திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/035.பூவடிப் போற்றிகள்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
35. காவடிச் சிந்து
தொகுநூற்குறிப்பு:-
காவடிச் சிந்து என்னும் இலக்கியம் நவீனமானது. புதியவகைச் சந்தத்தில் கவிஞர் அண்ணாமலை ரெட்டியார் இயற்றியுள்ளார். பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு பாடி ஆடுவது இப்பாடல்கள். அதனை அடியொற்றிப் பாடுவது இப்பனுவல். காவடிச்சிந்து என்பதனைப் பூவடிப்போற்றிகள் எனத்தலைப்பிட்டு இயற்றப்பெற்றுள்ளது.
பூவடிப் போற்றிகள்
காப்பு
சேவடி தன்னையே சென்னியி லேற்றியே
பூவடி போற்றியே பாடிடவே
சித்தமது மெத்தவிழை
பித்தன்உளம் நத்தும்பதம்
காவடி காப்பெனப் பாடுதுமே-சொற்கள்
நாவடி பொங்க நவிலுதுமே.
நூல்
1.ஆண்டவர் பாதம்
ஆண்டவர் பாதம் அணுவும்ம றவாது
நீண்டபெ ரும்புகழ் நித்தியம் நீஓது
வேண்டிவ ணங்கிடில் வீய்ந்திடு மேதீது
மாண்டிடும் தன்மையே மாறிடும் இப்போது
பாடிக்க ளித்திடு வாய் - என்நெஞ்சே
ஆடிம கிழ்ந்திடு வாய்
தாண்டவ மாடித்தி ருச்சபை தன்னிலே
வேண்டும்வ ரம்தரு மேமகிழ் உன்னிலே
ஆண்டுகொள் வாரேஅ ரங்கமாம் பொன்னிலே
தாண்டிடு வாய்பி றவிப்பிணி முன்னிலே
வாழ்த்தி வணங்கிடுவாய் - என்நெஞ்சே
தாழ்த்திச்சி ரம் பணிவாய்
பாண்டியர் நம்மின்ப ரமபி தாதனை
காண்டிக்குள் வைத்துநீ போற்றிடு போம்வினை
தீண்டிஅ ருளால் கரம்பிடித் தார்உனை
ஆண்டிடு வார்அடி மைமகிழ் வுற்றனை
போற்றிப் புகழ்ந்திடு வாய் - என்நெஞ்சே
ஏற்றிம கிழ்ந்திடு வாய்
பூண்டும கிழ்வாயே பொற்பதம் நின்சிரம்
ஆண்டவர் நிற்கு அருள்வார்சா வாவரம்
மூண்டவி னையறும் மேலேறும் நின்தரம்
ஈண்டுசி றந்துநீ எய்திடு வாய்பரம்
அன்புமி குந்துறை வாய் - என்நெஞ்சே
இன்பத்தி லேநிறை வாய்
2.தவமிக்குயர்ந்த சாலை
தவமிக் குயர்த்த சாலை
பவப்பற் றொழிக்கும் சோலை
தமிழகத் தினில்வந்த மெய்வழி இந்தத்
தரணிக்குள் இதுஒன்றே உய்வழி - கொடுங்
கோரவெங்கலி பேரிருள் செயப்
பாருளேஅவ மீறிநின்றிட
கலியைக்க ருவருக்க வேண்டியே - வந்தார்
வலிமைக்க டலாம்சாலை ஆண்டவர்.
சிவமெய்ப்பொ ருளெழுந்து
புவிநற்க தியெனவே
திருவருள் தரவந்த தெய்வமே - சிந்தை
தெளிவுடை யோர்பற்றி உய்வமே - உயிர்
சேமமிங்குற நாமநன்மறை
தாமுவந்தினி சாமிஎந்தையைப்
பணிந்து பரகதியைத் தேடுவோம் - அந்தப்
பரவசத் தில்மகிழ்ந் தாடுவோம்
பகுத்தறி வதுஇன்றி
இகத்தில்கி டந்துழன்று
சுகத்தைம றந்துநின்று சாக்குழி - ஏக
அகத்தில்இ ருள்படிந்த மாக்களை - மாற்றி
வேதமுற்றறி நீதமுற்றிட
ஏதமற்றிடு போதமிக்கருள்
இறைவர்திரு வடியைப் போற்றுவோம் - எங்கள்
குறைகள் ஒழிந்ததென்று சாற்றுவோம்
மகத்துவ மென்று சொல்லி
சகத்தில்செ ப்பிடு வித்தை
புகுத்தும் பொய் யர்மயக்கம் மாய்ந்ததே - தலை
யுகத்தின்உ தயம்வந்து வாய்ந்ததே - தெய்வப்
பாதபங்கய போதணிந்தினி
மேதகுங்குல நீதமுள்கொள
மகதியை யரின்புகழ் பாடுவோம் - உய்ய
புகுதிக்கி தனில் வந்து கூடுவோம்
3.எங்கணும் மதவெறி
எங்கணும் மதவெறிமிக் காட - ஆயின்
இங்குமட்டும் யாவும் ஒன்று கூட - மனு
ஈசரிங்கு நேசமிக்கு
ஆசரிந்து தேசுபெற்று
மீண்டார் நலம் பூண்டார்
சங்கனற் பலகைமிதந் தாட - இன்பம்
பொங்கியே மதங்கள் வந்து கூட - புவி
மாமறைகள் தாமிலங்கி
தோமறந்து சேமமுற
சேரும் களி கூரும்
ஆதிமுழு முதல்இந்த ஞாலம் - உய்ய
நீதியுடல் பெற்று வந்தகாலம் - இதை
உற்றறிந்து பற்றியவர்
நற்றவத்தில் வெற்றிபெற்றுத்
தேர்ந்தார் பரம் சார்ந்தார்
மேதினியில் வந்தகயி லாயம் - எமன்
வாதனைய றுக்குமொரு பாயம் - உயர்
ஐயர்பத மெய்யறிந்து
உய்யவொரு தைபிறந்த
நீதம் உயர் போதம்
4.நித்திய வாழ்வு
நித்திய வாழ்வினில் ஓங்க - நலம் தேங்க - கலி ஏங்க -தெய்வம் நல்கநற் போதம்நாம் வாங்க - யாரும்
நிகரற்றுயர் புகழ்மிக்குநற்
றகைபெற்றுமெய் யகமெற்றிடு
சர்வவல் லமைமிக்க ஆண்டவர் - மனு
கர்மம்ஒ ழித்துதர்மம் ஈந்தவர்
சத்திய மெய்ந்நகர் காட்சி - தவ மாட்சி - ஜீவ சாட்சி - துயர்ச் சாவினின் றெல்லோர்க்கும் மீட்சி - நித்ய
உயிரைப்பயிர் செயுநற்றவர்
தயைமிக்கவர் அயர்வற்றவர்
சித்தர்முத் தர்தேவர் யாவரும் - வந்து
மெத்தப்ப ணிதேவ தேவராம்
மனுமெய் மறந்திட்ட நேரம் - கலி கோரம் - பாவப் பாரம்-எங்கள்
மெய்தெய்வம் வந்தவ தாரம் - செய்து
இருளக்கலி அழிவுற்றிட
அறநற்றவ நெறிசெப்பிடு
கோளரி வாள்வலி வீரம் - உய்ய
நாளித றிவுக்கா காரம்
இனிபொய் மடிந்திடும் வாடும் - இருள் ஓடும் - அருள் கூடும்-அன்பர்
இதயங்கள் மெய்வழி நாடும் - உயிர்
நிலை பெற்றுயர் நலமுற்றிடும்
தலமித்திரு நிலமுற்றவர்
இன்பம்பெ றும்திரு வீடும் - பெற்று
எக்களிப் பில்பொங்கி யாடும்.
5.ஒன்று குலம் ஒன்று தெய்வம்
ஒன்றுகுலம் ஒன்றுதெய்வம் என்றுஅன்று நன்றுமூலர்
உண்மையொன்று செப்பியது உண்டு - அந்த
உண்மையின்று மெய்யதான துண்டு - இந்தத்
தென்றிசையின் சாலைமன்றில் நின்றுகுணக் குன்றுமெய்யைத்
தோற்றுவித் தருள்மிகவும் கொண்டு - எமை
ஏற்றுவித்த தின்பநெறி விண்டு
பொன்றுகின்ற மக்கள்சென்று கொண்டிருந்த பொய்மைநெறி
போகநித்ய மாகுமெய்ம்மை தந்து - ஐயர்
போதகத்தை ஈயவென்று வந்து - இனிப்
பேதகங்கள் மாயுமுயர் வேதமுயிர் பெற்றிலங்கும்
பேறுபெறச் சிந்தைமிக முந்து - நண்ணில்
போகும்வஞ்ச வெங்கலியும் வெந்து
வையகத்தில் வானகத்தை மாண்புயரச் செய்யகத்தார்
வள்ளல்பாண்டி நாடர் தேவ தேவர் - அதில்
வந்துஉய்ந்தோர் மெய்க்குலத்தோர் ஆவர் - இனி
மெய்யகம்சி றந்துஓங்கும் பொய்யகம்ம டிந்து போகும்
மெய்வழிவி டிந்துசிந்தை தாவும் - இனி
உய்வழிஇஃ தென்றுஉயிர் கூவும்
துய்யமலர்ப் பாதம்போற்றில் வெய்யவினை மாளும் என்றும்
தூயவாழ்வு வந்துநிலை காணும் - தெய்வ
தோத்திரத்தால் இன்பநிலை மாணும் - நம
தையரிங்கு பையவந்து வையகத்தில் உய்யவைத்து
தற்பரத்தில் ஆக்கமெய்ம்மை பூணும் - இனி
சர்வவேதம் தெற்றெனவே தோணும்.
6.வித்தகர் என் அத்தன்
வித்தகரென் அத்தனருட் தாளே - சித்தம்
மெத்தஇறை பற்றியநன் னாளே - நித்தம்
புத்தமுதம் மெத்தவர நத்தியவர் முத்திபெற
இத்தலத்தில் மெய்த்தவர்கள் தோளே - இணைந்து
ஒத்திருக்கும் உய்த்தலம்கண் டாளே!
உய்வழித ருபிரம்ம கோலம் - கண்டோர்
மெய்வழியி லேஉறையும் சீலம் - பண்டை
ஐவழிகள் நைந்தழிய மெய்வழியெம் தெய்வவழி
கைவழிபி டித்ததிந்தக் காலம் கருப்
பைவழிக டத்தும் ஆதி மூலம்
நற்குலங்கள் அங்குமகிழ்ந் தாட்டம் - இன்று
சொற்சிலம்பத் தின்பம்விழை தேட்டம் - நன்று
நற்கருணைப் பொற்கரமெய் எற்கருளக் கற்கவந்தேன்
சற்குணத்தின் ஜீவமலர்த் தோட்டம் - என்றும்
எற்குரிமை மெய்வழியில் நாட்டம்
எப்பவும்கு ருகுலத்தில் வாசம் - ஏதும்
ஒப்பரிய இன்பநிறை தேசம் - என
தப்பனருள் மெய்பலன்கள் துய்ப்பதற்கும் உய்ப்பதற்கும்
இப்புவியில் நற்பவத்தோர் நேசம் - இங்கு
மெய்ப்பொ ருள்விளங்கும் பிரகாசம்
7.உலகில் மதம்
உலகில்ம தம்மிகுந்து உயர்வாய்த்த மைநினைந்து
உளறிப்பு லம்புகின்ற போதையர் - மெய்யின்
உளவைய றிந்திடாத பேதையர் - மறை
ஓதுமாநெறி நீதமேயறி
யாதுவாதுசெய் சேதமேபுரி
கலகமி கப்புரியும் பாதகர் - இந்தக்
கலியில்உ லவுகின்ற போதகர்
கலகப்பு வியினுக்குள் நலமிக்க ருளவென்று
கருணைப்பெ ருக்கினவ தாரமே - பவக்
கலியன்ம டிந்துவிழு நேரமே - தவ
மேவுமாதவ தேவதேவரென்
ஆவிநின்றொளிர் ஜீவநாயகர்
கடைக்கண்க னித்தஉப காரமே - இனிக்
கழிந்தது நம்பவப் பாரமே
திலகத்த மிழ்புக்குக் கலகம்த விர்த்தெமக்குத்
திகழ்மெய்த் திருவளித்த நாதமே - ஜீவன்
செழிக்கத்த வமளித்த போதமே - உயர்
தேவவாமண நாவலாளரை
ஓவுறாதுப ராவுஆர்வலர்
சிறக்கப்ப ணிவோம்ஐயர் பாதமே - இது
தெய்வம ணிஅனந்தர் நீதமே.
அலகிட்டு ரைக்கவொண்ணா தலைவர்தி ருப்புகழை
அனந்தர்குல ம்விளங்கப் பாடுவோம் - எங்கள்
அங்கம்கு ளிர்ந்துமகிழ்ந் தாடுவோம் - எழில்
ஆடல் நாயகர் கூடலால்களி
யோடு ஏழ்நிலை மாடமேறவே
அந்தமில் இன்பத்தில் கூடுவோம் - ஐயர்
அருளையென் றென்றுமே நாடுவோம்.
8.சாலை எனும் சோலை
சாலையெனும் சோலையாடவே - அன்புக்கலமாம் - விரிந்த நெஞ்சக்
கோலமயில் ஆவல்நீடவே - என்னை
அன்றுவந்து மணந்து நெஞ்சினில்
நின்றுஇன்று நிறைந் திலங்கிடும்
அண்ணல்புகழ் தன்னைப் பாடவே - உவந்துவந்து - பணிந்து நித்தம்
அன்பனந்தர் தம்முள் கூடவே.
வேலைசூழ்பு வியில்வந்ததே - என்சாமிபாதம் - என்இன்பநாதம்
விந்தையின்ப மிங்குதந்ததே - உயிர்
கண்டுகொண்டவர் தெண்டனிட்டிட
அண்டினோர்களி கொண்டுயர்ந்திட
மெய்யில்நாட்ட மிக்கமுந்துதே - பவக்குறைகள் - வினைக்குவைகள்
பொய்மலங்கள் யாவும் நந்துதே
குன்றுஈன்ற கன்றுநாங்களே - ஆகாயங்கை - ஓயாதுபொங்க
மன்றிலாடல் கண்டபாங்கிலே - எழில்
பொன்னரங்கர்தம் இன்னருள்பெற
வின்னவெங்கலி தன்னைவென்றிட
சாலைக்குடியாகிநீடலாம் - கனிந்துவந்து - பணிந்தெம்ஐயர்
தாளைப்போற்றிப் பாடியாடலாம்
ஒன்றுகுலம் தேவனும்ஒன்றே - எனத்தெளிந்து - உலகினுக்கு
ஓதிநிலை நாட்டிடும் நன்றே - பண்டி
ருந்தபேத மடிந்துமாய்ந்திடத்
தந்தமாவரம் சொந்தமாகிட
நன்றுநடம் செய்மறைக்குன்றே அதன்பொற்பாதம் பெருநற்போதம்
இன்றிலங்கும் கூற்றினைவென்றே
சிந்தையெந்தன் ஐயர்பாதமே - விழைந்திருக்கும் தழைந்திருக்கும்
சொந்தமென்று ஆண்டபோதமே - பெற்று
நைந்தகந்தையை பைந்தமிழ்க்குளி
சைந்துநீபயில் உய்ந்துவாழ்கெனத்
தந்தனந்தர் தந்தையாயினார் - வரந்தரவே - நிரந்தரமாய்
விந்தையாம்த வத்தினில் மேயினார்
நாடுகின்ற நெஞ்சு கொஞ்சமே - பெரும்பொருளைத் தரும்திருவைப்
பாடுகின்ற செஞ்சொல் கஞ்சமே - தெளி
வீடுசேர்நெறி கூடுவார்சிலர்
வாடுமாய்புகழ் தேடுவார்பலர்
ஆடிஆட்டும் அண்ணல்சேர்வலார் - அடும்மறலி - கெடும்நெறியில்
நாடிநித்ய வாழ்வில் சீர்கொள்வார்.
9.பூவுலகம்
பூவு லகத்தில் பாவமுற்றியே
பாழ்க்க டிப்பிருள் யாவும் - கலி
நாத்தி கமும்தீச் சாவும் - பொய்யும்
போலி ஞானமும் மேவும் - அவை
ஜீவ வாழ்வினைத் தாழ்வுசெய்திடக்
காட்டுத் தீயெனத் தாவும்
தேவர் போற்றிடும் யாவும் வல்லவர்
ஜெகத்தில் வந்தெமைக் கூவ - மெய்யில்
செழித்து உய்ந்ததெம் ஜீவன் - கலி
சிதறி ஓடியே போவன - தேவ
தேவேசர்திருத் தாள்கள் பற்றினோம்
சிந்தை பேரின்ப மேவும்
நாவலன் பெருந் தீவில் தென்றிசை
நாவலர்வருஞ் சீரே - தமிழ்ப்
பாவலர் புகழ்மேரே - ஐயர்
பேரருட் கெது நேரே - உயிர்ச்
சேவை கொண்டிடத் தேவை அண்டிடத்
தெய்வ மெய்ப்பதி சேரே
தீவினைக் கொரு சாவு வந்தது
ஜீவனுய்ந்தது இன்று - இதைத்
தெரிந்தோர் உய்பவர் நன்று - இறை
திருநடம்புரி மன்று - எங்கள்
தெய்வ மெய்வழி ஜீவன் உய்வழி
சேர்வோர் நற்குணக் குன்று
10.பக்தியொடு பற்று
பத்தியொடு பற்றிடில் பரவசம் வரும்நிசம்
பழவிஷம் பறந்தொழிந்து போகுமே - தெய்வப்
பாததா மரைகள் துணையாகுமே - இதைப்
பகுத்தறிந்தோர் யூகம்நல்ல யூகமே - முத்தர்
ஓதியபல வேதம் போற்றிடு
நீதியரெனும் ஆதிமான்மியர்
பாரெலாம் இனிதுய் விக்கும் ஆண்டவர் - தனிப்
பேரருள்தனை அனந்தர் வேண்டுவர்
வித்தகர்ப லரும்வானப் புத்தமுதம் உண்டுஉய்யும்
விந்தைநற் புவிமெய்ஞ்ஞான மன்றுதான் - இதில்
மேவிவாழ நற்றருணம் இன்றுதான் - இந்த
மேதினியில் உய்வழியிஃ தொன்றுதான் - திரு
வேல்துடிசங்கு சக்கரம்
வாளொடுதண் டாயுதம் வில்
முத்திரைச்சன் னதம்பல பெற்றதாய் - ஆதி
சத்தினிதாள் பற்றினோர்மெய் பெற்றனர்
அத்தனின்அ ருள்கனிந்து மெத்தவேபொ ழிந்துலகில்
ஆருயிர்செ ழிக்கும்நல்ல காலமே - தெய்வம்
அன்போடவ தாரம்திருக் கோலமே - பாதம்
அண்டினோர்பெ றுவர்தவச் சீலமே - இதில்
ஆவலோங்குவர் தேவரானவர்
ஜீவன்தூலமும் மேவுநித்தியர்
ஆர்கலியில் வந்தகிரே தாயுகம் - எங்கள்
ஆண்டவர்அ ருள்பெருகு வான்யுகம்
சத்தியநெறி யிதனைப் பத்திடுவோ ரைஇறைவர்
எத்திடும்ப ரவெளிக்குப் பாருமே - அண்ணல்
சீதளம லர்ப்பதத்தைக் காருமே - இன்பம்
சிந்தையில்பொ ங்கிமிகுந்து பூருமே - ஞான
தேசிகர்தரு ஆசிபொங்கிடும்
வாசிகொண்டிடு பூசிநின்றிடு
தேவதேவர் தாளினில் அடைக்கலம் - அது
சாவினை ஜெயிக்குமோர் படைக்கலம்
11.சாதிசமயம்
சாதிச் சமயச் சண்டை எங்குமே - ஆயின்
சமரசம் சாலையில் தங்குமே - மற்றும்
சர்வமத உண்மைவி ளங்குமே - இந்த
புவியாவினு மிதுபோலொரு
தவமேயுயர் திருவேறிலை
சீரோங்கு நற்பொன்னரங்கமே - என்று
பாரோங்கு வேதம் முழங்குமே
நீதிந டத்தவந்த தங்கமே - எங்கள்
நித்தியர் திருவருள் பொங்குமே - இதில்
நேசம்வைத் தோர்சபை அங்கமே - மெய்க்குச்
சகமீதினில் நிகரேதுசொல்
புகல்வேறிலை சுகவாரிதி
நத்தியபேர்நர சிங்கமே - பெறும்
நாயகர் அருளினில் பங்குமே
சாலைஎக் காளத்தின் சத்தமே - அதைச்
சார்ந்து துந்துபி முழக்கமே - சிரம்
தாழ்த்தி அனந்தர் வணக்கமே - தெய்வத்
திருவே சரணென வோதிடு
பெருவான்முக டுறுபேரொலி
தேன்மழை பெய்திடு நித்தமே - தூய
சித்தம் வரும்அறும் பித்தமே
பாலையு லகில்எழில் சோலையே - எங்கும்
பவஇருள் விடிந்திட்ட காலையே - தெய்வ
பாரிஜா தமலர் மாலையே - இதைத்
தெற்றெனத்தெரிந் துற்றநற்றவர்
வெற்றிபெற்றவர் கற்றகொற்றவர்
பாருலகிற் கொரே சாலையே - அத்தன்
பாதம்ப ணிவதுதான் வேலையே.
12.பரமர் புவியில் வந்து உதயம்
பரமர்பு வியில்வந்து உதயம் - தெய்வப்
பாதம்ப தியுமெங்கள் இதயம் - என்றும்
பரிமளிக் கும்நெஞ்சில் மதியம் - இனிப்
பாருல கெங்கினும் ஓரிறை ஓர்குலம்
பூரண வான்பதம் சேரும னுக்குலம்
பிரம்மத்தை அறிந்தவர் வதியும் - சாலைப்
பெருவழி அழியாத நிதியம்
இரவும்ப கலுமிங்கே வணக்கம் - அது
இறவாப்பெ ருஞ்செல்வத்திற் கிணக்கம் - இதற்
கெவருக்கும் வேண்டுதிலை சுணக்கம் - இனி
ஏகுமாநெறி சோகமிலாவரம்
ஏகபராபரர் போகமதேஅருள்
எந்தைத யைமலர்ந்து மணக்கும் - அஃது
எங்களு ளத்தைஉழு துணக்கும்.
சாலைவழியில் வந்த தெய்வம் - அங்குச்
சார்ந்தவர் அனைவரும் உய்வம் - தெய்வத்
தாளில் வணக்கம்மிகச்செய்வோம் - இனிச்
சஞ்சலமிங்கிலை வஞ்சமென்படர்
பஞ்செனவேயுற தஞ்சமடைந்தெழில்
சிந்தையு ருகிக்கண்ணீர் பெய்வோம் - தவச்
சீரோர்க னிந்தினிதி ணைவோம்.
தூலமுத் தியும்பெறல் கூடும் - ஐயர்
திருவெண்ணி உளம்களித் தாடும் - நாமும்
செய்பவ வினைஇரிந் தோடும் - உயர்
தெய்வ பரம்பரை மெய்வளர் சீருரை
வெய்ய பசுந்திரை நையஒரே துறை
ஜீவர்கள் மெய்வழி நாடும் - நெஞ்சம்
செழித்துக்க ளித்திறையைப் பாடும்.
13.தனிமுதல் ஓர்மேனி
தனிமுதல் ஓர்மேனி கொண்டு
தனிகை செல்வர் என விண்டு
தாரணியில் வந்த குருநாதர் - தலைத்
தாரணியும் மெய்ந்நிலையின் போதர் - இன்பத்
தமிழிலங்கிடு நமது பூமியில்
அமிர்த வாரிதி திமுதிமுத்திட
தனிப் பெருங் கருணை செய்யும் நீதர் - இவர்
சர்வமாமறைப் பொருளாம் வேதர்
இனிமை பொழி கற்பகமாம்
கனியுருக்கும் பொற்பகமாம்
ஈடில்புகழ் ஆதிஎங்கள் நேசர் - காம
கோடிமுடிப் பீடந்தன்னில் வாசர் - அன்பர்
நமைதமக்கென தமைநமக் கெனும்
இமையவர் திருக்குலத்தின் நாயகர்
அணிதிகழ் செண்பகமலர் வாசர் - மறை
மணிமொழி யருளும் உபதேசர்
முனியரசு எங்கள் சாமி
வினையறுக்கும் ஞான நேமி
மூதுரை யுகத்தோர் போற்றும் ஐயர் - சாலை
மெய்த்தமிழ் வழங்கும் தவ மெய்யர்
இறையவர் திருமறைகளின் பொருள்
நிறைத்தவத்தினில் உறைசிவ குரு
மெய்வழிச் சாலைவிளங்கும் துய்யர் - ஜீவர்க்கு
உய்வழி யருளும் கொடைக் கையர்
குனித்தபுரு வக்குழகர்
கோதில் பொன்னரங் கழகர்
கோடிகோடி யின்பந் தரும்நாயகர் - எங்கள்
குலமுழுதும் காத்தருள் செய்தாயகர் - உயர்
குருகுலாதிபர் பெருவரோதயர்
அருள்மகாநதி பெருகு வானிதி
அன்பெனும் பிடிக்குள்வளர் சேயகர் - எம்
அனந்தர்குல தெய்வமெனும் தூயவர்
14.உத்யோவனம்
உத்யோ வனமெனும் சோலை - அதில்
ஓங்குயர் மெய்வழிச் சாலை - எங்கள்
உயிருக்குயிர் எனுநற்றவர்
அயர்வற்றவர் உயர்நற்றுணை
நீதம் திருப் பாதம்
சத்திய தேவர்கள் வாழும் - பதி
சற்சனர் பேரின்பத் தாழும் - இங்கு
சதுர்வேதமும் தெளிவாகிடும்
மதிமாமணி அரசாள்கைசெய்
காலம் திருக்கோலம்
நித்திய வாழ்வருள் செல்வர் - நம்மை
நெட்டிடும் எமனைவெல்வர் - எங்கள்
நிறைவான்மொழி திருமான்மியர்
குருநாதரின் எழிலார்திருக்
காட்சிதவ மாட்சி
முத்தியளந்திடும் சாமி - இது
மெய்வணக்கம் நிகழ் பூமி - உயர்
மதிமேவிநற் கதியேபெற
விதிமாறுமெய் நிதியேயருள்
தேவர் அருள் நாவர்
15.மாதவர் மெய்ப்பதி
மாதவர் மெய்ப்பதி சாலை திருப்பதி நீதிநடவு செய்பூமி - உயர்
சீதன மிக்கருள் மூதுரை வித்தகர் கோளரி சாலையர் சாமி - பர
போகம் அருள்திரு வாமி - அருட்
தாகம் கொண்டோர்சிவ காமி - சிவ
யோகம் மிகுந்தவர் மூமீன் - இங்கு
வேதமணிக்குயில் கூவுமிசைக்குரல் நாதமொலிக்குது கேளீர் - எழில்
சீதமலர்த்திருப் பாதநடத்தினில் ஜீவன் களிக்குது பாரீர் - இனி
வேதனை யற்றது என்றே - உயிர்
நாதனைப் பற்றுமின் நன்றே - இறை
போதனை மெய்த்தமிழ் மன்றே - உயர்
விண்ணரங்கிங்கணே பொன்னரங்கம்மென வைகுண்டம் மெய்குண்டமாகி-எங்கள்
அண்ணல் கயிலைப் பதிவிட்டுப் பொங்கரு ளானதந்தமாக வந்தாரே - எங்கள்
ஆருயிர்க் குய்திதந்தாரே - இனி
நேரிதற் கெஃதென்று கூறே - உயிர்
சீர்பெற மெய்வழி சாரே - இந்த
மண்ணகத் தில்மத சாதிப்பிணக்குகள் மாய்ந்து ஒழிந்தது எங்கும் மக்கள்
எண்ணத்தில் பேதம் இலாதிரந் தேகிட எங்கணும் மெய்வழி தங்கும் - உயிர்க்
கெப்போதும் வாராது பங்கம் - இங்கு
எல்லோரும் மெய்ஞானத் தங்கம் - அவர்
இணையில்லா ஓர்மனச் சிங்கம் - அன்று
கல்லையும் செம்பையும் தெய்வமெனச் சொல்லி காட்டிலும் மேட்டிலும் ஓடி-அந்தோ
அல்லும் பகலுமாய் ஆறுகுளம் தேடி அதனைப் புனித மென்றாடி - பலர்
ஆயிர மாயிரம் கூடி - நல்
ஆருயிரும்மிக வாடி - நின்ற
அத்தனை மாய்கையைச் சாடி - யாரும்
வெல்லற்கரிய எமன்படரை எங்கள் மெய்த்தெய்வம் வந்திங்கு வென்று - மாந்தர்
செல்லற்கரிய திருப்பத மேவிடு சாகாவரம்தந்தார் இன்று - சர்வ
சன்னதா லங்கிர்தர் நன்று - அண்ணல்
சகல குணாதீதக் குன்று - ஐயர்
திருவடி போற்றுமெய் மன்று - இங்கு
என்னையர் மாண்பினுக் கோரிணையாவது எப்போது மெங்கணும் இல்லை - உயிர்
தன்னையறிந்து தலைவரைக் கண்டிடு தர்மம் இலங்கிடும் எல்லை - எங்கள்
தெய்வம் நடமிடும் தில்லை - சாவில்
நைவதெனும் தொல்லை இல்லை - சர்வ
சமரச மெய்வழி எல்லை - மிகும்
இன்னல்தரும் ஏழு பாதகங்கள் விட்டு ஏகனைச் சார்ந்திட வாரும் - எங்கள்
பொன்னரங்கள் மேனி செண்பக மேகமழ் பூத்தொளிராரெழில் பாரும் - கண்டு
பண்ணலங்காரர் தாள் சாரும் - தவப்
புண்ணிய மேமிகச் சேரும் - நல்ல
கண்ணியமே இது ஓரும் - இந்தப்
பாரெங்கும் உய்யருள் பாலிக்கும் தெய்வப் பதியிந்த மெய்வழிச்சாலை - வானின்
சீருங்களுக்கருள் உத்யோவ னம் என்னும் தேம்பொழிலாமிந்தச் சோலை - இனிப்
பொய்மை போம் மீளாத மூலை - நிறை
மெய்ம்மைப் பேரின்பமிக் காலை - இங்கு
தெய்வ வணக்கமே வேலை - நன்று
வாருங்கள் வாருங்கள் ஓருங்கள் சேருங்கள் வந்தெங்கள் தெய்வத்தைச் சார்ந்து-வினை
தீருங்கள் பாருங்கள் நேருங்களுக்கிணை பாரிலிலையெனத் தேர்ந்து- உங்கள்
பிறவிப் பிணி போகும் மாய்ந்து - தெய்வ
உறவுக் கணியாகும் ஆய்ந்து - உங்கட்
கறமிளிர் மெய்வழி வாய்ந்து
16.தாயும் மகளும்
தாய்:
ஆதியென் பாரிடம் காதல்கொண்ட டாயென்று
சேதியொன் றுகேட்டேன் - அடி
மாதர சிஉந்தன் மனதில்ம றைக்காதே
வாய்திற வாய்ம களே!
மகள்:
ஆதியென் நாயகர்க் கன்புகொண் டேனம்மா
அவரும்எ னைமணந்தார் - இப்போ(து)|r}}
அல்லும்ப கலும் அனல்மெழு காயினேன்
ஐயர்எ னைஅணைந்தார்
தாய்:
சொக்குப்பொ டிதூவி மக்குப்பெண் ணேஉன்னை
இக்கதிக் காக்கினரே - அந்தச்
செப்படி வித்தைசெய் தெப்படி ஏய்த்தாரோ
செப்படி என்மகளே!
மகள்:
சொக்கர்க டைநோக்கில் சிக்காத பெண்ணெந்தத்
திக்கிலும் இல்லையம்மா - உயர்
மெய்க்காதல் கொண்டுமி கக்கனிந் தேனிது
மேலான உண்மையம்மா
தாய்:
செந்தூர மாயப்பொ டியினைத் தூவிடும்
சித்தரென்றார் குயிலே - அவர்
எந்தஊர் தேசம்பெற் றோர்குலம் யாதென்று
இயம்பிடு வாய்மயிலே!
மகள்:
தந்தையி லியவர் தாயுமி லியெனத்
தானேமு தல்வரென்றார் - தகை
விந்தைய ழகினில் சொக்கினின் றேன்எனை
மேவிய ணைந்துநின்றார்
வானவர் மெய்குண்டம் வாழ்பதி யென்றுரை
மாட்சிமை கேட்டதுண்டு - அவர்
வந்தகு லம்இந்த மேதினி யாவிற்கும்
முந்தகு லமென்றிட்டார்
மகள்:
நீதியின் நாயகர் தம்மை அணுகியே
சாதியைக் கேட்டேனம்மா - அவர்
சாதிகளின் கர்த்தர் என்றுரை செப்பிடச்
சார்ந்துக ளித்தேனம்மா
என்னம தத்தினர் என்றவ ரைக் கேட்டேன்
எம்மதம் சம்மதமே - என்று
என்னையும் கொண்டனர் தன்னையும் தந்தனர்
என்மனம் சம்மதமே
தாய்:
தந்தையும் தாயுமி லாதத னிமுதல்
தானவர் என்றுரைத்தாய் - இனி
எந்தவித மாக நீயவ ரோடு
இணங்கிப் பிழைத்திடுவாய்
மகள்:
சிந்தையை விட்டு அகல்வதில்லை அவர்
சற்றும் பிரிவதில்லை - திரு
செந்துவர் வாயமிர் துண்டபின் ஏதும்
சுவைக்கரு சிக்கவில்லை
தாய்:
என்னைம றந்துற வோர்களையும் மறந்
தெப்படிச் சென்றாயடி - இப்போ
தன்னைம றந்தநீ ஏதேதோ பேசுதல்
சற்றும்பொ றுக்கவில்லை
மகள்:
தன்னைத்தந் துபிச்சி என்னைக்கொண் டார்அம்மா
சரிநிக ராகிடுமோ - இனிச்
சாகவி டேனுன்னை வேகவி டேனென்று
சாயுச்சிய மேற்றிவிட்டார்
தாய்:
செல்லக்கி ளியுன்னைத் தேடிவ ளர்த்தேனே
சற்றுமி தெண்ணவில்லை - யாரும்
வெல்லற்க ரியவர் வேதியர் நாயகர்
என்றுவி யம்புகின்றாய்
மகள்:
சொல்லத்தெ ரியலை என்அம்மை யேஅந்தச்
சோதியர் செய்மாயம் - மிகச்
சூதுடன் மெய்விளை போதகம் செய்தெந்தன்
பேதகம் மாற்றிவிட்டார்
தாய்:
தேனேசெ ழுங்கனி யென்மக ளேநீயும்
சென்றதெங் கேயுரைப்பாய் - எந்தன்
சிந்தைக லங்கி மயங்குது இப்போது
சீக்கிரம் சொல்கிளியே!
மகள்:
கானகத் திற்கெனைக் கூட்டிச்சென் றேஅங்கு
வானக மேற்றிவிட்டார் - இது
காணடி வைகுண்ட மென்றுசொல் லியெனை
மெய்குண்டத் தில்திணித்தார்
தாய்:
கானகத் தில்எங்ஙன் தாகம் தணிந்தனை
கான்சுனை யுண்டு கொலோ - அங்கு
போனகத்திற்கு என்ன செய்தீர்களென்று
புகன்றிடு என்மகளே!
மகள்:
வானகங் கையெனும் வாரிதிக்குள்ளெனை
வாரிஇ ழுத்துவிட்டார் - எந்தன்
மாரணம் தீர்ந்தது தாகமொ ழிந்தது
பூரணர் தண்ணருளால்
தாய்:
என்னடி நாமம் இலங்குது நெற்றியில்
ஏதடி பேரதற்கு - எழில்
மின்னுகி ரீடம்புனைந்துவிட் டாரோடி
மெல்லியலே குயிலே
மகள்:
பொன்னரங் கர்திரு மன்னுத வக்குறி
என்னவர் கிள்நாமம் - அவர்
பூட்டிய ரட்சிப்புச் சீராவெ னும்பெரும்
தேட்டுக் கிரீடம்மம்மா
தாய்:
ஏதேதோ பேசியும் பாடிக்க ளிக்கிறாய்
இன்பத்தில் ஆடுகின்றாய் - அது
எந்தனுக் கொன்றும் புரியவில் லைஇதை
எப்போது கற்றாயடி
மகள்:
வேதங்கள் ஆகமம் ஆரணம் யாவையும்
நாதர்தி ருவருளால் - என்னை
மெய்யாக ஓர்நொடிக் குள்ளேப டிப்பித்த
விந்தையெ ங்ஙன்உரைப்பேன்
தாய்:
கோயிற்சி லைகளைக் கும்பிடு வாய்பல்
குளங்கள் தலங்களெல்லாம் - அன்று
கண்டும கிழ்ந்ததை விட்டுவிட் டாயடி
காரணம் சொல்கிளியே!
மகள்:
காரணம் பூரணம் ஆரணம் யாவும்என்
கணவர்கு ருபரர்காண் - எந்தன்
கண்கண்ட தெய்வத்தைக் கண்டபின் வேறொன்று
காண நினைப்ப துண்டோ?
வித்தகர் பாதம் வணங்கிய கையினி
வேறெதையும் வணங்கா - எந்தன்
சித்தம்நி றைந்தவர் செண்பக மேனியர்
செல்வர்க்கி ணையு முண்டோ?
முத்தர் முகுந்தர் புகுந்த மனைக்குள்ளே
மற்றவர் வந்துறவோ - ஒரு
எத்தில் பரலோகத் தேற்றிவிட் டாரிதற்
கென்னிணை சொல்வா யம்மா!
தாய்:
பாலைநெய் யைவிட்டுப் பத்திய மென்றேதோ
பேசுகின்றாய் மகளே - இன்று
காலைப்பல காரம் எமனைப் போடென்று
கடும்திடம் பேசு கின்றாய்
மகள்:
சாலைவ ழியில்என் கோலக்க ணவர்தான்
செப்பிய பத்தியங்காண் - உயர்
சீலச்செந் நெறியில் ஏமன்அ மல்இனிச்
செல்லாது காணம் மையே!
தாய்:
நெற்றியில் நீறுபுனைந்திருந் தாயின்று
நீறுபு னைந்திலையேன் - இன்னும்
மற்றுஞ்சி லாசாரம் நீமறந்தாய் இந்த
மாற்றம தேன் மகளே!
மகள்:
மங்கும்தி ருநீற்றை மாற்றிக்கங் காளர்
மறையாத நீறுமிட்டார் - அது
எங்கும்பி ரகாசம் எமனஞ்சு வாசம்
இலங்குதென் நெற்றி யிலே
தாய்:
அத்தகு மெய்ப்பதம் பெற்றனை உய்ந்தனை
ஆரணங்கே மகிழ்ந்தேன் - வான
வித்தகர் தன்னை மணந்தனை வெவ்வினை
விட்டுவீ டுற்றனை காண்.
மகள்:
மெய்வழி தெய்வத்தின் மாண்பினுக் கீடிந்த
வையகத்தில் வானிலில்லை - உயர்
உய்வழி அண்ணல் உயர்திருப் பாதம்
உவந்துச ரண்செய் எல்லை
மெய்ம்மையை வைத்தெனை மிக்க மயக்கியே
மேன்மையின் ஆண்மை செய்தார் - எந்தன்
பொய்ம்மை மடிந்திடப் புதுமை விடிந்திடப்
பேரருள் வாய்மை பெய்தார்
ஓரிரவில் உத்தி யோவனத்தில் தவத்
தோர்பலர் சூழ்சபையில் - இதக்
கூர்க்கத்தி கொண்டுநெஞ் சைபிளந் தேபித்
தெடுத்துவிட் டார்விரைவில்
நான்நரன் என்றுநி னைத்திருந் தேனெந்தன்
நாயகர் என்னையங்கே - உயர்
வான்நர னாக்கித்த லையில் கொம்பொன்றை
வளர்த்துவிட் டாரம்மையே
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டு
அருட்திரு வாய்திறந்து - ஜக
மாயிருள் மாயை மடிந்துவி டிந்திட
மந்திரம் ஒன்று சொன்னார்
கோடிவி னாவுக்கும் தேடிவி டைதரும்
ஓர்மொழி கீதையன்றோ - இதை
நாடிநின் றார்க்கு நமனில்லை யென்றதோர்
நல்வரம் தந்து நின்றார்
மந்திர மெல்லாம் உருவுகொண் டங்ஙணே
வந்துவை யாளியிடும் - இது
எந்திர மென்று எடுத்தருள் பாலித்த
தென்பெரு மான் தயவே
ஆணென எண்ணியே அங்குவந்த தோர்தமைப்
பெண்ணென ஆக்கிவிட்டார் - எழில்
பூணணி யாம்அறி வாபர ணக்குவை
பூட்டிம ணந்து கொண்டார்
இருவரும்::ஆருயிர் நாயக ராகிய தெய்வமே
அண்டி அடிபணிந்தோம் - எமன்
அச்சமொழிந் துங்கள் இச்சையொன் றேநெஞ்சில்
மிச்சமு றக் கனிந்தோம்
நேரும தின்னருளுக்குநி கரிந்த
நீள்புவி வானிலில்லை - உயர்
நித்தியர் நும்பதம் பத்திய பேர்கள்போல்
உத்தமர் யாரு மில்லை
சீரும்சி றப்புகள் செல்வமெல் லாம்உங்கள்
சீதம லர்ப்பதமே - அதைச்
சிந்தையி லெப்போதும் வந்திப்ப தாலின்பம்
முந்திப்பொ ழிந்தி டுமே
தீரும்ப வப்பிணி சேரும்த வக்கனி
தெய்வம்உங் கள்தயவே! - அருள்
தேக்கும்ஐ யர்திரு வாக்கிய ஆரமிர்(து)|r}}
ஊக்கும்ம ழைபெ யவே
ஆயிரம் கோடி அருக்கர்இ ணையோ
அருட்பதப் பொன்னொளிக்கே - அதை
அனந்தர்ப ணிந்துசி ரத்தில் புனைந்தினி
தேகும்ப ரவெளிக் கே
தாயின்மி குந்த கருணைத் தயவுடை
தனிகைவள் ளல்குமரர் - அருட்
தாளைவ ணங்கிடும் பேறுபெற் றோரெல்லாம்
தன்னிக ரில் அமரர்
நேயமெ லாம்உங்கள் நற்பதத்தில் வைத்து
நெஞ்சுக ளித்திருப்போம் - அந்த
நீதிந டவாதி மூலநே ரம்வரை நின்று¤
நிலைத் திருப் போம்
தேயமெ லாம்தெய்வ மேஉங்கள் சீர்புகழ்
செப்பிம கிழ்ந்திடுவோம் - எங்கள்
சாலையப் பாஅருள் வேலையப் பாஎனத்
தாழ்ந்து பணிந்திடு வோம்.