புறநானூறு/பாடல் 191-200
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
191
நரையில ஆகுதல்!
தொகுபாடியவர்: பிசிராந்தையர்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
192
பெரியோர் சிறியோர்!
தொகுபாடியவர்: கணியன் பூங்குன்றனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றனார்.
.
யாது மூரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின்மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)
உலகின் படைப்பை உணர்ந்து, ஒன்றிலிந்து வந்ததை அறிந்து யாதும் ஊரே என்றார்.
உலகின் எல்ல உயிரைகளையும் ,(எல்ல உயிர்களும் ஒரே ஆற்றல் என்பதை)
உணர்ந்து, யாவரும் கேளிர் என்றார்.
நன்மை தீமைகளை உணர்ந்து அவை பிறர் தர வாரா என்றார்.
துன்பத்தை உணர்தலும் பிறகு தணிதலும் அவரவர் உடலுக்குதான் (மனதினால்)
என்பதனையும் அறிவிக்கிறார்.
சாதலை உணர்ந்து அது வேறு பரிமாணத்தில் புகுவது என்றார்.
வாழும் இன்பத்தை இனிது என மகிழாமல் இருப்பதும் இலமே.
முனிவில் இல்லை வாழ்வின்பம் என்பதும் இலமே.
மின்னல்(அருள்ஒளி) கொண்டுள்ள வானம்(மறை ) பெய்யும் மழையை தலைமேல்
(முதன்மையானதாக)கொள்ளாதெனில்,
.
கணத்தகல் (தூலஉடல்) மலைமேலிருந்து,
பெருகி வரும் ஆற்று நீரில் (உயிராகிய நீர்) சிக்கி,
அதன் தடத்திலே போகும் புனையைப் [மரம்] போல,
உயிரா னதுமுன்னர் இட்ட முறைவழியே அகப்பட்டு தன்வழி
செய்யும் (பிறவி வழிப் படும்) என்று
மறைபொருளறி திறன் பெற்றேர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் .
மறையறிந்த பெரியோரை கண்டு வியத்தலும் இலமே.
மறையறியா சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே,
இந்த உலகியல் & வாழ்வியல் உண்மைகளைத் திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய
வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
(பொருண்மொழிக் காஞ்சி)
இந்தத் தெளிவின் பயன் இதுவேயாம்.
மறையறிந்த பெரியோரை கண்டு நாம் வியப்படைவது சமநிலையற்ற மனதின் நிலை..
அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் அவரை அடையாது.
மறையறியா சிறியோரை தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல்
சமநிலையற்ற மனதின் நிலையினும் கீழாம்.
இதனையுரைத்த பேறறிஞர் தன்னுடைய பெயரை குறிப்பிடா காரணம் ,
இந்த உருவும் அதற்க்கான பெயரும் பொய்யென உணர்ந்த்தேயாம்.
எந்த ஒரு உருவாக்கமும், உருவாக்கியவரை விட சற்று குறைவானதாகவே இருக்கும்.
இது ஒரு விதியேயாம்.இதில் மாற்றுகருத்தே இல்லை.
இங்குரைக்கப்பட்டதெல்லாம் படைத்தல் பற்றியதாம்.
ஆதலால் படைக்கப்பட்டதானது,படைப்பைவிட
தாழ்ந்ததாக உணர்ந்த்தால், தன் பெயரை முன்னிலை படுத்தவில்லை.
இங்கு சொல்லப்பட்டதனைத்தும் மெய்மையை பற்றியதாம். விஞ்ஞானமே
அதனாலேயே மற்றவைபற்றி சொல்லப்படவில்லை.
இதனை பொதுவாகவே தொண்மையான நூல்களில் மேலும்
திருக்குறள் எழுதியமுறையிலும் காண்க.
இதன் பொருள் நாமறிந்த தமிழில்
உலக படைப்பை உணர்ந்த ஒருவர்
இவ்வாறுதான் உள் ஒலியை (மொழியை)வெளிபடுத்துவார்,
நீரில் உயிர்கள் நிலத்தில் உயிர்கள் . காற்றில் உயிர்கள்
வானை பூமியை இணைத்துவாழும் உயிர்ளென, (யாதும்)
எல்ல இடமாகியவையிலும் உயிர்கள இருப்பதால் யாதும் ஊரே (உயிர்களுக்கு).
இது மனதை பற்றிய, முழுமையை விளக்க முற்பட்ட பாடலாக அறியப்படுகிறது..
உலகின் முதன் மனோவிஞ்ஞான நூலான பகவத் கீதையில்
கூறப்பட்ட மையகருவை விளக்க ஒரு காவியமே இயற்றப்பட்டது.
ஆனால்,கணியன் பூங்குன்றனார் , மிக எளிமையாக மனோ விஞ்ஞானத்தை
உணர்ந்து கவிக்கின்றார்.எனில் இவரின் பேறிவை எங்ஙனம் எழுதுவது.
யாதும் என்பதிலேயே அனைத்தும் அடக்கப்படுகிறது.
அதாவது தோற்றத்திலுள்ள பூமி முழுதுமாகிறது.
நாம் காணும் உருவங்களணைத்துமே படைப்பேயாகும்.
நீரில் உயிர்கள் நிலத்தில் உயிர்கள் . காற்றில் உயிர்கள்
வானை பூமியை இணைத்துவாழும் உயிர்களென, (யாதும்)
எல்ல இடமாகியவையிலும் உயிர்கள இருப்பதால்
யாதும் ஊரே (உயிர்களுக்கு).
இவற்றை சிந்தித்தால் ஒன்றை சார்ந்து ஒன்று இருப்பது தெளிவோம்.
உயிரில்லா உடல் இல்லை, உருவமில்லை,
அந்த உயிருக்கு எந்த ஊரென்று விளக்குவது.
அதனாலேயே இவ்வாறு முதல் வரியில் கூறுகிறார்.
இவர் தன்னை உயிராகவே, அதுவாக மட்டுமே உணர்ந்ததால்
இந்த இறுதியான வார்த்தைகளை எடுத்துரைக்கிறார்.
இதனை இவ்வாறு கூறினால், (சில அறிவாளர்கள் விரும்பாத)
ஆன்மீகம் பற்றியதாக, விளக்குதாக இருக்கும்.
இதுவும் வாழ்வியல் விஞ்ஞானமே# ஆனால்,
ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் வேறுவேறாக விளங்கிக்கொண்டதால் ,
நாம் பெற்றிறுக்கும், (விளக்கும்) அறிவு அவ்வாறாகத்தான் விளக்கும் .
இதை எதற்காக இவர் செய்தாரோ அதற்கான வகையில் விளக்கம் எழுதாமல்
வேறு வகைபடுத்தினால் எவ்வாறும் இது முழுமை பெறாது.
ஆக இதனை வேறு வகையில் எப்படி விளக்குவது.
ஒளியை, ஒளி என்றல்லாமல், வேறாக எப்படி விளக்குவது.
எல்லா உயிர்களும் இறையல்லாதிடத்திலிருந்தல்லாமல்
வேறு எங்ஙனம் உயிர்க்கும்? அவ்வகையில்
ஒரே இடத்தில் உயிர்த்த உயிர்கள் எங்ஙனம் வேறுபடும்.
அவ்வாறாக நடக்க சாத்தியம் இல்லை
உடல் மட்டும் வளர்க்கும் நமக்கு உயிர்வளர்ப்பு ஆகுமா?
அவ்வாறாக நடக்கவும் சாத்தியம் இல்லை
அவ்வாறெனில் அது ஒரே உயிராய் ஆகுமோ?
அனைத்துயிர்களும் ஒன்றேயாம்.
இதனாலேயே யாவரும் கேளிர் என்றுரைக்கின்றார்.
மனதாலேயே உயிர் அறியபடுமாதலால் இது மனோவிஞ்ஞானமே
உண்மையில் இந்த உலகில் நன்மை தீமை என்று ஏதாவது உண்டா.
அவ்வாறான இரண்டும் இல்லை ,
அதனை வகைபடுத்தினால் அது முரண்பாடு கொண்டதாகவே இருக்கும்
இங்கு நன்மை தீமை என பிரிப்பது மனம் மட்டுமேயாம்.
எந்த மனித செயலும் மனம் சார்ந்ததே
அதனாலேயே இது மனோவிஞ்ஞானமே.
ஒரு மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவனுடய செயல் சார்ந்ததேயாகும்.
நம்முடைய செயல்களை பற்றியே நிலை இருக்கும். இதனை
வள்ளுவப்பெருந்தகை உணர்த்தியதை போல மற்றொரு சான்றில்லை.
ஒருவருடைய செயலை சார்ந்தே வினையாளரின் பயன் அமைவதால் ,
நன்மையும், தீமையும் பிறர்தர வாரா என கவிக்கின்றார்.
இன்பதுன்பமென்பதும் ஒவ்வொறு தனிமனிதருடய மனமொத்ததேயாம்,
அதனாலேயே இது மனோவிஞ்ஞானமே.
துன்பமாக (வருந்துதல்) உணரப்படுவது மெல்ல (வருத்தமற்ற) துன்பமற்றதாக ஆகிறது.
இங்கு வருத்தம் எனக்கூறப்படுவது எவையும் துன்பமல்ல.
பொதுவாக வருத்தம் என்பது உண்மையிலேயே துன்பம் எனில்
அனைவருக்கும் துன்பமாக இருக்கவேண்டும்.
இங்கு வருந்துதல் பின்பு அது அற்றதாக மாறுவது என்பதெலாம் இந்த உடலுக்கு மட்டுமேயாம்.
மனநிலையும் உடல்நிலையும் ஒன்றே என்ற அறிவியலையும் நிழல்போல உணர்த்துகிறார்.
இயற்கை சீற்றங்களை கொள்ளவேண்டாம் அதை பற்றி சிந்தனையே வேண்டாம்
ஏனெனில் அதற்கும் இங்கு கூறப்பட்டதற்கும் தொடர்பே இல்லை .
அதுகூட துன்பமல்ல. மனிதனின் மனநிலையில் அவ்வாறாக இருப்பதில்லை.
இங்கு தனிமனிதனுக்கான இன்ப துன்பம் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது.
மனதாலேயே உயிர் அறியபடுமாதலால் இது மனோவிஞ்ஞானமே.
பகவத்கீதை இதை விளக்கவே முயற்சிக்கிறது.
உயிர் எனபடுவது நம் உணர்நிலை (மனநிலை)எல்லை கடந்த ஒரு தூலமல்லா
பொருளாக இருக்கிறது. இது, தன் முனைப்பால் தான்
தூலமாக புலப்படுகிறது.(வெளிப்படுகிறது)
ஆக இது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு வருவது விளங்கும்.
அப்படி வந்த ஒன்று, வந்த நிலையிலிருந்து
இன்னொறு நிலைக்கு மாறுவதையே மரணம், என கூறப்படுகிறது.
ஆக வந்த நிலையிலிருந்து மீண்டும் வேறுநிலை,
இதனாலேயே சாதல் புகுவது என வரையரையாகிறது.
சாதல் புகுவது ஆவதால் பிறத்தலும் புகுவதேயாம்.
வாழ்தலென்பதும் மனதிறனை பொருத்தேயாகும்
அதனாலேயே இது மனோவிஞ்ஞானமே.
வாழ்தல் இனிது என்பதை உணர வாழ்ந்தேயாக வேண்டும்.(இது நகைச்சுவையல்ல.)
நாம் எதை அறிய விருப்புகிறோமே, அதை அறிய வேண்டுமானால்
நாம் அதுவாக மாறிவிட வேண்டியதுதான்.
ஆகவே நாம் வாழ்வாக மாறினாலே அதை அறியலாம்.
அந்த ஒரேவழியில் மட்டுமே(முழுமையை)அதை அறிய முடியும்.
வாழ்க்கையே திருவிழாவாக வாழ்ந்த ஒரு மனிதர் இருக்கிறார்.
அவர் வாழ்க்கைக்கான பொருளை நமக்கு வழங்கியுள்ளார்.
இதற்கு கிருஷ்ண வாழ்வே சான்றாக்க முடியும்.
வாழ்க்கை என்தற்கான பொருளே அவர் தான்.
அவரைபோல் ஒருவர் இனி வாழ்வாரா என்பதே
கேள்வியாகத்தான் முடியும். இதற்கான விளக்கம் ,
கிருஷ்ண என்ற ஒரு வார்த்தை மட்டுமேயாகும்.
வாழ்க்கை என்பது எந்த வகையிலும் சேர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
ஏனெனில் பலதரப்பட்ட முறைகள் காணமுடிகிறது.
வாழ்வு என்பதனை எந்த வகையில் முறைபடுத்தினும்,
அது அடிமைத்தனமானதையே குறிப்பதாகும்.
சமநிலையுடைய மனதின் நிலைகொண்டவரே வாழ்வர்.
அவரே வாழ்கை என்பதனை அறிந்தவராவார்.
முனிவென்பதும் மன உறுதியொத்ததேயாகும்
அதனாலேயே இது மனோவிஞ்ஞானமே
மன உறுதியில்லா முனிவென்பது ஆகுமோ?
ஒழுங்கு மிக்கதொரு வாழக்கையே முனிவென வரையரக்கப்படுகிறது.
ஒழுங்கு மிக்கதொரு வாழக்கைஎன்பதே மனவுறுதி மிக்கதாகும்.
அதனாலேயே இது மனோவிஞ்ஞானமே.
முனி இன்பமா நமக்கெப்படி தெரியும்? அவர்களுக்கு தான் தெரியும்.
அது துன்பமெனில் அவரெப்படி அதிலிருப்பார் .
மனம் சமநிலை பெற்ற ஒருவரே முனியானவராவதாகும்.
வானமாகிய ஆகாயம் தன்னுள் கொண்ட மின்னலை பொழிவதை போல ,
எங்கும் நிறைந்துள்ள இறையானது, அருள்மழையை நித்தம் பொழிந்த
வண்ணம் இருப்பதாக கூறியுள்ளார்.
அதனை உணராமல் நாம் வாழ்ந்துகொண்டிக்கிறோம்.
அதனை முதன்மையானதாக அறியாது தவறுபவர்கள்,
அதனை உணராதவர்கள் எவரோ அவரானவர்,
கல்போன்ற பரு உடல் கொண்டுள்ள மனிதர்கள் ,
மலைமேலிருந்துவரும் ஆற்றின் வழியில் சிக்கிக்கொண்ட
கல்லை போல, (உயிரானது ஆற்றுநீரை போல் இட்டுச்செல்லும்)
வினை வழிதனுல் பரிதாப நிலைக்குள்ளாவர்.
இதனை எம்மக்கள் அறிந்துள்ளனர்.
அவர்களே ஞானிகளாக போற்றப்படுகிறார்கள்
இதையறிந்த ஞானிகள் எங்களுக்கு தெளிவாக வழங்கியுள்ளனர்.
மறைபொருளறியும் திறன் பெற அனைவரும் முயல வேண்டும்,
அவ்வாறாக, அறிந்த பின் பெரியோரை கண்டு வியத்தல் இலமே,
ஏனெனில் திறன் அனைவருக்கும் சாத்தியமாததாலால்,
இதை அவர்கள் வழங்கியதனால் ,
சிறியோரை அதாவது மறைபொருளறியாதாரை இகழ்தலென்பது
சமமன நிலை யற்றதிலும் கீழானதென வரையறுக்கிறார்.
உதாரணமாக, போலியன சிலரை மறையறிந்த பெரியோர் என வியக்கிறோம்.
ஆனால் உண்மையில் அவரையறிந்து , பின் ஏமாற்றப்படோமென்பதை அறிந்து
வருந்துகிறோம்.
எனவே அவ்வாறு பெரியோரை கண்டு வியத்தல் வேண்டாம், அவ்வாறு வியந்தாலும்,
புகழ்ந்தாலும் அது அவரை சேராது. எனவே அவரை (அவரையறிந்து) வியக்காமல்
அவர்வழி செல்ல வலியுறுத்துகிறார். நாம் அவர்களை பின்பற்றுதலை தவிர்த்து
மற்ற அனைத்து பயனற்ற செயல்களையும் செய்கிறோம்.
இந்த உலகியல் & வாழ்வியல் உண்மைகளைத் திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய
வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
(பொருண்மொழிக் காஞ்சி)
193
ஒக்கல் வாழ்க்கை!
தொகுபாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
செய்தி
தொகுஒக்கலாகிய ஒத்துப்போகும் உறவினரும் நண்பரும் துணை இருந்தால் யார் எந்தத் துன்பம் தந்தாலும் அத்துன்பத்திலிருந்து விடுபடலாம் என்னும் உலகியல் உண்மை ஓர் உவமை வாயிலாக இதில் சொல்லப்படுகிறது. மேளம் தட்டும்போது அதில் உள்ள தோல் அடிபடுவது போல ஒருவன் ஒருமானைக் சேறுபட்ட களர்நிலத்தில் ஓடவைத்துப் பிடிக்க முயல்கிறான். அப்போது அந்த மான் படும் அத்தகைய துன்பம் நேர்ந்தாலும், ஒக்கல் உதவி இருந்தால் தப்பித்துப் பிழைத்துக்கொள்ளலாம்.
அதள் = தோல் பறை
எறிதல் = அடித்தல்
புல்வாய் = புல் மேயும் மான் - காரணப்பொயர்
ஒக்கல் = ஒத்துப்போகும் பண்பினர், உறவினரும் நண்பரும்
தட்குதல் = தளைதல், கட்டிக்கொள்ளுதல், 'தட்டோர் அம்ம இவண் தட்டோரே, தள்ளாதோர் அம்ம இவண் தள்ளாதோரே' - புறநானூறு 18
194
முழவின் பாணி!
தொகு
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
195
எல்லாரும் உவப்பது!
தொகுபாடியவர்: நரிவெரூஉத் தலையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
196
குறுமகள் உள்ளிச் செல்வல்!
தொகுபாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!
197
நல் குரவு உள்ளுதும்!
தொகுபாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.
வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!
198
மறவாது ஈமே!
தொகுபாடியவர்: வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.
``அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,
கடவுள் சான்ற, கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக!`` என்று ஏத்தித்,
திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,
பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,
ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,
நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும்,
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை; யானும்
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.
199
கலிகொள் புள்ளினன்!
தொகுபாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாடாண் துறை: பரிசில் கடா நிலை
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.
200
பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!
தொகு
பாடியவர் கபிலர்
திணை - பாடாண் திணை
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து,
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்,
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை,
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக் கோவே!
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!