1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300

சீவகசிந்தாமணிக் காப்பியம்

தொகு

1. நாமகள் இலம்பகம்

தொகு

(பூங்கழற்)

தொகு
பூங்கழற் குருசி றந்த புதல்வனைப் புகன்று நோக்கித்
தேங்கம ழோதி திங்கள் வெண்கதிர் பொழிவ தேபோல்
வீங்கிள முலைகள் விம்மித் திறந்துபால் பிலிற்ற வாற்றாள்
வாங்குபு திலகஞ் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். (276)
( வேறு)


(கறைபன்னீ)

தொகு
கறைபன் னீராண் டுடன்விடுமின் காமர் சாலை தளிநிறுமின்
சிறைசெய் சிங்கம் போன்மடங்கிச் சேரா மன்னர் சினமழுங்க
வுறையுங் கோட்ட முடன்சீமி னொண்பொற் குன்றந் தலைதிறந்திட்
டிறைவைன் சிறுவன் பிறந்தானென் றேற்பார்க் கூர்தோ றுய்த்தீமின். (277) ( )

(மாடமோங்கும்)

தொகு
மாட மோங்கும் வளநகருள் வரம்பில் பண்டந் தலைதிறந்திட்
டாடை செம்பொ னணிகலங்கள் யாவும் யாருங் கவர்ந்தெழுநாள்
வீட லின்றிக் கொளப்பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோ டரைச்செம்பொன் கோமா னல்கு மெனவறைமின். (278) ( )

(அரும்பொற்)

தொகு
அரும்பொற் பூணு மாரமு மிமைப்பக் கணிகள கன்கோயி
லொருங்கு கூடிச் சாதகஞ்செய் தோகை யரசர்க்குடன் போக்கிக்
கருங்கைக் களிறுங் கம்பலமுங் காசுங் கவிகள் கொளவீசி
விரும்பப் பிறப்பாய் வினைசெய்தேன் காண விஃதோஒ பிறக்குமா. (279) ( )

(வெவ்வாயோரி)

தொகு
வெவ்வா யோரி முழவாக விளிந்தா ரீமம் விளக்காக
வொவ்வாச் சுடுகாட் டுயரரங்கி னிழல்போ னுடங்கிப் பேயாட
வெவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
விவ்வாறாகிப் பிறப்பதோ விதுவோ மன்னர்க் கியல்வேந்தே. (280) ( )

(பற்றாமன்னர்)

தொகு
பற்றா மன்ன னகர்ப்புறமாற் பாயல் பிணஞ்சூழ் சுடுகாடா
லுற்றா ரில்லாத் தமியேனா லொதுங்க லாகாத் தூங்கிருளால்
மற்றிஞ் ஞால முடையாய்நீ வளரு மாறு மறியேனா
லெற்றே யிதுகண் டேகாதே யிருத்தியாலென் னின்னுயிரே. (281) ( )

(பிறந்தநீ)

தொகு
பிறந்த நீயும் பூம்பிண்டிப் பெருமா னடிகள் பேரறமும்
புறந்தந் தென்பாற் றுயர்க்கடலை நீந்தும் புணைமற் றாகாக்காற்
சிறந்தா ருளரே லுரையாயாற் சிந்தா மணியே கிடத்தியால்
மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. (282) ( )

(அந்தோ)

தொகு
அந்தோ விசயை பட்டனகொண் டகங்கை புறங்கை யானாற்போற்
கந்தார் களிற்றுத் தங்கோமான் கழிய மயிலோர் மயிலூர்ந்து
வந்தாற்போலப் புறங்காட்டுள் வந்தா டமியே யெனமரங்கள்
சிந்தித் திரங்கி யழுவனபோற் பனிசேர் கண்ணீர் சொரிந்தனவே. (283) ( )

(அடர்பொற்)

தொகு
அடர்பொற் பைம்பூ ணரசழிய வரும்பொற் புதல்வற் பெற்றிருந்த
விடர்கொ ணெஞ்சத் திறைவியு மிருங்கண் ஞாலத்திருள் பருகிச்
சுடர்போய் மறையத் துளங்கொளிய குழவிமதிபெற் றகங்குளிர்ந்த
படர்தீ யந்தி யதுவொத்தாள் பணைசெய் கோட்டுப் படாமுலையாள். (313)
(வேறு )

(தேனமர்)

தொகு
தேனமர் கோதை மாதர் திருமகன் றிறத்தை யோராள்
யானெவன் செய்வ லென்றே யவலியா விருந்த போழ்திற்
றானமர்ந் துழையி னீங்காச் சண்பக மாலை யென்னுங்
கூனிய துருவங் கொண்டோர் தெய்வதங் குறுகிற் றன்றே. (285) ( )

(விம்முறு)

தொகு
விம்முறு விழும வெந்நோ யவணுறை தெய்வஞ் சேரக்
கொம்மென வுயிர்த்து நெஞ்சிற் கொட்புறு கவலை நீங்க
வெம்மனை தமியை யாகி யிவ்விட ருற்ற தெல்லாஞ்
செம்மலர்த் திருவின் பாவா யான்செய்த பாவ மென்றாள். (286) ( )

(பூவினுட்)

தொகு
பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணிய னனைய நம்பி
நாவினு ளுலக மெல்லா நடக்குமொன் றாது நின்ற
கோவினை யடர்க்க வந்து கொண்டுபோ மொருவ னின்னே
காவியங் கண்ணி னாயா மறைவது கரும மென்றாள். (287) ( )

(சின்மணி)

தொகு
சின்மணி மழலை நாவிற் கிண்கிணி சிலம்பொ டேங்கப்
பன்மணி விளக்கி னீழ னம்பியைப் பள்ளி சேர்த்தி
மின்மணி மிளிரத் தேவி மெல்லவே யொதுங்கு கின்றாள்
நன்மணி யீன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவதொத்தாள். (288) ( )

(ஏதிலாரிடர்)

தொகு
ஏதிலா ரிடர்பன் னூறு செய்யினுஞ் செய்த வெல்லாந்
தீதில வாக வென்று திருமுலைப் பான்ம டுத்துக்
காதலான் பெயர்சு மந்த கதிர்மணி யாழி சேர்த்திக்
கோதைதாழ் குழலி னாளைக் கொண்டுபோய் மறைய நின்றாள். (289) ( )

(நல்வினை)

தொகு
நல்வினை செய்தி லாதே னம்பிநீ தமியை யாகிக்
கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ வென்று விம்மாப்
புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோ
லொல்கியோர் கொம்பு பற்றி யொருகணா னோக்கி நின்றாள். (290)
(வேறு )

(நாளொடு)

தொகு
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர்
கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக்
காளக வுடையினன் கந்து நாமனும்
வாளொடு கனையிருள் வந்து தோன்றினான். (291) ( )

(வாள்கடைந்)

தொகு
வாள்கடைந் தழுத்திய கண்ணி னார்கடந்
தோள்கடைந் தழுத்திய மார்பன் றூங்கிருள்
நீள்சுடர் நிழன்மணி கிழிப்ப நோக்கினா
னாள்கடிந் தணங்கிய வணங்கு காட்டுளே. (292) ( )

(அருப்பிள)

தொகு
அருப்பிள முலையவர்க் கனங்க னாகிய
மருப்பிளம் பிறைநுதன் மதர்வை வெங்கதிர்
பரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை
விருப்புள மிகுதியின் விரைவி னெய்தினான். (293) ( )

(புனைகதிர்த்)

தொகு
புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம்
வனைமலர்த் தாரினான் மறைத்து வண்கையாற்
றுனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான்
சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே. (234) ( )

(என்பெழுந்)

தொகு
என்பெழுந் துருகுபு சோர வீண்டிய
வன்பெழுந் தரசனுக் கவலித் தையனை
நுன்பழம் பகைதவ நூறு வாயென
வின்பழக் கிளவியி னைறைஞ்சி யேத்தினாள். (295) ( )

(ஒழுக்கிய)

தொகு
ஒழுக்கிய லருந்தவத் துடம்பு நீங்கினா
ரழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே
வழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி
விழுத்தகு மகனொடும் விரைவி னேகினான். (296) ( )

(மின்னடு)

தொகு
மின்னடு கனையிரு ணீந்தி மேதகு
பொன்னுடை வளநகர் பொலியப் புக்கபின்
றன்னுடை மதிசுடத் தளருந் தையலுக்
கின்னுடை யருண்மொழி யினிய செப்பினான். (297) ( )

(பொருந்திய)

தொகு
பொருந்திய வுலகினுட் புகழ்கண் கூடிய
வருந்ததி யகற்றிய வாசில் கற்பினாய்
திருந்திய நின்மகன் றீதி னீங்கினான்
வருந்தனீ யெம்மனை வருக வென்னவே. (298) ( )

(கள்ளலைத்)

தொகு
கள்ளலைத் திழிதருங் களிகொள் கோதைத
னுள்ளலைத் தெழுதரு முவகை யூர்தர
வள்ளலை வல்விரைந் தெய்த நம்பியை
வெள்ளிலை வேலினான் விரகி னீட்டினான். (299) ( )

(சுரிமுக)

தொகு
சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்புற வாய்விட் டார்த்தன
வெரிமுக நித்தில மேந்திச் சேந்தபோற்
கரிமுக முலையினார் காய்பொன் சிந்தினார். (300) ( )


பார்க்க:

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
[[]]
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400