1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
சீவகசிந்தாமணிக் காப்பியம்
தொகு1. நாமகள் இலம்பகம்
தொகு(பண்கனியப்)
தொகு- பண்கனி யப்பரு கிப்பய னாடகங்பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
- கண்கனி யக்கவர்ந் துண்டுசின் னாட்செல கண் கனியக் கவர்ந்து உண்டு சில் நாள் செல
- விண்கனி யக்கவின் வித்திய வேற்கணிவிண் கனியக் கவின் வித்திய வேல் கணி
- மண்கனிப் பான்வள ரத்தளர் கின்றாள். (201)மண் களிப்பான வளரத் தளர்கின்றாள். (201) ( )
(வேறு)
(கரும்பார்)
தொகு- கரும்பார் தோண்முத்தங் கழன்று செவ்வாய் விளர்த்துக் கண்பசலை பூத்த காமம்கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ் வாய் விளர்த்துக் கண் பசலை பூத்த காமம்
- விரும்பார் முலைக்கண் கரிந்து திங்கள்வெண் கதிர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோவிரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல்
- லரும்பால் பரந்து நுசுப்புங் கண்ணின் புலனாயிற் றாய்ந்த வனிச்ச மாலைஅரும் பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆய்ற்று ஆய்ந்த அனிச்ச மாலை
- பெரும்பார மாய்ப்பெரிது நைந்து நற்சூற் சலஞ்சலம் போனங்கை நலந்தொ லைந்ததே.(202) பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே. (2012
- (வேறு )
தூம்புடை
தொகு- தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோற்தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
- றேம்புடை யலங்கன் மார்பிற் றிருமகன் றமிய னாகதேம்பு உடை அலங்கல் மார்பின் திருமகன்
- வோம்படை யொன்றுஞ் செப்பா டிருமக ளொளித்து நீங்கஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
- வாம்புடை தெரிந்து வேந்தற் கறிவெனு மமைச்சன் சொன்னான். (203)ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். (203) )
(காதிவேன்)
தொகு- காதிவேன் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப் பட்டகாதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட
- நீதிமேற் சேற றேற்றாய் நெறியலா நெறியைச் சேர்ந்துநீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
- கோதியல் காம மென்னு மதுவினிற் குளித்த ஞான்றேகோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
- வோதிய பொறியற் றாயோ ரரும்பொறி புனைவி யென்றான். (204)ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். (2014)
- (வேறு)
(அந்தரத்தார்)
தொகு- அந்தரத் தார்மய னேயென வையுறுந்அந்தரம் தார் மயனே என ஐயுறும்
- தந்திரத் தாற்றம நூற்கரை கண்டவன்தந்திரம்தான் தம நூல் கரை கண்டவன்
- வெந்திற லான்பெருந் தச்சனைக் கூவியொவெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஒர்
- ரெந்திர வூர்தி யியற்றுமி னென்றான். (205)எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். (205) )
(பல்கிழியு)
தொகு- பல்கிழி யும்பயி னுந்துகி னூலொடுபல் கிழியும் பயினும் துகில் நூலொடு
- நல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றனநல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
- வல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
- செல்வதொர் மாமயில் செய்தன னன்றே. (206)செல்வது ஒர் மா மயில் செய்தனன் நன்றே. ( 206)
(பீலிநன்)
தொகு- பீலிநன் மாமயி லும்பிறி தாக்கியபீல் நல் மயிலும் பிறிது ஆக்கிய
- கோலநன் மாமயி லுங்கொடு சென்றவன்கோல நல் மயிலும் கொடு சென்றவன்
- ஞாலமெல் லாமுடை யானடி கைதொழுஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
- தாலுமிம் மஞ்ஞை யறிந்தரு ளென்றான். (207)ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். ( 207)
(நன்னெறி)
தொகு- நன்னெறி நூனயந் தானன்று நன்றிதுநல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
- கொன்னெறி யிற்பெரி யாயிது கொள்கெனகொல் நெறியின் பெரியாய் இது கொள்க என
- மின்னெறி பல்கல மேதகப் பெய்ததொர்மின் எறி பல் கலம் மேதகப் பெய்தது ஒர்
- பொன்னறை தான்கொடுத் தான்புகழ் வெய்யோன். (208)பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். (208 )
(ஆடியன்)
தொகு- ஆடியன் மாமயி லூர்தியை யவ்வழிஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ் வழி
- மாடமுங் காவும டுத்தொர்சின் னாள்செலப்மாடமும் காவும் மடுத்து ஒர் சில் நாள் செலப்
- பாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந்பாடலின் மேன் மேல் பயப்பயத் தான் துரந்து
- தோட முறுக்கி யுணர்த்த வுணர்ந்தாள். (209)ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். (209 )
(வேறு)
(பண்டவழ்)
தொகு- பண்டவழ் விரலிற் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கிபண் தவழ் விரலின் பாவை பொறி வலம் திரிப்பப் பொங்கி
- விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்யவிண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
- புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகைபுண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
- கண்டவர் மருள வீழ்ந்து கால்குவித் திருக்கு மன்றே. (210)கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. (210 )
(வேறு)
(காதிவேல்)
தொகு- காதி வேல்வல கட்டியங் காரனும்காதி வேல் வல கட்டியங்காரனும்
- நீதி யானிலங் கொண்டபி னீதிநூநீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல்
- லோதினார்தமை வேறுகொண் டோதினான்ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
- கோது செய்குணக் கோதினுட் கோதனான். (211) கோது செய் குணக் கோதினுள் கோது அனான். (211 )
(மன்னவன்)
தொகு- மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வமன்னவன் பகையாயது ஒர் மா தெய்வம்
- மென்னை வந்திடங் கொண்டஃ திராப்பகற்என்னை வந்து இடம் கொண்டு அஃது இராப் பகல்
- றுன்னி நின்று செகுத்திடு நீயெனுதுன்னி நின்று செகுத்திடு நீ எனும்
- மென்னை யான்செய்வ கூறுமி னென்னவே. (212)என்னை யான் செய்வது கூறுமின் என்னவே. (212) ( )
(அருமைமா)
தொகு- அருமை மாமணி நாக மழுங்கவோர்அருமை மா மணி அழுங்க ஓர்
- உருமு வீழ்ந்தென வுட்கின ராவவன்உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
- கருமங் காழ்த்தமை கண்டவர் தம்முளான்கருமம் காழ்த்தமை கண்டு அவர் தம்முளான்
- தரும தத்தனென் பானிது சாற்றினான். (213) தரும தத்தன் என்பான் இது சாற்றினான். (213) ( )
(தவளைக்)
தொகு- தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடி
- குவளை யேயள வுள்ள கொழுங்கணாகுவளையே அளவு உள்ள கொழும் கணாள்
- ளவளை யேயமிர் தாகவவ் வண்ணலுஅவளையே அமிர்து ஆக அவ் அண்ணலும்
- முவள கந்தன தாகவொ டுங்கினான். (214)உவளகம் தனது ஆக ஒடுங்கினான். (214) ( )
(விண்ணினோ)
தொகு- விண்ணிட னோடமிர் தம்விலைச் செல்வதுவிண் இடனோடு அமிர்தம் விலைச் செல்வது
- பெண்ணின் னின்பம் பெரிதெனத் தாழ்ந்தவபெண் நின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்தவன்
- னெண்ண மின்றி யிறங்கியிவ் வையகந்எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
- தண்ணந் தாமரை யாளொடுந் தாழ்ந்ததே. (215)தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே. (215) ( )
(தன்னையாக்)
தொகு- தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப்தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
- பின்னை வௌவிற் பிறழ்ந்திடும் பூமகபின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூமகள்
- ளன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப்அன்னவன் வழிச் செல்லின் இம் மண் மிசை
- பின்னைத் தன்குலம் பேர்க்குந ரில்லையே. (216)பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. (216) ( )
(திலகநீண்)
தொகு- திலக நீண்முடித் தேவரும் வேந்தருதிலகம் நீள் முடித் தேவரும் வேந்தரும்
- முலக மாந்தர்க ளொப்பவென் றோதுபஉலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
- குலவு தார்மன்னர்க் கியானிது கூறுவன்குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
- பலவு மிக்கனர் தேவரிற் பார்த்திவர். (217)பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். (217) ( )
(அருளுமே)
தொகு- அருளு மேலர சாக்குமன் காயுமேல்அருளுமேல் அரசு ஆக்கும் மன் காயுமேல்
- வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
- மருளி மற்றவை வாழ்த்தினும் வையினுமருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
- மருளி யாக்க லழித்தலங் காபவோ. (218) மருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. (218) ( )
(உறங்குமாயினு)
தொகு- உறங்கு மாயினு மன்னவன் றன்னொளிஉறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
- கறங்கு தெண்டிரை வையகங் காக்குமாகறங்கு தெள் திரை வையகம் காக்குமால்
- லிறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
- தறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார். (219) அறங்கள் வவ்வ அதன் புறம் காக்கலார். (219) ( )
(யாவராயினு)
தொகு- யாவ ராயினு நால்வரைப் பின்னிடிற்யாவராயினும் நால்வரைப் பின் இடில்
- றேவ ரென்பது தேறுமிவ் வையகங்தேவர் என்பது தேறும் இவ் வையகம்
- காவன் மன்னவர் காய்வன சிந்தியார்காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
- நாவி னுமுரை யார்நவை யஞ்சுவார். (220)நாவினும் உரையார் நவை அஞ்சுவார். (220) ( )
(தீண்டினார்)
தொகு- தீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீதீண்டினார் தமைத் தீ சுடும் மன்னர் தீ
- யீண்டு தங்கிளை யோடு மெரித்திடும்ஈண்டு தம் கிளையோடும் எரித்திடும்
- வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
- மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே. (221) மாண்டது அன்று நின் வாய்மொழித் தெய்வமே. (221) ( )
(வேலின்)
தொகு- வேலின் மன்னனை விண்ணகங் காட்டியிஞ்வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
- ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல்ஞாலம் ஆளவது நன்று எனக்கு என்றியேல்
- வாலி தன்றெனக் கூறினன் வாண் ஞமற்வாலிது அன்று எனக் கூறினான் வாள் ஞமற்கு
- கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான். (222) ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். (222)
(வேறு)
(குழற்சிகை)
தொகு- குழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர்குழல் சிகைக் கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
- நிழற்றிகழ் வேலி னானை நேடிய நெடுங்க ணாளும்நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
- பிழைப்பி லாட்புறந் தந்தானுங் குரவரைப் பேணல் செய்யாபிழைப்பிலாள் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யாது
- திழுக்கினா ரிவர்கள் கண்டா யிடும்பை நோய்க்கிரை களாவார். (223)இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார். (223) ( )
(நட்பிடைக்)
தொகு- நட்பிடைக் குய்யம் வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான்நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
- கட்டழற் காமத் தீயிற் கன்னியைக் கலக்கி னானுகட்டு அழல் காமம் தீயில் கன்னியைக் கலக்கினானும்
- மட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான்அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
- குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய். (224)குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய் (224) ( )
(பிறையது)
தொகு- பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாட்பிறை மதி வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
- குறைபடு மதியந் தேயக் குறுமுய றேய்வ தேபோகுறைபடு மதியம் தேயக் குறு முயல் தேய்வதே போல்
- லிறைவனாத் தன்னை யாக்கி யவன்வழி யொழுகி னென்றும்இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
- நிறைமதி யிருளைப் போழு நெடும்புகழ் விளைக்கு மென்றான். (225) நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். (225)
பார்க்க
தொகு- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150
- 1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
- 1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200