ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஆடும் பெருமானும்

அளந்த நெடுமாலும்




கலைமணி
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்




 
கலைஞன் பதிப்பகம்

10 கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்

சென்னை - 600 017.

Rs.35.00
AADUM PERUMANUM ALANDHA NEDUMALUM


By
Tho.Mu. BASKARA THONDAMAN


First Edition 1999


Published by
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T. Nagar Chennai - 600 017


Typeset at
Skill Computers Chennai - 600 018

Prințed at
Nataraj Offset Press
Chennai - 600 005.

முன்னுரை

ணக்கம். 'ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்' என்று இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்த நூலின் ஆசிரியர், திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். கம்பனைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்லால் இழைத்த காவியங்களான கோயில்களைப் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்களைப் படித்து இன்பம் அடைந்தவர்கள் தமிழர்கள். 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொகுப்புக்களின் மூலமாகவும், வேங்கடத்துக்கு அப்பால் என்ற வடநாட்டுத் தலங்கள் பற்றிய நூல் மூலமாகவும் அவரை இனம் கண்டு வைத்திருக்கிறார்கள் பக்தர்கள், ஆன்மிகச் செல்வர்கள், கலாரசிகர்கள். ஆகவே அவர்களுக்கு, எங்கள் தந்தையார், திரு. பாஸ்கரத் தொண்டைமானைப் பற்றிப் புதிதாக எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை -

'ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும், அவ்வப்போது அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் தாம், என்றாலும் அவர்கள் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னர் தான் நூல் வடிவம் பெறுகின்றது. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் நான் ஏற்கெனவே படித்தவைதாம். படித்து இன்புற்றவைதாம் - என்றாலும் அச்சுக்குக் கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் அவற்றை நான் படித்தபோது அத்தனையும் எனக்குப் புதிய கட்டுரைகள் போலவே இனிப்பாய் இருந்தன. நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார்களே, அப்படி இருந்தது. ஆடும் பெருமானையும், அளந்த நெடுமாலையும் எத்தனை கோயில்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த இரண்டு திருமூர்த்தங்களுக்குமிடையே இப்படி ஓர் அபூர்வமான, அற்புதமான ஒற்றுமை இருப்பதை எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லையே. அனுமனது விஸ்வரூபம், கோதையின் அழகிய கோலம், இரண்டு கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. கோதையின் அழகிய கோலத்தை காணத்தான் எப்படியெல்லாம் அலைந்திருக்கிறார்கள் என்று அறிகின்ற போது வியப்பாக இருக்கின்றது. அப்படித்தான் ராஜ கம்பீர நாடாளு நாயகனான, அந்த வேலுக் குரிச்சி வேட்டுவனாம் முருகனைத் தேடி அலைந்த கதையும் நம்மை பரவசப்படுத்துகிறது. கலை தேடி அலைந்த காதல் என்றால் இதுதான் போலும்.

காலமெல்லாம் கலைப்பணிக்காகவே கோயில் கோயிலாக வலம் வந்தவர்கள் தந்தையார். எத்தனையோ தலங்களுக்கு அவர்களுடனேயே போயிருக்கிறோம். ஆனாலும், அந்த அழகை அவர்கள் எடுத்துச் சொல்லும்போது எல்லாமே புத்தம் புது அனுபவம் போலத் தோன்றுகிறது. திருச்செங்கோட்டுக்கு உடன் அழைத்துப் போய், ஒவ்வொரு மூர்த்தியாய்க் காட்டி விளக்கியது இன்றும் எனக்குப் பசுமையாய் நினைவிருக்கிறது. பேராசிரியர் சீனிவாச ராகவன் சொல்லியது போன்று, தொண்டை மான் அவர்களுடைய கட்டுரைகளைப் படிக்கும்போது, அவர்களே நம் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு போய் கோயிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் நேரில் உடனிருந்து விளக்குவது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. தொண்டைமான் அவர்களின் நோக்கமும் அதுதான். தாம் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டும் என்பது. இந்தக் கட்டுரைகளின் பயனும் அதுதான். இந்தக் கட்டுரைகளை ஒரு முறை படித்தால் போதாது. பலமுறை படிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அருமை பெருமை பிடிபடும்.

இந்த நூலுக்கு நல்லதொரு முகவுரை வழங்கியிருக்கிறார், வித்வான் திரு. ல, சண்முகசுந்தரம் அவர்கள், ரசிகமணி டி.கே.சியின் நண்பர் வட்டத்தில் முக்கியமானவர். ரசிகமணியின் குரலாக, இன்றும் ஒலிபரப்பிக் கொண்டவர். அவர் தாம் அறிந்த தொண்டைமானை உங்கள் முன் நிறுத்தியிருக்கிறார் - அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தந்தையாரின் நூல்களை இத்தனை ஆர்வத்துடன் வெளியிட முன் வந்துள்ள கலைஞன் பதிப்பகத்தார், ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் இதனை அழகான நூலாக நம் கையில் தந்திருக்கிறார்கள் - அவர்களுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் -

வணக்கம்.

ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்

முகவுரை

(வித்வான் ல. சண்முகசுந்தரம்)

முழு நிலாப் போன்ற வட்டமுகம், அகன்ற நெற்றி, புன்முறுவல் பூக்கும் அதரங்கள், அன்பர்களையும் நண்பர்களையும் தழுவி அணைக்கும் கண்கள், உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட ஓங்கு தாங்கான கரிய திருமேனி. இப்ப்டி ஒரு தோற்றப் பொலிவோடு அரசதோரணையில் நடமாடியவர்தான் அறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். ஒரு போர்வீரனின் வல்லமை மிக்க உடம்பை விட வலுவான உடல் படைத்தவர்தான் தொண்டைமான். ஆனாலும் அந்த உடம்புக்குள் மலரினும் மெல்லிய இதயம் பூத்துக் கிடந்தது. இலக்கியம், சிற்பம். ஒவியம், கம்பர், தமிழ், இசை, விருந்தோம்பல், அன்பு, நன்றி மறவாமை, பொறையுடைமை, நேர்மை, உறுதி என்று இதழ் இதழாக விரிந்து மணம் பரப்பியது அந்த இதயத் தாமரை.

பாஸ்கரத் தொண்டைமானை அப்படியே ஒவியத்தில் வரைந்து காட்ட முடியும். ஆனால் அந்த இதயத் தின் உணர்ச்சித் தேனை, தமிழ்க்காதலை கலை மோகத்தை, அன்பின் வேகத்தை, பண்பின் ஒய்யாரத்தை எப்படி ஒவியத்துள் கொண்டு வர முடியும்? குழந்தை போன்றவர் தொண்டைமான். உத்சாகம் வந்துவிட்டால் அதை அமுக்கி மறைக்கத் தெரியாது தொண்டைமானுக்கு. குழந்தை போலவே விழுந்து விழுந்து சிரிப்பார். அவர் சிரிக்கிற சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும் பார்க்கின்றவர்களுக்கு. அறுபது வயதை எட்டிய ஒருவர் இப்படித் துடிப்பாக இருக்கிறாரே என்று இருபது வயது இளைஞர்கள் கூட வியப்பார்கள். அப்படி வாழ் நாள் முழுவதும் கலகலப்பாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தவர் தொண்டைமான்.

முப்பது வருஷங்களுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்தவர் தொண்டைமான். ரெவினியூ இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து, வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என்று உத்தியோக உலகை அலங்கரித்தவர் அவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் போய் பணியாற்றியிருக்கிறார். உத்தியோக சம்பந்தமாக இருந்த பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்களை நிறுவுவார். கம்பர்விழா, வள்ளுவர் விழா, தமிழ் விழா என்று கோலாகலமாகக் கொண்டாடுவார். நந்தவனம், பசுமடம், கோயில், தமிழ் மன்றம், கருத்தரங்கம், பட்டிமன்றம், ஊர் ஒற்றிமை, சுத்தம் சுகாதாரம் அவ்வளவும் தொண்டை மானின் புண்ணியத்தில் அங்கங்கே எழுந்து நிற்கம். நகரங்களில் உள்ள வசதிகள் கிராமங்களிலும் இருக்க வேண்டும் என்கிற கொள்கையோடு பாடுபட்டவர் தொண்டைமான். உத்தியோகத்தோடு அப்படிப் பொது நலப் பணி ஆற்றியவர் திரு. தொண்டைமான்.

ரசிகமணி, டிகேசியின் கலைக்களஞ்சியத்தைத் திறந்து அதிலிருந்து கவி நயங்களை, பண்பாட்டு நயங்களை முத்து முத்தாக. மணி மணியாக எடுத்துத் தொடுத்து, தமிழ் மக்களுக்கு, டிகேசியை இனம் காட்டியவர் தொண்டைமான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ரசிகமணி டிகேசி பற்றித் தொண்டைமான் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுபோன்ற ஒரு நூல், டிகேசி பற்றிய வரலாற்று நூல் இன்றும் வரவில்லை -

ரசிகமணி டி.கே.சி - தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைச் சேகரித்து, அவற்றை வகுத்தும் தொகுத்தும், டிகேசியின் கடிதங்கள் என்று ஒரு நூலை உருவாக்கினார் தொண்டைமான்.

அற்புதமான நூல் அது. கடிதங்களைக் கொண்டே, அருமையான இலக்கியம் ஒன்றைப் படைக்க முடியும் என்பதை தமிழில் முதல் முதலாக எடுத்துக் காட்டியவர் அவர்.

தொண்டைமான் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி, பேச்சோ, எழுத்தோ, ஆராய்ச்சியோ, கட்டுரையோ எதுவானாலும் அவற்றில் தனித்த முத்தரை ஒன்று இருக்கும். யாராலும் அதை அடைக்க முடியாது. வானளாவிய கோபுரங்களோடு நிமிர்ந்து நிற்கும் கருங்கற் கோயில்கள் தமிழகமெங்கும் கடவுள் தத்துவத்தை உணர்த்தி நிற்கின்றன. தமிழகத்தை அப்படியே கையில் எடுத்துக் காட்டும் ஒவ்வொரு கோயிலும். தமிழ் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, கலை, நோக்கம், உணர்வு, போக்கு வரவு அவ்வளவும் கோயிலின் கருங்கற்களுக்குள் பத்திரமாய்ப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. மெய்யுணர்வின் மூலமாகக் கோயில்களையும், கோயில்களின் கலைப் பொக்கிஷங்களையும் ஆராய்ந்து, அனுபவித்து, பிறரும் அனுபவிக்கும்படி, அற்புத இலக்கியங்களாக வடித்தெழுதியிருக்கிறார்கள் தொண்டைமான்.

தமிழர்கள் எல்லோரும் கண்ணைத் திறந்து அதிசயித்துப் பார்த்தார்கள். அருமை நண்பர், நீதிபதி மகராஜன் சொன்னார், "கோயில்களைப் பற்றி எழுதி, அவற்றுக்கு ஒளியும், உயிரும், பொலிவும் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர் பாஸ்கரன்" என்று. நீதிபதியின் தீர்ப்புக்கு அப்பீல் ஏது?

தொண்டைமான் நூல்களை தமிழ் மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். படிக்கப் படிக்க மனம் தூய்மை பெறும். பக்தி கலை உணர்வு, இப்படி எழுதினவர், வாசிக்கிறவர் எல்லோரையும் பரவசப்படுத்தும் தொண்டைமான் நூல்கள். அது போதாதா நமக்கு?

பொருளடக்கம்
1. 11
2. 18
3. 26
4. 42
5. 47
6. 51
7. 61
8. 67
9. 78
10. 84
11. 89
12. 94
13. 102
14. 107
15. 114
16. 124
17. 131
18. 142
19. 148
20. 151
21. 159