1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
சீவகசிந்தாமணிக் காப்பியம்
தொகு1. நாமகள் இலம்பகம்
தொகு(வேறு)
(உப்புடைய)
தொகு- உப்புடைய முந்நீ ருடன்று கரை கொல்வ
- தொப்புடைய தானையு ளொருதனிய னாகி
- இப்படி யிறைமக னிருங்களிறு நூற
- வப்படையு ளண்ணலு மழன்றுகளி றுந்தி (251) ( )
(நீடக)
தொகு- நீடக மிருந்தநிழ னேமி வலனேந்திக்
- கேடக மறுப்பநடு வற்றரவு சேர்ந்தாங்
- கோடுகதிர் வட்டமென வொய்யென வுலம்பிக்
- காடுகவர் தீயின்மிகை சீறுபு வெகுண்டான். (252) ( )
(நெய்ம்முக)
தொகு- நெய்ம்முக மணிந்து நிழறங்கி யழல்பொங்கி
- வைம்முக மணிந்தநுதி வாளழல வீசி
- மைம்முக மணிந்தமத யானைதவ நூறிக்
- கைம்முத றுணிந்துகளி றாழவது நோனான். (253) ( )
(மாலைநுதி)
தொகு- மாலைநுதி கொண்டுமழை மின்னென விமைக்கும்
- வேலைவல னேந்திவிரி தாமமழ கழியச்
- சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சுங்
- கோலவரை மார்பினுறு கூற்றென வெறிந்தான். (254)
- (வேறு) )
(புண்ணிடங்)
தொகு- புண்ணிடங் கொண்ட வெஃகம் பறித்தலிற் பொன்ன னார்தங்
- கண்ணிடங் கொண்ட மார்பிற் றடாயின காது வெள்வேல்
- மண்ணிடங் கொண்ட யானை மணிமருப் பிடையிட் டம்ம
- விண்ணிட மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தி னானே. (235) ( )
(ஏந்தல்வே)
தொகு- ஏந்தல்வே றிருத்த யானை யிரிந்தன வெரிபொற் கண்ணி
- நாந்தக வுழவர் நண்ணார் கூற்றென நடுங்கி மள்ளர்
- சாய்ந்தபின் றறுக ணாண்மைக் கட்டியங் காரன் வேழங்
- காய்ந்தனன் கடுக வுந்திக் கப்பணஞ் சிதறி னானே. (256) ( )
(குன்றமார்)
தொகு- குன்றமார் பரிந்து வெள்வேற் குடுமிமா மஞ்ஞை யூர்ந்து
- நின்றமால் புருவம் போல நெரிமுரி புருவ மாக்கிக்
- கொன்றவன் வேழம் வீழ்ப்ப மற்றுமோர் களிற்றிற் பாய்ந்து
- நின்றமா மள்ளர்க் கெல்லா நீண்முடி யிலக்க மானான். (257)
- (வேறு)
(நஞ்சுபதி)
தொகு- நஞ்சுபதி கொண்டவள நாகணையி னான்றன்
- நெஞ்சுபதி கொண்டுபடை மூழ்கநிலம் வீசு
- மஞ்சுதவழ் குன்றனைய தோளொசிந்து மாத்தாட்
- குஞ்சரங்க ணூறிக்கொலை வாளொடித்து நின்றான். (287) ( )
(ஆரமருளாண்)
தொகு- ஆரமரு ளாண்டகையு மன்னவகை வீழும்
- வீரரெறி வெம்படைகள் வீழவிமை யானாய்ப்
- பேரமரு ளன்றுபெருந் தாதையொடும் பேராப்
- போரமரு ணின்றவிளை யோனிற்பொலி வுற்றான். (259) ( )
(போழ்ந்துகதிர்)
தொகு- போழ்ந்துகதிர் நேமியொடு வேல்பொரு தழுந்தத்
- தாழ்ந்துதறு கண்ணிணைக டீயழல விழியா
- வீழ்ந்துநில மாமகடன் வெம்முலை ஞெமுங்க
- வாழ்ந்துபடு வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (260)
- (வேறு )
(தோய்ந்தவிசும்)
தொகு- தோய்ந்த விசும்பென்னுந் தொன்னாட் டகந்தொழுது புலம்பெய்தி மைந்தர் மாழ்க
- வேந்து முலையா ரினைந்திரங்கக் கொடுங்கோ லிருள்பரப் பவேஎ பாவ
- மாய்ந்த குருகுல மாமாழ் கடலி னுண்முளைத்த வறச்செங்கோ லாய்கதிரினை
- வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மாநாக முடன்விழுங் கிற்றன்றே. ( )
(பாலருவித்)
தொகு- பாலருவித் திங்கடோய் முத்தமாலைப் பழிப்பினெடுங் குடைக்கீழ்ப் பாய்பரி மான்றேர்க்
- கோலருவி வெஞ்சிலை யான்கூர்வா ளோடுமணிக் கேடகமு மறமு மாற்றி
- வாலருவி வாமனடித் தாமரை மலர்சூடி மந்திர மென்சாந்து பூசி
- வேலருவிக் கண்ணினார்மெய் காப்போம்ப வேந்தன்போய் விண்ணோர்க்குவிருந் தாயி னானே.(262) ( )
(செந்தீக்கருந்)
தொகு- செந்தீக் கருந்துளைய தீங்குழல் யாழ்தேந் தேமென்னு மணிமுழவமும்
- தந்தாங் கிளையார் மெல்விரல்கடீண் டத்தாந்தா மென்றிரங்குந் தண்ணுமைகளு
- மந்தீங் கிளவியாரைஞ் ஞூற்றுவரவை துறைபோ யாடலரம்பை யன்னா
- ரெந்தாய் வெறுநிலத்துச் சேர்தியோவென் றினைந்திரங்கிப் பள்ளிபடுத் தார்களே. (263) ( )
(மடையவிழ்ந்த)
தொகு- மடையவிழ்ந்த வெள்ளிலைவே லம்புபாய மணிச்செப்பகங் கடைகின்ற வேபோற்
- றொடையவிழ்ந்த மாலையுமுத்துந் தோய்ந்ததுணை முலையினுள் ளரங்கிமூழ்கக் காமன்
- படையவிழ்ந்த கண்பனிநீர் பாயவிம்மாப் பருமுத்தநா மழலைக்கிண் கிணியினார்
- புடையவிழ்ந்த கூந்தற்புல வுத்தோயப் பொழிமழையுண் மின்னுப்போற் புலம்பினாரே. (264) ( )
(அரிமானோர்)
தொகு- அரிமானோர் மெல்லணைமேன் மஞ்ஞை சூழக் கிடந்தாங்கு வேந்தன்கிடந் தானைத்தான்
- கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டேகை தொழுதான்கண் ணீர்கலுழ்ந் துகுத்தபின்
- னெரிமாலை யீமத் திழுதார்குட மேனைநூறு மேற்பச்சொரிந் தலறியெம்
- பெருமானே யெம்மை யொளித்தியோ வென்னாப் பெரியகண் ணீர்சொரிந் தலறுவார். (265) ( )
(கையார்வளை)
தொகு- கையார் வளைகள்புடைத் திரங்குவார் கதிர்முலைமே லாரம்பறிந் தலறுவார்
- நெய்யார் கருங்குழன்மேன் மாலைசிந்தி நிலத்திடுவார் நின்றுதிருவில் வீசும்
- மையார் கடிப்பிணையும் வார்குழையுங் களைந்திடுவார் கையால்வயி றதுக்குவா
- ரையாவோ வென்றழுவார் வேந்தன் செய்தகொடுமை கொடிதென்பார் கோல்வளையினார். (266) ( )
(பானாட்பிறை)
தொகு- பானாட் பிறைமருப்பிற் பைங்கண் வேழம் பகுவாயோர் பையணன்நா கம்வீழ்ப்பத்
- தேனார் மலர்ச்சோலைச் செவ்வரை யின்மேற் சிறுபிடிகள் போலத்துய ருழந்துதா
- மானா தடியேம்வந் தவ்வுலகி னின்னடி யடைதுமென் றழுதுபோயி னாரெங்
- கோனார் பறிப்ப நலம்பூத் தவிக்கொடி யினிப்பூவா பிறர் பறிப்பவே. (267) ( )
(செங்கட்குறு)
தொகு- செங்கட்குறு நரியோர் சிங்க வேற்றைச் செகுத்தாங் கதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப
- வெங்கட் களியானை வேல்வேந்தனை விறலெரியின் வாய்ப்பெய்தவன் பெயர்ந்துபோய்ப்
- பைங்கட் களிற்றின்மேற் றன்பெயரினாற் பறையறைந்தான் வேன்மாரிபெய் தாலொப்ப
- வெங்கணவரு மினைந்திரங் கினாரிருண் மனத்தான் பூமகளை யெய்தினானே.(268) ( )
சீவகன் பிறப்பு
தொகு(வேறு)
(களிமுகச்)
தொகு- களிமுகச் சுரும்புண் கோதை கயிலெருத் தசைந்து சோர
- வளிமுகச் சுடரி னில்லா மனத்தொடு மயங்கி யிப்பாற்
- சுளிமுகக் களிற னான்றன் சொன்னய நெறியிற் போய
- கிளிமுகக் கிளவிக் குற்ற திற்றெனக் கிளக்க லுற்றேன். (269) ( ( )
(எஃகென)
தொகு- எஃகென விளங்கு வாட்க ணெறிகட லமிர்த மன்னா
- ன்ஃகிய மதுகை தன்னா லாய்மயி லூரு மாங்கண்
- வெஃகிய புகழி னான்றன் வென்றிவெம் முரச மார்ப்ப
- வெஃகெறி பிணையின் மாழ்கி யிறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள். (270) ( )
(மோடுடை)
தொகு- மோடுடை நகரி னீங்கி முதுமரந் துவன்றி யுள்ளம்
- பீடுடை யவரு முட்கப் பிணம்பல பிறங்கி யெங்குங்
- காடுடை யளவை யெல்லாங் கழுகிருந் துறங்கு நீழற்
- பாடுடை மயிலந் தோகை பைபய வீழ்ந்த தன்றே. (271) ( )
(மஞ்சுசூழ்)
தொகு- மஞ்சுசூழ் வதனை யொத்துப் பிணப்புகை மலிந்து பேயு
- மஞ்சுமம் மயானந் தன்னு ளகில்வயி றார்ந்த கோதை
- பஞ்சிமேல் வீழ்வ தேபோற் பல்பொறிக் குடுமி நெற்றிக்
- குஞ்சிமா மஞ்ஞை வீழ்ந்து கால்குவித் திருந்த தன்றே. (272) ( )
(வார்தரு)
தொகு- வார்தரு தடங்க ணீர்தன் வனமுலை நனைப்ப வேல்பெற்
- றூர்கட லனைய காட்டு ளச்சமொன் றானு முள்ளா
- ளேர்தரு மயிலஞ் சாய லிறைவனுக் கிரங்கி யேங்கிச்
- சோர்துகி றிருத்த றேற்றா டுணைபிரி மகன்றி லொத்தாள். (273) ( )
(உண்டென)
தொகு- உண்டென வுரையிற் கேட்பா ருயிருறு பாவ மெல்லாங்
- கண்டினித் தெளிக வென்று காட்டுவாள் போல வாகி
- விண்டொட நிவந்த கோயில் விண்ணவர் மகளிற் சென்றாள்
- வெண்டலை பயின்ற காட்டுள் விளங்கிழை தமிய ளானாள். (274) ( )
(இருள்கெட)
தொகு- இருள்கெட விகலி யெங்கு மணிவிளக் கெரிய வேந்தி
- யருளுடை மனத்த வாகி யணங்கெலாம் வணங்கி நிற்பப்
- பொருகடற் பருதி போலப் பொன்னனான் பிறந்த போழ்தே
- மருளுடை மாத ருற்ற மம்மர்நோய் மறைந்த தன்றே. (275) ( )
பார்க்க
தொகு- 1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
- 1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150
- 1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
- 1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
- 1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400