திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/057.அறப்போர் மாலை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.




✫ 57. தும்பை மாலை

தொகு

இலக்கணம்:-

இருபெரும் வேந்தர் ஒரு பெருங்களத்தில் எதிர்எதிர்நின்று பொருதுவது தும்பையாம் என்க. தும்பைப் பூச்சூடிச் சென்று மாற்று வேந்தனைப் பொருதலால் இஃது தும்பைத் திணை எனலாயிற்று.

தும்பை வேய்ந் தொனாரொடு சூழ்ந்து பொருவது
சொல்வது தும்பை மாலை யாகும்
- முத்து வீரியம் 1077
பொருது மாற்றலரொடு தும்பைமாலிகை வேய்ந்து
பொருது வதுதும்பை மாலை
- பிரபந்த தீபிகை  - 17
தும்பை மாலையே தும்பைத் தார்சூடிப்
போற்றாரொடு பொருவது உரைத்தலே
- பிரபந்ததீபம் 48

புறப்பகைப்போர் என்பது ஒரு தனிமனிதன் அதாவது அரசனின் வீண் ஆசை நிறைவுறுதற்காய் வாழும் பருவத்தில் உள்ள இளைஞர்களைக் களபலிகொடுத்தல் என்னும் பேதைமை யாகும். அகப்பகையாகிய காமக்குரோதாதிகள் உயிர் வாழ்வின் உன்னதத்தைச் சிதைக்கும் தன்மையது. எனவே எம்மை ஆண்டு கொண்ட குருதேவதேவேசர் அகப்பகை வெல்லும் அற்புத ஆற்றல் மிக்கார். அவர்கள் கலிப்பகை வெல்லும் கர்த்தாதிகர்த்தர் அவர்கள் புகழை விதந்தோது முகத்தான் இயற்றப் பெற்றது இப்பனுவல்.

அறப்போர் மாலை

காப்பு

கலிவிருத்தம்

பைம்பொன் மேனியர் பொன்னரங்கை யராம்
உம்பர் பாதம் உவந்து பணிந்துமே
வெம்போர் செய்துமெய் வெற்றிகொண் டார்காண்மின்
தும்பை மாலையாய் பாடியிஃ தோதுவாம்

நூல்

ஊழி காலத் துலகு புரந்திடும்
ஆழி வாழிறை அத்தன் யுகோதயம்
வாழும் வையக மாந்தர்கள் உய்யவே
சூழும் போர்த்தும்பை மாலை யணிந்துமே (1)

எங்கு நோக்கினும் இன்னல் நிறைந்துள
நங்கு லத்தினை ஆண்டருள் நாயகர்
துங்க மாமணிச் செல்வ வரோதயர்
இங்கெ ழுந்து இனி(து)அறப் போர்செயும் (2)

மனம்

மனதி னால்செயும் மாபெரும் பாதகம்
தனத ருட்சீர் தெய்வ தயவினால்
அனந்த ராதியர் அற்புத மாகவே
தினந்தி னம்அதைச் சேதித்து ஆளுமே (3)

காமம்

காமம் என்னும் கடும்மத யானையை
சேம நன்னிதிச் செல்வர் மெய்மாதவர்
நேம மாயறி வங்குச பாசத்தால்
தீமை செய்யாத் தரத்தில் அடக்கினார் (4)

கோபம்

கோப மென்னும் குதிரைப் படைதனை
பூபதி எங்கள் பொன்னரங் கையர்தம்
தீப சாந்தமெ னும்படை கொண்டுமே
மாபதி இங்ஙண் வென்று அடக்கினார்: (5)

குரோதம்

குரோதம் என்னும் கொடிய அரக்கரை
விரோதம் மாற்றியே மெய்ம்மை மொழிக்கரம்
வரோத யர்விட வாடி யழிந்தது
பராப ரர்வெற்றிப் பாங்குபெற் றோங்கினார் (6)

மோகம்

மோக மென்னும் முனைந்து வரும்படை
சோகம் செய்திடா தேகரு ணைவிழித்
தாகம் தீர்த்த தனிப்பெரும் வான்கடல்
ஆகும் நோக்கினால் வென்று அழித்திடும் (7)

மதம்

மதமெனும் கொடு வேழம்சீ றிவர
இதமகி தம்கொடு எங்கள் மெய்யாண்டவர்
விதம்பல வெனின்மெய்ம் மதம் ஒன்றெனும்
நிதம்பு தியர்நி ரூபித்து வெல்லுமே (8)

மாற்சரியம்

பாற்கடல் மிசைப் பள்ளிகொள் எம்பிரான்
மாற்சரி யமெனு வல்ல கொடும்படை
வேற்க ரத்தால் விளங்கும் படைகொடு
நாற்கா லும்பிட றிபட ஓட்டுமே (9)

வஞ்சகம்

கஞ்சமேனியர் கார்க்கும் தீ கையினர்
வஞ்சக மெனும் வீண அரக்கனை
நெஞ்சம் தூயதாம் ஆயிதம் கொண்டுமே
அஞ்சி யோட அதட்டி வெருட்டிடும் (10)

புலை

புலையெ னும்பிணம் தின்னும் கொடுமைதான்
வலைவி ரித்திந்த மக்கள் மயக்குற
நலமி லங்கு நம் நாயகர் நோக்குற
அலைவ றுத்தது அக்குணம் வீய்ந்ததே (11)

ஆணவம்

யான்எ னதெனும் ஆணவம் ஒன்றினால்
வான்கு ணமெனும் மாட்சி யொழிந்தது
தேன்க மழ்திரு வாயினர் ஆக்ஞையால்
நான்ம டிந்தது ஞானியென் றாயது (12)

கன்மம்

கன்ம மென்னும் கடும்படை வந்தது
உன்மத் தம்மாய் உலகைத் தகித்தது
பொன்ம னத்தர் பெருந்திரு நோக்கினால்
கன்மம் மாய்ந்து கனிவுமிக் கோங்கிற்று (13)

மாயை

மாயை வந்து மயக்குறத் தாக்கிட
தூயமென்பளிங் கார்இத யத்தினர்
நேய நன்மறை நற்றிரு வாக்கினால்
தாயெ னப்பரி மாற்றமும் ஆக்கிற்றே! (14)

கொலை

உயிர்க்கொ லைபுரி உன்மத்த தீக்குணம்
துயர்கொ டுத்திந்த தரணி மக்களை
அயர்வு றச்செயும் அந்தனின் ஆரருள்
மயர்வ றச்செய்து மாற்றிடும் அத்திறம் (15)

களவு

களவெனும்பிறர் கைப்பொரு ளைக்கவர்
உளந டுக்குறும் உயிரும் நலிந்திடும்
அளவில் ஆண்டவர் அன்பருள் நோக்கினால்
தளர்வுற் றேயந்த தன்மை மடிந்ததே (16)

பொய்

பொய்யெ னும்கொடும் பொல்லா அரக்கனும்
மெய்மா ணாக்கர் மெலியவே தாக்கிட
உய்வ கைதரும் ஓங்குயர் மாட்சியால்
எய்யருட்பெருஞ் ஜோதியால் மாய்ந்தது (17)

சூது

சூது தானும் சுழன்று மலைத்தெதிர்
மோதல் செய்தது மோதகம் ஏந்தின
நீதர் மெய்ம்மொழி நெஞ்சுற நீசர்கள்
பேதம் தீர்ந்தனர் பொய்ம்மை பொசுங்குமே (18)

வாது

வாதம் செய்து வழிநலம் தான்கெடச்
சேதம் செய்யச் சகத்துளோர் துன்புறும்
வேதம் ஓர்திரு மேனியர் வந்துற
நீதர் மாட்சியால் நிட்டூரம் மாய்ந்தது (19)

சாதி

சாதி யென்னும் சழக்கன் அரக்கர்கள்
மோதிக் கொள்ளும் விகற்ப மொழிந்துமே
நீதிநி றைந்து குலமெலாம் ஒன்றுறும்
மேதி னிமிசை வெற்றிகை வல்யமாம் (20)

குலம்

என்கு லம்பெரி தானதென் றேசில்லோர்
தன்கொ டுங்குணத் தால்வழக் காடிடும்
பொன்ன ரங்கர் பொலிதவ மாட்சியால்
இன்னல் மாறியே யாவுமொன் றானதே (21)

மொழி

மொழியெ னல்கருத் துப்பரி மாற்றிடும்
வழியெ னக்கரு தார்கள்சமர் செய்யும்
பழிகொ லைக்கஞ்சாப் பாதகர் பல்கிடும்
வழிமெய் ஆண்டவர் வந்ததால் சீருரும் (22)

இனம்

இனப்படு கொலை எண்ணில வாயின
தினதினம் உயர் வென்ற வெறிதனால்
இனம்க ருதிடா ஏமன் வரும்காலை
எனதெ னதெனல் எங்குறும் கூறுமின் (23)

நிறம்

நிறவெறி கொடு நீசர்தம் தீச்செயல்
அறம்ம றந்து அலைகிறார் அந்தகோ!
நிறம் நுகர்வுகள் யாவுமே ஒன்றெனில்
நிறமெண் ணாஎமன் வந்திடில் என்செயும்? (24)

தேசம்

தேச மெங்கும்வாழ் மக்கள் ஒரேதரம்
நேயம் ஒன்றே நலஞ்செயும் வாழ்விற்கே
தூயர் மெய்வழி ஆண்டவர் தோன்றியே
ஞாயமாம் நெறி நாட்டினர் காண்மினே (25)

செல்வச்செருக்கு

செல்வம்யாமுடை யோமெனும் தன்மையால்
வல்செ ருக்குவந் தேயிடர் செய்திடும்
கொல்எமன் வந்து கூப்பிடு காலையில்
பல்காட் டிக்கெஞ்சும் செல்வம் துணைவரா (26)

பதவி

உயர்ப தவியென உள்ளம் தருக்குறும்
மயர்வி னோர்நுகர் வொன்றே அறிமின்கள்
துயரு ரும்மற லிவருங் காலையில்
அயர்ந்து நெஞ்சம் அலைக்கழி வுற்றிடும் (27)

சிலைவணக்கம்

தெய்வ மென்றுசி லைவணக்கம் செய்யும்
வைய மாந்தரீர் வாழ்துணைக் கோர்சிலை
செய்து கொண்மினோ சிந்திப்பீர் இக்கணம்
உய்யு மெய்வழி உற்றது சார்மினோ (28)

பேதம்

சாதி யும்மதம் சாரினம் தேயமும்
பேதங் கொண்டு பிரிவுரை யன்மின்கள்
ஆதி யோர்திரு மேனிகொண் டம்புவி
மீதில் வந்துமே மெய்வழி நாட்டிடும் (29)

ஒன்றேகுலம்

ஒன்று தான்குலம் ஓரிறை என்றுமே
நன்று எண்ணுமின் நாடுக நல்வழி
பொன்றுங் கால்துணை போதரும் தெய்வமே
என்று நன்று இனிதுணர் வீர்களே! (30)

மெய்வழி

முழுமு தல்வர்மெய் தெய்வமே வந்திங்ஙண்
ஒழுகு மெய்வழி காட்டினர் அன்பரீர்
நழுக லின்றியே நம்பிக்கை கொண்மினே
எழுக சார்ந்துய்மின் என்றுமெங்கும் நன்றே! (31)

வாக்குமலம்

வாக்கி னால்விளை குற்றம் விலகிட
தேக்கும் வான்மறைத் தேன்பொழி மான்மியம்
வாக்கி யம்மெனும் விண்ணக ஔடதம்
பூக்கும் கற்பகத் தாருஎம் தெய்வமே! (32)

செவிநுகர்கனி

கவிம ழைபொழி நாற்கவி ராஜர்செய்
செவிநு கர்கனி செம்பொருட் பேழைகள்
புவியி லெங்கும் வரும்பெரும் செல்வமாய்
குவிந்து ளதெங்கள் கோமான் தயவினால் (33)

ஞானப்பரிசு

கண்டு கேட்டவர் காதல்கொண் டார்ந்தவர்
பண்டை ஞானப் பரிசுகள் பெற்றனர்
உண்டென் றேன்றனர் ஓங்கி உயர்ந்தனர்
அண்டினோர் எமன் அல்லலில் மீண்டனர் (34)

திருப்பணி

தேகத் தால்செய்த தீங்குகள் பாவங்கள்
தேகத்தால் திருச் சீர்பணி செய்துய்வர்
ஆக மக்கலை யாவினின் தாயகர்
ஏகன் மெய்வழி தெய்வத் தயைபெறும் (35)

நம்பிக்கை

நம்பி வந்தவர் நல்லருள் பெற்றனர்
வெம்பித் துன்புறும் வேதனை தீர்ந்தனர்
உம்பர் தம்தலை வர்எங்கள் ஆண்டவர்
செம்பொன் னார்பதம் சேர்க்கும் சிரமிசை (36)

கூற்றுவனை மாற்றுதல்

ஏற்றுச் சார்ந்தவர் எய்தும் இறைபதம்
மாற்றி ஏகிடில் மறலிநிச் சயம்வரும்
கூற்றை மாற்றிடும் ஆற்றலர் கோமகன்
ஆற்றை ஏற்றுப்பே ரின்பம் அடைமினோ! (37)

மனுபிறப்பு உன்னதம்

மனுப்பி றப்பினின் உன்னதம் ஓர்கிலார்
இனிஇ றப்பேஇ றுதியென் றெண்ணுவர்
இனியொ ருபிறப் பும்வாழ்வும் உண்டுகாண்
நனிய தெயெண்ணி நாடுமின் மெய்ந்நெறி (38)

வலுத்தவன் வாழ்வு

வலுத்த வன்தான்வாழ் வானெனும் வீணர்கள்
வலுத்த ஏமன்முன் வாடி வதங்குவார்
நலத்த கைதரு நன்னெறி சார்ந்திடில்
நலத்திறம் தரும்நல்லுல கேகிடும் (39)

சுவர்க்கம் நரகம்

சுவர்க்க மும்நர கம்முமிங் குண்டுகாண்
எவர்க்க துதெரியும்மென எண்ணிடேல்
எவர்க்கும் வல்லான்ஏ மன்வரு காலையில்
அவர வர்க்கேதெ ரியுமிவ் வான்றசொல். (40)

அறப்போர் மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!