விக்கிமூலம் பேச்சு:முதற் பக்கம்/புதிய உரைகள்
பதிவிறக்க வடிவங்களில்
தொகு@Balajijagadesh, Arularasan. G: பதிவிறக்க வடிவங்களில் உரையாவணமாகப்(RTF) பதிவிறக்கம் செய்யும் வசதியை இணைத்தல் நலம். {{Featured download}}என்ற வார்ப்புருவில் இருப்பது போல, இணைத்தல் நலம். கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். அத்தகையத் தேவை அவர்களுக்கு உள்ளதாக உரையாடிய போது தெரிகிறது.உங்களின் எண்ணமென்ன?--Info-farmer (பேச்சு) 02:53, 3 ஆகத்து 2020 (UTC)
- வணக்கம். பதிவிரக்கங்களின் புள்ளவிவரங்களைப் பார்க்கும் பொழுது அனைத்து மொழிகளிலும் RTF பதிவிறக்கம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் விக்கிமூலத்திற்கு 90% கைபேசியில் பார்க்கின்றனர். RTF யையும் சேர்த்தால் இன்னும் நெருக்கமாகிவிடும். வேண்டும் என்பவர்கள் படைப்புக்கு உள்ள சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறேன். -- Balajijagadesh (பேச்சு) 04:19, 3 ஆகத்து 2020 (UTC)
- RTF வசதியை மறைத்து வைத்தமையால் பதிவிறக்கம் செய்யவில்லை. ஒரு கருவியில் அவ்வசதி இருக்கும் பொழுது அதனை, மறைத்து வைப்பது சரியான நடைமுறை அன்று. தெரிந்தால் தானே பதிவிறக்கம் செய்ய இயலும். அலைப்பேசி வடிவத்தினைக் குறித்து, அதற்கென இருக்கும் பிரிவில் தான் வழு பதிய வேண்டும். இத்தளமானது அலைப்பேசி வடிவத்திற்கு ஒப்ப இருக்க வேண்டும் என்ற நடைமுறை எங்கும் பின்பற்ற படவில்லை.--தகவலுழவன் (பேச்சு). 14:10, 4 திசம்பர் 2020 (UTC)
- RTF என்றால் என்ன?--வெற்றியரசன் (பேச்சு) 15:19, 5 திசம்பர் 2020 (UTC)
- விக்கிக்குறியீடுகள் இல்லாத உரையாவணம். --தகவலுழவன் (பேச்சு). 01:48, 7 திசம்பர் 2020 (UTC)
- RTF என்றால் என்ன?--வெற்றியரசன் (பேச்சு) 15:19, 5 திசம்பர் 2020 (UTC)
- RTF = Rich Text Format - Word Document போல. இவ்வகை ஆவண வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யும் வசதியை மீண்டும் தர வேண்டுகிறேன். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி Tshrinivasan (பேச்சு) 16:06, 5 திசம்பர் 2020 (UTC)
- எல்லா துறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனில்,RTF = Rich Text Format ஆவண உரை வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யும் வசதியை மீண்டும் தர வேண்டுகிறேன் --வெற்றியரசன் (பேச்சு) 07:43, 7 திசம்பர் 2020 (UTC)
- ஆய்வாளர்களுக்கு (RTF = Rich Text Format) ஆவண உரை வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் ஆய்வுகள் அனைத்தும் இவ்வடிவத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. அதனை எடுத்துப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். எனவே, மீண்டும் அவ்வடிவத்தைத் தர வேண்டுகிறேன். நன்றி!--Neyakkoo (பேச்சு) 06:50, 8 திசம்பர் 2020 (UTC)
- @Balajijagadesh: பதிவிறக்கங்களின் சதவீகிதத்தின் அடிப்படையானாலோ அல்லது அலைப்பேசியில் நெருக்கமாக இருக்குமென்பதற்காக RTF format முடக்கியிருப்பது அதை பயன்படுத்துவர்களுக்கு தடை ஏற்படு்த்தியது போல் உள்ளது .மீண்டும் (RTF) இவ்வகை ஆவண வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யும் வசதியை தர வேண்டுகிறேன். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.--பிரபாகரன் ம வி (பேச்சு) 13:54, 11 திசம்பர் 2020 (UTC)
புதிய உரைகள்
தொகு@Balajijagadesh, Info-farmer: புதிய உரைகள் பகுதியின் பழைய வடிவமைப்பே இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். பழைய வடிவமைப்பில் மேலே புதிய நூலை சேர்த்து, கீழே ஒன்றை இடம்மாற்றினால் போதுமானதாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய வடிவமைப்பில் நூல்களை ஆசிரியர் பெயரைக் கண்டுபிடித்து சரியாக சேர்ப்பது ஆயாசம் தருவதாக உள்ளது. எந்தப் பணியும் எளிமை நோக்கிப் போகவேண்டுமே தவிர சிக்கலானதாக மாறக்கூடாது என்பது என் கருத்து.--அருளரசன் (பேச்சு) 01:59, 3 திசம்பர் 2020 (UTC)
- வணக்கம், நூலகத்தில் நூல்களை ஆசிரியர் அடிப்படையில் அடுக்கி தொகுத்து வைத்திருப்பார்கள். விக்கி மூலமும் இணைய நூலகம் என்பதால் ஆசிரியர் அடிப்படையில் நூல்களைத் தொகுத்து வைத்திருந்தாள் விக்கியில் பயணிக்க வருபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எளிமையாகவும் அமையும் என்பதால் அந்த பணியை நான் மேற்கொள்கிறேன். --வெற்றியரசன் (பேச்சு) 03:33, 3 திசம்பர் 2020 (UTC)
- @Arularasan. G: உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு. புதிய உரைகள் பகுதியின் பழைய வடிவமைப்பே சரியானது. புதிய உரைகள் என்பது அண்மையில் எந்த நூல்கள் மெய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகத் தான். ஆசிரியர் வாரியாக பார்ப்பதற்கு பகுப்புகள் உள்ளன. அந்த பகுப்புகளை மேம்படுத்த வேண்டும். அல்லது Portal போன்ற பக்கங்களை உருவாக்கி கொள்ளலாம். பதிய உரைகள் பக்கத்தைப் பழைய படி செய்து மெய்ப்புகளை ஆண்டு வாரியாக இப்பக்கத்தின் கடைசியில் 'Link to archives' பகுதியில் இருப்பது போல் செய்துவிடலாம். 'முதற் பக்கம்/புதிய உரைகள்' மறைவில் கூட அதிக பக்கங்களை வைக்க வேண்டாம். விக்கிபக்கத்தின் நீளம் மிகவும் அதிகமாகிவிடும். -- Balajijagadesh (பேச்சு) 06:14, 3 திசம்பர் 2020 (UTC)
- பாலாஜி குறிப்பிட்டதுபோல் புதிய உரைகள் என்பது அண்மையில் எந்த நூல்கள் மெய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகத் தான். எனவே இதை மாற்றவேண்டியது அவசியம்.--அருளரசன் (பேச்சு) 02:34, 4 திசம்பர் 2020 (UTC)
- புதிய உரையில் அண்மையில் எந்த நூல் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளத்தான் என்பது இதுவரை எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. புதிய உரைகள் என குறிப்பிட்டுள்ளது மின்னூல்கள் தானே?? புதிய உரைகள் என்பது தலைப்பே தவறாக தெரிகிறது. முதற் பக்கத்திலேயே எத்தனை நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை ஆசிரியர்கள் உள்ளார்கள் எத்தனை நூல்கள் முழுவதுமாக மெய்ப்பு பார்த்து மின்னூலாக மாற்றப்பட்டுள்ளன என்பது ஒரே பக்கத்தில் இருந்தால் எல்லோருக்கும் எளிமையாக அமையும். ஆசிரியர்கள் வாரியாகத் தொகுத்து அமைப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லையே.--வெற்றியரசன் (பேச்சு) 15:30, 5 திசம்பர் 2020 (UTC)
- @Victory-King: ஏற்கனவ நாட்டுடைமை நூல்களுக்கு உரிய பல துணைப்பக்கங்கள் உள்ளன. அவைகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும். அனைவரும் அனைத்து ஆசிரியர்களையும் விரும்புவர் என்பது ஐயமே. எனவே, ஆசியர் அடிப்படையில் ஏற்கனவே பக்கங்கள் உள்ளன. அங்கும் முடித்த நூல்களின் நூற்பட்டியல் முழுமையாக இல்லை. இப்பொழுது மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பக்கத்திலும் நூற்பட்டியல் முழுமையாக இல்லை. ஆசிரியர் குறித்த நூற்பட்டியலுக்கு விக்கிப்பீடியாவில் இருந்த வர இணைப்புகள் தரலாம். அவை பல ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. காண்க:w:வடுவூர்_கே._துரைசாமி#வெளி_இணைப்புகள் எனவே, நீங்கள் கூறுவது ஒருவகையில் சரி என்றாலும், அதனைத் தொடர்ந்து பலர் செய்தால்தான், உங்கள் நோக்கம் சிறப்புறும்.
- புதிய உரையில் அண்மையில் எந்த நூல் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளத்தான் என்பது இதுவரை எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. புதிய உரைகள் என குறிப்பிட்டுள்ளது மின்னூல்கள் தானே?? புதிய உரைகள் என்பது தலைப்பே தவறாக தெரிகிறது. முதற் பக்கத்திலேயே எத்தனை நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை ஆசிரியர்கள் உள்ளார்கள் எத்தனை நூல்கள் முழுவதுமாக மெய்ப்பு பார்த்து மின்னூலாக மாற்றப்பட்டுள்ளன என்பது ஒரே பக்கத்தில் இருந்தால் எல்லோருக்கும் எளிமையாக அமையும். ஆசிரியர்கள் வாரியாகத் தொகுத்து அமைப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லையே.--வெற்றியரசன் (பேச்சு) 15:30, 5 திசம்பர் 2020 (UTC)
- கால அடைவு: புதிய உரைகள் என்ற இப்பக்கம், பாலாஜியால், சூலை 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்னரே, சனவரி 2016 ஆம் ஆண்டு நாட்டுடைமை நூல்கள் என்ற பக்கமானது, எனது ஆசான் இரவியின் வழிகாட்டுதலால் என்னால் தொடங்கப்பட்டது. அதற்கும் முன்னர், அரசிடம் இருந்து இவற்றைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்த பக்கம் விக்கிப்பீடியாவில், பயனர்:மதனாஹரன் என்ற இலங்கை பயனரால், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இரவி, பரிதி, சண்முகம், CIS அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் என நெடிய வரலாற்றைக் கொண்டது. இவையனைத்தையும், புதிய எண்ணங்களையும் கட்டிக்காத்து மேம்படுத்தியவர், இத்திட்டம் தமிழில் வேண்டாம் எனக்கூறியபோது விரைந்து இத்திட்டத்தினை காத்தவர் இரவி. தமிழ் மட்டும் அல்ல பிற இந்திய விக்கிமூலத்திட்டமும் எழுச்சி பெற நிரல் அமைத்தவர் சீனிவாசன், FSFTN நண்பர்கள் என பலரால் இத்தளம் வளருகிறது.
- வேண்டுகோள் : தொடர்ந்து நம் முன்னோடிகளின் உள்ளகிடக்கைகளைக் கருத்திற்க கொண்டு, புதியவர்களின் எண்ணங்களையும் அரவணைத்து நாம் வளர உதவுக. புதியவர்களுக்கு இந்த வரலாறு அவசியம். அப்பொழுதே அவர்களும் மேன்மையான பணிகளைச் செய்வர். எனவே, விடுபட்ட நூல்களை, ஆசிரியர் பகுதியில் உங்களைப் போல நானும் இனி இணைப்பேன். வழக்கம் போல நூல்களையும் மேம்படுத்துவோம். 3இலகரம் (சமற்கிருதம்=3இலட்சம்) பக்கங்களை மேம்படுத்த வேண்டிய நுட்பங்களை ஆய்வோம். புதியவர்களால் ஏற்படும் துப்புரவு பணிக்களுக்காகவும் சிந்திப்போம். மெய்ப்புப்பணியடர்வு போலவே, அப்பணியும் வளர்ந்து வருகிறது. விரைவில் இது முதற்பக்க இணைப்புடையதால், இது தொடர்புடைய பிற பக்களுக்கும் இணைப்பு தர முயல்வேன். --தகவலுழவன் (பேச்சு). 02:26, 20 திசம்பர் 2020 (UTC)
- @Info-farmer: தங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள், தாங்கள் மேற்குறிப்பிட்ட பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்வோம். மேலும் விக்கி திட்டத்தில் தமிழ் மொழி இணைத்து பயணத்தை தொடங்கிய முன்னோடிகளின் வரலாற்றையும் திட்டப் பணிகளின் வரலாற்றையும் அறிந்துகொள்ள ஒரு வரலாற்று பக்கத்தை உருவாக்கினால் சிறப்பாக அமையும் நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 07:24, 20 திசம்பர் 2020 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுஎழுத்துருவான மின்னூல்கள் என்பதே சரியான தலைப்பு. படவுரு மின்னூல்கள் எழுத்துருவுக்கு மாறியதால், த.இ.க. தளம் உட்பட அப்படியே பயன்படுத்துகின்றனர். தற்போதுள்ள உரை என்பது, செய்யுள் வடிவம், உரை வடிவம் என்றே பொருள் கொள்வதாக, தமிழை முதன்மைப் பாடமாக படிப்போர் எண்ணுகின்றனர். எனவே, பெயர் மாற்ற எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன?--தகவலுழவன் (பேச்சு). 07:40, 24 ஏப்ரல் 2021 (UTC)
துப்புரவு
தொகுபகுப்பு:முழுமையற்ற நூற்த்தொகுப்பு உருவாக்கங்கள் --தகவலுழவன் (பேச்சு). 13:04, 21 ஆகத்து 2021 (UTC)
இப்பக்கத்தின் வடிவமைப்பினை மாற்றும் பரிந்துரைகள்
தொகு- நூலகத் தகவல் அறிவியல்படி, பெரும்பான்மையான நூலகத்தில், தலைப்பு, துறை(பொருள்), ஆசிரியர் ஆகிய மூன்று அடிப்படையில் நூல்கள் நூலகக் கோட்பாடுகளின் படி வகைப்படுத்தப்பட்டிருக்கும். நாம் அதே அடிப்படையிலும், உடன் ஆண்டு அடிப்படையிலும் தரவல்லது விக்கி அட்டவணை(mw:Help:Tables) வடிவத்தில் பெறலாம். இது குறித்த உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். தகவலுழவன் (பேச்சு). 16:11, 20 திசம்பர் 2022 (UTC)
- நூலகத் தகவல் அறியல்படியே வழங்கலாம். நேயக்கோ (பேச்சு) 16:47, 20 திசம்பர் 2022 (UTC)
- விக்கிமூலம் பேச்சு:முதற் பக்கம்/புதிய உரைகள்/model1 இதில் முயற்சிக்கிறேன். ஆனால் இது இறுதி வடிவம் அல்ல. தொடக்கமே! தகவலுழவன் (பேச்சு). 00:58, 9 சனவரி 2023 (UTC)
புதிய உரைகள்
தொகுவணக்கம் தகவலுழவன் புதிய உரைகள் பகுதியில் புதியவார்ப்புருவை பயன்படுத்தி உள்ளீர். அந்த புதிய வார்ப்புருவைக் கொண்டு இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் என்ற நூலை பட்டியலில் சேர்த்தேன். இந்த நூலை மொழிபெயர்த்தவர் புலவர் த. கோவேந்தன் என்று வருவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆனால் புதிய வார்ப்புருவை பயன்படுத்துகையில் இந்த நூலை எழுதியவர் என்று வருகிறது இதை மாற்ற முடியாதா.--கு. அருளரசன் (பேச்சு) 15:53, 3 செப்டம்பர் 2023 (UTC)
- பின்னூட்டத்திற்கு நன்றி. அதற்கென புதிய வார்ப்புருவை ஏற்படுத்தியுள்ளேன். வேண்டும் சொற்களை உள்ளிட்டுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தும் வடிவத்தினைப் பயன்படுத்தலாம். எதுவும் கட்டாயமன்று. பங்களிப்பாளர் வசதியே முக்கியம். எனவே, இந்த வார்ப்புரு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். கண்டு கருத்திடவும். எனினும், எனது எண்ணங்கள் யாதெனில், ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன் இதில் ஆசிரியர் என்பது நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர் போன்றவற்றை குறிப்பது போல, 'எழுதியது' என்பது தொகுப்பாளர், மொழிப்பெயர்ப்பாளர் என்பதை குறிப்பதாகவே நான் எண்ணுகிறேன். அது ஒரு குறிச்சொல். இதற்கென பலவித நுட்பங்களை அடக்கிய வார்ப்புரு:Header என்பதற்கு Modules இருப்பது போல எழுத வேண்டும். அப்பொழுதே இன்னும் எளிதாகும். ஒரே வார்ப்புருவில் பலவித நடைமுறைகளை எளிதாக்கலாம். தகவலுழவன் (பேச்சு). 00:47, 4 செப்டம்பர் 2023 (UTC)
புதிய உரைகள் பக்கத்தில் மாற்றம் பரிந்துரை
தொகு@Balajijagadesh, Info-farmer, TVA ARUN: வணக்கம் 'முதற் பக்கம்/புதிய உரைகள்' மறைவில் அதிக பக்கங்களை வைப்பது தேவையில்லை என்பது குறித்து இதற்கு முன்பே விவாதித்துள்ளோம். அதற்கு ஒரு தீர்வாக புதிய உரைகளில் விக்கிமேற்கோளில் உள்ளதுபோல பத்து நூல்களை மட்டும் இட்டால் போதும் என்று பரிந்துரைக்கிறேன். மேலும் அதற்கு கீழே எழுத்துவடிவ பிற நூல்களைக் காண, இதனைச் சொடுக்கவும் என்பதைத் தொடர்ந்து பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள் என்ற பகுப்பு தென்படுமாறு இட்டலாம் என்பது என் பரிந்துரை. அந்தப் பகுப்பில் எத்தனைப் படைப்புகள் உள்ளன என்ற எண்ணிக்கை தெரியுமாறு நிரலாக்கத்தை அமைத்தால், எத்தனைப் படைப்புகள் மொத்தம் உள்ளன என்பதை எளிதாக அறிய முடியும் என கருதுகிறேன். இது குறித்து முடிவெடுத்து உரிய மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 14:55, 28 ஏப்பிரல் 2024 (UTC)
- // 'முதற் பக்கம்/புதிய உரைகள்' மறைவில் அதிக பக்கங்களை வைப்பது தேவையில்லை// இப்பக்கத்தினை கட்டமைத்தவர் பாலாஜி. வெளிப்படையாக தானே உரிய இணைப்புகளோடு, 'புதிய ஆவணங்கள்' என்று வைத்துள்ளார். எனக்குப்புரியவில்லை. விக்கிமேற்கோளில் நான் உங்கள் அளவு நான் பங்களிப்பு செய்ததில்லை. //விக்கிமேற்கோளில் உள்ளதுபோல பத்து நூல்களை மட்டும் இட்டால் போதும்// எந்த பக்கம் ? அறியத்தாருங்கள். மேலும் பகுப்புகளுக்கு என, முதற்பக்கத்தில் // முக்கிய பகுப்புகள்// என்று தனி கட்டம் அமைத்து உள்ளார். அதில் நீங்கள் கூறும், பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள் பகுப்பும் உள்ளதே. அவற்றின் அருகிலேயே எண்ணிக்கையை காட்ட வேண்டும் எனக்கூறுகிறீர்கள் சரிதானே? பொதுவாக முதற்பக்கம் இன்னும் தெளிவாக மேம்படுத்த வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 23:17, 28 ஏப்பிரல் 2024 (UTC)
- //எந்த பக்கம் ? அறியத்தாருங்கள்.// இதை விக்கிமேற்கோளின் முதல் பக்கத்திலேயே காணலாம். //முதற்பக்கம் இன்னும் தெளிவாக மேம்படுத்த வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் எண்ணுகிறேன்// என என் கருத்துக்கு வலு சேர்த்தமைக்கு நன்றி. இப்பக்கத்தினை கட்டமைத்தவர் பாலாஜி என்பதால் பேச்சுப்பக்கத்தில் அரையும் பின் செய்துள்ளேன். இயலுமானால் அவரே இந்த மாற்றங்களையும் செய்யட்டும் நன்றி கு. அருளரசன் (பேச்சு) 00:17, 29 ஏப்பிரல் 2024 (UTC)
- மாற்றம் செய்துள்ளேன். வேறு எப்படி எல்லாம் மாற்றம் செய்யலாம் என்று உரையாடுவோம். -- Balajijagadesh (பேச்சு) 02:50, 11 ஆகத்து 2024 (UTC)
- //எந்த பக்கம் ? அறியத்தாருங்கள்.// இதை விக்கிமேற்கோளின் முதல் பக்கத்திலேயே காணலாம். //முதற்பக்கம் இன்னும் தெளிவாக மேம்படுத்த வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் எண்ணுகிறேன்// என என் கருத்துக்கு வலு சேர்த்தமைக்கு நன்றி. இப்பக்கத்தினை கட்டமைத்தவர் பாலாஜி என்பதால் பேச்சுப்பக்கத்தில் அரையும் பின் செய்துள்ளேன். இயலுமானால் அவரே இந்த மாற்றங்களையும் செய்யட்டும் நன்றி கு. அருளரசன் (பேச்சு) 00:17, 29 ஏப்பிரல் 2024 (UTC)