திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/096.நல் வசந்த மாலை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 96.வசந்த மாலை

தொகு

இலக்கணம்:-

வசந்த காலத்தை வருணித்துப் பாடுவது வசந்த மாலை எனப்பெறும். வசந்த காலத்திற்கு உரிய தென்றல் காற்றைப் பலபடப் புகழ்ந்து கூறும் பொருண்மை உடையது.

வசந்த வருணனை வசந்தமாலை
- இலக்கண விளக்கம் 836
தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த
மாலை யெனப்பெயர் வைக்கப் படுமே
- முத்துவீரியம் 1063
விரவிளந் தென்றலை வருணித்து உரைப்பதே
மேலாம் வசந்த மாலை 
- பிரபந்த தீபிகை 13

கார், குளிர், முன்பனி, பின்பனி, வேனில், இளவேனில் எனக்காலங்கள் அறுவகைப்படும். வேனிலின் வெம்மை தணிவிக்கத் தென்றிசையினின்று இதமாக, குளிர்ச்சியாக வீசுகின்ற காற்று தென்றல். அதுகாலம் வசந்தகாலம் எனப்பெறும். கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும் (சதுர்) நான்கு யுகங்களில் தற்போது நடக்கும் கலியுகத்தைக் கடைச்சனிகாலம் என்று குறிப்பிடுவர். கடைச்சனி காலத்தில் அதர்மம் பெருகி தர்மம் வலிமை குன்றியுள்ளது. இந்த உலகத்தை உய்விப்பான் வேண்டி, முழுமுதற்பொருள் பிரம்மோதய ஆண்டவர்கள் திருவவதாரம் செய்து தவஞான நீதிச் செங்கோலோச்சித் தர்ம பரிபாலனம் செய்து அருள்பாலிக்கிறார்கள். அவர்கள் திருமுடியேற்று ஞானச் செங்கோலாட்சி செய்யும் இக்காலம் இவ்வுலகின் வசந்தகாலம். வெங்கலியின் வெம்மையாகிய எமபடர் கடந்து மரணமிலாப் பெருவாழ்வு என்னும் தென்றல் தவழ்ந்து வந்து எங்கள் உயிர்க்கு இதமருளும், திருவருட் தயவு பொங்கும் இக்காலத்தை வசந்த காலமெனப் புகழ்ந்து விதந்தோதுவது இப்பனுவல்.

நல் வசந்த மாலை

காப்பு

நேரிசை வெண்பா

இசைந்தோர் மதியில் நிசந்தவழும் எங்கோன்
வசந்தமூர்த் திசாலை தெய்வமே! - பசும்பதத்தை
சீரார் வசந்தமெனும் மாலை எனப்பாட
பேராளர் தம்தயவே காப்பு

நூல்

பஃறொடை வெண்பா

ஆதிக்கு முன்னே அனாதி இருட்கோளம்
நீதி உசும்புதலால் நீரெழுந்தீர் என்னிறைவா!
பூதங்கள் ஐந்தாய்ப் பொலிந்தீர்கள் பொன்னரங்கர்
மாதங்கம் ஆகாய வாணியென்றும் வாயு
பகவான் வருண பகவானாய் அக்கினியாம் (5)
தகவான தேவனென்றும் தண்ணளிசேர் பூதேவி
என்றிலங்கி எல்லாம் படைத்தீர்கள் அவ்வவற்றுள்
வாயு பகவானாய் வந்ததொரு மாண்பினிலே
ஆய சிலசெப்ப ஆர்வமுற்றேன் ஐயாநீர்
மூச்சாகி நின்றீர்கள் முத்தொழிற்கும் காரணர்நீர்! (10)
பேச்சாகி ஓசைஒலி என்றே சிறந்தீர்கள்
மூச்சாம் உயிர்ப்பின்றேல் மன்பதையுள் ஏதுஉயிர்?
பாச்சலூ ராரென்று பகர்வார் உலகோர்கள்
எவ்வுயிரும் உம்மை யன்றி இயங்காதால்
அவ்வை எனுநாமம் ஆகுமே உம்தமக்கு (15)
எங்கும் நிறைந்து இருக்கும் இயல்பினர்நீர்
தங்கா இயக்கமது தானுடையர் நீவிரன்றோ
கீழ்த்திசையில் பொங்கிவந்தால் கொண்டலென்று செப்பிடுவர்
மேல்க்காற்றை கோடை எனவே வழங்கிடுவர்
வாடை வடந்தை வடதிசையின் காற்றென்பர் (20)
ஈடில்லாத் தென்காற்றைத் தென்றல் வசந்தமென்பர்
கால்வளி வங்கூழ் அனிலம்ஊ தைகோதை
மேல்உயிர்ப்பு கூதிர் உலவை பவனமொடு
மருத்து ஒலிகோதை நீழல் மலயமென்னும்
பெருத்த வேற்றலமென்று பல்பேர் புகன்றிடுவர் (25)
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் யாருமிலை
காற்றை குருதயவால் பிடிக்கும் திறன்பெற்றோர்
கூற்றை உதைக்கும் குணமறிவார் என்றுரைப்பர்
ஆற்றல்மிகு அன்னோர் முமூச்சுமார் ஆவார்கள்
ஓரிடத்தில் நில்லா துலவுவது உம்மியல்பு (30)
சூறா வளியாய்ச் சுழல்வீர்கள் வாரா
மழையை வருவிப்பீர் வள்ளல்போல் வீர்ஓர்கால்
அழையாப் புயலாய் அழிப்பீர்கள் மற்றும்
பருவக்காற் றாகிப் பரிமளிப்பீர் தாங்கள்
உருவம்தோன் றாது உழல்வீர்கள் ஆங்காங்கே (35)
தாயுமாய் மூச்சாகித் தந்தையாய்ப் பேச்சாகி
வாயுவோர் மண்டலமாய் வாய்த்திருப்பீர் மற்றந்தத்
தேயுவொடு சேர்ந்து தீய்த்தெரிப்பீர் எல்லாமும்
மாய்ந்திடுமே நீரிலையேல் மன்னுயிர்கள் யாவும்மே
தென்றிசையி னின்றுவரும் தென்றல் வசந்தமிது (40)
என்றுலகோர் ஏற்றி உமைவிரும்பும் நன்றேகாண்
இதமாய் உடல்தழுவி இன்னுயிருள் புக்கு
பதமாய் பரிமளநன் வாசம் நனிதிகழும்
மென்மைநீர் மிக்கணிந்த மேலாடை மேன்குடியோர்
தன்மை அரவணைக்கும் தாளாண்மை வண்ணமிகு (45)
மயிற்ப்பீலி கொண்டு மிகத்தடவிப் பேணி
அயர்வொழிக்கும் ஆதரவும் ஆற்றல் அலுப்பாம்
துயர்தீரச் செய்யும் தோன்றலே நல்ல
இயல்புள்ள ஏந்தலே இன்பநறுந் தென்றலே
கடலில் உலாவிவரும் கானகத்தே சுற்றி (50)
இடமகன்ற ஞாலத்தில் எங்கும் நிறைந்திடுவீர்
மாமலையில் தோன்றி மலர்ச்சோலை யில்வளர்ந்து
பூமணமும் தேன்மணமும் பொங்கருவியில் தவழ்ந்து
வெம்மை தணிவிக்கும் மென்காற்றே! மாருதமே!
செம்மை நலம்புரியும் தென்றல் இளங்காலே! (55)
மண்ணுலகி லேவசந்தம் வந்து உலவுதல்போன்ம்
விண்ணுலகின் நல்வசந்தம் மண்ணகத்து மாந்தருக்காய்
கொண்டுவந்தீர் கோமான் குருகொண்டல் மெய்த்தெய்வம்
அண்டிநின்ற பேர்க்கு அமுதுபொழி பொன்மாரி
பண்டைப் புராதனரே பன்மறைக்கும் ஓர்தெளிவே! (60)
எண்டிசையும் காணா எழிலார் கருவுலமே!
பொற்புகுத்யோ வனமாம் பொழில்வீசும் மாருதமே!
கற்பகப்பூங் காதவழும் கன்னியே எம்முயிர்ப்பே!
தங்கமகா மேரு தனைத்தழுவு மென்காலே!
எங்களுயி ரில்நிலவும் ஏரார் எழில்வாயு (65)
குன்றாத ஞானக் கனிபழுத்த தீஞ்சுவையே!
மன்றில் அளைந்து மகிழ்விக்கும் நல்வசந்தம்
வான்போகம் தன்னை வலியக்கொண்டே அளித்து
தேன்பாகு ஊட்டிச் சிறக்கும்தாய் தந்தையென
ஊன்உயிரும் தான்வளர வந்திசைக்கும் தாலாட்டே! (70)
வஞ்சஎமன் வாதனையை வாட்டிஒழி வாடையும்நீர்!
தஞ்சமென வந்தோரைத் தாங்கிவளர் வள்ளல்நீர்!
பொய்ஞ்ஞானம் போயொழியப் போந்தப் புயல்நீரே!
மெய்ஞ்ஞானம் மேன்மையுற மேவிவரும் மாருதம்நீர்!
அஞ்ஞானக் காட்டை அழிக்கும்சூ றாவளிநீர்! (75)
எஞ்ஞான்றும் நெஞ்சில் இனித்திருக்கும் தென்றல்நீர்!
கோடை தணிவிக்க வந்தகுளிர் நீழல்நீர்!
வாடும் உயிர்ப்பயிர்க்கு வந்துபொழி வான்மழைநீர்!
தேடும் தேட்டாளர்க்குச் செல்வ நிதிக்குவைநீர்!
பாடுமிசை வாணர்க்கு பண்கனிந்த பாசுரம்நீர்!
என்னுயிரில் தித்தித்து இன்பமருள் என்சாமி (80)
தென்னாடு டைசிவமே தாயேநின் தாள்தஞ்சம்
நீதி நடவினுக்கு நன்றேபாய் நல்லூற்றே!
சாதிமதச் சிக்கறுக்கத் தன்பதம்சீர் போர்வாள் நீர்:
முத்தாபம் தீர்க்க முனைந்துவந்த மேல்காற்றே!
சித்தத்துள் நின்றொளிரும் தெய்வ சிகாமணியே! (85)
பித்தம் தெளிக்கவந்த பேர்ஜீவ பண்டிதரே!
கொத்தடிமை என்பாற் கருணைபுரி கோமானே!
வெம்மாயக் காட்டை வென்றழிக்கும் வெந்தணலே!
இம்மை மறுமையிலும் எவ்வுயிர்க்கும் நற்றுணையே! (90)
வல்பிணியை நீக்கும் மருந்தாகும் வைத்தியரே!
பொல்லாப் பிணியொழித்துப் புத்துணர்வு தந்தாள்வீர்
கல்லாரைக் கற்றவரைக் காத்துவளர் காருண்யா!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் மெய்வலிமை ஈய்பவரே
அம்மையாய் நின்று அமுதூட்டும் ஆத்தாளே (95)
செம்மை தவப்பயனாம் சீர்தருகு தெய்வபிரான்
பெம்மான் பெருந்துறைவாழ் பேராளர் சீராளர்
எம்மாரு யிர்வளரும் என்ஜீவ வான்மணியே!
சும்மா யிருக்கவொரு சூதானம் தந்தாள்வீர்!
வம்மை வரிசைகளும் மிக்கருளும் வள்ளால்நீர்! (100)
என்றன் உயிர்க்குயிராய் நின்றிலங்கும் ஏந்தல்நீர்!
தென்றலே ஜீவகளைப் பெல்லாம் தெளிவிக்கும்
வையகத்தில் வந்துலவும் வான்வசந்தம் நீரன்றோ!
மெய்யகத்தார் உய்யவந்த மெய்வழியே உய்வழியே!
தைபிறந்த மெய்யே தயவான தத்துவமே! (105)
துய்யமன வைராக்யர் சிந்தைவளர் மெய்விளக்கே!
ஐயா உமது அடிநிழலே தஞ்சமுற்றோம்
வெய்ய எமன் வாதனைதீர் வேந்தே சரணடைந்தோம்
இசைந்த மதியினர்உள் என்றென்றும் வாழும்
வசந்தம்வந் தாள்க இனிது.

நல் வசந்த மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!