1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200

சீவகசிந்தாமணிக் காப்பியம் தொகு

1. நாமகள் இலம்பகம் தொகு

(எனக்குயிரென்னப்) தொகு

எனக்குயி ரென்னப் பட்டா னென்னலாற் பிறரை யில்லான்எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனைத்திற முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான்முனைத் திறம் முருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
றனக்கியான் செய்வசெய் தேன்றான் செய்வ செய்க வொன்றும்தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கினா மொழிய வேண்டா வாழிய ரொழிக வென்றான். (176)மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான். (176)

(வேறு)

(காவலகுறிப்) தொகு

காவல குறிப்பன் றேனுங் கருமமீ தருளிக் கேண்மோகாவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ
நாவலர் சொற்கொண் டார்க்கு நன்கலாற் றீங்கு வாராநாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூவலர் கொடிய னார்கட் போகமே கழுமி மேலும்பூ அலர் கொடி அனார்கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியு முற்றார் பற்பலர் கேளி தென்றான். (177)பாவமும் பழியும் உற்றார் பல் பலர் கேள் இது என்றான் (177 )

(பெரும்பெயர்ப்) தொகு

பெரும்பெயர்ப் பிரம னென்னும் பீடினாற் பெரிய நீராபெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
னரும்பிய முலையி னாளுக் கணிமுக நான்கு தோன்றஅரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பியாங் கவளை யெய்தான் விண்ணக மிழந்த தன்றித்விரும்பியாங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்
திருந்தினாற் கின்று காறுஞ் சிறுசொல்லாய் நின்ற தன்றே. (178) திருந்தினாற்கு இன்றுகாறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே. (178 )

(கைம்மலர்க்) தொகு

கைம்மலர்க் காந்தள் வேலிக் கணமலை யரையன் மங்கைகை மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை
மைம்மலர்க் கோதை பாகங் கொண்டதே மறுவ தாகக்மை மலர்க் கோதை பாகம் கொண்டதே மறு அது ஆகக்
கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணி யாற்குப்கொய் மலர்க் கொன்றை மாலைக் குளிர் மதிக் கண்ணியாற்குப்
பெய்ம்மல ரலங்கன் மார்ப பெரும்பழி யாயிற் றன்றே. (179) பெய் மலர் அலங்கன் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே. (179)

(நீனிறவண்) தொகு

நீனிற வண்ண னன்று நெடுந்துகிற் கவர்ந்து தம்முன்நீல் நிற வண்ணன் அன்று நெடும் துகில் கவர்ந்து தம்முன்
பானிற வண்ண னோக்கிற் பழியுடைத் தென்று கண்டாய்பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேனிறத் தானை வேந்தே விரிபுனற் றொழுனை யாற்றுட்வேல் நிறத் தானை வேந்தே விரி புனல் தொழுனை ஆற்றுள்
கோனிற வளையி னார்க்குக் குருந்தவ னொசித்த தென்றான். (180)கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்த்து என்றான். (180 )

(காமமே) தொகு

காமமே கன்றி நின்ற கழுதைகண் டருளி னாலேகாமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீ ரென்று வையத்வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
தீமஞ்சேர் மாலை போல விழித்திடப் பட்ட தன்றேஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே
நாமவேற் றடக்கை வேந்தே நாமிது தெரியி னென்றான். (181)நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான். (181 )

(படுபழிமறை) தொகு

படுபழி மறைக்க லாமோ பஞ்சவ ரன்று பெற்றபடு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப்பறை யறைந்து தூற்றிவடு உரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி
யிடுவதே யன்றிப் பின்னு மிழுக்குடைத் தம்ம காமம்இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம
நடுவுநின் றுலகமோம்ப னல்லதே போலு மென்றான். (182) நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான். (182 )

(ஆரறிவிகழ்) தொகு

ஆரறி விகழ்தல் செல்லா வாயிரஞ் செங்க ணானுங்ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செம் கணானும்
கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும்கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேரறி வுடையை நீயும் பிணையனாட் கவலஞ் செய்யுபேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
மோரறி வுடையை யென்றா னுருத்திர தத்த னென்பான். (183) ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான். (183)

(அளந்துதாங்) தொகு

அளந்துதாங் கொண்டு காத்த வருந்தவ முடைய நீரார்க்அளந்து தாம் கொண்டு காத்த அரும் தவம் உடைய நீரார்க்கு
களந்தன போக மெல்லா மவரவர்க் கற்றை நாளேஅளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
யளந்தன வாழு நாளு மதுவெனக் குரைய லென்றான்அளந்தன வாழு நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுட ரிமைக்கும் பூணான். (184) விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான். (184 )

(மூரித்தேந்) தொகு

மூரித்தேந் தாரி னாய்நீ முனியினு முறுதி நோக்கிப்மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் றரும நுண்ணூல் வழக்கது வாதல் கண்டேபாரித்தேன் தரும நுண் நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரித்தேங் கோதை மாதர் விருந்துனக் காக வின்பம்வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்தேந் திளைய கொங்கை புணர்கயான் போவ லென்றான். (185)பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான். ( )


(வேறு)

(இனமா) தொகு

இனமா மென்றுரைப் பினுமே தமெணான்இனம் ஆம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனமா கியபான் மைமுளைத் தெழலாற்முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புனமா மலர்வேய் நறும்பூங் குழலாள்புன மா மலர் வேய் நறும் பூம் குழலாள்
மனமா நெறியோ டியமன் னவனே. (186) மனமாம் நெறி ஓடிய மன்னவனே. (186 )

(கலையார்) தொகு

கலையார் துகிலேந் தல்குலுங் கதிர்சூழ்கலை ஆர் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலையார் தடமும் முனியா துபடிந்முலை ஆர் தடமும் முனியாது படிந்து
துலையாத் திருவின் னமிர்துண் டொளிசேர்உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளி சேர்
மலையார் மணிமார் பன்மகிழ்ந் தனனே. (187) மலை ஆர் மணி மார்பன் மகிழ்ந்தனனே. (187 )

(விரிமா) தொகு

விரிமா மணிமா லைவிளங் குமுடித்விரி மா மணி மாலை விளங்கு முடித்
திருமா மணிசிந் துதிளைப் பினராதிரு மா மணி சிந்து திளைப்பினராய்
யெரிமா மணிமார் பனுமேந் திழையுஎரி மா மணி மார்பனும் ஏந்திழையும்
மருமா மணிநா கரினா யினரே. (188) அரு மா மணி நாகரின் ஆயினரே. (188) (

(நறவார்ந்) தொகு

நறவார்ந் ததொர்நா கிளந்தா மரைவாநறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
யுறவீழ்ந் ததொரொண் மணிபோன் றுரவோஉற வீழ்ந்தது ஓர் ஒள் மணி போன்று உரவோன்
னறவாக் கியவின் பமமர்ந் தவிருட்அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறைவேற் கணினாட் கனவுற் றனளே. (189)கறை வேல் கணினாள் கனவு உற்றனளே. (189)

(வேறு)

(பஞ்சியடி) தொகு

பஞ்சி யடிப்பவ ளத்துவர் வாயவபஞ்சி அடிப் பவளத் துவர் வாயவள்
டுஞ்சு மிடைக்கன மூன்றவை தோன்றலிதுஞ்சும் இடைக் கன மூன்று அவை தோன்றலின்
னஞ்சி நடுங்கின ளாயிழை யாயிடைஅஞ்சி நடுங்கினள் ஆயிழை ஆயிடை
வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே. (190)வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே. (190 )

(பண்கெழு) தொகு

பண்கெழு மெல்விர லாற்பணைத் தோளிதன்பண் கெழு மெல் விரலான் பணைத் தோளி தன்
கண்கழூஉச் செய்து கலைநல தாங்கிகண் கழூஉச் செய்து கலை நல தாங்கி
விண்பொழி பூமழை வெல்கதிர் நேமியவிண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள். (191)வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள். (191 )

(இம்பரிலா) தொகு

இம்பரி லாநறும் பூவொடு சாந்துகொண்இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
டெம்பெரு மானடிக் கெய்துகென் றேத்திஎம்பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம்பரி மானெடுந் தேர்மிகு தானையத்வெம் பரிமான் நெடும் தேர் மிகு தானை அத்
தம்பெரு மானடி சார்ந்தன ளன்றே. (192) தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே. (192 )

(தானமர்) தொகு

தானமர் காதலி தன்னொடு மாவலிதான் அமர் காதலி தன்னொடு மா வலி
வானவர் போன்மகிழ் வுற்றபின் வார்நறுந்வானவர் போல் மகிழ்வுற்ற பின் வார் நறும்
தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக்தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்
கானமர் கோதை கனாமொழி கின்றாள். (193)கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்.(193 )

(தொத்தணி) தொகு

தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண்தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்த தெள்
முத்தணி மாலை முடிக்கிட னாகமுத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
வொத்ததன் றாள்வழி யேமுளை யோங்குபுஒத்த தன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை யன்றே. (194) வைத்தது போல வளர்ந்ததை அன்றே.(194)

(வார்குழை) தொகு

வார்குழை வில்லிட மாமுடி தூக்குபுவார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார்கெழு குன்றனை யான்கன வின்னியல்கார் கெழு குன்றனையான் கனவின் இயல்
பார்கெழு நூல்விதி யாற்பயன் றான்றெரிந்பார் கெழு நூல் விதியான் பயன் தான் தெரிந்து
தேர்குழை யாம லெடுத்துரைக் கின்றான். (195) ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான். (195)

(நன்முடி) தொகு

நன்முடி நின்மக னாநறு மாலைகநன் முடி நின் மகன் ஆம் நறு மாலைகள்
ளன்னவ னாலம ரப்படுந் தேவியர்அன்னவனால் அமரப்படும் தேவியர்
நன்முளை நின்மக னாக்கம தாமெனப்நன் முளை நின் மகன் ஆக்கமதாம் எனப்
பின்னத னாற்பயன் பேசலன் விட்டான். (196) பின் அதனால் பயன் பேசலன் விட்டான். (196) ( )

(இற்றதனாற்) தொகு

இற்றத னாற்பய னென்னென வேந்திழைஇற்றதனால் பயன் என் என ஏந்திழை
யுற்றதின் னேயிடை யூறெனக் கென்றலுஉற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்றுரை யாடல ளாய்மணி மாநிலத்மற்று உரை ஆடலளாய் மணி மா நிலத்து
தற்றதொர் கோதையிற் பொற்றொடி சோர்ந்தாள். (197)அற்றதொர் கோதையின் பொற்றொடி சோர்ந்தாள். (197)

(காவிகடந்த) தொகு

காவி கடந்தகண் ணீரொடு காரிகைகாவி கடந்த கண்ணீரொடு காரிகை
யாவி நடந்தது போன்றணி மாழ்கப்ஆவி நடந்தது போன்ற அணி மாழ்கப்
பாவியெ னாவிவ ருத்துதி யோவெனத்பாவி என் ஆவி வருத்துதியோ எனத்
தேவியை யாண்டகை சென்றுமெய் சார்ந்தான். (198)தேவியை ஆண் தகை சென்று மெய் சேர்ந்தான் (198).

(தண்மலர்) தொகு

தண்மலர் மார்புற வேதழீயி னானவள்தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்
கண்மலர்ந் தாள்கன வின்னியன் மெய்யெனும்கண் மலர்ந்தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண்மய மோபெரி தேமட வாய்க்கெனப்பெண் மயம் ஓ பெரிதே மடவாய்க்கு எனப்
பண்ணுரை யாற்பர வித்துயர் தீர்த்தான். (199)பண் உரையான் பரவித் துயர் தீர்த்தான் (199).

(காதலன்) தொகு

காதலன் காதலி னாற்களித் தாய்மலர்க்காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்
கோதையங் கொம்பனை யார்தங் குழாந்தொழத் கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்
தாதுகு தாமம ணிந்தகில் விம்மியதாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போதுகு மெல்லணைப் பூமகள் சேர்ந்தாள். (200)போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள். (200)




பார்க்க தொகு

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400