விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்

அண்மைக் காலத்தில் நிறைய புத்தகங்கள் தமிழக அரசின் தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. மேலும் தமிழ் மொழியில் நிறைய புத்தகங்கள் உள்ளன. இப்புத்தகங்களை ஒன்றொன்றாக அதிக பயனாளர்கள் மூலமாக மெய்ப்பு பார்க்கப்பட்டால் விக்கிமூலத்தின் பயன் அதிகமாகும்.

திட்ட நோக்கம் தொகு

இப்பொழுது பல புத்தகங்கள் மெய்ப்புப் பார்க்கப்பட வேண்டியிருப்பதால் பல ஆர்வலர்களுக்கு எந்தப் புத்தகம் மெய்ப்புச் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் ஏதோ ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மட்டும் மெய்ப்புச் செய்கின்றனர். இப்படிப் பலர் பல புத்தகங்களில் சில பக்கங்களை மட்டும் மெய்ப்புப் பார்ப்பதால் புத்தகங்களின் முழுமையான மெய்ப்பு முடிவடைய பல காலங்கள் ஆகும். பல புத்தகங்களில் சில பக்கங்கள் மட்டும் மெய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கும். இதனால் யாரும் புத்தகங்களைப் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும். அதனால் எந்தப் புத்தகம் முக்கியமாக மெய்ப்புப் பார்க்கப்பட வேண்டுமோ அந்தப் புத்தகத்தை "இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்க்க வேண்டிய புத்தகம்" என்று விக்கிமூலத்தின் முதல் பக்கத்தில் வைத்தால் பலர் ஈடுபட்டு விரைவாக முடிக்கப்படும். ஆங்கில விக்கிமூலத்தில் Proofread of the Month என்ற திட்டத்தின் மூலம் பல புத்தகங்களை வெற்றிகரமாக மெய்ப்புச் செய்துள்ளனர். மேலும் முதல் பக்கத்திலேயே இடம் பெறுவதால் புதிதாக விக்கிமூலத்திற்கு வருபவர்களுக்கு எதாவது மெய்ப்புப் பார்க்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டும். எந்தெந்தப் புத்தகங்கள் இதில் வரவேண்டுமோ அதனை வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யலாம்.

துணைப்பக்கங்கள் தொகு

செய்ய வேண்டியவை தொகு

 • புத்தகங்களை தேர்ந்தெடுப்பது
 • விக்கிமூலத்தின் முதற்பக்கத்தில் மாற்றம் செய்து "இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்" போன்ற வாசகங்களில் ஒரு பெட்டியை உருவாக்குவது.  
 • ஒவ்வொரு மாதமும் புத்தகத்தை மாற்றுவது.

திட்டப்பங்களிப்பாளர்கள் தொகு

 1. பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:59, 23 மே 2016 (UTC)[பதிலளி]
 2. உழவன் (உரை) 08:50, 23 மே 2016 (UTC)[பதிலளி]
 3. Maathavan (பேச்சு) 10:52, 23 மே 2016 (UTC)[பதிலளி]
 4. Sgvijayakumar (பேச்சு) 22:16, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]
 5. Yousufdeen (பேச்சு) 08:16, 2 செப்டம்பர் 2020 (UTC)
 6. --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 08:38, 2 செப்டம்பர் 2020 (UTC)
 7. --பிரபாகரன் ம வி (பேச்சு) 04:50, 27 செப்டம்பர் 2020 (UTC)
 8. Girijaanand 07:47, 4 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
 9. KSK TRY (பேச்சு) 05:46, 11 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
 10. Dr.Benjamin.jebaraj (பேச்சு) 04:07, 10 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

விக்கிமூலம்:தானியக்க மெய்ப்பு தொகு

https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 1. பல இடங்களில் வரும் ஒரே மாதிரியான பிழைகளைத் தேடி, அவற்றை திருத்தப்பட்ட வார்த்தைகளால் மாற்றும் நிரல் எழுதியுள்ளேன்.

https://github.com/tshrinivasan/tools-for-wiki/tree/master/fix_spellerrors_tawikisource பிழைகளையும், திருத்திய வார்த்தைகளையும் மொத்தமாக ஓரிடத்தில் பலரும் இணைந்து தொகுக்க ஏதுவான வழிகளை ஆய்ந்து வருகிறேன். விரைவில் இங்கு பகிர்கிறேன். ஆயினும், தானியங்கி அன்றி, நேரடி மெய்ப்பு பார்க்கும் பணியும் அவசியம். நிரலால் கண்டுபிடிக்க இயலாதவற்றையும் நம்மால் கண்டு, திருத்த இயலும். Tshrinivasan (பேச்சு) 16:43, 23 மே 2016 (UTC)[பதிலளி]

இவற்றையும் காண்க தொகு