நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்
நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்
தொகுஉரிச்சொல்லி்ன் பொதுவிலக்கணம்
தொகுநூற்பா: 442
- பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
- ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை
- ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். (01)
நூற்பா: 443
- (பண்பு இதுவென்பது)
- உயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே. (02)
நூற்பா: 444
- (ஐவகையுயிர்)
- மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
- ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின்
- ஓரறி வாதியா வுயிரைந் தாகும். (03)
நூற்பா: 445
- (ஓரறிவுயிர்)
- புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர். (04)
நூற்பா: 446
- (ஈரறிவுயிர்)
- முரணந் தாதிநா வறிவோடீ ரறிவுயிர். (05)
நூற்பா: 447
- (மூவறிவுயிர்)
- சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர். (06)
நூற்பா: 448
- (நாலறிவுயிர்)
- தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர். (07)
நூற்பா: 449
- (ஐயறிவுயிர்)
- வானவர் மக்க ணரகர் விலங்குபுள்
- ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே. (08)
நூற்பா: 450
- (உயிரல்பொருள்)
- உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
- உடன்முத லனைத்து முயிரல் பொருளே. (09)
நூற்பா: 451
- ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும்
- வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர். (10)
நூற்பா: 452
- (உயிர்களின் குணப்பண்பு)
- அறிவரு ளாசை யச்ச மான
- நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
- நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
- துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
- துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
- வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
- மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம். (11)
நூற்பா: 453
- (உயிர்களின் தொழி்ற்பண்பு)
- துய்த்த றுஞ்ச றொழுத லணிதல்
- உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம். (12)
நூற்பா: 454
- (உயிரல்பொருள்களின் குணப்பண்பு)
- பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம்
- அறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம். (13)
நூற்பா: 455
- (இருபொருள்களுக்குமான பொதுப்பண்பு)
- தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்கல்
- நீங்க லடைத னடுங்க லிசைத்தல்
- ஈத லின்னன விருபொருட் டொழிற்குணம். (14)
ஒருகுணந் தழுவிய உரிச்சொற்கள்
தொகுநூற்பா: 456
- சால வுறுதவ நனிகூர் கழிமிகல். (15)
பலகுணந் தழுவிய உரிச்சொற்கள்
தொகுநூற்பா: 457
- கடியென் கிளவி காப்பே கூர்மை
- விரையே விளக்க மச்சஞ் சிறப்பே
- விரைவே மிகுதி புதுமை யார்த்தல்
- வரைவே மன்றல் கரிப்பி னாகும். (16)
ஒருகுணந் தழுவிய உரிச்சொல்- சொல்
தொகுநூற்பா: 458
- மாற்ற நுவற்சி செப்புரைகரை நொடியிசை
- கூற்றுப் புகறன் மொழிகிளவி விளம்பறை
- பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே. (17)
நூற்பா: 459
- முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை
- இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை
- கனைசிலை சும்மை கவ்வை கம்பலை
- அரவ மார்ப்போ டின்னன வோசை. (18)
நூற்பா: 460
- (இயல் புறனடை)
- இன்ன தின்னுழி யின்னண மியலும்
- என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
- சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
- நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே. (19)
நூற்பா: 461
- (அதிகாரப் புறனடை)
- சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்து
- முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற்
- சொற்றவற் றியலான் மற்றைய பிறவும்
- தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே. (20)
நூற்பா: 462
- (நூற் புறனடை)
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- வழுவல கால வகையி னானே. (462)
நன்னூல் சொல்லதிகாரம் ஐந்தாவது உரியியல் முற்றிற்று
தொகுநன்னூல் சொல்லதிகாரம் முற்றுப்பெற்றது
தொகுநன்னூல் மூலம் முற்றுப்பெற்றது
தொகுபவணந்தி யடிகள் திருவடி சரணம்
தொகுபார்க்க: [[]]
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 1. பெயரியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 2. வினையியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 3. பொதுவியல்
- நன்னூல் சொல்லதிகாரம் 4. இடையியல்
- நன்னூல் சொல்லதிகாரம்
- [[]]
நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்