,

உங்களது பணிக்குப் பாரட்டுக்கள். நான் pdf மற்றும் kmv உருக்களிலும் கொ.ம.வா வைப்போட்டுள்ளேன். முதலில் தாங்கள் போட்டிருந்த ம.வா இல் தி.க காரர்களில் சேட்டை புகுத்தப்பட்டிருந்தது.ஆகவேதான் அதனை tag செய்தேன். எனது ஊர் ஈரோடு. கொங்குநாடு மையம் என்ற அமைப்பைத் தற்பொழுது உருவாக்கி அதன்மூலம் கணிணியிலும் கொங்கத்தின் சிறப்பு ஏற்றப்பட முயற்ச்சி மேற்கொண்டுள்ளேன். எனது orkut profile

http://www.orkut.com/Profile.aspx?uid=15427847659011520036

அவசியம் தொடர்புகொள்ளவும்...

படிக்காசுப்புலவர் குறித்து தொகு

திரு. கனகு அவர்களே! வணக்கம். தங்களின் செய்தி அறிந்தேன். படிக்காசுப்புலவர் கட்டுரையை விக்கிப்பீடியாவில் போடும்படி கூறியிருந்தீர்கள்; மேலும் தண்டலையார் சதகத்திற்கு இணைப்புக் கொடுக்கும்படியும் கூறியிருந்தீர்கள். நான் விக்கிப்பீடியாவிற்குப்புதியவன் ஆதலால் அது எப்படி என்று தெரியவில்லை. முடிந்தால் தாங்களே எனக்காக அவற்றைச்செய்தால் மகிழ்ச்சி அடைவேன். எப்படியோ தமிழில் நல்லதொரு தகவல் தளம் அமையவேண்டும் அதுதான் முக்கியம். இணைப்புக்கொடுப்பது எப்படி என்று அறிவுறுத்தவேண்டுகின்றேன். பாரதிதாசன் கவிதைகளையும் விக்கிமூலத்தில் சேர்த்து வருகின்றேன். அதையும் கவனித்து ஆலோசனை வழங்கினால் நன்றாயிருக்கும். நன்றி. தங்களின் வழிகாட்டுதல் எனக்குப்பெரும் ஊக்கத்தை ஊட்டுவதாக உள்ளது. நன்றி! அன்புடன்,--Meykandan 09:02, 25 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

thanks for the encouraging words, Kanags. - கரிகாலன் −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து கரிகாலன் (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .
ஸ்ரீதரன் அவர்களுக்கு என் வணக்கங்கள், தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு அதன் படி செய்கிறேன், மேலும் தங்களது சிறந்த கருத்துகளுக்காக காத்திருக்கிறேன். நன்றி..........கார்த்திக்.--−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Jenakarthik (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

வணக்கம் கனகு அவர்களே! தாங்கள் குறுந்தொகைக்குக் கொடுத்துள்ள வடிவமைப்பு அழகாகவும் மனநிறைவாகவும் உள்ளது. நான் அதனைக்கண்டு மலைத்துப்போனேன். அவ்வடிவம் சுருக்கமாக, ஆனால் அதேநேரத்தில் எவர் ஒருவரும் எளிதாக அணுகும்படி தெளிவாக உள்ளது. எனக்கு அதுபோன்று செய்யத்தெரியவில்லை. முறையான கணினிக்கல்வி இல்லாததுதான் காரணம் என்று நினைக்கின்றேன். அடுத்துத் தங்களிடம் ஒரு வேண்டுகோள்! இது மிகமுக்கியமானது. தமிழுக்கென்று ஒருதனித்தன்மை உண்டு. அதில் ஒன்று. பாடல்கள் ஓசைக்கேற்றவாறு அமைந்திருப்பது. ஓசையானது பாடல்களில் அமையும்போது சொற்களைப்பிரிக்காமல் சேர்த்துப்படித்தால்தான் அவ்வோசை அமையும். ஆனால் இன்று அது நடைமுறை சாத்தியமில்லை. இக்காலத்தில் சொற்களைப்பிரித்துப் பதிப்பித்தால்தான் படிக்கவேமுடியும். அதனால்தான் இப்பொழுது வரும் எல்லாப்பதி்ப்புகளும் பாடலில் சொற்களைப் பிரித்தே பதிப்பிக்கின்றன. அது ஒருவகையில் சரிதான். ஆனால், அதேசமயம் தமிழ்ப்பாடல்கள் தம்தனித்தன்மையை இழந்துகொண்டே வருகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். இதற்கு ஒரேவழி, பாடல்களை ஓசைப்படி இலக்கண அடிப்படையில் சேர்த்தும், படிப்பதற்கு வசதியாகப் பிரித்தும் அருகருகே பதிவுசெய்வதே ஆகும். (எனவேதான் நான் பத்துப்பாட்டு, திருக்குறள் பரிமேலழகர் உரை போன்றவற்றைப் பதிவுசெய்யும்போது இருமுறைகளிலும்,சேர்த்தும் பிரித்தும் பதிவுசெய்து வருகின்றேன். பார்க்க: பத்துப்பாட்டு, திருக்குறள் பரிமேலழகர் உரை.) ஆனால் அவ்வாறு பதியும்போது பலசி்க்கல்கள் வருகின்றன. பாடலைப் பதிவுசெய்யும்போது மூலத்தைப் (பாடலின் ஓசைகெடாமல்) சேர்த்துப் பதிவுசெய்தபின், அதனை அடுத்துப் பிரித்துப்பதிப்பித்தால் அது ஓர் ஒழுங்கில் அமைவதில்லை. முன்பின்னாக ஒழுங்கற்று அமைகின்றது. பாடலைச்சேர்த்தும், (பின் அதே பாடல்அடி சொற்பிரிப்புடன் அதேவரியில் அமையும்படி) பிரித்தும் பதிப்பிக்கும்வண்ணம் விக்கிப்பீடியாவில் செய்யமுடியாதா? அப்படிச்செய்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும், பதிவுசெய்பவருக்கும் எளிமையாக இருக்கும். வேண்டுவோர் வேண்டியவாறு சேர்த்தும், அதையே பிரித்தும் ஒரே இடத்தில்படிக்கமுடியும். நம்மரபும் கெடாது.படிப்போர்க்கும் அப்பாடல் அமைப்பு நன்கு விளங்கும். (இப்படியே கவனிக்காமல் போனதால்தான் இன்று இந்தியாவின்பிறமொழியினர் எல்லாம் தங்களின் எண்களுக்கான குறியீட்டினை இழக்காமல் வைத்திருக்க, நாம் அதனை இழந்துகொண்டுள்ளோம்; இழந்து விட்டோம் என்றே கூறலாம். தமிழ் எண்கள் எத்தனை பேருக்குத்தெரியும்? தமிழ்படித்து, டாக்டர்பட்டம் பெற்றுள்ளவர்களே அறிவார்களா என்பதே சந்தேகம்தான்!)

எனவே, நான் வேண்டுவது எல்லாம், பாடலைச்சேர்த்தும் அதேநேரத்தில் அருகிலேயே பிரித்தும் பதிப்பிக்கும்படி வசதியாக ஓர் அமைப்பினை விக்கிப்பீடியாவில் உருவாக்க வேண்டுகின்றேன். கூட்டுமுயற்சியாகவும் அமையலாம். ஒருவேளை, அத்தகைய வசதி இப்போதே இருக்கவும் செய்யலாம்; அப்படி இருந்தால் அதனை எனக்குத்தெரிவிக்கவேண்டுகின்றேன். கடிதம் நீண்டு விட்டது.பொறுத்தருள்க! குறுந்தொகை மூலத்தைமட்டும்தான் நான் பதிப்பித்துவருகின்றேன். உரையை நான் எழுதவில்லை. சங்க இலக்கியங்கள் அனைத்தையும், (மூலம்) பிழையில்லாது கொண்டுவர எண்ணம்.அதுமுடியுமா? தெரியவில்லை. நளவெண்பாவைப் பிரித்துப் பகுப்புசெய்துள்ளேன். அதனையும் பார்க்கவேண்டுகின்றேன். அப்பகுப்பிலும், மாற்றம் வேண்டின் செய்து உதவுக. --Meykandan 10:40, 13 ஜனவரி 2011 (UTC) அன்புடன், மெய்கண்டான்,சி.

விக்கிமூலத்தில் நீண்ட பக்கங்களை அகற்றுதல் பற்றி தொகு

கனக்சு, எனது பயனர் பக்கத்தில் இப்பொருள் குறித்து தாங்கள் கூறியதைப் பார்த்தேன். (delete) வார்ப்புருவைச் சேர்த்துவிடுகிறேன். வேறு பல அலுவல்கள் எனக்கு இருப்பதால் விக்கிமூலத்தில் நிருவாகப் பொறுப்பு இப்போது வேண்டாம். இரவியிடம் கேட்டு, பக்கங்களை நீக்கச் சொல்லுங்கள். நன்றி! "பவுல்" என்று பெயர் சொல்லியே அழையுங்கள்... "ஐயா"வை விட்டுவிடலாம். :) -- பவுல் (george46)

உங்களுடைய வாக்கை பதியுங்கள் தொகு

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:10, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் தொகு

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன். பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:08, 23 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

அச்சம் என்பது மடமையடா தொகு

அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்பட பாடல் வரிகள் கொண்ட விக்கிமூல பக்கத்தினை உருவாக்கியுள்ளீர்கள். விக்கிமூலத்தில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. இப்பாடல் வரிகளை விக்கிமூலத்தில் வெளியிட தேவையான உரிமம் உள்ளதா? இருந்தால் ஆதாரம் தரவும். ஆதாரம் இல்லையென்றால் 15 நாட்களில் விக்கிமூல காப்பீட்டு முறைப்படி நீக்கவேண்டியதாகி விடும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:16, 7 ஆகத்து 2018 (UTC)

@Balajijagadesh: இது 1960 இல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை இங்கு வைத்திருக்க முடியாது என்றே நானும் நினைக்கிறேன். நீக்கி விடுங்கள். இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் 60 ஆண்டுகளுக்கு முன்னர் (அதாவது 1958 இற்கு முன்னர்) வெளிவந்த பாடல் வரிகள் இங்கு வைத்திருக்க முடியுமா? அறிந்து சொல்கிறீர்களா? நன்றி.--Kanags \உரையாடுக 05:46, 10 ஆகத்து 2018 (UTC)Reply[பதில் அளி]
தங்கள் பதிலுக்கு நன்றி. அப்பக்கம் நீக்கப்பட்டுவிட்டது. தங்கள் கேள்விக்கு எனக்கு பதில் சரியாக தெரியவில்லை. இணையத்தில் தேடிய பொழுது All songs that are initially recorded or published in the US prior to January 1, 1923 are considered to be in the public domain. என்பதைப்பார்த்தேன். இந்தியாவில் எப்படி என்று தெரியவில்லை. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 06:46, 11 ஆகத்து 2018 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020 தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் தொகு

வணக்கம். தாங்கள் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் இப்பக்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். சிகாகோவில் விவேகானந்தர் ஆங்கிலத்தில் பேசினார். இங்கு தமிழில் உரை உள்ளது. ஆங்கில உரையை தமிழில் யார் மொழி பெயர்த்தினார்கள் என்ற விவரம் தேவைப்பபடுகிறது. ஏனெனில் மொழிபெயர்ப்புக்கு தனி உரிமம் உள்ளது. மொழிபெயர்த்தவர் யார் என்று தெரிந்தால் இந்த மொழிபெயர்ப்பு பொதுகளத்தில் உள்ளதா என்பதை அறியலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 19:47, 23 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் தொகு

வணக்கம் Kanags, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon தொகு

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021 தொகு

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=1272653" இருந்து மீள்விக்கப்பட்டது