விளையாட்டு உலகம்

473554விளையாட்டு உலகம்2017டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




விளையாட்டு உலகம்





தேசிய விருது பெற்ற நூலாசிரியர்
எஸ். நவராஜ் செல்லையா
M.A., D.P.E. (M.P.Ed.)






ராஜ்மோகன் பதிப்பகம்
10, ரெங்கனாதன் தெரு,

தி. நகர், சென்னை-600017

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

முன்னுரை


விளையாட்டு உலகம் என்பது, வெறும் விளையாடும் உலகம் அல்ல. சிந்தை அணு ஒவ்வொன்றையும் அனுபவத்தாலும் ஆனந்தத்தாலும், அடுத்தடுத்து உண்டாகின்ற உணர்ச்சிமிகு போராட்டங்களாலும் சிலிர்த்தெழுச் செய்கின்ற விந்தைமிகு உலகமாகும்.

புயல் போன்ற போராட்டம், பொருமை நிறைந்த பேயாட்டம், பண்பினால் நெகிழ்ந்த தேரோட்டம், பாசங்கள் கலந்திடும் நீரோட்டம், விதிகளை மாற்றிடும் வெள்ளோட்டம் என்று ஆட்டங்களையும், ஓட்டங்களையும் அடக்கிக்கொண்டிருக்கின்ற விளையாட்டு உலகம், காண்போரையும், கற்போரையும், கேட்போரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்ற இன்பத் தோட்டமாகும்.

அந்த இன்பத் தோட்டத்திலே தான், எத்தனை எத்தனை வண்ணமலர்கள்! உலகப் புகழ் பெற்ற சில வீரத்திலகங்களை வண்ணமலராக எடுத்து, எண்ணத்தால் மாலை தொடுத்து, விளையாட்டு உலகம் என்ற பெயரில் உங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறேன்.

மணம் மிகுந்த மாலையிலுள்ள ஒவ்வொரு மலரும், உங்களை அற்புத உலகத்திற்கு அழைத்துச்சென்று ஆனந்த நடனமாடும். அறிவுலகத்திற்கு அழைத்துச் சென்று நிறைவோடு உறவோடும். கற்பனைபுரிக்கு கூட்டிச் சென்று காவிய சிந்துபாடச் செய்யும். இப்படியும் இருக்குமா விளையாட்டு உலகம் என்று உங்களை இனம் புரியாத இன்பத்தில் திக்கு முக்காடச் செய்யும்.

தமிழ் இலக்கியத்திற்கு இந்த நூல் ஒரு புதிய முயற்சி. பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எனது விளையாட்டுத் துறை மாத இதழான "விளையாட்டுக் களஞ்சியத்தில்" வெளி வந்த சொல்லோவியங்களைத் தொகுத்து, உங்கள் கைகளில் தவழ விட்டிருக்கிறேன்.

உலகப் புகழ் பெற்ற வீரர்களின் உன்னத வாழ்க்கையில் நடந்த ஒப்பற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்துக் கூறித் தந்திருப்பது, நம்தமிழகத்து மாணவ மாணவிகளும் வாலிபர்களும் இத்தகைய பண்பாடும் பாரம்பரியமும் பெறவேண்டும். அவர்கள் தம் வாழ்வும் மலர வேண்டும் என்ற ஏற்றமிகு நோக்கமே தவிர வேறென்றும் அல்ல.

என் நோக்கம் வெற்றி பெறுமேயாயின், அது நான் பெற்ற பேறு என்று மகிழ்வேன்.

இந்த அரிய நூலையும், ஏற்கெனவே வெளியாகி வந்த எனது நூல்களை ஏற்று மகிழ்ந்து பாராட்டி ஆதரவு தந்த தமிழ் கூறும் நல்லுலக மக்கள் திருக்கரங்களிலே மகிழ்ச்சியுடன் படைக்கிறேன்.

வணக்கம்


ஞானமலர் இல்லம்

எஸ். நவராஜ் செல்லையா

சென்னை-17

உள்ளே...


"https://ta.wikisource.org/w/index.php?title=விளையாட்டு_உலகம்&oldid=1548065" இலிருந்து மீள்விக்கப்பட்டது