புறநானூறு/பாடல் 51-60
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
பாடல்: 51 (நீர்மிகிற்)
தொகுபாடியவர்: ஐயூர் முடவனார்.
- பாடப்பட்டோன்
- பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி.
- திணை
- வாகை.
- துறை
- அரசவாகை .
- நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
- மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
- வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
- கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
- தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து (5)
- கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
- கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
- அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
- நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
- செம்புற் றீயல் போல (10)
- ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே.
(பாடபேதம்.) 5 ‘தண்டமிழ்ப்’ 9 ‘நுண்பல்’ 11 ‘கலம்வருவோரே’
'(பாடபேதம்.) ஐயூர் கிழார் பாடியது.
பாடல்: 52
தொகு- அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
- முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
- ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
- தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
- 5வடபுல மன்னர் வாட வடல்குறித்
- தின்னா வெம்போ ரியறேர் வழுதி
- இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
- தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
- மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
10
- வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
- பெருநல் யாணரி னொரீஇ யினியே
- கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
- பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
- நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
- 15 வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
- கான வாரண மீனும்
- காடாகி விளியு நாடுடை யோரே.
(பி - ம்.) 3 ‘ஊன்மிசை’ 12 ‘கலிகெழு மூதூர்க்கந்து’
திணையும் துறையும் அவை.
அவனை மருதனிளநாகனார் (பி - ம். மருதினிள நாகனார்) பாடியது.
பாடல்: 53
தொகு- முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
- கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
- திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
- விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
- 5 களங்கொள் யானைக் கடுமான் பொறைய
- விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
- மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
- கைம்முற் றலநின் புகழே யென்றும்
- ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
- 10 வாழே மென்றலு மரிதே தாழாது
- செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
- வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
- இன்றுள னாயி னன்றும னென்றநின்
- ஆடுகொள் வரிசைக் கொப்பப்
- 15 பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே.
- (பி - ம்.) 7 ‘தெமக்கோவொருநினை’ 14 ‘கேற்பப்’
திணையும் துறையும் அவை.
சேரன் 1மாந்தரஞ்சேரலிரும் பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது.
பாடல்: 54
தொகு- எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
- உடையோர் போல விடையின்று குறுகிச்
- செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
- எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
- 5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
- வான நாண வரையாது சென்றோர்க்
- கானா தீயுங் கவிகை வண்மைக்
- கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
- நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
- 10பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
- மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
- சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
- புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
- வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே.
- (பி - ம்.) 3 - 4 ‘புகுதற்கெம்மன’ 11 ‘மாசூணுடுக்கை’
- திணையும் துறையும் அவை.
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன் பாடியது.
பாடல்: 55
தொகு- ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
- ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
- பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
- கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
- 5 பிறைநுதல் விளங்கு மொருகண் போல
- வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
- கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
- நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
- நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
- 10 அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
- அதனால், நமரெனக் கோல்கோடாது
- பிறரெனக் குணங்கொல்லாது
- ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
- திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
- 15 வானத் தன்ன வண்மையு மூன்றும்
- உடையை யாகி யில்லோர் கையற
- நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
- வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
- நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
- டுவளி தொகுப்ப வீண்டிய
- வடுவா ழெக்கர் மணலினும் பலவே.
- (பி - ம்.) 1 ‘நாண்’ 7 ‘பரிமா’ 8 ‘எனும்’ 13 ‘வெந்தெற’ 16 ‘உடையாயாதலினில்லோர்’, ‘உடையையாதலினி’ 17 ‘நீடுவையொழிய’
திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.
பாடல்: 56
தொகு- ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
- மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
- கடல்வளர் புரிவளை புரையு மேனி
- அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
- 5 மண்ணுறு திருமணி புரையு மேனி
- விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
- மணிமயி லுயரிய மாறா வென்றிப்
- பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
- ஞாலங் காக்குங் கால முன்பிற்
- 10 றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
- கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
- வலியொத் தீயே வாலி யோனைப்
- புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
- முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
- 15ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
- அரியவு முளவோ நினக்கே யதனால்
- இரவலர்க் கருங்கல மருகா தீயா
- யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
- பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
- 20ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
- தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
- அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
- வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
- தண்கதிர் மதியம் போலவும்
- 25நின்று நிலைஇய ருலகமோ டுடனே.
- (பி - ம்.) 5 ‘மண்ணிய’
திணை - அது; துறை - பூவைநிலை.
அவனை மதுரைக்கணக்காயனார்மகனார் நக்கீரனார் (பி - ம். அவர்) பாடியது.
பாடல்: 57
தொகு- வல்லா ராயினும் வல்லுந ராயினும்
- புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
- உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
- நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
- 5நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
- டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
- நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
- மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
- ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
- 10கடிமரந் தடித லோம்புநின்
- நெடுநல் யானைக் கந்தாற் றாவே.
- (பி - ம்.) 11 ‘யானைக்குக் கந்’
திணை-வஞ்சி; துறை-துணைவஞ்சி.
அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
பாடல்: 58
தொகு- நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
- முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
- கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
- தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
- 5நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
- இளைய தாயினுங் கிளையரா வெறியும்
- அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
- செருமாண் பஞ்சவ ரேறே நீயே
- அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
- 10நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
- வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
- இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
- தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
- பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
- 15நீனிற வுருவி னேமி யோனுமென்
- றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
- குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
- இன்னீ ராகலி னினியவு முளவோ
- இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
- 20ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
- உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
- பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
- கையகப் படுவது பொய்யா காதே
- அதனால், நல்ல போலவு நயவ போலவும்
- 25தொல்லோர் சென்ற நெறிய போலவும்
- காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
- ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
- தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
- றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
- 30கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
- நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
- குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே.
- (பி - ம்.) 10. ‘மெளியவரைய’
திணை-பாடாண்டிணை; துறை-உடனிலை.
சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
பாடல்: 59
தொகு- ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்
- றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
- வல்லை மன்ற நீநயந் தளித்தல்
- தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
- 5காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
- ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
- திங்க ளனையை யெம்ம னோர்க்கே.
- (பி - ம்.) 1 ‘வம்பகட்டு மார்பிற்’
திணை-அது; துறை-பூவைநிலை.
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.
பாடல்: 60
தொகு- முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
- செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
- உச்சி நின்ற வுவவுமதி கண்டு
- கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
- 5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
- தொழுதன மல்லமோ பலவே கானற்
- கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
- ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
- உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
- 10 வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
- வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
- மாலை வெண்குடை யொக்குமா லெனவே.
- (பி - ம்.) 2 ‘செய்ம்மீ’ 12 ‘யோர்க்குமா’
திணை-அது; துறை-குடைமங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.