திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/021.திருவூர் நேரிசை வெண்பா


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



21. ஊர் நேரிசை வெண்பா

தொகு

இலக்கணம்:-

ஊர் நேரிசை வெண்பா என்பது ஊரினைப் புகழ்ந்துரைக்கும் நேரிசை வெண்பாவாலான நூல் என விரியும். வெண்பா வகையால் பாடப்பெற்றது ஊர் வெண்பா. அவ்வூரையே நேரிசை வெண்பாவால் பாடுவது ஊர் நேரிசை வெண்பா;

ஊரைச் சார வுரைப்பதூர் நேரிசை
- முத்துவீரியம் 1095
இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
தன்னின் இயல்வது தான்நேரிசையே
- இலக்கண விளக்கம் -830 

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் எழுந்தருளி உயிரப்பயிரேற்றிய திருவூர் மெய்வழிச்சாலை. நான்கு யுகங்களும் எதிர்பார்த்த அந்த எல்லையைப் புகழ்ந்து நேரிசை வெண்பாவால் பாடப்பெற்றது ஊர் நேரிசை வெண்பா.

திருவூர் நேரிசை வெண்பா

காப்பு

சீர்பாட ஆசை திருவாரும் பொன்னரங்கர்
பேர்பாட, பெம்மான்மெய்ச் சந்ததிவாழ் - ஊர்பாட
ஆசையுற்றேன் ஐயா! அரசே! அருட்குருவே!
வாசமுற்ற வான்மலர்த்தாள் காப்பு

நூல்

ஆதியே வந்திங் கவதாரம் செய்துறலால்
ஆதியூர் என்றே அழைப்போமால் - மேதினியில்
வேதம் விளங்கவருள் மெய்வழிதெய் வம்தங்கும்
வேதத்தூர் என்றே விளி. (1)

நீதி நடத்தவந்த நித்தியர்காண் பொன்னரங்கர்
போதி விருட்சமெனத் தான்பொலியும் - ஆதலால்
போதத்தூர் என்று புகலலாம் இப்பதியை
நாதத்தூர் என்றும் நவில். (2)

வையகத்தோர் வாழ்ந்துய்யப் பொய்யொழித்து மெய்துலங்க
ஐயரருட் பாலிக்கும் அச்செயலால் - துய்யருறை
மெய்யூர்என் றேநாம் விளம்பலாம் இப்பதியே
மெய்வழிச்சா லையென்னும் ஊர். (3)

வல்லஎமன் வாதனையே வீய்ந்தொழிய ஈந்தருள்செய்
வல்லவரெம் மெய்த்தெய்வம் ஆதலினால் - அல்லலிலா
நல்லகதி நம்பியபேர் நன்குறலால் சாலையிது
நல்லூரென் றேநவிலு மின். (4)

அனந்தர் திருக்குலத்தோர் ஆன்றவிந்த சான்றோர்
இனந்திகழும் இப்பதியே உத்யோ - வனத்தின்
திருக்கோஷ்ட்டி யூரென்று செப்பில் திறமாம்
அருட்கோஷ்ட்டி ஆரூர் இது. (5)

திங்கள் வதனர்எம் செம்மான் திருவருள்தான்
பொங்கிப் பொலியுமிது புத்தூர்காண் - இங்கிதனை
திங்களூர் என்றே திருநாமம் சாற்றியுரை
பொங்கலூர் என்றும் புகல். (6)

பாரெங்கும் மெய்வழியே பாங்குயரச் செய்யிவர்க்கு
நேரெங்கும் இல்லைகாண் நல்லூரே - சீரங்கம்
என்றேயிவ் வூரை இயம்பில் இனிதாம் பொற்
குன்றத்தூர் என்றும் குறி. (7)

எந்நிலங்க ளுக்கும்மேல் ஈடில்லா மாட்சியது
இந்நிலமே ஆதலினால் நன்னிலமே - பொன்னரங்கர்
தென்னா டுடைசிவனார் தேவாதி தேவரிவர்
அன்னாட் டுயிர்ப்பயிர்செய் தார் (8)

வாடுதுறை சார்மாந்தர் நாடியுயிர் உய்வுறலால்
கூடுதுறை என்றே குறித்திடலாம் - நீடுதிரு
ஆடுதுறை என்றே நிகழ்த்தில் பொருத்தமிகும்
பாடுதுறை எம்மான் பதி (9)

தேவநே சம்மிகுந்தோர் தாமறியா மற்செய்த
பாவநா சம்செய்யும் பண்பூர்காண் - தூவெண்
மதிசூடும் வானோர் விதியோடும் மெய்யாம்
நிதிகூடும் நீடூர் இது. (10)

இடிந்தகரை தீமையெலாம் எம்முயிருள் மெய்ம்மை
விடிந்தகரை சாலைபேர் இன்பம் - படிந்தகரை
ஏமனமல் யாவும் பொடிந்தகரை எங்கோமான்
சேமம் திகழ்கா ரையூர் (11)

பிறவிக் கடல்கடந்து பூவுலகோர் ஏறும்
திறமாரும் தற்கரையாம் இஃது - நறவாரும்
தாரணிந்தார் எங்களுயிர்ச் சீரணிந்தார் மார்க்கமணி
பேரணிந்தார் பெம்மான் இனிது. (12)

வண்ண வடிவழகுக் கண்ணனூர் மாதவனூர்
திண்ணனூர் என்றினிது செப்பலாம் - விண்ணவனூர்
தென்னூர் திருசிரமார் சீருரில் பொன்மலையாம்
இன்னூர்தான் என்றே இயம்பு (13)

சீலங் குடிகொள் சிவனார்தாம் நஞ்சுணலால்
ஆலங் குடியரென்பர் அம்புவியோர் - கோலம்
சிறந்தாரெம் சிந்தை நிறைந்தார்காண் வண்ண
நிறத்தார் அணியும் பிரான். (14)

மேலூர் அறிந்துஇரு காலூர் பணிந்துகர
வேலூர் தரிசித்தார் மெய்யருளாம் - பாலூர்
அருந்தி அனந்தர்குலம் ஆருயிர்உய்ந் தார்காண்
வருந்தி மயங்கார் இனி. (15)

ஊரெல்லாம் ஊரோ உயர்திருமெய் ஆண்டவர்கள்
சீரெல்லாம் ஈயச் செழித்தோக்கும் - பாரெல்லாம்
போற்றும் புகழூர்காண் பண்பு திகழூர்மெய்
ஏற்றம் நிகழூர்காண் இஃது (16)

தானம் தவம்சிறந்து தேவாதி தேவர்மெய்
ஞானம் வழங்கும் நலம்பெருகூர் - வானம்
வழிதிறந்து மண்ணவரை விண்ணவராய் ஏற்கும்
எழில்சிறந்த ஏர்சாலை யூர் (17)

சாலையூர் எங்கோன் தவமோங்குத் யோவனமாம்
சோலையூர் சற்சனர்கள் மெய்வணக்க - வேலையூர்
கோலமிகும் கர்த்தாதி கர்த்தரருள் சீர்கொடையால்
ஞாலமெலாம் உய்மேலை யூர் (18)

கருவூரர் சார்ந்துய் குருவூர் கருணை
தருவூர் தகையோங் கனந்தர் - பெருகூர்
அருளைப் பருகூர் வினைகள் கருகூர்
அருணயந்த ஆண்டவர்மெய் யூர் (19)

வேதம் விளங்குமூர் மெய்ம்மை துலங்குமூர்
ஏதம் கலங்கி இரியுமூர் - நீதம்
நலமிலங்கும் நல்லோர் குலம்விளங்கும் மெய்ம்மைப்
பலன்குலங்கும் பொன்னரங்கர் ஊர் (20)

ஆதிதுணை யாகியவூர் அன்பனந்தர்க் காண்டவர்கள்
நீதிதுணை யாக நிகழ்த்துமூர் - பாதமலர்
போற்றிப் பணியனந்தர் ஏற்றித் தொழுதூர் மெய்
யாற்றுப் படுத்துதிருப் பூர் (21)

வேதத்தூர் மெய்வழிச்சா லையையர் இன்பநடப்
பாதத்தூர் பேரருள்பொங் காரமுத - நாதத்தூர்
பண்போங்கு நீதத்தூர் பத்யநெறி போதத்தூர்
விண்பாங்கு ஞானமணி யூர் (22)

நாடலூர் ஞானியர்கள் கூடலூர் நற்றவர்கள்
தேடலூர் சிந்தைகனிந் தின்பமிகுந் - தாடலூர்
மெய்ஞ்ஞானப் பாடலூர் அஞ்ஞானம் வாடலூர்
எஞ்ஞான்றும் ஈடிணையில் ஊர் (23)

எங்களூர் பேரின்பம் பொங்கலூர் மெய்ம்மதியர்
திங்களூர் சீரோர்கள் தங்களூர் - மங்களவூர்
செங்கமலப் பொன்மலர்த்தாள் தங்கள்சிரம் சூடனந்தர்
இங்கினிது வாழுமெழில் ஊர் (24)

கொலைகளவு செய்யாத கோதற்ற நல்லூர்
நிலைதிரியா நித்தியமெய் நீதர் - கலைமதியர்
வாழும் வணக்கத்தில் ஆழும் அனந்த குலம்
சூழும் திருவூர் இது (25)

சூதாட்ட மில்லை சுழன்று மலைந்தெதிரும்
வாதாட்ட மில்லை மனுமகனார் - நாதாட்டம்
எல்லையி லாதிலங்கும் ஏமன் தருங்கொடுமைத்
தொல்லையி லாததிரு வூர் (26)

அரசியலைப் பேசார் அரன்வணக்கம் செப்பும்
முரசியலே இங்கு முழங்கும் - பரசெயலாம்
தெய்வம் பணிந்தேத்தி சிந்தை கனிந்தினிது
உய்வோர் வதிகின்ற ஊர் (27)

கள்முதலாம் போதை கருதார் புகைப்பிடியார்
தெள்ளியமெய்ஞ் ஞானத் தெளிவுடையார் - உள்ளம்
உருகி இறைபரவும் உத்தமமெய்ம் மாந்தர்
பெருகி வளரும்இவ் வூர் (28)

பொய்யுரையாப் பண்பும் புலைநுகரா மாண்புயர்ந்த
மெய்வழியர் வாழுமிம் மேலூர்காண் - ஐயரெங்கள்
ஆண்டவர்கள் நாமம் அணுக்கணம்போற் றியெமனில்
மீண்டவர்கள் வாழுமிவ் வூர் (29)

முன்னை முழுமுதலோர் மெய்ம்மேனி கொண்டிவர்ந்து
பின்னைப் பெரும்பொருளாய்ப் பேர்கொண்டு - இன்னிலத்தே
மன்னுயிர்கள் உய்ய வகைசெய்யூர் வான்தவத்தூர்
என்னையிதன் மாட்சி இயம்பு (30)

ஊரில்லார் எங்கோன் உவந்தியற்றும் பேருலக
ஊரெல்லாம் ஓங்கொலிசெய் தோதிடும்ஊர் - பேரெல்லாம்
பெற்ற பெருமானார் கொற்றம் பெரிதிலங்கும்
வெற்றிகைக் கொள்விந்தை யூர் (31)

அன்னையினும் மிக்கோங்கும் அன்புடையார் தென்னாடர்
பொன்னரங்கர் பொற்பதியிப் பேரூர்காண் - வின்னமிலாச்
செம்மைநெறி தன்னில் செகமெல்லாம் வந்திறைஞ்சும்
பெம்மான் பெருந்துறைகாண் இஃது. (32)

தன்னை அறிந்துணர்ந்த சற்சனர்கள் தாம்வதியும்
தென்னா டுடைசிவம்வாழ் சாலையூர் - இன்னலெனும்
ஏமன் அமல்தவிர்ந்த ஏந்தல்ஊர் எந்நாளும்
சேமம் சிறந்திருக்கும் ஊர். (33)

பொன்னனையர் தன்னைப் புவிமாது காத்திடவே
தன்னடக்கம் கொள்ளும் தபோதனர்கள் - பொன்னரங்கர்
பாதம் பணிந்து பவம்கடக்கும் பண்பூர்காண்
நீதம் நிறைமெய்யர் ஊர் (34)

முழுமுதல்வர் எங்கோன்செய் மாதவச்சீர் வேண்டி
எழுந்தசித்தர் முத்தர்முனி வோர்கள் - தொழுதுரும
காலத் தவநேரம் காத்திருக்குத் யோவனமாம்
சோலை திகழும்நல் லூர் (35)

சுத்தம் வடித்துத் தெளித்தெடுத்த சீரோர்காண்
அத்தன்எம் ஆண்டவர்கள் ஆளுகைசெய் - புத்தமுதம்
பொங்கும்மெய்ச் சாலையெனும் பேரூர்காண் வானோர்கள்
தங்கும் தனிச்சிறப்பார் ஊர். (36)

வேற்கரத்தாற் சூர்தடிந்த வல்லவர்செங் கோலுடையார்
நாற்கரத்தாற் சந்தித்து வந்தனம்செய் பாற்கடையூர்
செம்மான் திருவிளங்கும் பெம்மான் பெருந்துறையார்
அம்மான் அருள்வழங்கும் ஊர் (37)

சங்குடையார் சக்கரத்தார் சற்குணத்தார் சற்சனர்க்கு
பொங்கியருள் பாலிக்கும் வெண்குடையார் - இங்குதவும்
சங்காது தானியற்றும் எங்கோமான் என்னிதயம்
பொங்குமருள் தங்குமெழில் ஊர் (38)

சீலமிகு சிந்தையர்க்குக் கோலமிகு சொர்க்கமருள்
வாலகுரு மெய்வழிச்சா லையையர் - தாலமருள்
வாக்கியங்கள் தேக்கியருள் ஊக்கமிகு பாக்கியத்தார்
காக்குமையர் கண்டதிரு வூர் (39)

பூங்குழலார் பொன்மேனிப் பொன்னரங்கர் நல்லருளே
தேங்குமெழில் சீருராம் சாலையிது - ஈங்கினிது
எல்லாம்வல் லார்தெய்வம் எம்பெருமான் தாள்படிந்தார்
நல்லாருள் நற்றவத்தார் ஊர் (40)

திருவூர் நேரிசை வெண்பா இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!