1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379

சீவகசிந்தாமணிக் காப்பியம்

தொகு

1. நாமகள் இலம்பகம்

தொகு

(கோளியங்)

தொகு
கோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலை யுழவன் கேட்டே |
தாளிய றவங்க டாயாத் தந்தைநீ யாகி யென்னை |
வாளியங் குருவப் பூணோய் படைத்தனை வாழி யென்ன |
மீளியங் களிற னாயான் மெய்ந்நெறி நிற்ப லென்றான். (376) | ( )

(மறுவற)

தொகு
மறுவற மனையி னீங்கி மாதவஞ் செய்வ லென்றாற் |
பிறவற மல்ல பேசார் பேரறி வுடைய நீரார் |
துறவறம் புணர்க வென்றே தோன்றறா டொழுது நின்றான் |
நறவற மலர்ந்த கண்ணி நன்மணி வண்ண னன்னான். (377) | ( )

(கைவரை)

தொகு
கைவரை யன்றி நில்லாக் கடுஞ்சின மடங்க லன்னா |
றெவ்வரைச் செகுக்கு நீதி மனத்தகத் தெழுதிச் செம்பொற் |
பைவிரி யல்கு லாட்கும் படுகட னிதியின் வைகும் |
மைவரை மார்பி னாற்கு மனமுறத் தேற்றி யிட்டான். (378) | ( )

(அழலுறு)

தொகு
அழலுறு வெண்ணெய் போல வகங்குழைந் துருகி யாற்றாள் |
குழலுறு கிளவி சோர்ந்து குமரனைத் தமிய னாக |
நிழலுறு மதிய மன்னாய் நீத்தியோ வெனவு நில்லான் |
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். (379) | ( )


1. நாமகள் இலம்பகம் முற்றிற்று

தொகு
நாமகள் இலம்பகம் மொத்தப் பாடல்கள் 379


பார்க்க:

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
2. கோவிந்தையார் இலம்பகம்