திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/004.ஆன்மராக மாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫4. அனுராக மாலை
தொகுஇலக்கணம்:-
ஐம்புலன்களும் ஒரே இடத்து இன்பம் துய்ப்பதற்கான ஏதுவாம் கூடுதல் மகிழ்ச்சியைத் தலைவி ஒருத்தியிடம் தான் நுகர்வதாகக் கனவுகண்ட ஆடவன் ஒருவன் அக்கூடுதலால் பெற்ற இன்ப உணர்வைத் தன் தோழற்குக் கூறுவதாகப் பொருளமைத்து நேரிசைக் கலிவெண்பாவாகப் பாடுவது அனுராக மாலை.
கனவின் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த்து இனிதின் உணர்ந்ததை இன்னுயிர்ப் பாங்கற்கு நனவின் உரைத்தல் அநுராக மாலை - இலக்கணவிளக்கம் 864
தலைவனோ மங்கையைக் கனவினிற் கண்டுமயல் தருமவட் கினிமை யுறவே காவின் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கனைக் கருதியே நேரசை யெனும் கலிவெள்ளை யாற்கூற லநுராக மாலையாய்க் கவிஞர்களு ரைப்பராகளே - பிரபந்த தீபிகை 9
அநுராக மாலை வரைந்திடில் தலைவன் கனவில் ஒருத்தியைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து இன்புறப் புணர்ந்ததை இன்னுயிர்ப் பாங்கனுக்கு உரைத்ததா நேரிசைக் கலிவெள்ளை உரைத்தலே - பிரபந்த தீபம் 4
மேலே குறிப்பிட்ட சிற்றிலக்கிய இலக்கணம் சிற்றின்ப உணர்வைக் கூறுமாறு அமைந்துள்ளது.
ஆயின் தெய்வீக நெறியில் சிந்திக்குமாற்றான் பரமாத்ம சொரூபராகிய இறைவர் ஒருவரே ஆண். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவரும் பெண்பாலரேயாவர். இதனைப் பக்தி இலக்கியங்களில் கண்ணுறலாகும். என்னுயிர்க்குயிராகிய பரந்தாமர் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களைத் தரிசித்து அவர்கள் திருவாய் மொழியமுதத்தைச் செவிவாயாக நெஞ்சுகளனாகக் கேட்டு உபதேசமுகத்தான் மெய்ம்மை உணர்வு கைவரப் பெற்ற பேரின்ப மகிழ்வை, இளம் கலைமாது தன் ஆருயிர்த் தோழியருடன் கூறிக் கொள்வதாக இச்சிறுமாலை அமைந்துள்ளது.
ஆன்மராக மாலை
காப்பு
நேரிசை வெண்பா
மனுமகனெம் மெய்வழிதெய் வத்தாள்கள் வாழ்த்தி
அனுராக மாலைதனைப் பாட - இனிதாவல்
கொண்டேன் தரிசனமும் கண்டேன் திருப்புகழை
விண்டேன் மலர்ப்பதமே காப்பு
நூல்
நேரிசைக் கலிவெண்பா
வாராய்என் தோழி! வளர்கயிலை வாசரெனும்
சீராளர் ஈந்தசுகம் செப்புதற்கு - ஆராலும்
ஆகா தளவிடவும் போகாது அன்னவர்பால்
மாகாதல் கொண்டேன் மலர்க்கொடிகேள்! - நீகாதல்
கொண்டால்தான் அந்த நிலைத்தசுகம் தானுணர்வாய் (5)
விண்டுரைக்க சற்றே விழைந்தேனால் - எண்டிசையும்
கண்டறியா ஏந்தல் இணையில்லாப் பேரழகர்
கண்டற்றே உள்ளம் கவர்ந்தார்காண் - பண்டு
பழுத்தமறை ஆகமங்கள் வேதாந்தம் யாவும்
வழுத்துதுகாண் என்னவரின் மாட்சி - முழுமுதல்வர் (10)
ஊறல் மலைச்சாரல் உத்யோவ னக்கானில்
மாறில்லாச் சாலை மணிமன்றில் - கூறரிய
அன்பனந்தர் சூழ்சபையில் ஆர்வமிக மாலையிட்டார்
இன்பமுடன் எல்லோரும் வாழ்த்தினரே - தென்பாய்த்
தனியே அழைத்தேகித் தாழ்குரலில் மந்த்ரம் (15)
இனிதாக ஓதினார் இன்பம் - நனியடைந்தேன்
ஆலால சுந்தரர்என் அன்பகத்தார் தோதாக
நூலேணி போட்டு நனியேற்றி - கோலமிகு
பூவுலகம் தாட்டியெனைப் பொன்னுலகில் வாழ்ந்திடும்
தேவகன்னி நீஎனவே தேற்றினார் - மேவியவோர் (20)
வெட்டாத சக்கரத்தால் மிக்கமைந்த வாகனத்தால்
மட்டில்பே ரின்பவுல கேற்றிவைத்தார் - இட்டமுடன்
வைகுண்டம் கைலாயம் வான்மெகராஜ் மற்றாங்கே
மெய்குண்ட மாம்பர மண்டலமென் றையரவர்
எல்லாமே ஓரிடத்தின் இன்புறுநா மம்என்று (25)
வல்லாளர் வான்பதியைக் காட்டினார் - நல்லார்
ஒருமெய்ப் பொருளை உவந்தெனக்குக் காட்டி
அருளால் இருமலர்த்தாள் ஏற்றி - திருவாரும்
முச்சுடரில் கூட்டிமிகு நாற்கரங்கள் நல்கியே
தச்சில்லா வண்டியினில் ஏற்றுவித்து - மச்சின்மேல் (30)
ஐவண்ண நாதரவர் ஆறுபுரிக் கோட்டையினில்
செய்வண்ண ஏழ்நிலைமா டத்துள்ளே - தையலெனைச்
சென்றேறு என்றினிது எட்டாத மேனிலையில்
நன்றேறு என்று நவின்றார்கள் - ஒன்றிநின்று
ஒன்பான்வா யில்அடைத்து இன்பால்பத் தென்றுமே (35)
அன்பாலே ஆதரித்தார் ஆண்டகைதான் - தென்போங்கக்
காணாத காட்சியெலாம் காட்டுவித்து இக்காலை
தோணாத மெய்யுணர்வைத் தோற்றுவித்து - பூணாரம்
போலும் அருளணியர் பூணுவித்தார் வானகத்தார்
சீலம் மிகுந்த திருவுடையார் - ஞாலமெலாம் (40)
உய்ய வருநாதர் மெய்ம்மை தருதாதை
துய்ய நிறைமொழிகள் கேட்பித்து - வெய்ய
மறலிதனை வென்று அறநெறியில் நின்று
துறக்கமதில் ஏற்றுவித்தார் நன்று - அறவாழி
மூச்சடங்கும் மெய்ப்பதிக்குள் மேவியிரு என்றுரைத்து (45)
பேச்சடங்கிப் பேரின்பத் துள்ஆழ்க - ஆச்சென்றார்
என்னை யறியாமல் ஏகினேன் - அங்கிருந்து
தன்னை உணரென்றார் தானுணர்ந்தேன் - முன்னைப்
பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் தானே
முழுமுதலு மாய்நின்றார் கண்டு - எழுமைக்கும் (50)
ஏமாப் பருளும் என்சாமி - கோலத்தை
தாமுரைக்க யாரே தகையுடையார் - சேமமிக
அன்றுதரி சித்தார் அருச்சுனரும் ஆண்டவரால்
இன்றுதரி சித்தார்கள் ஏரனந்தர் - மன்றாடும்
எம்மிதயம் தன்னுள்ளே இன்பநடம் செய்கின்றார் (55)
இம்மை மறுமை இருமைக்கும் - செம்மை
அறஞ்செய்யும் ஆண்டவரின் ஆர்புகழைப் பாட
திறமெளியாள் பெற்றிலளே சிந்தை - நிறைந்திலங்கும்
ஆசைவெட் கம்மறியா தென்பார்கள் அஃதுண்மை
நேசத்தால் வந்தவினை நீடுலகில் வாச (60)
மலர்மேனி மாதவத்தார் மங்கையெனை யாரும்
இலாதோர் இடத்திற் கழைத்து - பலர்போற்றும்
வீடுபேற் றின்பம் விளைவித்தார் அவ்வியல்காண்
பாடு புரியப் பயிற்றினார் - ஈடிலதாம்
மூச்சு லயமாகும் மென்மைதனைக் காட்டிப்பின் (65)
பேச்சற்று நிற்கும் பெருநிலையும் - வாச்சுதென்றார்
கற்பக மாளிகைக்குள் கொண்டேகி அவ்விடத்தே
பொற்புகவே போய்ப்படியும் பண்பாடும் - நற்பதத்தைக்
காட்டி எனைக்கலந்தார் கண்டதுவும் விண்டமுதம்
ஊட்டி வளர்த்த உயர்திருவும் - தேட்டிலுயர் (70)
செல்வம் வழங்கியதும் துன்பமறக் காத்தினிது
பல்வகையா லும்வரங்கள் பாலித்த - நல்விதமும்
எண்ணி இதயம் நெகிழ்கின்றேன் ஏந்திழைக்கு
வண்ணஎழிற் காட்சி வழங்கினர்காண் - எண்ணரிய
மெய்யுணர்வு மிக்களிக்கும் வேதாந்தம் கையருளி (75)
உய்யவென ஓதுவித்தின் பம்தந்தார் - வையகத்தில்
தொட்டாலும் கைமணக்கும் தோத்தரித்தால் வாய்மணக்கும்
அட்டியின்றி எண்ணில் அகம்களிக்கும் - மட்டில்லா
வான்புகழைப் பாடிடவே வாய்தந்தார் - கேட்டற்றே
தேன்பொழியும் வாக்கியம்கேள் காதளித்தார் - மான்மியர்தாம் (80)
சீர்வரங்கள் ஏந்தக் கரமளித்தார் - ஆலயத்தை
ஆர்ந்து வலம்வரவும் காலளித்தார் - பூரணர்தாம்
கூர்ந்துமிகச் சிந்திக்க நெஞ்சளித்தார் - அன்பொழுக
சேர்ந்து மகிழ்ந்திருக்கச் சீரனந்தர் - நேர்ந்திருப்பார்
ஒன்றும் குறைவைக்க வில்லைஉத் யோவனர்தாம் (85)
என்றும் நிறையீயும் ஏந்தலவர் - குன்றா
வரந்தரும் வானரசர் மாட்சிமையை எண்ணில்
உரம்பெறு மன்றோ உளந்தான் - தரமோங்கும்
உண்டளவே நாவுணர்வு கேட்டளவே காதுணர்வு
கண்டளவே காட்சி கனிந்தறியும் - அண்டியங்கு (90)
உற்றளவே தேகம் உணரும் - நுகர்ந்தமட்டே
எற்றியிங்கு நாசி இனிதுணரும் - சிற்றின்பம்
ஐம்புலனால் அம்புவியோர் ஆர்ந்து மயங்கிடுமால்
எம்பெருமான் ஏரார் திருவருளால் - செம்பொருள்பெற்(று)
ஊனக்கண் ணாற்காண ஒண்ணாத காட்சிகளை (95)
ஞானக்கண் ணாற்காணும் நற்றிறமும் - வானோர்
அகச்செவிகொண் டம்பலத்தே ஆடும் சிலம்பின்
உகப்புடைய இன்னிசைகள் கேட்கும் - சகத்தோரின்
நாசி யடங்கி நலம்கொழிக்கும் வேதாந்தம்
வாசிக்க வாய்மணக்கும் மாதவரை - நேசிக்க (100)
பேரின்ப மெய்ச்சுகமும் பெற்றிடுமால் பூதலத்தே
சீரோங்கு மெய்ம்மைத் திறம்தரலால் - பார்மிசையே
கண்டுகேட் டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடிபால் உண்டென்பார் அஃதிங்கண் - மண்டுபுகழ்
வானவரைச் சிந்தித்து வாய்மொழியின் நற்செய்தி (105)
யானுரைக்கும் கற்பனையன்(று) ஆயிழையீர் - வானரசர்
தானருளும் ஞானபதம் தேனமரும் வானமுதம்
தானுகர்வார் கோனெனவே சொல். (108)