தந்தை பெரியார், நீலமணி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தந்தை பெரியார்






அமரர் கே. பி. நீலமணி





லியோ பதிப்பகம்

37, மந்தைவெளி தெரு,
மந்தைவெளி,
சென்னை - 600 028.

அணிந்துரை

இது என்ன வரலாற்று உரைநடையா?-ஐயம் வரும்! தென்றல் தவழ்கிறது. தேனருவி வீழ்கிறது. புரட்சிப் புயல் வீச்சும் உண்டு. சின்னஞ்சிறு தொடர். சிங்காரச் சொல்லமைப்பு - செவிக்கு விருந்தாய் தேனிசை போல் உவமைகள் - உருவகங்கள். எழுத்து மன்னன் "நீலமணி" பிடில் வாசித்துப் பழகியவர் என்பது படிக்கும் போதெல்லாம் பலமுறை உணர்ந்தேன். எழுத்தில் ஏற்றம், எண்ணக் குவியல். சிந்தனைச் சிகரங்கள் - இப்படிப் பலப்பல.

26 ஆண்டுகள் தினமணியின் இணை ஆசிரியரல்லவா? என் நண்பர் கீழாம்பூர் அவர்கள் இப்படி என்னை முன்னுரை எழுதப் பணித்து விட்டாரே! என்ற பொறுமல் என்னுள் இருந்தது உண்மைதான். ஆனால் நூலைப் படிக்கும்போது தான், நூலுக்கு முன்னுரை எழுதச் சொல்லி நமக்கு உயர்வு தந்திருக்கிறார் என்று உணர்ந்தேன்.

குழந்தையும் படிக்கலாம் - புரியும்! இளமையும் ஏற்கும். முதுமை, படித்து முறுவல் பூக்கும்! பெரியாரைப் பற்றிப் பொருள் உள்ள சொல் வளம் புத்தமிழ்தாய் இனிக்கிறது.


   “படரும் சாதிப்படைக்கு மருந்து -
    மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு

  அயலார் எதிர்ப்புக்கு அணையாவிளக்கு"
   தொண்டு ஒன்றே - வாழ்வின் குறிக்கோள் -
   எப்பொருளிலும் மெய்ப்பொருள்கண்டமுனிவன்-(புத்தன்)
   தரங்கெட்டவரின் வசவைப் பொறுத்தவர்
   மனப்பிழை இன்றி நடந்த மனிதர்
   ஆசைகளை அடக்கி உயர்ந்த அறிஞர்
   மயக்கம் இல்லாத நல்லறிவாளர்
   பொது நன்மையினால் கேடு வருகுது என்றால்
   அக்கேட்டைக் கேட்டுப் பெறும் தலைவர்
   ஊக்கம் மிகுதியே வலிமை எனக் கொண்டவர்
   சிங்திப்பார்- தெளிவார்- உறுதியாய்ச்சொல்வார் -
   அதிராத மனிதர் -
   மனம் இனிக்கப் பழகும் மாமேதை -
   சமுதாயப் பண்பின் சரித்திரம்.
   ஒளிக்காத மனமும், உயர்ந்த கடமை உணர்வும்
   ஒரு சேரக் கொண்ட உயர்தமிழர்.


இவரே பெரியார் -

திரு. நீலமணி அவர்கள் - நிலவைக் குழந்தைக்கு காட்டிச் சோறு ஊட்டுவது போல் - பெரியாரைப் பல்வேறு நிலைகளில் காட்டுவார். சிந்தனை அமிழ்தை ஊட்டுவார்.

பெரியாரின் கருத்துக் குவியல்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு பகுதியிலும் - தொடக்கத்தில் பதிவு செய்துள்ள பாங்கு மிகச்சிறப்பாக உள்ளது.

நான் யார்? என்ற வினாவிற்குப் பெரியாரின் கூற்றை வருமொழியாக்கி வரைந்திட்ட தொடரின் தொடக்கம்.

“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தினரை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டைமேற்கொண்டு அதேபணியாய் இருப்பவன்.”

நீலமணி அவர்கள் பெரியாரை அறிமுகஞ் செய்யும் ஒவ்வொரு வரிகளிலும் உண்மை ஒளிர்கிறது.

“தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாள் எல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர்-தந்தை பெரியார்” என்கிறார்.

உடல் வருந்த ஏர்பூட்டி, நிலம் உழுது, களை எடுத்து, நாற்று நட்டு, நீர் பாய்ச்சிக் கதிர் அறுத்து, நெல் நீக்கிய அரிசியை ஆதிதிராவிடன் தீண்டலாம் - ஆனால் அவன் விளைவித்த அரிசி, வெந்து சோறானதும், அந்த ஏழை அன்னியப்பட்டுப் போனான்! அதைத் தாழ்ந்தவன் பார்த்தால் குற்றம்; சோற்றைத் தொட்டால் தீட்டு; எத்துணை பெரிய சோகம்.

ஆலயத்திற்கான அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து உச்சியில் கோபுரக் கலசம் வைக்கிறவரை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு ஆலயத்தின் மணிக்கதவுகள் திறக்க மறுப்பதேன்?

இப்படி அடுக்கடுக்கான கீழ்சாதியினரின் இதயத்தைக் கீறிக் கிழித்து குருதியை ஓடவிடும் மேல் வருணத்தாரின் போக்கை - நீலமணியின் எழுத்து சுட்டெரிக்கிறது.

தந்தை பெரியார் இக்கொடுமைகளைக் களைய வந்த கருப்புச் சூரியன்.

சுயமரியாதை உணர்வூட்டிய - பகுத்தறிவு சோதி. நொந்தார்.உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம்!

இந்திய நாடு துலங்க வந்த காந்தி மகான் போல; நிறவெறியை ஒழிக்க, அடிமை விலங்கை அறுக்க வந்த மார்ட்டின் லூதர்கிங் போல;

சாதி வெறியையும், மூட நம்பிக்கைகளையும், ஆதிக்க வெறியையும் அடியோடு அழிக்க - வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார் என்கிறார் நீலமணி.

தந்தை பெரியார் பிறந்த நாள் தொட்டு வளர்ந்த நாள் வரை வரலாற்றுப் பெட்டகமாக வழங்கி இருக்கிறார். நிகழ்ச்சிகளைத் தொட்டால் தொடர்கதைபோல் வளரும்.

'கண்ணீரும்ம் தண்ணீரும்’ எனும் தலைப்பில் ஒரு செய்தியைத் தருகிறார்.

ஒருநாள் இராமசாமி (தந்தை ஈ.வெ.ரா.) பள்ளியை விட்டார். நகரின் ஒதுக்குப்புறம் ஓலைக் குடிசைகளின் வழி நடந்தார்.

ஒரு வீட்டிலிருந்து அழுகுரல்! "என்னை அடிக்காதேம்மா! நான் அந்த ஐயாகூடப் பேசல்லே, விளையாடப் போகல்லே" என்று சிறுவனின் அலறல்!

குடிசைவாயிலில் நின்றார்- கதவைத் தள்ளினார்- உள் நுழைந்தார்.

அடிபட்டு அழுதவன் தன் நண்பன் காளி. அவன் தாயின் கையில் விறகுச் சுள்ளி - அதனால் அவள் விளாசிக் கொண்டிருந்தாள்.

இராமசாமி குறுக்கே புகுந்தார். தாயின் பிடியிலிருந்து காளியை விடுவித்தார்.

பெரிய இடத்துப்பிள்ளை போல் தோற்றம். இராமசாமியின் செய்கையால் காளியின் தாயார் பயந்து நடுங்கினாள்.

விறகுக்கட்டையை வீசினாள்-மகனைப் பார்த்து யார் இவர்? என்பது போல் விழியால் விசாரித்தாள்.

தன் நண்பன் இவ்வாறு வருவான் என எதிர்பாராத பிரமிப்போடு, காளி-தன்னுள் முகிழ்த்த மகிழ்ச்சியோடு “இவருதாம்மா -என்னோட சினேகிதரு-நம்ம அப்பாரு இவங்க பண்ணையிலேதாம்மா வேலை செய்யறாரு. சின்ன எசமான் ரொம்ப நல்லவரு அம்மா” என்கிறான். தாய் பதறிப் போனாள். “ஐயோ பெரிய நாயக்கரய்யா வீட்டுப் பிள்ளையா நீங்க? சின்ன எசமான்! நீங்க இந்தத் தெருவுக்குள்ளாறெ வரலாமா? என் மவன்கூடச் சேரலாமா?” என்று பயந்தபடி பதறினாள்.

“இதிலே என்னதப்பு? காளி என்னோட சினேகிதன். என்னோட பழகினதுக்கு இப்படி அடிக்கிறீங்க - அவன் மேல என்னதப்பு?” என்றார் இராமசாமி.

“நீங்க இங்கெல்லாம் வரக்கூடாது - என் புள்ள கிட்ட பழகக் கடாது. பெரிய எசமானுக்குத் தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாரு - நாங்க கீழ்சாதி” என்றாள்.

“நீங்க எல்லாம் கீழ்சாதி என்று யார் சொன்னாங்க? அதெல்லாம் சுத்தப் பொய் நம்பாதீங்க” என்றார் இராமசாமி.

“எசமான் அதை இந்த ஊரு உலகம் சொல்லுது. காலகாலமாய் தீண்டப்படாதவன்னு வாழற எங்கப் பொறப்பைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? வாதம் பேசினால் நாங்க வாழ முடியாது. சீக்கிரமா இங்கிருந்து போங்க! யாராவது பார்த்துட்டா - காளியோட அப்பாவுக்குத் தான் கஷ்டம் வரும்” என்று பயத்தால் உடல் நடுங்கக் கூறினாள் காளியின் தாய்.

அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்று நினைத்தார் இராமசாமி.

“சரி ரொம்ப தாகம்; கொஞ்சம் தண்ணி கொடுங்க!” என்றார். “தண்ணியா கேக்கிறீங்க” என்ற காளியின் தாயாருக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“சின்ன எசமான்,உங்களுக்குத் தண்ணிகூடக் கொடுக்க முடியாத பாவிங்க நாங்க” என்றாள். “நீங்க என்கையால தண்ணி வாங்கிக் குடிச்சசேதி தெரிஞ்சா - எங்க குடிசை மட்டுமல்ல; இந்தத் தெருவையே கொளுத்திருவாங்க. உங்க தயவிலே வாழ விடுங்க. என் மகன் கூடப் பேசாதீங்க - சேராதீங்க! அவனை விட்டுவிடுங்க!” என்ற காளியின் தாய் கையெடுத்துக்கும்பிட்டாள்.

இராமசாமி குடிசையை சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரு மூலையில் தண்ணீர் பானை மூடியிருந்தது. அதன் மீது அலுமினியக்குவளை-அந்தக்குவளையால் தாகம் தீரத் தண்ணீரை மொண்டு குடித்தார்.

இந்தக் காட்சியைப் பயந்து நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தனர் காளியும், காளியின்தாயும். குடிசையை விட்டு வெளியேறி நடந்தார்.

கீழ்சாதியினரின் முழு உழைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு அவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரைகுத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் சாதியினரிடம் அவர்களுக்குள்ள பயமே இதற்குக் காரணம் என்று எண்ணிய இராமசாமியின் நெஞ்சு துடித்தது" என்று எழுதும் நீலமணியின் வரிகளால் கண்கள் பனிக்க மேலே படிக்க விரிகிறது விழிகள்.

இப்படித் தந்தை பெரியாரின் வரலாற்றை வடித்துத் தரும் நீலமணியின் எழுத்துக்கு நிகர் வேறெதுவுமில்லை.

"செந்தாமரைப் பூவின் அழகையும், மணத்தையும் மனிதன் நேசிக்கிறான். அந்தப் பூவும் அவனுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அது பிறந்த சேற்றையும் சகதியையும் கேவலமாக வெறுக்கிறான், அசிங்கமாகக் கருதுகிறான்" இந்த உவமையைக் காட்டி உள்ளங்கொதித்த தந்தை பெரியாரைப் போல் இதயங்கலங்குகிறார் நீலமணி.

காளியின் வீட்டு நிகழ்வோடு வேறு ஒரு வீட்டின் நிகழ்ச்சியைக் காட்டுகிறார்.

தன் ஆசிரியர் வீடு இருக்கும் தெருவில் நுழைந்தார் இராமசாமி - தாகம் எடுத்தது. ஆசிரியர் வீட்டை அடைந்தார், அருந்த நீர் கேட்டார் - ஆசிரியர் மகள் நீர் கொணர்ந்தாள்; குவளையில் நீர் ஊற்றினாள் - அதை வாங்க நீட்டினார் கையை, கையில் தராது தரையில் வைத்தாள். இராமசாமி குடிக்கத் துவங்கும்போது "எச்சில் பண்ணாமெத் தூக்கிக் குடிங்க" என்றாள், - இராமசாமி அப்படியே குடித்தார் - குவளையைக் கீழே வைத்தார். வைத்த குவளையின்மீது இரண்டு முறை நீரை ஊற்றிக் கழுவி, சுத்தமானதாக எண்ணிய பிறகே உள்ளே எடுத்துச் சென்றாள். ஆசிரியரின் மனைவி இதை யெல்லாம் அருகில் இருந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இராமசாமி அப்படியே குன்றிப் போனார்.

ஆசிரியர் வைதீகர் - தேசிகர் குலத்தைச் சேர்ந்த பிள்ளைமார். அவர்கள் மற்றவர்களைவிடத் தங்கள் சாதியே உயர்வு என எண்ணுபவர்.

"இப்போது - காளியின் வீட்டில் நீர் அருந்தியதே மகிழ்ச்சி ஊட்டுவது போல் தோன்றியது" என்று இந்நிகழ்ச்சியை வரைகிறார் நீலமணி. பெரியாரின் உள்ளம் பேருள்ளம். அது தீண்டாமையை ஒழிக்கத் திரண்டு எழுந்த தீக் காற்று என்று கூறாது கூறும் நீலமணி அவர்களின் எழுத்து.

சிந்தனை அறிவால் சிறகடிக்கும் பறவையாகத் திகழ்ந்த தந்தை பெரியாரின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் பகுத்தறிவும் - பண்பும் மிளிர்வதைக் காட்டுகிறார் நீலமணி.

மணவாழ்க்கையில் இராமசாமிக்கு வாழ்க்கைத் துணைநலமாக வந்த நாகம்மை - கற்பனையில் எண்ணி உவக்கும் வள்ளுவரின் வாசுகியாக வாழ்ந்ததை மிகச் சிறப்பாக எழுதுகிறார்.

ஒவ்வொன்றையும் சுட்டினால் நூலுள் நுழையும் யாவர்க்கும் - நம்பியின் ஆக்கிரமிப்பு அதிகம் என்று தோன்றும்.

பொது வாழ்க்கையின் புனிதமாகத் திகழ்ந்தார் பெரியார் இதை விரிக்கும் விதம் - மிகச்சிறப்புடையது.

மொத்தத்தில் ஏழையின் ஏற்றத்திற்குச்செய்யும் தொண்டு! கீழ் சாதியினரின் கீழ்மையை ஒழிக்க

அவர் போராடிய போராட்டம்!

குடும்ப வாழ்க்கையிலும் இயக்க வாழ்க்கையே

மேலானது என எண்ணிய பெரியாரின் நெஞ்சு உரம்.

சிறைப்பறவையாய் சிறகடித்த செயல்.

பொது வாழ்க்கைக்காக தன் சொத்தை

தென்னைமரத் தோட்டத்தைக் கள் அரக்கனை ஒழிக்க அழிப்பதில் அவர் காட்டிய ஆர்வம்!

இப்படி ஒவ்வொன்றாக எழுதினால் - முற்றுப் பெறாத தொடராக அணிந்துரை வளரும்.

சுயமரியாதைச் சுடராய்ப் பெரியார் வலம் வந்த நாட்களிலும்; -இளம் வயதில் தன் மீது காதல் கொண்டு வாழ்ந்த நாட்களிலும்; - தன்னோடு இணைந்து பணியாற்றி இரண்டறக் கலந்த தன் துணைவி, உடல் நலங்குன்றிக் கிடந்தபோது; - அருகில் இருந்து அரவணைத்தாரில்லை. திருப்பத்துார் கூட்டத்திற்குப் பெரியார் போய்விட்டார்.

மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - 'கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும்போது - நம் கண்களில் அருவி பாய்கிறது.

பொது வாழ்க்கையில் மூழ்கி நின்ற காந்தி அண்ணல் கஸ்தூரிபாயின் உயிரற்ற உடலைக்கண்டு குமுறிக்குமுறி அழுதாராம்.

காந்தியைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியார் ஈ.வே.ரா. - பொது வாழ்க்கைக்காக ஈரநெஞ்சைக் கல் நெஞ்சாக மாற்றிக் கொண்ட கதையை நீலமணியின் எழுத்து நமக்கு நேர் படக்காட்டும் விதம் அருமை - அற்புதம் - அழகு!

மொத்தத்தில் இது ஒரு வரலாற்றுப் பெட்டகம் - தமிழரின் அடையாளமாகத் திகழும் குறள் நூலைப் போல் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும்.

புலவர் அறிவுடைநம்பி

(மேனாள் சட்டவை மேலவை உறுப்பினர்)



அம்புஜம் இல்லம்
A1 பிளாக் பழைய எண் 9213,
புது எண் - 15
9வது மெயின் ரோடு,
அண்ணாநகர், சென்னை - 600 040.

நன்றியுரை

னது கணவர் திரு. கே.பி.நீலமணி அவர்கள் எழுதிய "தந்தை பெரியார்" என்னும் வாழ்க்கை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியை, அவர் அமரராகி ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘லியோ பதிப்பகம்’ மூலம் நூலாக வெளியிடுகிறேன்.

இந்த நூல் வெளியாவதற்குச் சிறந்த ஆலோசகராகவும், திரு. புலவர் அறிவுடைநம்பி அவர்கள் மூலம் அணிந்துரை எழுதி வாங்கி அளித்த அன்புள்ளம் கொண்ட, கலைமகள் பொறுப்பாசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கணவர் எழுதிய, ‘தந்தைப் பெரியார்’ என்ற வரலாற்று நூலுக்கு அணிந்துரை மூலம் அவருக்குப் பெரும் புகழாரம் சூட்டி பெருமையுடன் எழுதிய, திரு. புலவர் அறிவுடை நம்பி அவர்களுக்கு என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறுமை நிலையில் இருக்கும் எனக்கு இந்த நூல் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்து உதவி செய்த, பத்திரிகையாளரும் சிறந்த எழுத்தாளருமான திரு. திலீப்குமார் - அவர் மனைவி திருமதி அம்பிகா திலீப்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை சிறந்த முறையில் அச்சிட்டுத் தயாரித்து அளித்த திரு. ஆர்.வெங்கடாசலத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

ஜானகி நீலமணி
லியோ பதிப்பகம்

காணிக்கை


இந்நூலை காலம் சென்ற

என் தாய், தந்தையான

திரு. C.A.சுப்ரமணியம்

திருமதி, ருக்மணி சுப்பிரமணியம்

அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்



திருமதி. ஜானகி நீலமணி

லியோ பதிப்பகம்

37, மந்தைவெளி தெரு,

மந்தைவெளி, சென்னை - 600028.


பொருளடக்கம்
1. 19
2. 25
3. 27
4. 32
5. 37
6. 44
7. 50
8. 55
9. 59
10. 67
11. 72
12. 75
13. 79
14. 82
15. 86
16. 90
17. 94
18. 97
19. 101
20. 105
21. 108
22. 111
23. 115
24. 118
25. 121
26. 123
27. 127
28. 131
29. 135
30. 138
31. 142
32. 146
33. 148
34. 152
35. 154
36. 157
37. 160
38. 164
39. 169

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தை_பெரியார்,_நீலமணி&oldid=1519958" இலிருந்து மீள்விக்கப்பட்டது