1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350

சீவகசிந்தாமணிக் காப்பியம்

தொகு

1. நாமகள் இலம்பகம்

தொகு

(மெல்விரன்)

தொகு
மெல்விரன் மெலியக் கொய்த குளநெல்லும் விளைந்த வாம்ப
லல்லியு முணங்கு முன்றி லணில்விளித் திரிய வாமான்
புல்லிய குழவித் திங்கட் பொழிகதிர்க் குப்பை போலு
நல்லெழிற் கவரி யூட்ட நம்பியை நினைக்கு மன்றே. (326) ( )

(பெண்மைநாண்)

தொகு
பெண்மைநாண் வனப்புச் சாயல் பெருமட மாது பேசி
னொண்மையி னொருங்கு கூடி யுருவுகொண் டனைய நங்கை
நண்ணிய நுங்கட் கெல்லா மடைக்கல மென்று நாடுங்
கண்ணிய குலனுந் தெய்வங் கரந்துரைத் தெழுந்த தன்றே. (327)
(வேறு )

(உறதிசூழ்ந்)

தொகு
உறுதி சூழ்ந்தவ ணோடலி னாயிடை
மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ்
சிறுவன் றன்மையைச் சேர்ந்தறிந் திவ்வழிக்
குறுக வம்மெனக் கூனியைப் போக்கினாள். (238) ( )

(நெஞ்சினொத்)

தொகு
நெஞ்சி னொத்தினி யாளையென் னீர்மையால்
வஞ்சித் தேனென வஞ்சியங் கொம்பனாள்
பஞ்சி மெல்லடிப் பல்கல னார்ப்பச்சென்
றிஞ்சி மாநகர்த் தன்னிட மெய்தினாள். (239) ( )

(தானுந்தன்)

தொகு
தானுந் தன்னுணர் விற்றளர்ந் தாற்றவும்
மானி னோக்கிவ ரும்வழி நோக்கிநின்
றானி யம்பல வாசையிற் செல்லுமே
தேனி யம்புமொர் தேம்பொழிற் பள்ளியே. (330)
வேறு( )

(மட்டவிழ்)

தொகு
மட்டவிழ் கோதை வாளன வுண்கண் மயிலன்னாள்
கட்டழ லெவ்வங் கைம்மிக நீக்கிக் களிகூர
விட்டகல் வாற்றா வேட்கையி னோடும் பொழுதிப்பாற்
பட்டதை யெல்லாம் பல்லவர் கேட்கப் பகர்குற்றேன். (331) ( )

(கூற்றமஞ்)

தொகு
கூற்றம் மஞ்சுங் கொன்னுனை யெஃகின் னிளையானும்
மாற்றம் மஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பிற் சீவக னென்றே பெயரிட்டார். (332) ( )

(மேகம்மீன்ற)

தொகு
மேகம் மீன்ற மின்னனை யாடன் மிளிர்பைம்பூ
ணாகம் மீன்ற வம்முலை யின்பா லமிர்தேந்தப்
போகம் மீன்ற புண்ணிய னெய்த கணையேபோல்
மாகம் மீன்ற மாமதி யன்னான் வளர்கின்றான். (333) ( )

(அம்பொற்)

தொகு
அம்பொற் கொம்பி னாயிழை யைவர் நலனோம்பப்
பைம்பொற் பூமிப் பல்கதிர் முத்தார் சகடம்மும்
செம்பொற் றேரும் வேழமு மூர்ந்து நிதிசிந்தி
நம்பன் செல்லு நாளினு நாளு நலமிக்கே. (334) ( )

(பல்பூம்)

தொகு
பல்பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனிவானத்
தெல்லார் கண்ணு மின்புற வூரும் மதிபோன்றுங்
கொல்லுஞ் சிங்கக் குட்டியும் போன்றிவ் வுலகேத்தச்
செல்லும் மன்னோ சீவகன் றெய்வப் பகைவென்றே. (335) ( )

(மணியும்)

தொகு
மணியும் முத்தும் மாசறு பொன்னும் பவளம்மு
மணியும் பெய்யும் மாரியி னேற்பார்க் கவைநல்கிக்
கணிதம் மில்லாக் கற்பகங் கந்துக் கடனொத்தா
னிணைவே லுண்க ணந்தையு மின்பக் கொடியொத்தாள். (336) ( )

(சாதிப்பைம்)

தொகு
சாதிப் பைம்பொன் றன்னொளி வௌவித் தகைகுன்றா
நீதிச் செல்வம் மேன்மே னீந்தி நிறைவெய்திப்
போதிச் செல்வம் பூண்டவ ரேத்தும் பொலிவின்னா
லாதிக் காலத் தந்தணன் காதன் மகனொத்தான். (337)
( வேறு)

(நனந்தலை)

தொகு
நனந்தலை யுலகின் மிக்க நன்னுதன் மகளிர் தங்கள்
மனந்தளை புரிய நின்ற மதலைமை யாடு கென்றே
பொனங்கொடி யிறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
வனங்கனுக் கவலஞ் செய்யு மண்ணனற் றாயு ரைத்தாள். (338) ( )

(முழவெனத்)

தொகு
முழவெனத் திரண்ட திண்டோண் மூரிவெஞ் சிலையினானு
மழலெனக் கனலும் வாட்க ணவ்வளைத் தோளி னாளும்
மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன் மதலையை மயிலஞ் சாயற்
குழைமுக ஞான மென்னுங் குமரியைப் புணர்க்க லுற்றார். (339) ( )

(அரும்பொனு)

தொகு
அரும்பொனு மணியு முத்துங் காணமுங் குறுணி யாகப்
பரந்தெலாப் பிரப்பும் வைத்துப் பைம்பொன்செய் தவிசி னுச்சி
யிருந்து பொன்னோலை செம்பொ னூசியா லெழுதி யேற்பத்
திருந்துபொற் கண்ணி யாற்குச் செல்வியைச் சேர்த்தி னாரே. (340) ( )

(நாமகணலத்)

தொகு
நாமக ணலத்தை யெல்லா நயந்துடன் பருகி நன்னூ
லேமுத லாய வெல்லாப் படைக்கலத் தொழிலு முற்றிக்
காமனுங் கனிய வைத்த புலங்கரை கண்டு கண்ணார்
பூமகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலக மொத்தான். (341) ( )

(மின்றெளித்)

தொகு
மின்றெளித் தெழுதி யன்ன விளங்குநுண் ணுசுப்பி னல்லார்
பொன்றெளித் தெழுதி யன்ன பூம்புறப் பசலை மூழ்கிக்
குன்றொளித் தொழிய நின்ற குங்குமத் தோளி னாற்குக்
கன்றொளித் தகல வைத்த கறவையிற் கனிந்து நின்றார். (342) ( )

(விலைபகர்ந்)

தொகு
விலைபகர்ந் தல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலைமுகந் திளையர் மார்ப முரிவில ரெழுதி வாழுங்
கலையிகந் தினிய சொல்லார் கங்குலும் பகலு மெல்லாஞ்
சிலையிகந் துயர்ந்த திண்டோட் சீவகற் கரற்றி யாற்றார். (343) ( )

(வான்சுவை)

தொகு
வான்சுவை யமிர்த வெள்ளம் வந்திவட் டொக்க தென்னத்
தான்சுவை கொண்ட தெல்லாந் தணப்பறக் கொடுத்த பின்றைத்
தேன்சுவைத் தரற்றும் பைந்தார்ச் சீவக குமர னென்ற
வூன்சுவைத் தொளிறு?ம் வேலாற் குறுதியொன் றுரைக்க லுற்றான். (344) ( )

(நூனெறி)

தொகு
நூனெறி வகையி னோக்கி நுண்ணிதி னுழைந்து தீமைப்
பானெறி பலவு நீக்கிப் பருதியங் கடவு ளன்ன
கோனெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நானெறி வகையி னின்ற நல்லுயிர்க் கமிர்த மென்றான். (345) ( )

(அறிவினாற்)

தொகு
அறிவினாற் பெரிய நீரா ரருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி யின்ப நிறைகட லகத்து நின்றார்
பொறியெனும் பெயர வைவாய்ப் பொங்கழ லரவின் கண்ணே
வெறிபுலங் கன்றி நின்றார் வேதனைக் கடலு ணின்றார். (346) ( )

(கூற்றுவன்)

தொகு
கூற்றுவன் கொடிய னாகிக் கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து
மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமும்
நோற்றவன் வலையை நீங்கி நுகர்ச்சியி லுலக நோக்கி
யாற்றுறப் போத றேற்றா மளியமோஒ பெரிய மேகாண். (347) ( )

(பேரஞரிடும்பை)

தொகு
பேரஞ ரிடும்பை யெல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கு
மாரமிர் தரிதிற் பெற்றா மதன்பயன் கோட றேற்றா
மோருமைம் பொறியு மோம்பி யுளபகல் கழிந்த பின்றைக்
கூரெறி கவரும் போழ்திற் கூடுமோ குறித்த வெல்லாம். (348) ( )

(தழங்குரன்)

தொகு
தழங்குரன் முரசிற் சாற்றித் தத்துவந் தழுவல் வேண்டிச்
செழுங்களி யாளர் முன்ன ரிருளறச் செப்பி னாலும்
முழங்கழ னரகின் மூழ்கு முயற்சிய ராகி நின்ற
கொழுங்களி யுணர்வி னாரைக் குணவதங் கொளுத்த லாமோ. (349) ( )

(பவழவாய்)

தொகு
பவழவாய்ச் செறுவு தன்னு ணித்திலம் பயில வித்திக்
குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதி ரீன்று பின்னாக்
கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா
வுழவிர்காண் மேயுஞ் சீல வேலியுய்த் திடுமி னென்றான். (350)
தொடர்வது
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375

பார்க்க:

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
[[]]
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400