அகநானூறு/11 முதல் 20 முடிய
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
1.களிற்றியானை நிரை
தொகுபாடல்:11 (வானமூர்ந்த)
தொகு- வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
- நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
- இலையில மலர்ந்த முகையில் இலவம்
- கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
- அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, 5
- கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
- எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
- வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
- படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
- மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம் 10
- அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
- நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
- அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
- அழுதல் மேவல வாகிப்
- பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே! 15
பாடல்:12 (யாயேகண்ணினும்)
தொகு- யாயே, கண்ணினும் கடுங் காதலளே
- எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; 'சீறுடி சிவப்ப,
- எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;'
- யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
- இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; 5
- ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
- கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
- விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
- குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
- வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் 10
- புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
- மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
- நல்வரை நாட! நீ வரின்,
- மெல்லியல் ஓரும் தான் வாழலளே 14
பாடல்: 13 (தண்கடற்)
தொகு- தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
- முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
- தெறல் அருமரபின் கடவுட் பேணிக்
- குறவர் தந்த சந்தின் ஆரமும்,
- இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் 5
- திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -
- குழியில் கொண்ட மராஅ யானை
- மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
- வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
- வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்- 10
- பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
- விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,
- கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
- சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
- நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட 15
- மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
- கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,
- அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
- கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
- நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப், 20
- புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
- இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
- வெண்குருகு நரல, வீசும்
- நுண்பல் துவலைய தண்பனி நாளே! 24
பாடல்: 14 (அரக்கத்தன்ன)
தொகு- 'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
- காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
- ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
- மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
- அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத், 5
- திரி மருப்பு இரலை புல்அருந்து உகள,
- முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
- குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்
- பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
- வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற 10
- கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
- மாலையும் உள்ளார் ஆயின், காலை
- யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற
- மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
- செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக் 15
- கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து,
- அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-
- விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
- கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
- கார்மழை முழக்குஇசை கடுக்கும்,
- முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே! 21
பாடல்: 15 (எம்வெங்காமம்)
தொகு- எம்வெங் காமம் இயைவது ஆயின்,
- மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
- கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
- பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
- தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5
- வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
- செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
- அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல-
- தோழி மாரும் யானும் புலம்பச்,
- சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் 10
- பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்
- செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி,
- அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
- துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
- கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி, 15
- வன்கை எண்கின் வயநிரை பரக்கும்-
- இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,
- குன்ற வேயின் திரண்ட என்
- மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே! 19
பாடல்: 16 (நாயுடை)
தொகு- நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
- தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
- மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்
- நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
- யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் 5
- தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே,
- கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
- காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
- பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,
- 'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து 10
- கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
- 'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை?
- நீயும் தாயை இவற்கு?' என யான்தற்
- கரைய, வந்து விரைவனென் கவைஇ,
- களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா, 15
- நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
- பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து
- அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்
- மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே! 19
பாடல்:17 (வளங்கெழு)
தொகு- வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்,
- இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
- 'உயங்கின்று, அன்னை! என்மெய்' என்று அசைஇ,
- மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
- முயங்கினள் வதியும் மன்னே! இனியே, 5
- தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
- நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
- நொதும லாளன் நெஞ்சுஅறப் பெற்றஎன்
- சிறுமுதுக் குறைவி சிலம்புஆர் சீறுடி
- வல்லகொல், செல்லத் தாமே- கல்லென- 10
- ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின்,
- நீர்இல் அத்தத்து ஆர்இடை, மடுத்த,
- கொடுங்கோல் உமணர், பகடுதெழி தெள்விளி
- நெடும்பெருங் குன்றத்து இமிழ்கொள இயம்பும்,
- கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல், 15
- பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
- அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்,
- நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்,
- விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
- நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, 20
- வைகுறு மீனின் தோன்றும்
- மைபடு மாமலை விலங்கிய சுரனே! 22
பாடல்:18 (நீர்நிறங்)
தொகு- நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து
- பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று,
- கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி,
- மராஅ யானை மதம்தப ஒற்றி,
- உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்- 5
- கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
- நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
- ஈங்கும் வருபவோ?- ஓங்கல் வெற்ப!-
- ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்,
- வாழ்குவள் அல்லள், என் தோழி; யாவதும் 10
- ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர்
- நீடுஇன்று ஆக இழுக்குவர், அதனால்,
- உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக்
- கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை,
- பழம்தூங்கு நளிப்பிற் காந்தள்அம் பொதும்பில், 15
- பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை
- வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய்
- ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே. 18
பாடல்:19(அன்றவண்)
தொகு- அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே;வந்துநனி
- வருந்தினை- வாழி, என் நெஞ்சே!- பருந்து இருந்து
- உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை,
- உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
- கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம், 5
- எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று,
- ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
- செல்இனி; சிறக்க நின் உள்ளம்! வல்லே
- மறவல் ஓம்புமதி; எம்மே - நறவின்
- சேயிதழ் அனைய ஆகிக், குவளை 10
- மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
- உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
- பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல்
- வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
- சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை 15
- பூவீழ் கொடியின் புல்லெனப் போகி;
- அடர்செய் ஆய்அகல் சுடர் துணை ஆக,
- இயங்காது வதிந்த நம் காதலி
- உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! 19
பாடல்: 20 (பெருநீர்)
தொகு- பெருநீர் அழுவத்து எந்தை தந்த
- கொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி,
- எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ
- செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
- ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் 5
- தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக்,
- கொண்டல் இடுமணல் குரவை முனையின்
- வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
- மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
- பல்பூங் கானல் அல்கினம் வருதல் 10
- கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்,
- கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
- கடிகொண் டனளே- தோழி:- பெருந்துறை,
- எல்லையும் இரவும் என்னாது கல்லென
- வலவன் ஆய்ந்த வண்பரி,
- நிலவு மணல் கொட்கும்ஓர் தேர் உண்டு எனவே! 16