1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375

சீவகசிந்தாமணிக் காப்பியம் தொகு

1. நாமகள் இலம்பகம் தொகு

(சூழ்கதிர்) தொகு

சூழ்கதிர் மதிய மன்ன சுடர்மணிப் பூணி னானும்
வீழ்தரு கதியி னீங்கி விளங்குபொன் னுலகத் துய்க்கு
மூழ்வினை துரத்த லானு முணர்வுசென் றெறித்த லானு
மாழ்கடற் புணையி னன்ன வறிவரன் சரண டைந்தான். (351) ( )

(காட்சிநன்) தொகு

காட்சிநன் னிலையின் ஞானக் கதிர்மணிக் கதவு சேர்த்திப்
பூட்சிசா லொழுக்க மென்னும் வயிரத்தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிக ளெல்லா மடைத்தபின் வரம்பி லின்பத்
தாட்சியி லுலக மேறத் திறந்தன னலர்ந்த தாரான். (352) ( )

(நல்லறத்) தொகு

நல்லறத் திறைவ னாகி நால்வகைச் சரண மெய்தித்
தொல்லறக் கிழமை பூண்ட தொடுகழற் காலி னாற்குப்
புல்லற நெறிக்க ணின்று பொருள்வயிற் பிழைத்த வாறு
மில்லறத் தியல்பு மெல்லா மிருளறக் கூறி யிட்டான். (353) ( )

(எரிமுயங்) தொகு

எரிமுயங் கிலங்கு வைவே லிளையவர் குழாத்தி னீங்கித்
திருமுயங் கலங்கன் மார்பிற் சீவகற் கொண்டு வேறா
விரிமலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலுந்
தெரிமலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்ட லுற்றான். (354) ( )

(பூவையுங்) தொகு

பூவையுங் கிளியு மன்ன ரொற்றெனப் புணர்க்குஞ் சாதி
யாவையு மின்மை யாராய்ந் தந்தளிர்ப் பிண்டி நீழற்
பூவியற் றவிசி னுச்சிப் பொலிவினோ டிருந்த போழ்தி
லேவியற் சிலையி னானை யிப்பொருள் கோண்மோ வென்றான். (355) ( )

(வையகமுடை) தொகு

வையக முடைய மன்னன் சச்சந்த னவற்குத் தேவி
பைவிரி பசும்பொ னல்குற் பைந்தொடி விசயை யென்பாள்
செய்கழன் மன்னன் றேர்ந்து தேவியைப் பொறியிற் போக்கி
மையல்கொ ணெஞ்சிற் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். (356) ( )

(புலம்பொடு) தொகு

புலம்பொடு தேவி போகிப் புகற்கருங் காடு நண்ணி
வலம்புரி யுலகம் விற்கு மாமணி யீன்ற தென்ன
விலங்கிழை சிறுவன் றன்னைப் பயந்துபூந் தவிசி னுச்சி
நலம்புரி நங்கை வைத்து நல்லறங் காக்க வென்றாள். (357) ( )

(வானத்தின்) தொகு

வானத்தின் வழுக்கித் திங்கட் கொழுந்து மீன்குழாங்கள் சூழக்
கானத்திற் கிடந்த தேபோற் கடலக முடைய நம்பி
தானத்து மணியுந் தானு மிரட்டுறத் தோன்றி னானே
யூனத்திற் றீர்ந்த சீர்த்தி யுத்தரட் டாதி யானே. (358) ( )

(அருந்தவன்) தொகு

அருந்தவன் முந்து கூற வலங்கல்வே னாய்கன் சென்று
பொருந்துபு சிறுவற் கொண்டு பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி யாரத் தும்மினன் றெய்வம் வாழ்த்திற்
றரும்பொனாய் கொண்மோ வென்றா னலைகடல் விருப்பிற் கொண்டாள். (359) ( )

(கரியவன்) தொகு

கரியவன் கன்னற் கன்று பிறப்பினைத் தேற்றி யாங்கப்
பெரியவன் யாவ னென்ன நீயெனப் பேச லோடுஞ்
சொரிமலர்த் தாரும் பூணு மாரமுங் குழையுஞ் சோரத்
திருமலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். (360) ( )

(கற்பகங்) தொகு

கற்பகங் கலங்கி வீழ்ந்த வண்ணம்போற் காளை வீழச்
சொற்பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி
நற்பல குழீஇய தம்மா னவையறத் தேற்றத் தேறிக்
கற்புனை திணிதிண் டோளான் கவலைநீர்க் கடலுட் பட்டான். (361) ( )

(இனையைநீ) தொகு

இனையைநீ யாய தெல்லா மெம்மனோர் செய்த பாவம்
நினையனீ நம்பி யென்று நெடுங்கணீர் துடைத்து நீவிப்
புனையிழை மகளிர் போலப் புலம்பனின் பகைவ னின்றான்
நினைவெலா நீங்கு கென்ன நெடுந்தகை தேறி னானே. (362) ( )

(மலைபக) தொகு

மலைபக விடிக்குஞ் சிங்க மடங்கலின் முழங்கி மாநீ
ரலைகடற் றிரையிற் சீறி யவனுயிர் பருக லுற்றுச்
சிலையொடு பகழி யேந்திக் கூற்றெனச் சிவந்து தோன்று
மிலையுடைக் கண்ணி யானை யின்னணம் விலக்கி னானே. (363) ( )

(வேண்டுவ) தொகு

வேண்டுவ னம்பி யானோர் விழுப்பொரு ளென்று சொல்ல
வாண்டகைக் குரவிர் கொண்மின் யாதுநீர் கருதிற் றென்ன
யாண்டுநே ரெல்லை யாக வவன்றிறத் தழற்சி யின்மை
வேண்டுவ லென்று சொன்னான் வில்வலா னதனை நேர்ந்தான். (364) ( )

(வெவ்வினை) தொகு

வெவ்வினை வெகுண்டு சாரா விழுநிதி யமிர்த மின்னீர்
கவ்விய வெஃகி னின்ற கயக்கமி னிலைமை நோக்கி
யவ்விய மகன்று பொங்கு மழல்படு வெகுளி நீக்கி
யிவ்விய லொருவற் குற்ற திற்றெனக் கிளக்க லுற்றான். (365) ( )

(வானுறை) தொகு

வானுறை வெள்ளி வெற்பின் வாரண வாசி மன்ன
னூனுறை பருகி வெள்வே லுலோகமா பால னென்பான்
தேனுறை திருந்து கண்ணிச் சிறுவனுக் கரசு நாட்டிப்
பானிறக் குருகி னாய்ந்து பண்ணவர் படிவங் கொண்டான். (366) ( )

(வெஞ்சினங்) தொகு

வெஞ்சினங் குறைந்து நீங்க விழுத்தவந் தொடங்கி நோற்கும்
வஞ்சமில் கொள்கை யாற்குப் பாவம்வந் தடைந்த தாகக்
குஞ்சர முழங்கு தீயிற் கொள்கையின் மெலிந்திம் மூதூர்
மஞ்சுதோய் குன்ற மன்ன மானவீட் டகம்பு குந்தான். (367) ( )

(உரைவிளை) தொகு

உரைவிளை யாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரைவிளை யாடு மார்பன் யாரவன் வாழி யென்ன
விரைவிளை யாடுந் தாரோ யானென விரும்பித் தீம்பாற்
றிரைவிளை யமிர்த மன்ன கட்டுரை செல்க வென்றான். (368) ( )

(பூத்தின்று) தொகு

பூத்தின்று புகன்று சேதாப் புணர்முலை பொழிந்த தீம்பால்
நீத்தறச் செல்ல வேவித் தட்டவின் னமிர்த முண்பான்
பாத்தரும் பசும்பொற் றாலம் பரப்பிய பைம்பொற் பூமி
யேத்தருந் தவிசி னம்பி தோழரோ டேறி னானே. (369) ( )

(புடையிரு) தொகு

புடையிரு குழையு மின்னப் பூந்துகிற் செறிந்த வல்குல்
நடையறி மகளி ரேந்த நல்லமிர் துண்ணும் போழ்தி
னிடைகழி நின்ற வென்னை நோக்கிப்போந் தேறு கென்றான்
கடல்கெழு பருதி யன்ன பொற்கலத் தெனக்கு மிட்டார். (370) ( )

(கைகவிநறு) தொகு

கைகவி நறுநெய் பெய்து கன்னலங் குடங்கள் கூட்டிப்
பெய்பெயென் றுரைப்ப யானும் பெருங்கடல் வெள்ளிக் குன்றம்
பெய்துதூர்க் கின்ற வண்ணம் விலாப்புடை பெரிதும் வீங்க
வையன தருளி னாலியா னந்தணர் தொழிலே னானேன். (371) ( )

(சுரும்புடை) தொகு

சுரும்புடை யலங்கன் மாலைச் சுநந்தையுந் துணைவன் றானும்
விரும்பின ரெதிர்கொண் டோம்ப வேழவெந் தீயி னீங்கி
யிருந்தனெ னேம முந்நீ ரெறிசுற வுயர்த்த தோன்றற்
கரும்புடைக் காளை யன்ன காளைநின் வலைப்பட் டென்றான். (372) ( )

(நிலம்பொறுக்) தொகு

நிலம்பொறுக் கலாத செம்பொ னீணிதி நுந்தை யில்லம்
நலம்பொறுக் கலாத பிண்டி நான்முகன் றமர்கட் கெல்லா
முலம்பொறுக் கலாத தோளா யாதலா லூடு புக்கேன்
கலம்பொறுக் கலாத சாய லவருழை நின்னைக் கண்டேன். (373) ( )

(ஐயனைக்) தொகு

ஐயனைக் கண்ணிற் காண யானைத்தீ யதகங் கண்ட
பையண னாகம் போல வட்கயான் பெரிது முட்கித்
தெய்வங்கொ லென்று தேர்வேற் கமிர்துலாய் நிமிர்ந்த தேபோல்
மொய்குரன் முரச நாணுந் தழங்குரன் முழங்கக் கேட்டேன். (374) ( )

(கோட்டிளந்) தொகு

கோட்டிளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவிற் போல |
மோட்டொலி முத்தஞ் சூழ்ந்து முருகுகொப் புளிக்குந் தாரோய் |
கேட்டளப் பரிய சொல்லுங் கிளரொளி வனப்பு நின்னைச் |
சேட்டிளஞ் சிங்க மன்னாய் சாதகஞ் செய்த வென்றான் (375) | ( )

பார்க்க: தொகு

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
[[]]
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379