1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150

சீவகசிந்தாமணிக் காப்பியம்

தொகு

1. நாமகள் இலம்பகம்

தொகு
நாட்டுவளம்

(கந்துமா)

தொகு

கந்து மாம ணித்திரள் கடைந்து செம்போ னீள்சுவர்ச் கந்து மா மணித் திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்

சந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனா சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்

லிந்தி ரன்றி ருநக ருரிமை யோடு மிவ்வழி இந்திரன் திரு நகர் உரிமையோடும் இவ் வழி

வந்தி ருந்த வண்ணமே யண்ணல் கோயில் வண்ணமே. (126) வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. (126 )

(ஆடலின்ன)

தொகு
ஆட லின்ன ரவ்வமு மங்கை கொட்டி நெஞ்சுணப்ஆடல் இன் அரவமும் அம்கை கொட்டி நெஞ்சு உணப்
பாடலின்ன ரவமும் பணைமு ழவ்வ ரவமுங்பாடல் இன் அரவமும் பணி முழவு அவ் அரவமும்
கூடு கோலத் தீஞ்சுவைக் கோல யாழ ரவமும்கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்
வாட லில்ல வோசையால் வைக னாளும் வைகின்றே.வாடல் இல் அவ் ஓசையால் வைகல் நாளும் வைகின்றே. ( 127)

சச்சந்தன் வரலாறு

(வேறு)

(நச்சு நாகத்)

தொகு
நச்சு னாகத்தி னாரழற் சீற்றத்தநச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
னச்ச முற்றடைந் தார்க்கமிர் தன்னவன்அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு லாமுலை யார்க்கணங் காகியகச்சு உலா முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந் தன்னெனுந் தாமரைச் செங்கணான்(128) சச்சந்தன் எனும் தாமரைச் செம் கணான். (128 )

(வண்கையாற்)

தொகு
வண்கை யாற்கலி மாற்றிவை வேலினாற்வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
றிண்டி றற்றெவ்வர் தேர்த்தொகை மாற்றினாதிண் திறல் தெவ்வர் தேர்த்தொகை மாற்றினான்
னுண்க லைக்கிட னாய்த்திரு மாமகள்நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
கண்க ளுக்கிட னாங்கடி மார்பனே.(129)கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. (129 )

(கோதைநித்தி)

தொகு
கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடைகோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
யோத நீருல கொப்ப நிழற்றலாற்ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
றாதை யேயவன் றாணிழற் றங்கியதாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காத லாற்களிக் கின்றதிவ் வையமே. (130)காதலால் களிக்கின்றது இவ் வையமே. (130 )

(தருமன்)

தொகு
தருமன் றண்ணளி யாற்றன தீகையால் தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனேவருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
யருமை யாலழ கிற்கணை யைந்துடைத்அருமையால் அழகில் கணை ஐந்து உடைத்
திரும கன்றிரு மாநில மன்னனே.(131)திரு மகன் திரு மா நில மன்னனே. (131)

(ஏனைமன்னர்)

தொகு
ஏனை மன்னர்த மின்னுயிர் செற்றவேற்ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
றானை மன்னரிற் றானிமி லேறனான்தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
றேனை மாரியன் னான்றிசை காவலன்தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானந் தோய்புக ழான்மலி வெய்தினான். (132)வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். (132) ( )

(செல்வற்)

தொகு
செல்வற் கின்னணஞ் சேறலிற் தீம்புனல்செல்வற்கு இன்னணம் சேறலின் தீம் புனல்
மல்கு நீர்விதை யத்தர சன்மகள்மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
ளல்லி சேரணங் கிற்கணங் கன்னவள்அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லி னீள்புரு வத்தெறி வேற்கணாள்.(133)வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். (133)

(உருவுஞ்சாய)

தொகு
உருவுஞ் சாயலு மொப்ப வுரைப்பதற்உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
கரிய வாயினு மவ்வளைத் தோளிகட்அரிய ஆயினும் அ வளைத் தோளி கண்
பெருகு காரிகை பேசுவல் பெண்ணணங்பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
கரிய தேவரு மேத்தரு நீரளே. (134) அரிய தேவரும் ஏத்த அரு நீரளே. (134)


விசையையின் கேசாதி பாத வருணனை-பாடல்: 135-150


(எண்ணெயு)

தொகு
எண்ணெயு நானமு மிவைமூழ்கி யிருடிருக்கிட்எள்நெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
டொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோற்ஒள் நறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண்களிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள்கண்கள் இருண்டு நெறி மல்கிக் கடை குழன்ற கரும் குழல்கள்
வண்ணப்போ தருச்சித்து மகிழ்வானாத் தகையவே. (135)வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. (135) )

(குழவிக்கோட்)

தொகு
குழவிக்கோட் டிளம்பிறையுங் குளிர்மதியுங் கூடினபோகுழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
லழகுகொள் சிறுநுதலு மணிவட்ட மதிமுகமுந்அழகு கொள் சிறு நுதலும் மணி வட்ட மதி முகமும்
தொழுதாற்கு வரங்கொடுக்குந் தொண்டைவாய்தூ முறுவதொழுதாற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல்
லொழுகுபொற் கொடிமூக்கு முருப்பசியை யுருக்குமே. (136)ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. (136)

(வண்சிலையை)

தொகு
வண்சிலையை வனப்பழித்து வார்ந்தொழுகி நிலம்பெறாவண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண்கருமை கொண்டொசிந்து நுதலிவர்ந்து போந்துலாய்க்நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
கண்கூடா கடைபுடைத்துக் கைவல்லா னெழுதியபோற்கண்கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
பண்பார்ந்த கொடும்புருவம் பழிச்சானாப் படியவே. (137)பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. (137)

(சேலனைய)

தொகு
சேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியம்சேல் அனைய சில் அரிய கடை சிவந்து கரு மணி அம்
பாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையுபால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மாலுறுப்ப மகிழ்செய்வ மாண்பினஞ்சு மமிர்தமுமேமால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பின் அஞ்சும் அமிரதமுமே
போல்குணத்த பொருகயற்கண் செவியுறப்போந் தகன்றனவே. (138)போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. (138)

(மயிரெறி)

தொகு
மயிரெறி கத்தரிகை யனையவாய் வள்ளைவாமயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
டுயிர்செகுத்து முன்னொன்றிப் பின்பேரா துருவமைந்தஉயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உருவு அமைந்த
செயிர்மகர குண்டலமுந் திளைப்பானா வார்காதும்செயிர் மகர குண்டலுமும் திளைபு ஆனா வார் காதும்
வயிரவின் முகஞ்சூடி வண்ணம்வீற் றிருந்தனவே. (139)வயிர இன் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. (139)

(ஈனாதவிளங்)

தொகு
ஈனாத விளங்கமுகின் மரகத மணிக்கண்ணுஈனாத இளம் கமுகின் மரகத மணிக் கண்ணும்
மானாதே யிருள்பருகு மருமணி கடைந்ததூஉந்ஆனாதே இருள் பருகும் மருமணி கடைந்து அதூஉம்
தானாகி யிருளொடோர் தாமரைப்பூச் சுமந்தன்னதானாகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
கானார்ந்த திரள்கழுத்துக் கவின்சிறைகொண் டிருந்ததே. (140)கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. (140)

(மணிமகரம்)

தொகு
மணிமகரம் வாய்போழ்ந்து வாழ்முத்த வடஞ்சூழ்ந்தாங்மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்தம் வடம் சூழ்ந்து ஆங்கு
கணியரக்கார் செம்பஞ்சி யணையனைய வாடமைத்தோள்அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய
துணிகதிர் வளைமுன்கைத் தொகுவிரல் செங்காந்தள்துணி கதிர் வளை முன் கைத் தொகு விரல் செம் காந்தள்
மணியரும்பு மலரங்கை குலிகமார் வனப்பினவே. (141)மணி அரும்பு மலர் அம் கை குலிகம் ஆர் வனப்பினவே. (141)

(தாமச்செப்)

தொகு
தாமச்செப் பிணைமுகட்டுத் தண்கதிர் விடுநீலதாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
மாமணிதா பித்தன்போன் மனம்பருகு கருங்கண்ணமா மணி தாபித்தன் போல் மனம் பருகு கரும் கண்ண
வேமுற வடிபரந் திளம்பிறை வடஞ்சூடிஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
யாமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே (142).ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே. (142) ( )

(அங்கைபோல்)

தொகு
அங்கைபோல் வயிறணிந்த வலஞ்சுழி யமைகொப்பூழ்அங்கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழியலைக்குங் கண்கொளா நுடங்கிடையைகங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
யுண்டெனத் தமர்மதிப்பர் நோக்கினார் பிறரெல்லாஉண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
முண்டில்லை யெனவைய மல்லதொன் றுணர்வரிதே.(143) உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. (143)

(மன்னாக)

தொகு
மன்னாக விணைப்படமுந் தேர்த்தட்டு மதிமயக்கிப்மன் நாக இணைப் படமும் தேர்த்தட்டும் மதி மயக்கிப்
பொன்னால வட்டமும்போற் கலையிமைக்கு மகலல்குற்பொன் ஆலவட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன்னிளம் பருதியுங் குறுமுயலின் குருதியும்போன்கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
றின்னரத்தப் பட்டசைத் திந்திரற்கும் புகழ்வரிதே. (144)இன் அரத்தப் பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. (144)

(வேழவெண்)

தொகு
வேழவெண் டிரடடக்கை வெருட்டிமற் றிளங்கன்னிவேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளம் கன்னி
வாழைத்தண் டெனத்திரண்டு வாலரக்குண் செம்பஞ்சிவாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி
தோழமைகொண் டெனமென்மை யுடையவா யொளிதிகழ்ந்துதோழமை கொண்டு என மேன்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழைகொண் மணிமகரங் கௌவிவீற் றிருந்தனவே. (145)மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. (145)

(பக்கத்தாற்)

தொகு
பக்கத்தாற் கவிழியவாய் மேற்பிறங்காப் பாண்டிலாபக்கத்தால் கவிழியவாய் மேல் பிறங்காப் பாண்டிலா
வொக்கநன் குணராமை பொருந்திய சந்தினவாய்ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப்பின் கூடாது நிகரமைந்த முழந்தாளுநெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும்
மக்களுக் கில்லாத மாட்சியின் மலிந்தனவே. (146)மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. (146)

(ஆடுதசை)

தொகு
ஆடுதசை பிறங்காது வற்றாது மயிரகன்றுஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகரமைந்த வளவினவாய்ச்நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
சேடாவ நாழிகையிற் புடைதிரண்டு தேனெய்பெய்சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பேபோற் கணைக்காலின் வனப்பினவே. (147)வாடாத காம்பே போல் கணைக்காலின் வனப்பினவே.(147)

(பசும்பொன்)

தொகு
பசும்பொன்செய் கிண்கிணியும் பாடகமும் பாடலைப்பபசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்தெரி பொற்சிலம்பு முத்தரிபெய் தகநகநயம் தெரி பொன் சிலம்பு முத்து அரி பெய்து அக நக
வியைந்தெழிலார் மணியாமை யிளம்பார்ப்பின் கூன்புறம்போஇயைந்து எழில் ஆர் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
லசைந்துணர்வு மடிந்தொழியு மடியிணை புகழ்வார்க்கே. (148)அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. (148) ( )

(அரக்கியல்)

தொகு
அரக்கியல் செங்கழுநீ ரகவிதழ்போ லுகிர்சூடிப்அரக்கு இயல் செம் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
பரப்பின்றி நுதியுயர்ந்து பழிப்பறத் திரண்டுநீண்பரப்பின்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
டொருக்குற நெருங்கிப்பொன் னொளியாழி யகங்கௌவித்ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
திருக்கவின்கொண் மெல்விரல்க டேனார்க்குந் தகையவே. (149)திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்குந் தகையவே. (149)

(என்பொடு)

தொகு
என்பொடு நரம்பின்றி யிலவம்பூ வடரனுக்கிஎன்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
யின்புற வரம்புயர்ந் திருநில முறப்புல்லிஇன்பு உற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
யொன்பதின்சா ணடப்பினு மொருகாத மென்றஞ்சுஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென்பஞ்சிச் சீறடியு மேதக்க விழைவினவே. (150)மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. (150) ( )



பார்க்க

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
[[]]
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400


2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.