சோழர் வரலாறு
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
[மூன்று பாகங்கள்]
ஆசிரியர் :
டாக்டர். மா. இராசமாணிக்கனார்.
பூரம் பதிப்பகம்
புதிய எண்.2, பழைய எண். 59
ராஜு நாயக்கர் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
நூலின் தலைப்பு | : | சோழர் வரலாறு |
ஆசிரியர் | : | டாக்டர் மா. இராசமாணிக்கனார் |
மறுபதிப்பு | : | 1985, 1999, 2005 |
உரிமை | : | ©பூரம் பதிப்பகம் புதிய எண். 2, பழைய எண் 59, ராஜு நாயக்கர் தெரு, சென்னை - 600 033. |
பதிப்பாளர் | : | பூரம் பதிப்பகம் புதிய எண். 2, பழைய எண் 59, ராஜு நாயக்கர் தெரு, சென்னை - 600 033. |
பக்கங்கள் | : | 352 |
விலை | : | 100/- |
ஒளி அச்சு | : | ஸ்டான்பிக் லேசர் சென்னை - 34 |
அச்சிட்டோர் | : | ஜெய் கணேஷ் ஆப்செட் பிரிண்டர்ஸ் எண். 19 வெங்கடசாமி லேன், சாந்தோம், சென்னை - 600 004 போன் 2493 4535. |
25-1-'47
பசுமலை
To
சென்னை வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள், B.O.L., L.T., M.O.L.,
அன்பார்ந்த ஐயா,
நலம். நானங்கு நாடுவதும் நலமே. தாங்கள் அன்போடனுப்பிய சோழர் வரலாறு - மூன்று பகுதிகளும் வரப்பெற்றேன்; படித்து மகிழ்வுற்றேன். இனிய எளிய நடையில், கனியு மதுர மொழியால், பொன்னி வளநாட்டுப் புகழ்ச் சோழர் பொன்கால வரலாறு தமிழருக்குத் தந்த பெருமை. தங்களதென்பதில் தடையில்லை. நடுநிலையில் நெடு நாளாய்ந்து, பழம் பாடல், இடைக்காலச் சான்றோர் நூல், கல்வெட்டு, செப்பேடுகள் அனைத்தும் துருவி, தற்கால ஆராய்ச்சியாளர் கருத்துகளை அலசி, நேர்மை வழுவாத நன்முடிபுகளைக் கண்டு வெளியிட்ட தமிழ்ச்சரித வரிசையிலே தங்கள் கட்டுரைகள் சிறப்பிடம் பெறுவதில் ஐயமில்லை. தங்கள் குலோத் துங்கன் வரலாறும், பிற உரைகளும் சோழர் வரலாற்றுக்குச் சார்பும் துணையும் தந்து வளம் நிறை பாராட்டுக்குரியது.
இளமையிலே தம் முயற்சியால் நிரம்பிய நூல் பயின்று, தாம் வரம்பறுத்த வரலாறுகள் எழுதி உதவிய அருந்திறனும் நுண் அறிவும் இளம்புலவர் பாராட்டிப் பின்பற்றிப் பயனடைய உதவுமென நம்புகிறேன். நடு வயதை அடையுமுனம், புலமையொடு புகழ் வளரப் பெற்றுள்ள தாம், நெடும் பல்லாண்டினிய தமிழ்த் தொண்டாற்றி, பொருளுரை நூல் பல இயற்றி, அறிவுடையார் அவையிலிடம் அடைந்து சிறந்து உயர்ந்திடுமாறு இறைவன் அருள் கூட்டிடுக. என்றும் தம் நட்பையும் பலனையும் விரும்பும்.
அன்பன்,
இளசைகிழான்
ச. சோமசுந்தர பாரதி
தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப்பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.
இந்த மேன்மை மிக்க நூற்றாண்டுகளின் சரித்திரத்தை விரிவாகத் தமிழில் எழுத வித்துவான் மா.இராசமாணிக்கம் முன் வந்திருப்பது ஒரு நல்ல காரியம். அவர்கள் தம் நூலை நல்ல ஆராய்ச்சி முறையில் எளிய நடையில் யாவர்க்கும் பயன்படக் கூடிய வழியில் எழுதியிருக்கிறார்கள் என்பது சில பக்கங்களைப் படித்தாலே எளிதில் விளங்கும். நல்ல ஆராய்ச்சி நூல்களை அவர்கள் நன்கனம் கற்றறிந்திருப்பதோடு, சுயமாகவும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்கள். ஆயினும் அவர்கள் வெளியிட்டிருக்கும் அபிப்பிரா யங்கள் எல்லாவற்றையும் எல்லோரும் ஒருங்கே அங்கீ கரிப்பார்கள் என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அஃது அவசியமுமில்லை. நம் நாட்டுச் சரித்திரப் பகுதிகள் பலவற்றில் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு இடம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் இம்மாதிரி நூல்கள், அவ்வப்போது கிடைக்கும் ஆய்ந்த தீர்மானங்களை எல்லோரும் எளிதில் அறிந்து கொள்வதற்கு வேண்டிய நல்ல கருவிகளாகும். இந்தச் சோழர் சரித்திரத்தைப் பலர் படித்து நன்மை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
சென்னை யுனிவர்சிடி,
14-3-47 K.A. நீலகண்ட சாஸ்திரி
1. | 9 |
2. | 18 |
3. | 24 |
4. | 33 |
5. | 39 |
6. | 45 |
7. | 53 |
8. | 68 |
9. | 77 |
10. | 86 |
11. | 93 |
12. | 100 |
13. | 107 |
1. | 140 |
2. | 158 |
3. | 163 |
4. | 170 |
5. | 179 |
6. | 211 |
7. | 243 |
1. | 250 |
2. | 277 |
3. | 285 |
4. | 291 |
5. | 295 |
6. | 304 |
7. | 332 |
8. | 345 |