திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/084.திருப்பெயர் நேரிசை வெண்பா


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



84.பெயர் நேரிசை வெண்பா தொகு

இலக்கணம்:-

ஆயிரமாயிரம் (ஸகஸ்ர) நாமங்களுக்குரிய எல்லாம்வல்ல எம்பெருமானார் திருப்புகழ், பெயர் நேரிசை வெண்பா எனப்படும் நாற்பது பாடல்களால் பாடப் பெறுவது.

பெயர் நேரிசையே பாட்டுடைத் தலைவன்
பேரைச்சார நேரிசை வெண்பா பேசலே
- பிரபந்த தீபம் 63
இன்னிசை போல இறைவன் பெயர் ஊர்
தன்னின் இயல்வது தான் நேரிசை யே
- இலக்கண விளக்கம் 830

என் உயிருள் நடம் புரியும் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருநாமங்களைப் பெயர்நேரிசை வெண்பாவால் பாடிப் புகழ்வது இப்பனுவல்.

திருப்பெயர் நேரிசை வெண்பா

காப்பு

நேரிசை வெண்பா

எல்லாம்வல் லாரிறைவர் எவ்வுயிரும் உய்யவென்று
நல்லாறு மெய்வழியை நாட்டுதற்குத் - தொல்புவியில்
மெய்ம்மேனி கொண்டதுகாண் விள்ளும் திருநாமம்
உய்வுரைக்க ஒண்மலர்த்தாள் காப்பு.

நூல்

நேரிசை வெண்பா

ஓர்நாமம் ஒருருவம் ஒன்றுமிலார் என்றுமுளார்
சீர்நாமம் ஆயிரங்கள் செப்பலாம் - பாருலகீர்
நாமம் நவின்றோர்க்கு நற்கதிசெய் நற்றிறத்தார்
சேமம் சிறக்கும் தெளி. (1)

ஆமனு என்னுமவர் ஆதியென்பார் அன்னவரின்
நாமம் மொழிந்துய்ந்தார் நானிலத்தார் தாமோர்
திருவுருவம் கொண்டார் குருதிருவாய் விண்டார்
அருள்கனிந்து ஆண்டார் அறி. (2)

நீதி நடத்தவந்த நித்தியராம் நின்மலர்காண்
மேதினியிற் போந்தாரே மெய்ம்மணத்தார் - மாதவத்தார்
மாண்டாரை மீண்டெழுப்பும் மாவலியர் மெய்ச்சாலை
ஆண்டவரென் றென்றும் அறி. (3)

தினம்புதியர் ஞானமுயர் செங்கோல் செலுத்தும்
அனந்தர் குலத்தலைவர் உத்யோ - வனந்தனிலே
மேலை வெளியதனின் மெய்ம்மருந்து கொண்டருள்வார்
சாலைஆண் சற்குருவாம் சாற்று. (4)

நீதி நெறிதவறா வேத முதல்வர்தமை
ஆதி மனுமகனென் றார்நாமம் - மூதுரைஞர்
சீரும் சிறப்புயரச் செப்பிப் பதம்போற்றும்
பாரோர் பெறுமெய்ப் பரிசு. (5)

தென்னன் பெருந்துறையார் தேவாதி தேவர்தமைப்
பொன்னரங்கர் என்றினிது போற்றிடுவார் - தன்னின்
விழியழகு காட்டி மொழியமுதம் ஊட்டும்
எழிலரசர் எங்கோன் இவர். (6)

சோகமறக் கைலாயம் சேர்க்கும்எம் ஐயர்தமை
ஏக பராபரரென் றேற்றுமின்கள் - தாகம்
தணித்தெம்மை ஆண்ட தபோதனரின் மாட்சி
கணித்தற் கரியதெனக் கூறு. (7)

எம்பிரான் எம்மிறைவர் என்சாமி என்துரையைத்
தம்பிரான் என்றுலகோர் சாற்றுவதால் - நம்பும்
அடியவர்க்கு மெய்ம்மை விடியவைக்கும் வேந்தர்
படியளக்கும் தெய்வம் பணி. (8)

தீர்க்கத் தரிசியர்கள் சிந்தையெதிர் நோக்கும்
மார்க்கநா தர்என்னும் நாமத்தார் - கார்க்கும்தீ
கைகொண்ட மெய்கண்டார் கர்த்தாதி கர்த்தரென்பர்
உய்வுண்டார் ஒப்பும் இறை. (9)

தெள்ளத் தெளிவாகச் சீரோர் பணிந்துபுகழ்
வள்ளற் பிரானெங்கள் மாமணியர் - உள்ளம்
நெகிழ்ந்துருகிப் போற்றி மகிழ்ந்திருக்கும் நல்லோர்
அகந்துலங்க ஆளும் இனிது. (10)

அகத்துறைசார் மெய்யர் அகத்துறைந்து செப்பும்
ஜகத்குருவைச் சார்ந்தோர் வணங்கும் - மகத்துக்கள்
போற்றிப் பணிந்திடுவர் ஏற்றி இறைஞ்சிடுவர்
கூற்றைவெல் ஆற்றலவர் கோன். (11)

மந்த்ர சயனத்தேர் வாகனமூர் மோகனத்தார்
எந்த்ரவள் ளல்எங்கோன் ஏரார்ந்த - இந்த்ராதி
தேவர் பணிந்துய்யும் தேவாதி தேவரிவர்
மூவுலகும் போற்றும் பணிந்து. (12)

பூந்துறைநன் னாடரெனப் போற்றுவர்காண் எம்முளத்தில்
பூந்துறையும் பொன்னரங்கர் பொற்பதியர் - ஏந்தல்
பெயருரைப்பார்க் கென்றும் துயரறுப்பார் இன்னோர்
இயல்வைகுண் டத்தெம் இறை. (13)

பனிமதிமங் கைபங்கர் பாரோர்க்கு என்றும்
இனிமைகனி இன்னமுதம் ஈவார் - கனிமொழியால்
சாவா வரமருளும் சாயுச்யர் இன்னவர்தாம்
மூவா முதல்வரெனச் சொல். (14)

முத்திப் பதம்வேண்டி வந்தோரை உய்வித்த
அத்தன் அறவாழி ஆன்றகுரு - சித்தர்
தலைவரெனச் செப்பும் கலைக்கதிபர் கூற்றின்
அலைவறுத்து ஆள்வார் அரன். (15)

சாயுச்ய பிரம்மமெனச் சாற்றும் புகழ்நாமம்
ஆயகலைக் கின்னோர் அதிபர்காண் - வாய்திறந்து
ஆலம்காட் டண்ணல்திருக் கோலம்கண் டோர்க்கில்லை
காலபயம் காப்பர்எம் கோன். (16)

ஓங்காரக்கோணத்துள் உற்ற மணாளரென்று
பாங்கறிந்து பத்திசெயும் பண்பாளர் - ஈங்கெவரும்
தேங்கார் தியங்கார் மயங்கார் தனையறிந்து
ஓங்காரம் காண்பர் இனிது. (17)

கனகவன மன்னரெனக் கற்றறிந்தோர் ஏற்றும்
கணபதியர் தெய்வப் பிரான்காண் - அனந்தரெனும்
ஆன்றோர் குலத்தலைமை அண்ணல் பதாம்புயத்தை
சான்றாண்மை பொங்கப் பணி. (18)

பார்பதிம ணாளரென்று பண்ணெழிலார் மன்னவரின்
சீர்பதியைச் சார்ந்தோர் சிறப்புற்றார் - ஆர்கலியில்
ஞாலத்தில் நம்பெருமான் நல்லடியை நம்பியவர்
காலத்தை வென்றார் உரை. (19)

இளரவி முத்தரசு எங்குலத்துத் தங்கம்
உளம்புகுந்து ஆண்டாரே சாலை - வளவரசர்
பாதம் பணிந்தோர்கள் பேதமிலா துய்ந்தாரகாண்
நாதம் நலம்நல் கலால். (20)

வாலகுரு மெய்யிறைசூல் சீலமுயர் சாலைஐயர்
கோலம்கா ணாக்கண்ணும் கண்ணாமோ - காலம்
கடந்தாரென் கண்மணியர் விண்கனியைக் காத்தார்
கடந்தார்காண் கூற்றன் அமல். (21)

தருமதுரை தங்கமகா மேருவெமை ஆண்டார்
அருமையறிந் தோர்பெறுவர் மாட்சி - குருதயவு
கொண்டோர்க்கென் றும்மீட்சி கூடும்ஜீ வன்சாட்சி
அண்டர்செங் கோலாட்சி காண். (22)

பூமிமிசைப் போந்தருள்செய் பொன்னாடர் சாலையர்க்கு
நேமியர்என் றோர்நாமம் நன்குறலால் - சேமம்
செழிக்க வரமருளும் செம்பொருள்காண் எம்மான்
மொழிக்கனியின் இன்பம் நுகர். (23)


செம்பொருள்மெய்ச் செம்மேரு தெய்வபிரான் சாலைவளர்
எம்பெருமான் மாட்சிக் கிணையுளதோ - நம்பியபேர்
காலன் பயம்கடந்து ஞாலவாழ்வில் உயர்ந்து
சீலம்கொண் டுய்மின் சிறந்து. (24)

வாடா நெறிமுழங்கும் வள்ளல்பிரான் தெய்வமணி
கோடா யிதம்கொண்டு கோதகற்றும் - தேடாப்
பெருஞ்செல்வம் ஈயப் பரம்பொருளோர் மேனி
குருகொண்டல் ஆனார் கனிந்து. (25)

அத்தன் அருமறையார் முத்தன் அறம்வழங்கும்
சித்தர் திருவடியார் சிந்தையுறை - பித்தர்
பரவெளிசேர் என்றெம்மை எத்திவிடும் எத்தர்
சிரபுரம்வாழ் புத்தர் பிரான். (26)

ஆதியருட் ஜோதியெனும் அம்பலவர் எம்பெருமான்
நீதிநிறை நித்தியர்மெய்ப் பத்தியராம் - வேதமணி
தென்னாடர் இந்நாட்டில் வந்தருள்செய் ஆண்டவர்கள்
பொன்னாடர் என்றே புகல். (27)

குன்றுடையார் கோதகல்சீர் கோத்திரத்தார் சற்சனர்சார்
மன்றுடையார் மாதவர்கள் வாழ்த்தியருள் - நன்றுடையார்
என்றென்றும் எம்முயிருள் நின்றொளிரும் நீதியுரு
ஒன்றுடையார் என்றே உரை. (28)

ஞானமணி யாபரணம் வேணும்வரை பூணவருள்
வானரசர் வள்ளல் வரோதயராம் - கானகத்தே
ஒன்றுகுலம் ஒன்றிறைவன் என்றுநிலை நாட்டியவர்
தென்றிசையின் கைலாயர் காண். (29)

இசைந்தமதி யேறிவிளை யாட்டயரும் ஞானம்
நிசந்தவழும் நித்தியர்கோ லோச்சும் - பசுபதியர்
மெய்வழியை உய்வழியை செய்வழியாய்க் காட்டியருள்
தெய்வபிரான் தானே துணை. (30)


ஒண்பொருளைத் தன்பொருளாய்ப் பண்புளர்க்குத் தந்தவரை
செண்பகப்பூ வாசமொளிர் செந்திருவை - விண்மணியர்
என்குருவைக் கண்மணியை ஏரார்மெய்ச் சாலையண்ணல்
பொன்குருவைப் போற்றும் இனிது. (31)

மந்திரத்துக் காதியரை மார்க்கமணி வானரசை
சந்திரக லாநிதியைச் சார்ந்தோர்கள் - விந்திரத்தால்
வெற்றியைக்கைப் பெற்றார்கள் வெய்யஎமன் வாதனைதீர்
நற்றவராய் நின்றார் நயந்து. (32)

திருமறையோன் மெய்யைத் தருமறையோன் சாலைக்
குருபரராய் வந்தருள்செய் கோமான் - திருவருளால்
வையகத்தோர் வானகத்தோர் ஆயினர்காண் மெய்வணக்கம்
செய்யகத்தார் உய்வார் தெளி. (33)

பனிமதிமங் கைபங்கன் பாதமலர் பற்று
இனிக்கதியிஃ தொன்றே எனத்தேர் - கனிகுலுங்கும்
கற்பகத்தார் சொற்பதத்தால் பொற்புயரும் அற்புதமாய்
வெற்புஎமன் வீயும் விரைந்து. (34)

நிபுணமணி நித்தியராம் நன்மார்க்க நாதர்
அபுரூப மானஅற வாழி - சுபமோங்கு
சாலை வளநாடர் தாள்பணிந்தோர் ஏகுவர்காண்
மேலைவெளி மெய்யுலகிற் கே. (35)

கருமான மெய்க்குரவர் கர்த்தர்எங் கோமான்
திருவான நற்றாளைப் பற்றில் - பெரும்பாக்யம்
சற்குணமார் பற்குணத்தார் சாலைக் குருகுலத்தோர்
பொற்பதத்தார் என்றினிது போற்று. (36)

கூடத்த பிரம்மமெனும் கொற்றவர்எம் நற்றவரைக்
கூடத்தான் காசினியில் போந்தோமால் - தேடத்தம்
சிந்தை விழைந்தோர்கள் எந்தை தயவாலே
விந்தை விழைந்துய்கு வார். (37)


அமலாண்மி கர்என்று அண்டர்தொழும் மேனி
கமழ்செண் பகமலரின் வாசம் - அமைந்திலங்கும்
கண்டவர்கள் வான்புகழை விண்டவர்கள் ஏந்தலுக்குத்
தொண்டுபுரி தூயவர்கள் செப்பு. (38)

விந்தைமிகு வான்புகழார் மெய்த்தவத்தார் மெய்த்தெய்வம்
எந்தைபிரான் ஈடில் புகழ்க்கிணையோ - சிந்தைவளர்
தெய்வத் தயாநிதியே சிந்தை வளர்பதியே
உய்வை வழங்கும் பொருள். (39)

திருமணியே! மெய்ம்மையருள் தீன்மணியே! சீரோர்
பெருமணியே! ஆன்மநீயே! அன்பே! - திருமிகுந்து
என்னுயிரில் தான்கலந்து தன்னுயிரில் தான்மலர்ந்த
பொன்னங்கர் நும்தாள் சரண். (40)

திருப்பெயர் நேரிசை வெண்பா இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!