திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/073.யுக உதயப் பரணி


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



73.பரணி தொகு

இலக்கணம்:-

அமர்க்களம் பாடும் பொருண்மையுடையது இந்நூல்.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுத்தது பரணி
- இலக்கண விளக்கம் 838
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட
ஆண்டகை யைப்பரணி யாய்ந்துரைக்க - ஈண்டிய
நேரடியே யாதியா நீண்டகலித் தாழிசை
ஈரடிகொண் டாதியுட னீறு 
- வெண்பாப் பாட்டியல் 60
போர்முகத் தாயிரம் புகர்முகக் களிற்றைக்
கொன்ற வனைத்தலை மகனைக் கொண்டு
கடவுள் வாழ்த்து கடைத்திறப்புப் பாலை
காளி கோயிலும் பேயொடு காளியும் 
காளியொடு பேய்களு முரைக்கத் தானகஞ்
சாற்றக் கருதிய தலைவன் கீர்த்தி
புலப்பட வவன்வழி யாகப் புறப்பொருள்
தோன்றப் போர்த்தொழில் தொடங்க விரும்பல்
என்றிவை யெல்லாம் இருசீர் முச்சீர் 
அடியொழித் தேனைய வடிகொடு வீரடிப்
பஃறாழிசையாற் பாடுவது பரணி
- முத்துவீரியம் 1040 
திரமுறுகொச் சகப்பாவில் இரண்டடி ஏறாமல்
சேர்காப்புக் கடைத்திறப்புப் பாலைச்சீர் காளி
அருமனைச் சீர்பேய் நிலைபேய் மொழி காளிமொழியே
அரசன்சீர் எழுச்சிபொர லடுதல்களம் வேட்டல்
மருவுபுறப் பொருள்சிறப்ப ஒருதினத்து ஆயிரம்மா
வதைத்தவர்க்குப் பாடுதலே பரணி
- சுவாமி நாதம் 171
கடிகைதிரி முக்காலும் கைமாச் சகத்திரந்
தடிசேனை யானுக்குச் சாற்ற - னெடியபஃ
றாழிசையி ரண்டடியே சாராதி யேயினையீ
றாழ்தல் வணக்க முறை
- பிரபந்த தீபிகை  -45

கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என்னும் மும்மதங்களும் பொழியும் முரட்டு மதயானைகளிலும் கொடிய சாதி, மதம், இனம், மொழி, நிறம், தேசம் என்னும் வேறுபாடுகள் மிக்க வெறியர்கள்; புலை, கொலை, களவு, கள், காமம், புகை, சினிமா, ராஜதுரோகம் என்னும் அஷ்டமா பாதகங்கள்; ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலாதிகள் உயர்குடிப் பிறப்பு, உயர்கல்வி, உயர்ஒழுக்கம் உடையோம் என்னும் செருக்குற்ற முக்குறும்பினம் என்னும் மதயானைகள் போன்ற குணங்களையுடைய நரர்களை வென்று மக்களாக்கி, மக்களைத் தேவர்களாக்கி உலகம் தோன்றிய நாள் தொட்டு இதுகாலம் வரை சொல்லளவாக இருந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உத்தம சித்தி உயர் கொள்கையைச் செயலாக்கி, நிறைவேற்றி, வெற்றிமுகடேறிய பன்னிரு தேவசன்னதங்களைப் பெற்ற பெருமான் அதிவீராதி வீரராகிய எங்கள் குல தெய்வ தேவேசர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருட் பெரும்புகழைப் பரணி என்னும் பனுவலாகப் பாடப்பெற்றுள்ளது. போர், யுத்தம் என்பவை ஒரே ஒருவனின் அற்ப மதிப்புக்காக - பேராசைக்காக; தானென்ற அகங்காரத்திற்காக இளம் வயதுள்ள மக்களைக் காவுகொடுத்தல் என்னும் செயல். அப்போர்களில் உயிர்வதை, துன்பம், அவமானம், வெறி, கொடுமை, அகங்காரம், ஆணவம் ஆகியவையே வளர்வுறுகின்றன. ஆயின் எம்பெருமான் திருவருளால் நிகழும் அகிம்சாயுத்தத்தில் சாந்தம், அமைதி, பேரின்பம், சுசீலம், ஒழுக்கம், சற்குணம், ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை, மரணமிலாப் பேரின்பசித்திப் பெருவாழ்வு ஆகியவை வளர்வுறுகின்றன. பரணியில் கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரஜாலம், இராசபாரம்பரியம், பேய்முறைப்பாடு, அவதாரம், காளிக்குக்கூளி கூறியது, போர்பாடியது, களம்பாடியது, கூழ் அடுதல் என்னும் வரிசையில் பாடப்பெற்றுள்ளதை முறையே தெய்வ வணக்கம், திருக்கடைத்திறப்பு, சாலை உத்யோவனம் பாடியது, தேவஆலயம் பாடியது, திருஅவதாரத்திருநாள், தீர்க்கத் தரிசிமார் திருவுரை, தேவர்கள் வேண்டுகோள், பாரம்பரியம், சாலை ஆண்டவர்களின் அருட்திரு மேனியின் எழில், சாலை ஆண்டவர்களின் திருவாய் மலர் உரை அமுதம், சாலை ஆண்டவர்கள் மகிமை, அனந்தர்களைப் பாடியது, கலிசங்கார உலக மகாயுத்தம், யுகப் பிரளய காலம், பாடீரோ ஆடீரோ, அமுது படைத்தல், திவ்வியத்திருவடிகளே சரணம் என்னும் தலைப்புகளாகப் பாடப் பெற்றுள்ளன.

யுக உதயப் பரணி

தெய்வ வணக்கம்

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருப்பெரும் புகழ் அகில உலகெங்கும் பரவுதல் வேண்டி அவர்களின் பெருமையை விதந்தோத நாவன்மை வேண்டி வணங்குதல்.

அருட்சிவ வணக்கம்

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

அருள்பொழியும் திருமுகத்தார் ஆதிசிவன்
மெய்வழியர் சாலை தெய்வம்
பொருள்வழங்க மருள்மடியப் பொன்னுலகம்
நனிவிடிய உயிர்கள் உய்ய
திருமிகுமெய் மணிமொழியர் திகழ்பதும
மலர்த்தாள்கள் சிரத்தே பூண்டு
குருவடிவாய் வருமணியைக் குவலயம்கார்
பரசிவத்தை வணங்கும் காப்பே!
(1)

திருமால் வணக்கம்

கலித் தாழிசை

பிறவாழி தனைக்கடக்கும் பெரும்புணைமெய்த் திருமாலே!
அறவாழி தனிற்றுயிலும் அனந்தருளந் தனில்சயனா!
பிறவாமெய் முதற்பொருளே! புகலரிய புகழ்பரவ
திறவாழி தரவிழைந்து திருமலர்த்தாள் வணங்குதுமே! (2)

ஆதியுகத்தயன் வணக்கம்

கலித் தாழிசை

அனைத்துலகும் படைத்தருள்செய் அருமறைமெய் முதல்!உருகி
நினைத்துவணங் கிடும்அனந்தர் நினைவகலா நிறைமொழியர்
தனைத்தரும்பல் லாயிரமாம் எழில்முகத்தார் திருபிரம்மம்
எனைத்தமது திருத்தாளில் ஏன்றபுகழ் பரவுதுமே! (3)

ஞான விநாயகர் வணக்கம்

கலித் தாழிசை

கணபதியாய் முழுமுதலாய் திருஆன முகமுடையாய்
குணபதி விநாயகராய்க் குருவடிவாய் விசுவமதாய்
மணமலர்வாய் அருள்மொழியாய் எமதுயிருட் சுவையமுதாய்
பணர்விரிகற் பகத்தருமெய் வழியிறையைப் பணிந்தனனே! (4)

ஞான சூரியர் வணக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எழுகோடி கதிரவனும் இணையில்லா ஒளிதுலங்கும் ஞான சூர்யர்
தொழுதெழும்தம் மகவுகளின் வினைபிறவித் துயர்கடத்தும் மெய்யாம் தெய்வ
முழுமுதலே! எழில்சாலை ஆண்டவரே! மாண்புயர்த்தும் புகழைப் பாட
விழைகுதுமெய் எளியவுளம் வரமருள்வீர் வழுத்துகின்றேன் மலர்த்தாள் போற்றி! (5)

கலைமகள் வணக்கம்

கலித் தாழிசை

அறுபதும் நான்காம்கலைகள் அதன்மேலோர் கலையாகும்
இறவதிலா சாகாத கலையரசி எழில்மெய்வழி
மறைமுதல்வி மணிமொழியாய் வனத்துறைமெய் யனந்தருளத்
துறைமலர்வெண் பதுமம்உறை உத்தமிதாள் துதித்தனனே! (6)

அகிலாண்டேஸ்வரி வணக்கம்

கலித் தாழிசை

அண்டத்தும் அகிலத்தும் அருவுருவாய்த் திருவுருவாய்
பிண்டத்துள் உயிர்க்குயிராய்ப் பிறங்கிடுமெய் வழித்தாயே!
மண்டினிஞா லத்தெங்கள் மயக்கொழித்த மலைமகளே!
தெண்டனிட்டுன் திருமலர்த்தாள் துதிப்பதென்றன் திருப்பணியே! (7)

திருமகள் வணக்கம்

கலித் தாழிசை

ஒருமகளே! உலகனைத்திற் கொழிவில்லா நிதியருளும்
திருமகளே! மறையனைத்தின் தெளிவருளும் திருவோங்கும்
பெருமகளே! பொன்னரங்கப் பெருமன்றில் திருனடஞ்செய்
அருள்மகளே! அணியிழைமெய்ப் பதம்பரவத் திருஅருளே! (8)

வரம் வேண்டுதல்

மதகரியா யிரம்செறுத்தோர் வலம்புகழும் துறைபரணி
மதவெறியும் குலவெறிபல் லாயிரவர்க் கேதவிர்த்த
இதமுயர்மெய் வழிஇறையே! இணையில்லாத் தற்பரன்நீர்!
கதியுமது திருவடியே கடையனின்நா குடிபுகுவாய்! (9)

பழுத்தமறைப் பெரும்பொருளே! பிணைநிகரில் திருவுருவே!
எழுத்துவிதி அழித்துமதி எழுத்தழுத்திப் பதித்துஅறம்
கொழுத்தஅருட் திருச்சபையின் தனித்தலைமைப் பெரும்பதியே!
வழுத்திடயிப் பரணியெனும் பனுவல்சொல வரமருளே! (10)

திருக்கடைத் திறப்பு

உலகனைத்தையும் ஒருகுடைக் கீழ் அரசோச்சும் வலிமை மிக்க முடி புனைந்த ஏகச் சக்ராதிபதியாயினும் வேத ஆகம சாஸ்திர புராண விற்பன்ன கலைக்ஞானபண்டிதராயினும் மற்றும் எத்திற வல்லமை படைத்தவராயினும் அனைவரும் எமன் கையடக்கமே. அத்தகைய எமனின் வல்லமையை முறியடித்து ஜீவ சுயராஜ்ஜியம் என்னும் சாகாவரத்தை அருளும் மகாவீராதி வீர வீரபோக வசந்தராயர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள். அவர்கள் திருவருகை தந்து அருள் பாலிக்கும் திருவருளாரமுதத்தை செவி வாயாகவும் நெஞ்சுகளனாகவும் கொள்ள செவிக்கதவையும் இதயப் பேழையையும் திறந்து வைக்க யதார்த்த இதயத்தினரை வேண்டுதல் கடைத் திறப்பு என்னும் பகுதியாகப் பாடப் பெறுகின்றது.

வானவர் மனுமகன் மகதியே
மெய்வழி ஆண்டவர் வருகையே
தேனகம் எழில்பெற அருள்தரும்
செவிமட லெனும்கடை திறமினோ!
(1)

மோனச பாபதி சாலையர்
முழுமுதல் இறைதிரு வுளமது
மானுடம் நலம்பெற அருள்தர
மதிபெற உளம்கடை திறமினோ!
(2)

எமனெனும் இடர்கடந் துயிரது
இறையவர் பதந்தனில் இனிதுற
இமையவர் அருள்தர வருகுதும்
இதயமெ னும்கடை திறமினோ!
(3)

அமிர்தது பெருகிடு நதியது
அரங்கரென் றொருபெயர் அதுகொடு
நமதுயிர்ப் பயிர்வளர் கழனியை
நிறைத்திடும் உளமடை திறமினோ!
(4)

வேறு

கலியன் செய்கொடுமை புவியில் விஞ்சியது
களைய மெய்வழியர் ஆண்டவர்
வலிமை கொண்டுஇவண் வருகை தந்தருளும்
வணங்கி உய்யஉளம் திறமினோ!
(5)

பொலியும் பொன்னடிகள் புவியிலின்ப நடம்
புரிய எங்களுயிர் தழையவே
பலிகள் கொண்டெமது தலைகள் மாலைகொள
பரமர் வந்ததுளம் திறமினோ!
(6)

மதமும் சாதிகளும் முரணி வெஞ்சமர்கள்
விளையு மிங்கு அதுகளையவே
இதமெனுங்கருவி இனிது கொண்டுஇறை
இவரும் நல்லியதம் திறமினோ!
(7)

புதியரென் றுமவர் புரியும் வானின்அறம்
அரிய மெய்ம்மறைது லங்க
வேமதிமெய் நாயகரும் வரங்கள் தந்தருளி
வருகு துங்கள்செவி திறமினோ!
(8)

அமுது பொங்கிவர அதனைநெஞ்சு கொள
அழகுநும் செவிகள் திறமினோ!
நமனின் துன்பமது நலிய நல்குவரம்
நனிபெற்றுய்ய கரம் விரிமினோ!
(9)

விடுமி னென்றுவினை விரைவு கொண்டிரிய
வேந்தர் போதருவார் காண்மினோ!
கெடுவன் மும்மலமும் பிறவித் துன்பமற
கதிபெற் றுய்ந்துஉயிர் செழிமினோ!
(10)

மறைகள் இங்குதிரு வடிவ முற்றகுரு
மணியெ னத்திகழும் காட்சியே
இறைவர் மெய்வழிகொண் டிங்கு வந்துறுவர்
இன்ப மாட்சிபெறத் திறமினோ!
(11)

மடிவ திவ்வுலகின் முடிவதென்றனைவர்
மயங்கு வன்கொடுமை தொலையவே
விடிதல் பொன்னுலகம் வழங்கு வள்ளல்கொடை
விரைந்து கொள்ளக்கடைதிறமினோ!
(12)

வேறு

தேனைப் பாலை முக்கனியைச்
சுவையில் விஞ்சும் அருளமுதை
வானை மண்ணில் கொணர்தெய்வம்
வந்தார் இதயம் திறந்திடுமின்!
(13)

மறைகள் யுகங்கள் கலைபலவும்
வலிந்தோர் கணத்தில் கற்பிக்கும்
இறைவர் இன்பக் களிபொங்க
இவர்ந்தார் செவிகள் திறமின்கள்!
(14)

மலர்கள் கனிகள் பலஇங்கோர்
மரத்தில் மலர்ந்து கனிந்தினிதே
இலங்கும் எழிலைத் தரிசிக்க
இனியீர் இதயக் கடைதிறமின்!
(15)

அமுதம் பொங்கும் கடலலையில்
அனைத்து வினைகள் அமிழ்ந்தழிய
உமது பிறவிப் பிணிதீர
உவந்தே உள்ளக் கடைதிறமின்!
(16)

வேறு

உயிர்ப்பயிர் மெத்தவளர் ஒருவயல் விளங்குமதில்
உயர்நவ முத்துமணி விளைவது கண்டிடுமின்
அயர்வற நும்மையுயர் அறிவறி சித்தரென
அமரருள் உய்த்திடுவர் அகம்திற மின்திறமின்!
(17)

துயர்தரு வஞ்சஎமன் தொடர்பவ வெவ்வினைகள்
துகடற மெய்மருந்து தருமொரு பண்டிதரும்
தயவொடு வந்துளர்காண் தனிகையர் செல்வரிவர்
திருமலர்ப் பொன்னடிகள் துதித்திடத் தாள்திறமின்!
(18)

என்புநெ கிழ்ந்திளக என்னவர் செய்துதவம்
எண்ணரு சன்னதங்கள் ஏற்றதன் நற்பலன்கள்
அன்பொடு மிக்கருள்செய் ஆண்டவர் வந்தனர்காண்
ஆருயிர் உய்யவென அகம்திறமின்! திறமின்!
(19)

கலைகளின் முகடுறு முழுமுதல் இறையவர்
தலைவரின் திருவடி பணிபவர் பிணியறும்
நிலைபெறு பரசுகம் அதுவிளை நெறிதரும்
நனியவர் பதமதில் சரண்புகத் திறமினோ (20)

வேறு

வரங்கள் கொண்டஎழில் கரங்கள் கொண்டஇறை
வந்துளார் அமுதர் போற்றுமின்
இரங்கி இன்பருளும் இன்னல் தீர்த்தருளும்
இனிது கொள்இதயம் திறமினோ
(21)

அலையு முங்கள்மனம் அமைவு றக்குளிகை
அதுகொ டுக்குமொரு வல்லுநர்
நிலையிலாதுலவு மூச்சடக்கு மொரு
நித்யர் வந்துறுவர் திறமினோ
(22)

வேறு

நதிகள் தலங்கள் இறைதேடி
நாடி அலுத்தீர் மெய்ச்சாலைப்
பதிவந் துற்றார் தரிசித்துப்
பயன்பெற் றுள்ளம் திறந்துய்மின்
(23)

சரியை கிரியை தவம் ஞானம்
செயலென்றிதயம் மயக்குறுவீர்
விரியும் கருணைப் பெருக்காளர்
வழங்கும் துறைபெற் றுய்மின்கள்
(24)

சாகும் நெறிக்கே துணைகூட்டும்
சழக்கர் உறவைத் துண்டாடும்
சாகாவரத்தார் திருத்தாள்கள்
சாரச் செல்வோம் கடைதிறமின்
(25)

இயற்கை என்னும் இறைசாரா
இயல்போர் கூட்டம் தனைத்தவிர்த்து
மயக்கம் தெளிமெய் வழிஐயர்
மலர்த்தாள் சார மனந்திறமின்
(26)

ஆட்டம் பாட்டம் சுகமென்று
அலையும் கூட்டம் தனைவிட்டு
வாட்டம் தவிர்க்கும் மறை வேந்தர்
மணித்தாள் பணிவோம் கடைதிறமின்
(27)

மயல்செப் படிவித் தைக்கள்ளர்
வயப்பட் டறிவே அழியாமல்
இயல்மெய் குண்டத் திறையோனின்
இணைதாள் சாரஉளம் திறமின்
(28)

இமையா நாட்டத் தியல்போங்கும்
இமையோர் தம்முள் இனிதேற்ற
நமையோர் பொருளாய்க் கனிவித்த
நற்றாள் பணிவோம் கடைதிறமின்
(29)

சாவில் இரண்டு திறம்கூறி
சாயுச்யத்தில் நமையேற்றச்
சேவைதருமெய் வழிதெய்வத்
திருத்தாள் பரவக் கடைதிறமின்
(30)

தன்னை அறிந்து சிவமாவோர்
தாமே சாதிக் குரியரெனப்
பொன்னின் அரங்கர் அருள்புரிந்தார்
போற்றித் துதிக்கக் கடைதிறமின்
(31)

வேதப் பொருளோர் திருமேனி
மெய்கொண்டிங்கண் நமக்கருளப்
போதி கற்ப விருட்ச மெனப்
போந்தார் போற்றக் கடைதிறமின்
(32)

சாலை உத்தியோவனம் பாடியது

அறப்போர் புரிந்து அருள்வழங்கி
அனந்தர் திருவார் குலம்விளக்கும்
திறத்தார் இறைமெய் வழிதெய்வத்
திருத்தாள் போற்றிப் பாடுவமே!
(1)
வளர்ந்து யர்ந்து தருக்கி னங்கள்
மலர்ந்து இன்ப மணம்வீசும்
துளங்கு தென்றல் வரும்கானம்
சிறந்த உத்யோ வனமிஃதே
(2)

வேறு

வேலும் வேம்பரசு விரலியோடு விளா
விளங்க சோகுபுளி புன்னையும்
ஆலும் அத்தி சுவைநாவல் சங்குசிலை
ஆரும் தென்னைபனை யோங்கின
(3)

கொன்றை பூவரசு காரை மாபலவும்
காயா நெல்லியொடு பாலையும்
நன்றி லங்குநிழல் புங்கு செண்பகமும்
நின்றிலங்கி டுமுத் யோவனம்
(4)

வேறு

தெளிந்த முத்துநீர் விரையும் ஓடைகள்
திகழும் ஏரியும் செறிம டுக்களும்
குளிர்ந்த தேனினீர் ஊற்று பொங்கிடும்
கானகம்மிது காணிலின் பமே
(5)

கதிர வன்கிர ணக்க ரம்படா
கனிந்த நன்னிழல் செறிந்தி லங்கிடும்
புதர்கள் சோங்கெழில் பொலியுத் யோவனம்
புவியில் வானகம் பிறங்குத் யோவனம்
(6)

தேனு முக்கனி தேவர்க் கேதர
சிந்தை கொண்டினி துயர்ந்து ஓங்கியே
வானைத் தீண்டிட வளர்ந்த தாருயர்
மண்டியே வளர் உத்தி யோவனம்
(7)

கலித்தாழிசை

வண்டுகள்ரீங் காரமிட வரிக்குயில்கள் இசையில்களி
கொண்டினிது மயிலாட கிளிகொஞ்சக் களிபொங்க
தொண்டுபுரி அனந்தர்களின் தோத்திரம்போல் இசைபாட
கண்டுசுவைக் கனிவானம் பாடிகள்வாழ் கானகமே (8)

பள்ளிசெல்சி றாரெனவே பலவகையாம் இனியகுரல்
புள்ளினிங்கள் இசைமிழற்ற புத்துணர்வோங் கிடுமமரர்
தெள்ளமுத மதுவிழைந்து சீர்வனத்துள் சார்ந்துதமர்
உள்ளமது தெளிவுறவே உளவுசொலுத் யோவனமே (9)

வேறு

வேரு மேலொளிர பணர்கள் கீழ்மிளிர
விளங்கு கற்பகநல் தருவதும்
சீரிலங்குபல கனிகள் ஒன்றில்தரும்
தேவதாரு மிவண் பொலியுமே
(10)

ஞாலமுற்றுமுள நிலமி தொப்பதிலை
நாதர் வந்துலவு மாண்புயர்
கோலமிக்க எழில் கானமாமிதனை
காணவம் மினுலகோர்களே!
(11)

முத்தர் சித்தர்களும் மோன ஞானியரும்
மெத்தவந்துபணி மாணகம்
வித்து நாயகர்தம் மெய்த்தபோவனமும்
மிக்கிலங்கு மெழில் தேனகம்
(12)

வேறு

வினையின்நீங்கு விமலேசர்
மென்றாள் பணிந்து மறையோதும்
அனந்தர் குலத்தோர் வதிந்தோங்கும்
அருமைக் கானமிதுபாரீர்
(13)

சிவமோர் திருவார் அவதாரம்
செய்தே தவமோங் கிடுநேரம்
புவனத் திணையில் உயர்ஞானம்
பெறவே அருள்செய் எழில்கானம்
(14)

வேறு

பொய்மை புன்மைமத சாதிபேதமெனல்
போயொடுங்கி யொரு சமரசம்
மெய்ம்மையிங்கெழில் துலங்க யின்பருளும்
மேன்மை யோங்குமிது வானகம்
(15)

சத்ய மெய்வழியில் சார்ந்து வாழ்ந்துதுயர்ச்
சாவிலாது வரம் பெற்றுமே
நித்யர் நேசமொடு நீடுவாழ்ந்துறையும்
நன்மை பொங்கி வருகானகம்
(16)

வேறு

வழிவழியென் றுரைத்தும்அற
வழியறியா வையகத் தோர்க்(கு)|r}}
எழில்மெய்வழி இனிதோங்க
இயல்பருளும் கானகமே
(17)

பெருவெளிமெய்த் திறமருளும்
பேரின்பப் பெருவாழ்வு
தருவழிமெய்க் குருவழியாம்
திறமோங்கு கானகமே
(18)

வேறு

திங்களெழில் திருக்குலத்தார் அருள்நடஞ்செய்
சீரிடமாய்த் திகழும் கானம்
பொங்கிவரும் பெருங்கருணைத் திருநதியாய்
பொலியுமுயிர்ப் பயிர்செய் கானம்
(19)

கானமெலாம் இதற்குநிகர் கழறிடவோ
கடைநாளில் புக்கில் என்று
வானமெலாம் வந்தடைய வழிகோலும்
மாதேவர் தவம்செய் கானம்
(20)

மண்ணவர்கள் வெறியாட்டில் உறக்கத்தில்
மயல்கொண்டு உறங்கும் காலம்
விண்ணவர்கள் விழித்திருந்து வணக்கத்தில்
இரவெல்லாம் பலன்சேர் கோலம்
(21)

வேறு

உலகனைத்தும் படைத்தருள்செய் இறைவர் இங்கண்
யுகத்தவசு புரிவதெண்ணித் தொடர்ந்த தேவர்
பலன்நலன்சேர் விளைவுறவே பரவிப் பாடி
பாரவணக் கம்இயற்றும் சித்தி கானம்
(22)

குணமணியாம் குருதேவர் திருமலர்த்தாள் இனிதே
கனிந்துநடம் புரிந்தமணற் பரப்பிதுகாண்புனிதம்
மணலெனவே உரைக்காகா வணக்கத்திற் குரிய
மணமிகுசந் தனமிது வானோர்உலவும் கானம்
(23)

வேறு

பாங்கு யர்த்தமெய்ச் சாலைமாதவர்
பத்தியோங்கிடு முத்தி தேனகம்
ஓங்கு மெய்த்தவர் ஒன்று கூடியே
உத்தி யோவன சித்திகானகம்
(24)

வேறு

குறிஞ்சி முல்லை மருதமொடு நெய்தல் பாலை
கூடியிங்கு காட்சிதரும் கானம் காண்மின்
அறிவறிந்த சான்றோர்கள் ஒருங்கு கூடி
அரன்திருத்தாள் துதிக்கும்ஆ ரண்யம் காண்மின்
(25)

வேறு

காடகம் எழில் காண வானவர்
கூடகம் எனக் கூற லாகுமால்
வாடகம் கொளும் மாந்தர் உய்ந்திட
நாடகம் என நாமு ரைக்கலாம்
(26)

சாலை யென்பர்மெய்ச் சீருத்யோவனச்
சோலையென்பர் பேர்இன்ப நாயகர்
மேலை மெய்ம்மருந் தேகரங் கொடு
ஞால மேல்வரு தூலக் காட்சிகாண்
(27)

யாவர் யாதுவி ரும்பு மோதரும்
ஜீவர் உய்வழி சீர்க னிந்தருள்
தேவ தேவர்நற் றாள் நடம்புரி
நாவ லன்திருத் தீவு மாகுமால்
(28)

வேறு

அணிகொள்நவ நிதியருளும் அழகர்பதி யிதுகாண்
பணிவர்பவப் பிணியகல மருந்தகமும் இதுகாண்
மணிமொழி மெய்யமுதருளும் வளவரசு பதிகாண்
கணிக்கறிய குருமணியின் திருநகரும் இதுகாண்
(29)
பொழிலாகியே உயிராமலர் மணம்வீசிடு வனமே
எழிலார்தவ முனிநாயகர் அருளும்வரம் தினமே
அழியாநிதி கொடைதந்திடு அமராபதி தனமே
மொழியார்மறை தெளிவால்வளர் அனந்தர்இதன் இனமே
(30)

வேறு

ஆதியர் மெய்ம் மணவாசம்
அனந்தர் பெரும் இனவாசம்
நீதியர் பொன் மனவாசம்
நிகழும் தபோ வனவாசம்
(31)

தேடறிய பெருஞ் செல்வம்
தரும் அமுதம் விளைகல்வம்
நீடுஎமன்துயர் வெல்வம்
நெடியகான மிதிற் செல்வம்
(32)

தேவ ஆலயம் பாடியது

ஆதி தெய்வமிவ் வகில முய்யவே
நீதி மேனிகொள் நிலைய மாகியே
வேத மாமறை மெய்ம்மை யோங்கவே
நாதர் ஆலயம் சாலை யானதே
(1)

மாலயன்சிவன் வடிவ மொன்றதாம்
கோலமோடுறு கோதில் வானவர்
ஞால முய்வுறச் சாலை ஆண்டவர்
சீல மாம்திருக் கோலம் போற்றுவாம்
(2)

தெய்வமென்பது மெய்வழி தெய்வமே
உய்வ மெய்ப்பதம் பற்றிநன் குய்வமே
செய்வ மெய்வணக் கம்மது மெய்வழி
ஐயர் சாலையர் ஆலயம் நண்ணுவாம்
(3)
ஊறல் மாமலைச் சாரல் மாமயில்
கேறல் பூங்குயில் கூவி டும்வனம்
மாறில் உத்தமர் வானனந் தர்குலம்
பேறு பெற்றுயச் சீர்செய் ஆலயம்
(4)

வேறு

பொன்னரங்கர் பெருந்தயவு
பொலியு மெழில் திருக்கோவில்
தென்னோலை மிசைவேய்ந்த
திருச்சிகர அருட்கோவில்
(5)

காட்சிக்கு எளியதுவாய்
கருதுதற்கு அரியதுவாய்
மாட்சிமிகு வரமருளும்
வானவர்கோன் மணிக்கோவில்
(6)

முத்தியொடு சித்தியருள் வித்தகர்மெய்
நாயகரின் மெய்யார் சாலை
முத்தாபம் தவிர்த்தருளும் முனியரசு
தவப்பலனை வழங்கும் கோவில்
(7)

விண்ணவர்க்கு விருந்தளிக்க விமலேசர்
மெய்யாட்சி விளங்கு மிங்கண்
மண்ணவர்தம் மயக்கொழித்து மதிகொடுத்து
விதிகெடுத்த மெய்யர் கோவில்
(8)

தவனேசர் திருக்கோவில் தனக்கில்லை
தாள்பூட்டு, கதவுமில்லை
புவனேசர் பொன்மணலார் பொலிதளத்தின்
பெருமாட்சி அதற்கீடில்லை
(10)

அருந்தவர்கள் அருட் செல்வர் அணிதிகழ
வதிகுடில்கள் அனைத்தும் சூழ்ந்து
பெருந்தவத்தில் பேரரசர் மெய்த் தெய்வ
ஆலயம்சூழ்ந் திலங்கும் காட்சி
(11)

இயற்கையரண் எழிலார இதயமணி
இறைசூலார் இனிய மாட்சி
மயக்கெழிலார் காயாம்பூ வண்ணமலர்ப்
புதர்சூழ்ந்து வளர்மெய் கோட்டம்
(12)

தலைமாலை அணிந்தபிரான் தவச்சாலை
திருமிக வோங் காலயத்தார்
தலைமாலை கழுத்தணிந்து கமலபதக்
கதியுதவும் காட்சி காண்மின்
(13)

அறிவார்தம் அருட்கோவில் அணிமுன்றில்
அழகார்செங் கமலம் பூத்து
செறிந்தோங்கிச் சிறந்தன போல் செவ்வெழிலார்
சிரமகுட அனந்தர் கூடும்
(14)

வேறு

துடும் துடுமென் றே'நகரா' ஒலிக்குமாலோ
திடுமென ஓர் நொடிக்குள் எலாம் கூடுமாலோ
அடுபெரும்போர் அரசர் படை திரளுமாபோல்
அனந்தரினம் அழகுமுன்றில் திகழுமாலோ
(15)

ஏழுகுழல் எக்காளம் இசைக்குமாலோ
'இழு'மெனப்பேர் துந்துமியும் இழையுமாலோ
யாழிசைநாண் இனியகுரல் ஓங்கனந்தர்
'யாமகதி' திருப்புகழைக் கூவுமாலோ
(16)

சமரசவே தர்நாதர் சாயுச் யர்தாம்
சாதிகளின் கர்த்தாவைப் போற்று மாலோ
இமையவர்மெய் வழிநாதர் ஏரார் நாமம்
இணைதுணையில் திருத்தாளை ஏத்துமாலோ
(17)

மெய்வழிதெய் வத்திருத்தாள் போற்றி!போற்றி!
மிக்குயர்சன் னதமிலங்கும் திருக்கை போற்றி!
உய்வழியர் நீதியர்செங் கோல்நன் கோச்சும்
ஒருமுதலாம் தனித்தலைவர் தாள்கள் போற்றி!
(18)

வெற்றிமலி வேற்கரத்தார் திருத்தாள் போற்றி!
மேன்மைமிகு அனந்தர்குலம் மிக்குஓங்கு
கொற்றவர் தென்னாடுடைய சிவனார் போற்றி!
கோதறஎந் நாட்டவர்க்கும் இறைவர் போற்றி!
(19)

சத்தியமெய் உத்தமர்சந் ததியே வாழ்க!
சீரோங்கு ஆருயிர்நற் பிறப்பே வாழ்க!
வித்தெடுத்தன் நாட்டினுக்காம் விமலர் போற்றி!
வெய்ய எமன் படர்தவிர்த்தார் மெய்யர் போற்றி!
(20)

வளர்த்தெமது உயிர்ப்பயிர்செய் வள்ளல் போற்றி!
வளமோங்கு மதிமணி மன்னாவே போற்றி!
உளத்துறைமெய் யோங்குபரி சருள்வார் போற்றி!
உத்தமரைத் தரிசித்தோம் உய்ந்தோம் போற்றி!
(21)

திரு அவதாரத் திருநாள்

வேறு

தரணி மாந்தர் உய்யவெனத்
தனிமெய்த் தலைவர் முழுமுதல்வர்
பரனே புவியில் அவதாரம்
புரிநாள் பெருமெய்த் திருநாளே
(22)
தனமெய் மதியின் நிறைநாளில்
திருவோங் கனந்தர் திருக்கூட்டம்
தினமும் புதியர் திருநாளைச்
சிந்தை மகிழ்ந்தே கொண்டாடும்
(23)

பொங்கல் திருநாள்

வேறு

எங்களின் உயிர் பொங்கி மகிழ்ந்திட
இன்ப நாயகர் ஈவர்வர ம்மெனப்
பொங்க லிட்டும கிழ்ந்து கூவிடும்
பூதலத்திடை இப்பெரும் இன்பநாள்!
(24)
மங்கை யர்சுவைப் பொங்கலைப் பொங்கிடும்
மாம ணாளர்கள் தாமுடன் நின்றிடும்
திங்க ளெம்குல தெய்வமெய் நாயகர்
திருவ ரம்தரு சீருயர் இன்பநாள்!
(25)

காணும் பொங்கல் திருநாள்

வேறு

மாணும் பசுக்கள் எனும்ஜீவர்
மகிழ்ந்தின் பங்கொள் பெருநாளைக்
காணும் பொங்கல் எனநாதர்
கனிவாய் மகிழ்ந்தே கொண்டாடும்
(26)

கலியின் கட்டு விலகிடுநாள்
களிப்பைத் தொட்டு உலவிடுநாள்
வலிவார் மெய்யின் புரந்தரருள்
மகிழ்ந்தே நித்ய வரந்தருநாள் (27)
பிறவாநாட் பெருந்திருநாள்

வேறு

பொன்மதியார் முதுபெரியார் தனிகைமணி
எனும்வள்ளல் எங்கள் தெய்வ
நன்மதியார் தமையணைத்து நலமருளி
உயர்களித்த முதல்நா ளிந்நாள்
(28)

நல்லப்பம் நறுந்தேன்நல் லாவின்பால்
நன்னீரும் தாதை யேற்க
நல்லப்பர் மெய்யப்பர் தமதப்பர்
உளமொப்ப நல்கு நந்நாள்
(29)

பவுரணைநன் மதிநிறைநாள் பதியவர்தம்
குமரருளம் ஒளிசேர் நாட்டில்
பவவினைதீர் நவநிதியம் பெருகவரு
புனர்ஜனனத் திருநாள் காண்மின்
(30)

ஆடு மேய்ப்புத் திருக்கோலம்
சர்வபரா பரர்தாம்மெய்த் தவச்செங்கோல்
ஓச்சிடுமுன் தாண்மை ஓங்க
பர்வதமாம் பரங்குன்றப் பதியருகூர்
மறிமேய்க்கப் பணித்தார் நந்நாள்
(31)

திருப்பரங் குன்றில் தவம்செய்த திருநாள்

வேறு

மறிமேய்த்து மணியாரம் மகிழ்ந்தேற்ற பெருமான்
வளமோங்கு பரங்குன்றின் குகையார்ந்து தவஞ்செய்
நெறியேற்று சனதங்கள் பலவேற்று இறைவர்
நமையேற்று வரமீய நிதிசேர்த்த திருநாள்
(32)

சன்னதம் பெற்றது

வேறு

சங்கினொடு சக்கரமும் கிள்நாமம் வில்வேல்
தண்டாயி தம்உடுக்கை சூலமதும் பெற்று
பொங்கருளார் பெருந்தயவைத் திருவுளத்தே ஏற்று
புவியுய்யத் திருமேனி தாங்கிவந்த மாட்சி
(33)

இவ்வுலகு தோன்றியநாள் தொட்டுஇது காறும்
எவரும்புரிந் தறியாத தவஏற்றத் தையர்
அவ்வுலகுக் குரியவித்து ஆர்ந்தெடுக்கத் திருவுள்
அருள்கனிந்த திருவுயர்நாள் அரியபெரும் பரிசே
(34)

கருமானக் குடிக்காட்சி

வேறு

பெருமான்உயர் நெறியோங்கிட புவிமீமிசை மாந்தர்
பெறலாகுமெய் வழியேற்றிட தகையானவர் துறவோர்
குருமாண்பினை உணர்வாரெனக் கொடைவேந்தரும் உரைநாள்
கொடு போதையர் மிகுபேதையர் செவிடாயினர்குருடர்
(35)
இதுவோஇவர் திறமென்றெம தறவாழியும் உணர்ந்தே
இறைசார்நெறி துறவாடைகள் களைவாரினி வருநாள்
இதஇல்லறம் புவிமாந்தருக் கருள்வோமெனும் பெருநாள்
எனதாருயிர்க் கருள்நாரதம் அதுஏறிய திருநாள்
(36)

பிச்சையாண்டவர் திருக்கோலத் திருவிழா

வேறு

விதியால் தெளிவில் மதியாலும்
விளைத்தார்பாவக் குவைமாந்தர்
பதியின் தயவால் பிழைதீரப்
பெருமா வரங்கொள் திருநாளாம்
(37)

ஆண்டார் தமக்கு அமுதுபடைத்(து)|r}}
அவர்தம் கொடையால் வரம்பெற்று
மீண்டும் பிறவா நெறி வழங்க
வேந்தர் பிச்சை ஆர்திருநாள்
(38)

கார்க்கும் தீகையர் திருநாள்

கார்க்கும் தீகைக் கொண்டருள்செய்
கர்த்தர் திருவுள் பெரிதிரங்கி
ஆர்க்கும் ஜீவர் தமைக்காக்கும்
அமுதர் சாலை ஆண்டவர்கள்
(39)

இருள்சேர் வினைகள் தீர்ந்திடவே
அருள்சேர் வரங்கள் தருந்தாதை
பொருள்சேர் புகழின் பேராளர்
பொன்னின் அரங்கர் திருநாள்காண்
(40)

கிள்நாமக் கொடியேற்றம்

வேறு

பொழிலார்ந்த பொன்னரங்கில் பொலிந்திலங்கும்
கம்பத்தில் சாலை அண்ணல்
எழிலார்ந்த கிள்நாமம் இலங்கிடுவெண்
கொடியிங்கண் இனிதே ஏறும்
(41)
வானகத்தின் வரங்கைக்கொண் மாதேவர்
புவிமிசையே வந்து ளார்காண்
தேனகத்தீர் திருவடையத் திரண்டிங்கண்
வருகவென நுடங்கிக் கூவும்
(42)
பிறைநாளில் முழுமதினாள் தனில்துவஜம்
இனிதேறும் தெய்வ மாட்சி
அறைகூவி அகிலவர்க்கு அறவாழி
திருவருகை இனிதே செப்பும்
(43)
வடிவுடைய அருண்மொழியர் மாதவச்சீர்
மாண்புரைக்க வான்மெய்ச் சாலைக்
கொடியேறும் மிடிமாறும் படியில்மெய்
விடிவாகும் களிப்பு மீறும்
(44)

மறுபிறப்புப் புனல் ஜன்மம்

வேறு

மாற்றிப் பிறத்தல் என்றிங்கண்
மனுவைத் தேவப் பிறப்பாக்கி
ஆற்றின் துறையுள் நெறிசேர்க்கும்
ஐயர் அருளும் புனர்ஜன்மம்
(45)

அங்கம் நனையும் ஆடைகளோ
அணுவும் நனையா அருட்குளியல்
பொங்கும் கங்கைப் பிரவாகம்
புவியில் வானின் அருட்தேகம்
(46)

ஜீவப்பிரயாணமான நாற்பதாம் நாள் ஆன்ம சஞ்சார உரிமைக்காட்சி

ஆசைக் கடலில் அலைதுரும்புக்(கு)|r}}
அரிது கரைசேர் புணைபோலும்
நேசத் திருவார் கரமீந்து
நித்யர் அருளும் பெருநாள்காண்
(47)

இறைவர் இணைதாட் கினிதேக
ஈரைந் தெழிலார் அடையாளம்
துறைவர்க் குரியார் எனுநீதம்
தூய்மை விளங்கும் திடமோங்கும்
(48)

கோடி கொடுத்தும் பெறவியலாக்
குல தெய்வத்தின் அருளாட்சி
நாடி ஜீவன் நற்பயணம்
நாற்ப தாம்நாள் நிறைவேற்றம்
(49)

வருடம் தோறும் சந்ததியர்
வணங்கி வழங்கி இன்னமுதம்
குருமெய்த் திருமுன் கொண்டாடும்
கோதில் சீர்வரு டம்பூர்த்தி
(50)

பார வணக்கம்

வேறு

இரவெலா மிறை பாசுரங்களை
இனிது பாடி வணங்கியே
கரவிலாநெறி காண னந்தர்கள்
கர்த்தரைப் புகழ்ந் தேத்துவர்
(51)
அறமெலாம் திரு உருவமாய்வரு
ஐயர் சாலையர் வரம்பெற
உறவர் அன்பொடு இரவுநண்பகல்
உடற்றும் பாரவ ணக்கமே
(52)

வேறு

ஜீவன் முத்தி பெறலென்று
செப்பும் உலகோர் அதுசீரே
தேவ தேவர் திருவருளால்
தேக முத்தி பெறும்பேறே
(53)

உலகம் தோற்றி இதுகாறும்
உம்பர் எவரும் இயற்றரிய
நலமோங் குயர்வான் தவமாற்றும்
நாதர் திருத்தாள் பாடுதுமே!
(54)

தீர்க்க தரிசிமார் திருவுரை

வசந்தரிஷி காகபுசுண்டர் பிரான்

வேறு

ஊழிபல இறையொடிருந் துற்றறிந்த
உயர்ந்தரிஷி புசுண்டர் அத்தன்
வாழிஅவர் வழங்கியது சுயம் எனது
சாட்சியென வரைந்தார் முன்னாள்
(1)
அன்றன்று நிகழ்தவத்தின் அதிசயங்கள்
உயர்மாட்சி அனைத்தும் சீராய்
நன்றுணர்ந்து நவிலும்அணு வதனையென்
நாயகரும் வியந்து போற்றும்
(2)

திடஞானக் கொண்டலராம் வடலூர் வள்ளல் பிரான்

வேறு

திருத்தனிகை வள்ளல்பிரான் திருவுதரம்
ஈன்றெடுத்த மூன்றாம் செல்வர்
அருட்பெரிய வடலூரார் ஆண்டவர்கள்
திருவருகை இனிது கூறும்
சித்தர்களும் முத்தர்களும் ஞானியரும்
வானவரும் சிந்தை யார்ந்து
வித்தகர்மெய் வழிதெய்வம் சாலையப்பர்
வருவரென வியந்து நோக்கும்
(3)
காணரிய காட்சிகளும் கேட்டறியாக்
கேள்விகளும் வரங்கள் ஈயும்
மாணடிவான் மறைமுதல்வர் அருட்ஜோதித்
தனித்தலைவர் மாட்சி போற்றும்
(4)

சாணார் குலவேத நாயகர்

வேறு

அகிலத் திரட்டு அருள்சான்றோர்
அன்பின் திருநா ராயணரும்
இகத்தில் இறைவர் வருகைதரல்
இனிதே நிகழ்வ தெடுத்துரைத்தார்
(5)
அருளார் தனிகை வள்ளலொடு
அறமோங் கெமது தெய்வமணி
பொருளோங் கிடமெய் யுரையாடல்
பொருந்த முன்னர் இனிதுரைக்கும்
(6)
சென்னாள் இந்நாள் வருநாளும்
செகத்தில் விளையும் நிகழ்வெல்லாம்
முன்னா லுரைத்தார் முழுமுதலின்
முனைகூர் தவத்தின் சிறப்போங்க
(7)

ஆதிபுராதன வேதச்செம்மல் சொராஸ்டர்நாயகம் அவர்கள்

சந்த விருத்தம்

ஆதியர்பு ராதனர ருட்பெரு சொராஷ்டர்
அன்றுஉரை தீர்க்கமொழி நன்றுநிகழ் வாகும்
மேதினி சிருஷ்டியது நின்றுவிடு மிங்கண்
வானரசு வந்தகில முற்றும்முறை செய்யும்
நீதியர சாளுமினி நித்தியர்கள் வாழ்வார்
நீசர்நர கேகிடுவர் நன்மைமிக மேவும்
ஓதுபரி சுத்தஇறை ஆவியெனும் சாலை
உத்தமர்மெய் ஆண்டவர்தம் ஆட்சியதே ஓங்கும்
(8)

பாரத பூமிபுகழ் நாரத மகாமுனிவர்

பாரதநற் பூமிமிசை பரமர்புகழ் இனிதே
பண்ணிசையாழ் மீட்டிடுமெய்ப் பாவரசு ஞான
நாரதம காமுனிவர் நாயகர்எம் தெய்வ
நல்வருகை நைமிசா ரண்யதவம் மணமும்
சீருயரும் கல்கிஅவ தாரமதின் மகிமை
ஜகத்குருவின் மாட்சியெலாம் செப்பினர்காண் இனிதே
பூரணர்வா சிப்பயணம் புகன்றினிது போற்றும்
போதமுயர் மெய்வழிதெய் வப்பெருமை சாற்றும்
(9)

பதிமேவு அண்ணல் ஆதிசங்கரர்

எண்சீர் விருத்தம்

பெருகொளிசேர் தாய்மகதி மெய்யாம் தெய்வப்
பெருங்கருணைத் திருவடிகள் போற்றி செய்வோம்
அருட்ஜோதித் தனித்தயவு அறவோர் காக்கும்
அல்லவரைத் தீய்த்தழிக்கும் அக்னியாகும்
பொருள்சேரும் புகழ்புரிந்து ஆதித்தாயாம்
பொன்னரங்கப் பெருமாட்டி மாட்சி தன்னை
அருள்ஆதி சங்கரரும் இனிது வாழ்த்தி
ஊழியெனும் காலமதின் நிகழ்வைக்கூறும்
(10)

மதிவானரசு மார்க்கண்டேயர்

ஆதியுகத் தார்வரதர் மெய்வழியாம் தெய்வம்
அன்பொடுமெய் யார்அனந்தர் சூழஒளிர் கின்றார்
நீதியுக மேபுரக்க நித்தியர்வந் திங்கண்
நீசர்களை நாசமுற நீடழிவு செய்வார்
பேதமறு பிரம்மமது தர்மயுகம் தன்னைப்
பூவுலகில் கொண்டுவரும் புல்லரைஅ ழிக்கும்
ஏதமறும் மெய்ம்மைதெளி வாகுமினி எங்கும்
இன்னலிலை நன்நயமார் இன்பமதே தங்கும்
(11)

உத்தமர்மேரு புத்தபகவான்

சத்தியமெய்ச் சுத்தஉயர் உத்தமர்விண் மேரு
புத்தபக வானுரைகள் போற்றுமுல கீரே!
வித்தகர்மெய் யாண்டவர்கள் வான்புகழைப் போற்றி
இத்தரைநி கழ்பிரள யம்மதும் உரைத்தார் (12)

கத்துகடல் வற்றியிம யமலைகள் தாழல்
மெத்தஅழி வாகுமிந்த வையனிலை கூறும்
வித்துகளெ னப்பதியு மிக்கினிதெ டுத்து
சத்தியர்கள் ஒத்தகுணம் மெத்தவுமு ரைத்தார் (13)

கபாலி பாஷையர் தீர்க்கம்

அறுசீர் விருத்தம்

கபாலி பாஷையர் வேதம்
கடைநாளில் தானிகழ் வோதும்
பூபேந்திரர் மெய்வழித் தெய்வம்
பொற்றாளைப் பற்றினர் உய்வர்
கோபாலர் சத்திய சுத்தர்
குருதேவர் மெய்வழித் தெய்வம்
தீபாதிச் சீடருள் நீதர்
சிறுபான்மை மிஞ்சுதல் கூறும்
(14)

ஞானசைதன்ய அரசு சுப்ரமணியர்

வேறு

காணரிய வாசிமதி கதிருரைக்கு மாலோ!
கற்பகமெய்ச் சாலையையர் காட்சிதரு மாலோ!
பூணரிய சிவசுப்ர முத்ததின்பேர் மாட்சி
புகன்றிடுநன் மார்க்கர்பதம் போற்றிசெயு மாலோ! (15)

ஞானகுபேரர் தேரையர்

வேறு

உலகி லெண்டிசையுள் உலவு பன்மொழிகள்
ஓங்கி சீர்மையொ டிலங்கிடினும்
அலகில் சோதியர்தென் அகமதில் இனிது
அவதரித்துலவு காலையில்
நலமு யர்த்தஇறை நெறியுளாகிடவும்
நாளை ஊழிமுடி வாயதும்
உலகில் வேண்டுவது சாலை ஒண்டமிழென்(று)
உணர்ந்து உய்ந்திடுமின் மாந்தரீர் (16)

பிரம்மத் யூஸ்பௌண்ட்

வேறு

காலத்தின் சக்ரச்சுழல்ஒன்ப தாம்கோளுள்
கட்டுண்டு மாந்தர்கள் கல்விக்ரகக்
கோலத்தைப் போற்றிக்கு லம்மாய்வர் அந்நாளில்
கோதற்ற மெய்த்தெய்வம் பொன்மேனியர்
(17)

ஞாலத்தில் ஊறல்ம லைச்சாரல் கானகத்தில்
நாதிபுவிக் காதியந்த நற்றாய்மணி
சீலத்தோர் வாழ்பொன்ன ரங்கத்தில் ஓங்கும்மெய்த்
திருஞான அருளாட்சி செய்குமம்மே

செம்பொருள் கண்ட சிபில் மாதரசியார்

வேறு

இறுதிப் பெரிய கடைக்காலம்
இறைவர் திருவோங் கவதாரம்
அறமார் தெய்வ அருட்குழவி
அழகார் மாட்சி காணீரோ!
(18)

அன்பின் கனிநம் அருட்பாலர்
அமுதைத் தரிசித் துயிர்பேண
தென்பாய் ஓங்கி இசைபாடி
திருவைப் போற்றி வாழ்த்தீரோ!
(19)

அம்மை அருள்செய் இசைபண்ணிற்(கு)
அகிலந் தன்னில் ஈடில்லை
உம்மைக் கரைசேர் உயர்தோணி
ஓண்சேர் திருத்தாள் போற்றுமினே!
(20)

ஊழி நடத்தும் ஒண்மணியே
உலகம் அனைத்தின் விண்மணியே
ஆழிசூழும் புவியீன்ற
அரசி புகழைப் பாடுவமே!
(21)

திருமூலர்

கலிவிருத்தம்

காலம் மூன்றும்கண் டாரருட் சீர்தரு
மூலர் வாழ்ந்திறை மாட்சி புகல்வராம்
சீலர்செம்பட் டுடைகள ணிந்துமே
கோலம் பேரர சர்போன் விளங்குமால் (22)

நன்மை யோங்கந லம்புரி நாயகர்
பொன்ம ணிப்பதம் போற்றிவ ணங்குவாம்
தென்ன கம்மிளிர் தேவசிங் காசனர்
இன்னல் மாற்றியின் பப்புவி யேற்றுவர் (23)

மாகாளியம்மன்

கலித்தாழிசை

அருளாழிமெய் மாகாளியின் அமுதம்உரை அறிமின்
திருவோங்கிறை தயவாலுயிர் தெளியும்உல கியலிர்
பெருமாலவர் பிறந்தார்மனு மகனாகவே புவியில்
குருநாதர்மெய் வழிஆண்டவர் குறுகில்பலன் விளையும் (24)

கவின்கோடு கண்ட கபீர்தாசர்

அறுசீர்விருத்தம்

கலைமலி காட்சி கண்ட
கபீர்தாஸ் அண்ணல் கூறும்
மலைநிகர் மாட்சி திண்மை
மலர்நிகர் மென்மை ஐயர்
துலைநிகர் பொற்செங் கோலார்
தூய்மார்க்கர் அரசு கோள்கால்
நலமிகும் வாழ்வின் லட்சியம்
நன்னிய சீடர் காண்பர்
(25)

மெய்நகர் தன்னில் போந்து
மிக்கறம் புரியும் ஐயர்
தெய்வப்பொன் னாரும் மேனி
திகழ்எழில் அருளார் சீர்மை
செய்வழி காட்டி உய்த்தல்
ஜீவசிம் மாச னேற்றம்
மெய்வழி சார்ந்தோர் உய்வர்
மேன்மையைக் காண்பர் திண்ணம்
(26)

வைணவப் பேராதீனர் சடகோபர்

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வைணவ வேந்தர் வான்சட கோபர்
வழங்குரை தரிசனத் தீர்க்கம்
மெய்ம்மணி இறைவர் வையகத் துறுங்கால்
வழங்கிடும் நிகரிலா மேன்மை
மெய்வளர் கல்வி பயன்முடி பனைத்தும்
விளங்கிடும் உறவொடு துறக்கம்
உய்வழி யாவும் உவந்துரைத் திடுமே
உயர்திருத் தனிமுதற் பொருளே
(27)

வீரபிரம்மம் அவர்கள்

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறநெறிகள் ஓங்கும் பரவச வசனர் வேந்தர்
அருள்வீர பிரம்மமவர் உரைத்த தீர்க்கம்
பிறவாழி நீந்தவைக்கும் பெருமை ஓங்கும்
பேராளர் மெய்வழிதெய் வத்தின் மாட்சி
இறவாமை அருள்வீர போகர் சீரார்
எழில்வசந்த ராயர்புவி வந்து ஆள்கை
திறமாகப் புரிமேன்மை சகத்தோர் கேட்கச்
சீர்பேரி கைமுழங்கிச் செப்பு வீரே!
(28)

கதிரவனில் பலதுளைகள் தோன்றும் சாலைக்
கானமயில் களிநடனம் புரியும், மக்கள்
மதிகுன்றி வன்செயல்கள் புரிவர், ஞான
வித்துகள்மெய் வழியரசோ டினிது வாழ்வர்
அதிசயங்கள் புவியினிலே பலவாய்த் தோன்றும்
அம்புவியில் அழிவுபல விடத்தே காணும்
கதிதருமெய் வழிதெய்வக் கழல்கள் பற்றிக்
கொண்டனந்தர் தவப்பலன்பெற் றோங்கி வாழ்வர்
(29)

தற்கலை பீர் முகம்மது ஒலியுல்லா அப்பா

கலித்தாழிசை

<poem>

வானவர்திரு மேனியோ டெழில்
வையகத்துறு காலையில்
கோனவர்தனி கைத்திருமணி
குமரரோடிணை கோலநாள்
தேனளைந்தநற் பாலினிற்சுவை
தேங்குமாறெனக் கூடுநாள்
தானவர்க்கமு தம்படைத்ததைத்
தற்கலை அப்பாசொலும்
(30)
அப்பமானது கேழ்வரகினில்
ஆனது செழுந்தேனொடு
ஒப்புடன்பசும் பாலும்நீரொடு
உவந்தமுதுசெய் காட்சியை
அப்பர்தற்கலை பீர்முகம்மது
ஒலியுல்லா பெறுந் தரிசனம்
இப்பெருஞ்செயல் செப்புமாட்சிய(து)
ஒப்பிலாப்பெருங் காட்சியே
(31)

முகம்மது சல்ஆல நபியவர்கள்

வேறு

வான்மகதி வையமுறு காலையினில்
வந்தருள்க மெய்ப்பரிசொ டென்குரைசியாம்
தீன்குலம் தீன்திலக மாயினிது
செந்நெறியிற் சேர்வர்பலர் கும்பல்மிகவே
(32)

மேலுவமை சொல்தருணம் கீழுவமையை
மிக்குரைக்க மாதவரும் அஞ்சுதலிலார்
ஆலதுப டர்தலென அண்ணலர்கு
லம்பெருகும் அம்புவியி லென்றுமினியே
(33)

யோவான்

வேறு

விண்ணில்மேகம் கூடுமாறு
வையமேற்கு லம்மெலாம்
அண்ணல் மாட்சி கேட்டுக் கண்டு
அணைந்த மாட்சிக் கீடெதோ
(34)

பொன்னினா லியல்விளக்கு
மிக்கொளிரு மத்தியில்
பொன்னரங்கர் தாமிலங்கு
பேரெழிற்கு ஈடெதோ
(35)

வெண்கலம் உருக்கி வார்த்து
விளக்கிவைத்த போலுமே
விண்குலத்தலைவர் தாள்
விளங்குகாட்சிக் கீடெதோ
(36)

ஏழெக் காளம் துந்துபிஇ
சைக்குநாத மோங்கவே
வாழ்ம னுமகன் வருங்கால்
வணக்கமே நிகழ்த்துமே
(37)

ஊழிநாள்பி ரளயம்ந
டத்திப்பார் புதுக்குமே
வாழியந்த வையம்மெய்யின்
மாட்சியில் மிதக்குமே
(38)

வேறு

ஆண்டவர்கள் அருட்தயவால் அடங்கியவர்
மீண்டெழுமோர் அரிய காட்சி
நீண்டதொரு பிரளயந்தான் நிகழ்ந்ததன்பின்
தோன்றுமென நிமலர் செப்பும்
(39)

பாரகத்தில் பல்லாண்டு படித்தறிந்து
தெளியுமொரு கலைஞா னத்தை
ஓர்கணத்தில் திருவருளால் உணரவைத்து
கற்பித்தற் குளதோ ஈடு
(40)

தேவர்கள் வேண்டுகோள்

அண்டசரா சரமனைத்தும் அழகிலங்கப்
படைத்தளித்து முறைசெய் தேவே
விண்டறியா வான்புகழோய் மலரடிகள்
வணங்குகின்றோம் போற்றி போற்றி
(1)
ஏழுசதுர் யுகமுடிவு ஆகுகடைக்
கலிகாலம் இதுவே யாக
வாழுமுல கோரிடையே வன்செயல்கள்
மிக்கதனால் பொறுக்க கில்லோம்
(2)
அகிலத்தோர் உய்யவென அறமுரைத்த
தெய்வீக ஆன்றோர் தம்மை
இகழ்வதொடு இடர்செய்தார் இனியாற்றோம்
ஈசர்நீர் அதனை வெல்லும்
(3)
புவிமிசைநீர் எழுந்தருளிப் பொய்மலிந்த
கடைக்கலியைச் சாய்த்துப் பேரார்
தவமியற்றிப் புதுயுகத்தைத் தாம்புரக்கும்
சர்வேசா! சகத்தில் வம்மின்
(4)
சகமிசையாம் போதருங்கால் தேவர்கள்என்
மக்களென வருகு வீரேல்
சுகநிறைத்து அமுதளித்து தவப்பலனும்
தந்தருள்வோம் புவியுட் சென்மின்
(5)
சாவாத வரம்ஜீவன் தேகமுத்தி
யும்தருவோம் என்றே ஈசர்
தேவாதி தேவருரை அருள்புரியத்
தேவர்களும் களித்தின் புற்றார்
(6)
சித்தர்முத்தர் தேவர்முனி ரிஷிமார்த
போதனர்கள் வரங்கொள் வேட்கை
இத்தரையில் ஈசர்வரில் இனிதுநிறை
வேறுமென இறும்பூ தெய்தும்
(7)
சுவர்க்கபதி வாசலது திறப்பாகும்
நாள்வேண்டிச் சுரர்க ளெல்லாம்
தவபெருமான் திருவருளைத் தாள்பணிந்து
வேண்டும்வரம் நிறைவே றுங்காண்
(8)
வேதமறை உபநிடதம் மெய்ஞ்ஞான
அருள் நூல்கள் விளங்கும் காலம்
போதமுயர் மெய்வழிச்சா லைத்தெய்வம்
போதருங்கால் விடியும் சீரே
(9)
நாதமணி நல்லருளால் நலம்பெருகும்
நானிலம்சீர் நிறைந்து ஓங்கும்
ஏதமறு இன்பநிலை இனிதுவளர்
கைலாயம் இலங்கும் சாலை
(10)
வைகுண்டம் வையகத்தே மெய்குண்ட
மெனவிளங்கி வருகும் பொன்னாள்
கைகண்ட தவமருந்தும் கண்கண்ட
இறையருளும் காண்பீர் உய்வீர்
(11)
பெருவரங்கள் அருளரங்கர் பொன்னரங்கர்
புகழ்விளங்க எழுதல் கேட்டுச்
சுரர்குலங்கள் உளமகிழ்ந்து களிதுளும்பெக்
காளமிகும் தெய்வம் போற்றும்
(12)

வேறு

சாதி சமய இனவெறிகள்
தலைகள் கொழுத்து அலைகாலம்
நீதி நடத்தி ஒருநிரப்பாய்
நிகழ்த்தும் இறைவர் வருஞ்சீரே!
(13)
சடங்கே இறைவர் நெறியென்று
சழக்கர் உலகேய்த் திடுகாலம்
மடங்கல் சிலிர்த்தே எழல்போலும்
மறைகள் தலைவர் வருஞ்சீரே!
(14)
உண்டே கொழுக்கும் உலகீர்க்குள்
உவந்தே இறைவர் திருத்தாளைக்
கண்டே கொழுக்கக் கதிநல்கும்
கலையின் வேந்தர் வருஞ்சீரே!
(15)
வருநாள் ஒருநாள் பெருநாளாம்!
மாண்பார் தனிகைக் குருனாளாம்
பொருள்சீர் அருள்மெய் வழித்தெய்வம்
பதமே பணியும் திருநாளாம்!
(16)

வேறு

வந்துஇறை சிந்தைகளி
மெய்கொடுக்கு மாலோ
செந்தமிழர் பூமிதனில்
தோன்றிவரு மாலோ
(17)
விந்தைமிகு வேதநெறி
மாட்சிகொளு மாலோ
சந்ததமும் நீதிநிலை
சீர்விளங்கு மாலோ
(18)
மாதவர்தம் மெய்வழிவ
ழங்கவரு மாலோ
பூதலரைப் பொன்னெறிபொ
ருந்தவரு மாலோ
(19)
சீதமலர்ப் பாதமதில்
சார்ந்து உய்யுமாலோ
மேதினியில் என்றுமினி
மெய்விளங்கு மாலோ
(20)

பாரம்பரியம்

வேறு

ஆதி யாம்சிவம் கயிலை சீருயர்
அதுபரம்பரை யாக ஓங்கவே
நீதி நந்தியின் மரபெ னத்திரு
நித்ய மச்சமா முனிவர்கோத்திரம்
(1)
சாக்த மென்றிறை சக்தி போற்றலும்
சீர்க ணபதி தோத்திரம் செய்வதும்
காக்கு மூலமாம் காணா பத்தியம்
குமரர் போற்றல்கௌ மாரமென்பரால்
(2)
பஞ்ச அட்சரம் ஓதல் சைவமாம்
பகரும் ஆறுச டாட்ச ரம்மதாம்
விஞ்சு அஞ்சுமூன் றெட்ட தாய்விளை
வேத நன்னெறி படர லானதே
(3)
ஆதி நாரணர் அருட்பதம்துதி
அஷ்ட அட்சரம் பரவு வைணவம்
நீதி மாதவர் நெறிதொ டர்ந்துமே
நித்ய முத்திவித் ததுவளர்ந்தது
(4)
எட்ட தாம்அவ தாரமூர்த்தியாய்
ஈடில்கீதை வழங்கு மாட்சியாய்
மட்டி லாதம கோன்ன தச்செயல்
வையமீதுவ ரங்கள் ஈந்ததே
(5)
தலைசெழித்திடத் தருகு மோரருட்
தன்மையால்தலை மாலை கொள்செயல்
நிலை கபாலிகம் என்ற வான்செயல்
நிசமுணர்ந்திலார் தலை துணித்தனர்
(6)
நரர் மனுவென மாற்றித் தேவராய்
நல்வரம் தரல் நரபலி யென்பர்
அருட்திறம்அறி யாத வீணர்கள்
அரிந்தனர்சிரம் அன்பில் வஞ்சகர்
(7)
பதுமமார்மணி போற்றுசீருயர்
பௌத்தமென்றுஓர் பெருவழிவரும்
இதமுயர்ந்திட இறைப ரம்பரை
இனிது வையகத் திலங்கி ஓங்கியே
(8)
மும்மணியொளிர் சம்மனம் மதில்
முதுநிர் வாணமென் றோங்க ஏத்துவர்
செம்மை சேர்நெறி தெளிவிலாதுபின்
செயலிலா நெறிச் செல்லலாயினர்
(9)
கால தேசமும் வர்த்த மானமும்
கடந்த செய்கைமெய்க் கடவுளார்நெறி
மூலவித்தது குறைவி லாமலே
முதிர்விளைவு கொண்டேற லானதே
(10)
பாரவான் களின் வழிவ ளர்ந்தது
பெரியர் ஆபிரகாமும் மோசேயும்
சீருயர்திரு இயேசு நாதரும்
செகத்தில் வந்திறை நெறிவளர்க்குமால்
(11)
வானவர்செயல் வளரு காலையில்
வன்செயற்கொடு மிருகவஞ்சகர்
ஈனமாயிடர் ஆங்கி யற்றியும்
இணையில் மெய்விதை வளரலானதே
(12)
மாண்புயர்திரு வாய்மலர்ந்தெழில்
வளர்கருணையர் கலைனற் கோட்டினர்
சேண்பு லந்தரு திருமெய்த்தூ தராய்
தவமுகம்மது செய்கு மாயினார்
(13)
வாழையின் அடி வாழையாகவே
வழிவ ழிவரு வானின் வித்தது
சூழ்க லியிடர் செய்தும் மெய்ந்நெறி
சீரதாய் வளர் வெய்தியோங்குமால்
(14)
அச்சமற்றதோர் அருள்மெய் யோங்கவே
அகில முற்றுமே உய்ந்து வாழவே
மச்ச மாமுனி வளருகோத்திரம்
வான்த னிகையர் வருமெய்ச்சீரதே
(15)
வள்ளல் வான்தனி கையர் ஈகையால்
வந்த நால்வருள் வடலூர்மேவிய
வள்ளலாரவர் மூன்றாம் புத்திரர்
வாழ்சன் மார்க்கமாம் நெறியியற்றினர்
(16)

வேறு

வித்தானது சன்மார்க்க மாய்
விளை வானது தெளிவாய்
சத்தான மெய்வழியோங் கிடத்
தவ ஆதியே வருகும்
(17)
புகலாய் உயர் இறைசார்ந்திடப்
பரிசே தரும் நெறிகள்
நகலாயின தருணம் பதி
குருவாய் வரு தகையே
(18)
நனி செய்திடு தனிகைமணி
இனிமை தரு கனியே
தனிகை மணி இறையேஉயர்
திரு சாலையர் மணியே
(19)
குலமொன் றுலகிறை யொன்றென
குல மாநெறி வளர
நல மொன்றிடு உயிர்கள்தவ
நெறி சார்உயர் தருணம்
(20)
அமலாண் மையர் அரசோச்சிட
அசுரர் இடை இடையே
இமையோர்க் கிடர் புரிகாலையும்
இறையே பெறும் ஜயமே
(21)
பலவாம்மணி ஒரு மாலையில்
புனை கோலம ததுபோல்
பலவாம் குலம் உயர்சாலையில்
ஒருசீர் நெறி புகுமே
(22)
இறையொன்றுணர் குலமொன் றென
இனிதே வளர் தவமே
துறை யொன்றுயிர் கரைசேரவே
துணையார் தவ பரிசே
(23)
உண்டென்றுமே இலையென்றுமே
உலகில் பல கலகம்
மண்டும் பொழு(து) அண்டர்தரும்
வளர் மெய்வழி அருளே
(24)
சைவம்முத லது வாகவே
தவவான் மணி நாட்டும்
கைவந்தமெய் வழி காட்டியே
கதிநன்றதிற் கூட்டும்
(25)
சமயப் பெய ரதனால்விளை
சமர் தீரவு மினிதே
நமை மெய்வழி தனிலோங்கிட
நன் மார்க்கமும் அருளும்
(26)
தத்வம்பல ஒன்றாய் உணர்
தலமாய் வளர் குலமாய்
உத்யோவன மது ஓங்கிடும்
உயர் சாலைமெய்ந் நெறியே
(27)
பண்டை நெறி விண்டெம் இறை
பதிமேவிய கதியே
அண்டர்க்குயிர் தவநாயகர்
அருள்பொங்கிடு பதமே
(28)

வேறு

ஆதியிறை சூலவரும் நீதியொரு மேனி
ஆன்றகுரு சாலையண்ணல் அம்புவியில்வந்த
நீதிதிரு மேனிதவ நாயகரு மானார்
நத்தியவர் பத்திமிகு நாதர்புகழ் போற்றும்
(29)
மேதினியில் வந்துயுக வித்துக ளெடுக்கும்
மேவிவரு உத்தமர்சீர் பாதமலர் போற்றி
சீதனம தாகபல சீரருளும் மெய்யர்
தாரணியில் யாவர்களும் தோத்தரிக்கும் ஐயர்
(30)

திரு அவதாரம்

வேறு

ஆதிமுழு முதலிறைவர் ஐந்தொழிலார்
அறவாழி அருள்கைக் கொண்டு
நீதியுகம் புரந்திடஇந் நிலமிசையே
போதருவார் நித்யம் தீர்க்கம்
(1)
வானவர்தாம் வேண்டும்வணம் வையகத்தில்
அவதாரம் புரிதல்வேண்டி
கோனவரும் திருவுள்ளம் கொண்டினிதோர்
கருக்குகையுள் மேவும் சீரே!
(2)
தீர்க்கமிகு தரிசனங்கள் செப்புவண்ணம்
தவராஜர் பொன்ன ரங்கர்
மார்க்கநகர் தனில்மானார் மாதரசி
பெரியதாய் வயிற்றிற் றங்கும்
(3)
திருவுயரும் பெரியர்ஜமால் சீர்மிளிரும்
பெரியதாய் பெற்றோ ராக
கருவளர்ந்து பிரசோபம் மார்கழிநற்
றிங்கள்நிறை நாள தாமே!
(4)
விண்ணவர்கள் பூமாரி மிகப்பொழிந்து
ஆர்ப்பரிக்க வியன் படைத்த
மண்ணுலகோர் உயிர்களிக்க மனுமகனார்
அவதாரம் புரிந்தார் வாழி!
(5)
நிறைமொழியர் நிலமிசையே திருநடனம்
புரியவர நிலம்பூ ரிப்ப
குறையொழிந்த தெனமறைகள் குலவையிட
சமயமெலாம் பூரித்தாடும்
(6)
தலைமகனார் தரணிமிசை தவமுதல்கொண்
டினிதுவந்தா ரதுகண் டார்ந்த
கலைமகளும் அலைமகளும் களித்தினிதே
ஓரிடத்தே வாழ்வோம் என்பர்
(7)
நாழியொரு மேனியதாய்க் கடிகையொரு
வண்ணதமாய் வளரும் நாதர்
வாழியெங்கள் மனுமகனார் திறம்வாழி
வாழியென உயிர்கள் வாழ்த்தும்
(8)

வேறு

எங்களுயிர் நாயகர்இ ளங்குருளைச் சிங்கம்
எண்ணெழுத்தின் முன்னெழுத்து தானுமதுகற்க
தங்கமணித் தேரதுவும் ஆடிஅசைந் தேகும்
தன்மையது போல்குமரர் பள்ளியது செல்லும்
(9)
கல்வியது ஓருருவ மானகயிலாயர்
கற்றதுசின் னாள்கலைகள் யாவினுக்கு நேயர்
வல்லபல வீரவிளை வாடல்புரி நல்லார்
வஞ்சகமும் சூதுமித யத்திலணு வில்லார்
(10)
உண்டிதரு மோருழவு உத்தமரும் செய்யும்
உற்றுமறி கன்றுபசு மேய்ப்பதுவும் செய்யும்
பண்டுமுதி யோர்வியக்கத் தாம்தொழுகை செய்யும்
பற்பல மெய்ஞ் ஞானபனு வல்மனனம் செய்யும்
(11)
முத்திதரு வித்தகர்தம் முத்திபெறு மார்க்கம்
மூதுரைந வில்பவர்கள் எங்குளரென் றார்க்கும்
நத்திபல பேர்களையும் ஞானமுற நாடும்
நஞ்சினர்கள் வஞ்சக மறிந்துஉளம் வாடும்
(12)

வேறு

குணமே சிறந்த கொற்றவர்க்கு
கோதில் பெற்றோர் இனிதோர்ந்து
மணமே புரிந்தார் மாதர்குல
மணியாம் சுலேகா அம்மையரை
(13)
செம்மை சீராய் ஏறிவரும்
திருவின் கனியாம் அருள்நேசர்
அம்மை அழகார் குழவியொடு
அயலூர் வணிகம் செயச்செலுமால்
(14)
காசுக் காரம் பாளையமாம்
கனிதிங் கள்ஊர் ஆதீனம்
நேசத் தோடங்கண் வதிந்து
நெல்வா ணிபமும் நிகழ்த்திடுவார்
(15)
திறமார் வணிகம் செய்பொழுதும்
சிந்தை இறைதாள் அடைவேட்கை
அறமார் வழியைத் தினம்தேடி
அலைந்தே மருகும் அருள்தாதை
(16)
பன்னாள் பலபே ரிடம்புக்கும்
பரஞ்சேர் நெறியைக் காண்கில்லார்
பின்னால் ராஜ யோகமதே
பெரிதென் றதுவே பின்பற்றும்
(17)
மூலச் சூடு மேலோங்க
மிகுவா தனையால் துன்பங்கொள்
காலம் இங்கண் கழிநாளில்
குருவாய் தனிகை அரசுவரும்
(18)
பொய்யைப் புகழென் றெண்ணியுளம்
பெரிதும் நலிநாள் அருட்பாட்டர்
மெய்கைக் கொண்டு மகவெண்ணி
வருகை தரவும் உலகுய்யும்
(19)
காலம் மூன்றும் கண்டஇறை
கனிந்தே தாமே தமைத்தேட
கோலம் சிறந்த குருதேவர்
குவலயத்தில் வருஞ்சீரே!
(20)

வேறு

இளங்காலைப் பொழுதெங்கள் இறைசொரூபர்
இனியமனை நோக்கிவரு மதுநன்னேரம்
வளர்நலஞ்செய் திருத்தனிகை மணிப்பாட் டையர்
மலரும்மண மிணைந்ததென மருவும்சீரே!
(21)

தேவகுரு திருக்குமரர் இனிதுகூடி
தேனளைந்த மாவப்பம் பசும்பால்னீரும்
பூவுலகம் பொன்னுலகும் களிப்பஉண்டு
பூரணைநன் நாளிணைந்த பொருத்தம்காணே!
(22)

திங்கள்ஊர் நத்தத்தே ரடியில் இன்பச்
செழுநிலவின் ஒளிபொழியும் திருமுகூர்த்தம்
எங்களரும் பெரும்பாட்டர் இனிதுஏற்ற
எம்பெருமான் வானாட்டிற் கேறினாரே
(23)

வானவர்மெய் வழங்குவதன் மாட்சி யோர்ந்து
மனுமகனார் இனியவுளம் பூரித்தந்நாள்
தேனவரோ டினியமனை துறந்து மெய்யர்
திருவிளைவுக் ககிலவலம் துணிந்து ஏகும்
(24)

வேறு

மனைம றந்தனர் பொருள்து றந்தனர்
மகிழ்சு கம்மது சிறிது மெண்ணிலர்
தனைம றந்துமெய்த் திருவழங் குயர்
தணிகை யர்கதி யென நினைந்தனர்
(25)

இரவுநண்பக லெதுவு மெண்ணிலர்
எதிர்வரும்விளை வதுவும் நண்ணிலர்
வரவு மெய்ப்பத மதுநிறைந்தவர்
வரதர் தாதையின் வழிநடந்தனர்
(26)

சேரும் ஊரெது தேர்கிலாரது
சென்றநாள்வரு நாளெண்ணாதது
ஆரும் சிந்தையில் ஐயன் நோக்கது
அன்பு கூர்வது அருளைச் சேர்வது
(27)

பசிகுளிர்வெயில் பார்க்கிலா ரிவர்
பற்றிலாதவர் பற்று பற்றினர்
நிசியுறங்கிலர் நினைவெல்லாம் குரு
நற்பதந்தனில் நிற்பதன் பினர்
(28)

மலைகள் காடுகள் வயல்க டற்கரை
மருங்கு சார்ந்துறு நகர்கள்ஊர்களும்
கலையின் நாயகர் குருமகான்மியர்
கனிவொடே தொடர்ந் தினிதுஏகிடும்
(29)

எத்துணைத் தரு புட்களூர்வன
எண்ணிலா ஜலம்வாழ்வ காலிகள்
நித்தம் நேர்வுறு மனுக்களின்வகை
நீர்மை கூறிடலெளிதி லாவதோ
(30)

ஆட்கொளும் அண்ணலும் மைந்தரும்
அன்புகனிந்து நடந் தினிதே
நாட்களும் திங்களும் ஆண்டுகள்
பற்பல ஓடினடந்தன காண்
(31)

தென்பரங் குன்றத ணித்துறை
ரெட்டிய பட்டியெ னும்பதியில்
என்பரங் குன்றினை ஆடுகள்
மேய்த்திட ஏந்தல் பணித்தனர்காண்
(32)

தாதையுரைப்படி நீதர்சி
றப்புற ஓர்வருடம் செலவே
வேதமு தல்வரை வான்தணி
கைவள்ளல் மீட்டும கிழ்ந்தனர்காண்
(33)

வேதகு லப்பதி மாதவமாற்றிட
தாதைகு றிப்புரை யால்
நாதர்தவச்சிக ரத்த திலேறியே
நன்று கொள் சன்னதங்கள் (34)

பண்ணுத வத்தினிற் பாரகர் ஈடிலர்
பொன்னரங் கத்தி றைவர்
எண்ணில சன்னதம் ஏந்துதிருக்கரர்
இன்பமெய் நாயகரே! (35)

சன்னத மேற்றத னிக்கருணாகரர்
சாலைவ ரோதயரை
இந்நில ஞானமெய் யாட்சிஇயற்றிட
ஏந்தல் குறித்தனரே (36)

தன்னைத னித்திடச் செய்குவர் தந்தை
யெனக் கருதிக் குமரர்
இன்னுயி ரைப்பிரி யும்முடல் போன்று
எந்தை துடித்தனரே (37)

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

அத்தா! என்றன் ஆருயிரே!
அறிவே! திருவே! அருட்குருவே!
சொத்தே! சுகமே! சர்வம் நீர்!
சிந்தை அகலாச் சொந்தம்நீர்!
எத்தா லும்நிற் பிரியேனென்
றிருந்தேன் எங்ஙன் உயிர்தரிப்பேன்
முத்தே! ஞான முனியரசே!
மூவா முதலே! எனைப்பிரியேல் (38)

வித்தே! விளைவே! வினைதீர்க்கும்
மேலாம் மருந்தே! மெய்ம்முதலே!
சித்தர் தலைவா! சிவக்கனியே!
தீராப் பிணிதீர் பண்டிதரே!
வித்தில் லாத வித்தகரே!
வேதம் உருவாய் ஆனவரே!
நத்தும் என்னோ டுடனிருமின்
நம்பும் அடியேற் பிரியேலே! (39)

உயிரும் உறவும் உறுதுணையும்
ஓங்கும் செல்வம் அனைத்தும்நீர்
செயிர்தீர் காட்சித் தவமுதலே!
தேனார் அமுதச் சொன்மழையால்
அயர்வே அறஎன் உயிர்வளர்த்த
அன்னாய்! அத்தா! அருட்குருவே!
துயர்வே றிதனின் பெரிதுண்டோ
தேவே! என்னைப் பிரியேலே! (40)

என்றிவ் வாறு பலவுரைத்து
எந்தை அருளார் தவமோங்கும்
குன்றே அனைய தாதைமுனர்
குவித்தார் இருபொன் மலர்க்கரமும்
கன்றே இங்ஙன் கதறியழக்
கற்றா பொறுக்கல் ஆற்றாபோன்ம்
பொன்றா நிதியர் பாட்டையர்
பொறுதி மகவே பெறுதி,”யென்றார் (41)

வேறு

என்றனித யக்கனியென் ஈடிணையில் செல்வ!
நின்றனிரு பொற்கரம் குவித்தல்தவி ரைய!
உன்றனுயர் மாட்சியினை நீயறிகி லைகாண்
மன்றில்நட மாடுபரன் நீயறிதி கண்டாய்!
(42)
வையகமி தற்குள்வளர் வன்கலிய ழிக்க
மெய்யெனு மருந்துகொடு வந்தபரன் நீரே!
ஐய! நுமை முன்னுரைசெய் ஆணையது கொண்டிங்
கெய்தியத போமுனிவன் யானெனவு ரைக்கும்
(43)
பூமியிதி லேகலிமு திர்ந்துவிளை வேறி
நேமநெறி யாவுமேஅ ழிந்தது இந்நாளே
சாமிகலி வென்றுகிரே தாயுகம்ப டைக்க
சேமனெறி மேவஅருள் தேவரும்நீ ராமே!
(44)
மெய்ம்மறைமு தல்வ பலவானவரும் நின்றன்
செம்மையுரை வண்ணமிவண் சேர்ந்துளர் சகத்தே
உம்மெழில்வ ருகையைஉ வந்தினிது நோக்கி
தம்முளம்வி ழைந்துருகல் தானறிதி ஐயா!
(45)
கோமகவு நின்தவமெய் யாட்சியுயர் செங்கோல்
பூமிவிழை கின்றதருட் பொன்மனமி ரங்கி
தாமதமி லாதுசெலும் என்றினிது தாதை
ஆமனுமுன் னேஉரைசொற் றாரிறையும் ஏற்கும்
(46)

வேறு

குருவான வர்உரை ஆணையைக் கடவாநெறி யுடையார்
திருவானஎம் இறைகோனவர் நெகிழ்வாருள மிகவே
இருவாய்தலை அனலேறிடு குழலூடுறு எறும்பாய்
அருளார்உளம் கசிவார்உயிர் துடியாய்த்துடித் தனர்காண்
(47)

உயிரேபிரி உடலோஇணை நகமேபிரி சதையோ
அயில்வேல்நுழை புண்ணிலேபுகும் அனலேதரு துயரோ
தயவோடெனை இனிதாளுனர் தனியேகெனும் உரையே
இயலேன்பிரி வெனினும் அவர் உரையேலுதல் முறையே
(48)

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

தந்தை யுடனே உயிர்தங்கத்
தனித்தே உடலம் தள்ளாடி
சிந்தை தளர்ந்து செல்காட்சி
செப்பற் கெளிதோ சொல்லாலே
விந்தை உருவைப் பின்நோக்கி
வேந்தர் பல்கால் பார்த்தாங்கு
தந்தை திருவார் உருமறையத்
தரைவீழ்ந் துருண்டு புரண்டழுமால்
(49)
செல்திக் கெதுசே ரிடமேது
செப்பும் உரையா ரிடமென்று
கொல்லும் பிரிவாற் றாமையெனும்
கொடுமைத் துயரால் தவிநாதர்
நில்லா துருளும் நீணிலத்தே
நித்யம் அருள்செய் நேமியரும்
பொல்லாப் பிணிதீர் பணியெண்ணி
பெரிதும் வருந்தித் தனியேகும்
(50)

வேறு

தந்தை சொல்சிர மேற்றாங்கித்
தனய ரும்தமிழ் வாழ்சீரூர்
விந்தையார் மதுரை யேகி
வானி தியேற் கத்தக்கார்
அந்தியின் கடைப்பொட் டல்அங்
கதனில்வாழ் துறவோர் என்போர்
சிந்தையேற் பாரோ என்று
சீர்த ரத்தூக் கிநோக்கும்
(51)

வேறு

துறவு ஆடைகள் புனையு வீணர்கள்
உறவு போதையில் அறிவில் பேதையர்
பிறர்நி தந்தரு பொருளில் வேட்கையர்
அறம்ம றந்தவர் இறையை எண்ணிலர்
(52)

குடிகெ டுத்திடு குடியர் மற்றவர்
மடிது ழாவிடு வன்கணா ளர்கள்
படிமி சையிவர் பொய்ம்மைப் போதகர்
வடிவ மட்டும்மெய் வாணர் போல்பவர்
(53)

அண்ணல் கூறிய தணுவு மேற்றிலர்
எண்ணம் தீமையில் எய்து நெஞ்சினர்
வண்ணம் காவியில் மறைந்து வாழ்பவர்
பண்ணும் தீமைகள் பலவு மாயினர்
(54)

வேறு

அவநெறி புகுமிவர் கொடியவர்
அறனெறி உரைபுகு செவியிலர்
இவரிறை நெறிதனில் புகுவது
எளிதல எனஇறை கருதினர்
(55)

துவருடை புனைநமை உலகது
துணையென நினைவது அரிதென
துவருடை களைந்தனர் உலகினர்
தமதுற வெனும்உடை புனைந்தனர்
(56)

இறைவனின் அடியவர் எனஇவர்
எளியவர் தமைவழி கெடஉரை
அறைகுவர் திருடரை அகலுவம்
அருள்நெறிக் குடியினர்க் கருளுவம்
(57)

வேறு

உலகில் குடும்பப் பாங்கினர்க்கே
உவந்தே மெய்சார் நெறியருள
அலகில் சோதி அண்ணலரின்
அருளார் திருவுள் இனிதெண்ணும்
(58)

எண்ணம் கனிந்தே உணர்ந்தபடி
இனியர் சிலரும் கூடகத்தே
வண்ணம் எழிற்சொல் நாடகத்தார்
மதிநா வேந்தர் அருள் பொழியும்
(59)

மதிகாண் அல்லி மலர்போலும்
வானின் கதிர்காண் கமலம் போன்ம்
இதமார் அருள்மெய்ம் மொழிபொழிய
இதயம் மலர்வோர் பெருகினர்காண்
(60)

சாலை ஆண்டவர்கள் அருள்திரு மேனியின் எழில்

சந்தவிருத்தம்

நவமணி முத்துபதித்து இலகெழில் பத்தரைமாற்று
நிலவொளி மெத்தவிரிக்கும் இறைசிரம் உற்றகிரீடம்
சிவபிரான் இத்தரைமீது அழிகலி எத்தனைமாற்ற
திருவுரு மெத்தஎடுத்து அருள்தயை கர்த்தரைப்போற்று (1)

வளர்பிறை உற்றது காணோ மதிமுக நெற்றியதாமோ
வஞ்சகம் வெல்லநெறிக்கும் வளைஎழில் விற்புருவம்மோ
தெளிதரு நேத்திரம்சீரார் திருவொளிர் சூரியசந்த்ரன்
திருவிழி நோக்கத்தினாலே தெறிபடும் வெவ்வினையாவும் (2)

வெளிவிட வில்லை முமூச்சு விளங்கெழில் எள்மலர்நாசி
வியனுல கந்தனிலிடில் மாதவ வான்மணிநாதர்
ஒளிதிகழ் செம்பவளம்வாய் உயர்மறை பொங்கிடு கங்கை
ஒண்கனி கொவ்வையை ஒப்ப உறும்அத ரத்தெழில் காணே (3)

வேறு

மிடறது சங்கினை யொக்கும் வளர்கமு கதனையு மாணும்
மின்னுபொற் காரையிலங்கும் மணமலர் மாலைதுலங்கும்
படர்கரி மத்தகமார்பம் பன்மணி முத்துகுலுங்கும்
பொன்னெழில் முப்புரிப் பூணூல் புனைஇறை மெய்வழிநாதர்
(4)

கொண்டலை விஞ்சு கொடைக்கை கோமுழந் தாளினைமுட்டும்
கோலமார் பொன்னரைஞாணும் கோமகனரையிலிலங்கும்
பண்டையர் வேதியர் முன்தாள் பேரெழில் வெண்கல மொக்கும்
பதுமமார் பொற்பதந்தன்னைப் பற்றில்பேரின்பம் நிலைக்கும்
(5)

கனகனற் காரையுமெட்டி கர்த்தர்பொற் றாளிலிலங்கும்
கனிவொடு தரிசனை செய்வோர் கதிபெறக் காட்சிகள்நல்கும்
தினம்புதி யோரெமதையர் சீருயர் மாட்சியைஆதி
சேடனின் ஆயிரநாவால் செப்பிட லாவதுமின்றே
(6)

பொன்னரங் கண்ணலர்பொற்கை பெறலரும் சன்னதமேற்று
பூதல மாந்தர்களுய்யப் பெருவர மீயவிளங்கும்
தென்னகச் சீர்சிவ மிங்கண் சாலையிலின் பநடஞ்செய்
தேவர்மெய்ச் சாலையின்ஐயர் செம்மலர்சீரடி போற்றி
(8)

கற்பூர வாடைகமழ்ந்து கனிமறை வான்மொழி நல்கி
காதலர்ந் தின்பநிறைக்கும் கண்மணி நாயகர் எங்கோன்
பொற்பூரும் பொன்திருவாயின் போதகம் வையக முய்க்கும்
பண்ணலங் காரர்திருத்தாள் பன்னல மீய்ந்திடும் போற்றி!
(9)

ஒருபெருங்கூற்றினைவென்று இருவினை மும்மலநீக்கி
உறவரும் நாற்கதி நல்கி ஐம்புல வேடரைவென்று
வருமறு குற்றமொழித்து வலியஏழ் பாவநொறுக்கி
வியப்புற எட்டொடிரண்டு மெய்யறிபோதக நாதர்
(10)

நவவழி நன்கடை சூட்சம் நல்கிபத் தாவதுவாசல்
நன்குதி றந்திடச் செய்து நலம்பதி னொன்றெனும் செய்கை
தவனெறி பத்தொடிரண்டு தாழவும் ஈரெட்டேறத்
தந்தருள் எங்குலதெய்வம் தாள்மலர் வாழிய போற்றி
(11)

சாலை ஆண்டவர்கள் திருவருள் உரையமுதம்

நன்று எனையனை மேனி மானுட
நானிலம்மிசை நண்ணு காரணம்
பொன்றி சாவுறல் அன்று சாவிலா
பெரிய வாழ்வது பெறவும் வந்தனை
(1)

ஒன்ப தாம்அவை கோள்க ளின்அமல்
உந்தன் வாழ்வை உலைக்கும் அன்னவை
இன்ப தாம்நெறி தன்னில் ஒத்துழை
ஈடில் உத்தியும் உண்டு உன்னுளே
(2)

மெய்யினைப் பெற வந்த நின்னையே
மேவிச் செப்பிடு வித்தைக் கள்ளர்கள்
பொய்ய தாம்நெறி போகச் செய்குவர்
புலைய தைத்தவிர் நலமெய் கூறுவாம்
(3)

ஐம்பு லன்தரு அற்ப இன்பமே
அதனில் மூழ்கியே அலையும் மாந்தரே
மெய்வ ழிதரும் மேன்மை இன்பமே
வழங்க வந்துளேன் வாங்க முந்துமின்
(4)

சாவு என்பது நெடிய துன்பமால்
சற்று மோர்கிலார் இயற்கை என்பர்காண்
சாவி லாப்பெரு வாழ்வு ஒன்றுள
சார்ந்து வந்திடில் தாழ்திறந்திடும்
(5)

உயிரின் மாட்சியை உணர்கி லிர்அது
ஒப்பிலாப் பெரும் இன்பம் நல்கிடும்
அயர்வில் சீர்தனை அன்பொ டேதர
அருகில் வந்துளேன் அணுகில் கொள்ளலாம்
(6)

எளிய னென்றெனை இகழ்ந்தி டாதுமர்
இனிய சோதரன் என்று எண்ணுமின்
களிகொள் வாழ்வின்மெய் வழியைக் காட்டியே
கைகொ டுத்திடும் மெய்யன் நானறி
(7)

தற்கொலை செயல் தீரமென்பர்பொய்
தீந ரகில்நீங் காமல்ஆழ்ந்திடும்
வெற்றி வாழ்க்கையில் ஏறுமெய்வழி
விளம்ப வந்துளேன் விளங்க வம்மின்நீர்
(8)

அங்கு சொர்க்கவாழ் வுள்ள தென்றுமை
அழிவில் மாட்டுவர் பொய்ம்மைப் போதகர்
இங்கண் மேனியுள் இலங்கு மெய்யின்பம்
இனிது ஓர்கிலை யாமுரைக்குமால்
(9)

கல்வி என்றுபல் காலம் கற்றிடும்
கலைகள் நும்வயி றேநி றைக்கும்மெய்க்
கல்வி ஒன்றுள கடவுள் சார்கலை
காலகாலமும் கடந்து வாழ்நிலை
(10)

கால னின்இடர் சிறிது அன்றுகாண்
கடந்து தேவனின் கழலில் சேர்ந்துபொற்
கோல மேனிகொள் கோதி லாநெறி
கூற வந்துளேன் குறுகில் இன்பமே
(11)

இங்ஙண் சிற்றுணர் வின்ப மாய்கையில்
இசைந்து வாழ்ந்துமாய் கின்ற மாந்தரே
பொங்கு மாங்கடல் போல்மெய்யின்பம்
பெருகு வாழ்வுள வருக ஏற்றிட
(12)

இன்ப துன்பமும் இலங்கு வாழ்வினில்
இடர்கொள் மாந்தரே இணங்கு வீரெனில்
இன்ப மென்றுமே இனிமை நல்குமெய்
யோங்கு வாழ்வுள வாங்க வம்மினே
(13)

நிசமி லாநெறி நின்று துன்புறும்
நும்முன் மெய்வழி நாதன் வந்துளேன்
விசுவ நாதமார் உயிரின் ஆணியாய்
விளங்கு மெய்யுரை விள்ளும் கண்டுணர்
(14)

ஓய்விலா துழைத் தீட்டி விட்டுவிட்
டோடு பொய்ப்பொருள் நுங்கள் கைப்பொருள்
மாய்கிலாப் பெரு வாழ்வும் மெய்ப்பொருள்
வழங்கும் மெய்வழி புழங்க வம்மினே
(15)

தருக்கி னம்,புள், ஊர்வன, காலிகள்,
ஜலத்தில் வாழ்வன, மனுக்கள், தேவர்கள்
பெருக்க மாமிது தோற்றம் ஏழ்வகை
பிறவி மானுடம் பெறற்க ரியதாம்
(16)

மனுவெ னப்பிறந் தோர்கள் மெய்யறி
வாழ்வு சார்ந்திடில் தேவ ராகுவர்
மனுமகன் அதுமேவு மெய்ந் நெறி
மருவ, வைத்திடும் வருக பெற்றிட
(17)

கயிலை வைகுண்டம் பரமெய் மண்டலம்
காண ரும்மெக ராஜ்ய மேகிட
மயில்க ருடனும் அன்னம் வாசியும்
வாகனங்களாம் தேவர்க் கென்பர் காண்
(18)

கவன மாம்குளி கைகொண் டேகுதல்
ககன மார்க்கமாய் என்று கூறுவர்
புவன மிங்ஙனே புகலு மந்நெறி
படிந்து வந்திடில் விடியு முன்னிலம்
(19)

தேவர் என்பர்மேல் வானி லென்பர்அத்
தேவர் உன்னிலே தேர்கு வாய்அது
தேவனாகு மெய்ச்சீர் நெறியுள
சிந்தை கூர்ந்திடில் தந்திடும் இறை
(20)

சைவர் தாம்திரு நீறு என்றணி
சாம்ப லல்லகங் காளர் பூசிடு
மெய்வ ரந்தரு நீறு மங்கிடா
வெய்ய கூற்றது கண்டு அஞ்சிடும்
(21)

ருத்தி ராட்ச மோர் கொட்டையும் அல
ருத்ர ஏமனே அஞ்சு குலிசமாம்
வித்த கர்திருத் தாளை நண்ணிடில்
விளங்கும் அந்தமெய் துலங்கி இன்புறும்
(22)

காயத்ரி யெனக் கூறல் சொல்லல
காட்சி தந்திடும் தேவி மெய்யுரு
வாயிற் சொல்லும்பல் மந்தி ரம்உரு
மிளிரக் காட்டுவம் தளிர வம்மின்நீர்
(23)

ஒன்று மூன்றுஐந் தாறு எட்டென
உரைப்பர் மந்திரம், உளறும் வாயினால்
நன்று காணுறும் நாதர் மெய்யுரு
நண்ணில் காணலாம் விண்ணி லேறலாம்
(24)

தன்னு யிர்தனைத் தான்கண் டேஅதன்
தலைவன் காண்கிலா வாழ்வும் வாழ்வதோ
இன்னு யிர்தனை இனிது கண்டுனர்
இனிய மெய்வழி கனியக் காண்குவை
(25)

அரனு மாலயன் பரமதார் பிதா
அல்லா என்றுபல் நாமம் ஓதுவார்
உரனில் மாந்தர்கள் உண்மை ஓர்கிலார்
உவந்து நீவரில் உண்மை காணலாம்
(26)

ஒன்று தேவனே நாமம் பற்பல
உலகில் யாவரும் ஒருகு லம்என
நன்று செய்யுமெய் நாதன் வந்துளேன்
நாடி வந்திடில் வீடு பேறுறும்
(27)

பூவுல குயிர் பிறக்கும் நால்வழி
புழுக்கம் வித்துஅண் டம்சினை யென்பர்காண்
தேவ னாகிடல் ஆவிடை வழி
தேர்ந்து உய்ம்மினே ஆர்ந்து கூறுவாம்
(28)

பொய்ய கத்துறை நுங்கள் சிந்தையை
மெய்ய கத்துற வைக்கும் மெய்க்கலை
வைய கத்திவண் வந்த மெய்வழி
வம்மின் சாலைவாழ் வாங்கு வாழ்ந்திடும்
(29)

இத்து ணைத்திறம் ஈயுமெய்யிறை
எங்குளாரென ஏங்கல் வேண்டுதில்
அத்தன் மெய்வழி சாலை ஆண்டவர்
அருகு சார்ந்திடில் பெறுகலாம்பரம்
(30)

வித்துநாயகர் வேதன் சாலையர்
வைய கந்தனில் வானகம்தரும்
உத்தமர் குடி யோங்கி வாழ்ந்திட
உத்தி யோவனச் சாலைவம்மினே
(31)

சாலை ஆண்டவர்கள் மகிமை

வேறு

அறவாழி தனிலனந்தர் ஆருயிராம்
பஞ்சணைவீற் றருள்செய் நீதி
நிறைமொழிமெய் யமுதருள்செய் பரசிவமே
பொன்னரங்கர் நும்தாள் போற்றி
(1)

விதிகடந்த விமலாஇவ் வியனுலகோர்
வெவ்வினையால் மயங்கி மாழ்கி
மதிமயங்கா வணமருள்மெய் வரங்களருள்
புரந்தரரே வாழி வாழி
(2)

மறங்கொழுத்துக் கலிபழுத்து மடிந்துவிழு
மிதுநேரம் வையங் காக்க
அறஞ்செழித்த ஆதிசிவம் அருள்பழுத்து
அமுதத்தேன் பொழியும் சீரே
(3)

சித்தர்களும் முத்தர்களும் தேவர்களும்
ஞானியரும் சூழ்ந்து போற்ற
வித்தகரும் விஞ்சையரும் வெண்கவரி
மிழற்றஎழில் விளங்கும் சீரே!
(4)

வேதமறை ஆகமம்நும் வான்புகழைப்
போற்றிசெய வீற்றி ருக்கும்
நாதரும திணையடிகள் நனிபணிந்தேம்
வரங்களருள் நலமே போற்றி
(5)

எக்காளம் துந்துமிகள் மணிநகரா
இனிதிசைக்க அனந்தர்போற்ற
அக்கோள்கள் எமனமல்கள் அருவினைகள்
பவங்கடத்தி அருளும் சீரே
(6)

வேறு

ஜீவசிம்மா சனமேறி வீற்றி ருந்து
திருவருள்மெய்ப் பொருள்வழங்க அறஞ்செய் ஆதி
தேவசிம்மா சனரிந்தத் தரணி போந்த
சீராரும் திருப்புகழைப் பாடும் சீரே
(7)

அறம்மறந்து அகிலவர்கள் அழிவை நாடும்
அலைந்தலைந்து ஆருயிர்கள் மிகவே வாடும்
அறஞ்செயமெய் வழியரு ளச்சாலை வாரும்
அருளமுதம் வழங்கியெம துயிர்கள் காரும்
(8)

வையகத்தோர் தம்மகத்தை மெய்யில் வையார்
மறம்புரிதல் திறமென்பார் அருளைத் துய்யார்
பொய்யகத்தே படிந்தலைந்து பாழில் சேரும்
பொன்னரங்க நாயகரே காக்க வாரும்
(9)

வேறு

பஞ்ச அட்சரமென் றோதி காதிலுரை
பகர்வர் மெய்யதனை ஓர்கிலார்
வஞ்ச நெஞ்சினர்கள் திரிகை போலதனை
மாற்றி பொய்ம்மை தனைஏற்றுவார்
(10)

சாம்பல் தன்னையேவி பூதியென்றுசொலும்
தன்னையும் தனது தலைவரை
ஓம்பி நன்குணர வாய்ப்பிலாத இவர்
உண்மை கண்டுணரல் என்றுகாண்
(11)

நாமம் என்றுதமர் நெற்றியில் திருமண்
நன்குநீரில் குழைத் தணிகுவார்
சேம மெய்யிறைவர் நாமம் சூடுவது
செய்கிலார் சிறிதும் உய்கிலார்
(12)

ஞானஸ்நான மெனில் நீரில் மூழ்கியெழல்
நன்று என்றுஉயிர் குன்றுவார்
வானமே திறந் தென்றண்ணாந்து வெளி
மாட்டு வாருயிரை வாட்டுவார்
(13)

உருத்திராட்ச மெனக் காயின் மாலைகளை
அணிகு வாரதனைப் பணிகுவார்
உருத்ரன் அஞ்சுமொரு குளிகை ஒன்றுளது
உணர்கிலார் அருள்மெய் அணிகிலார்
(14)

தீட்சை என்றுசில சொற்களோதி மனம்
தீங்குளாக உயிர் வாட்டுவார்
மாட்சி என்றுபிறர் மடிதுழாவு கொடு
வஞ்சகம் புரிய அஞ்சிடார்
(15)

பிரம்ம மெய்யதனைச் சார்ந்திடாமலவர்
பிரம்மச் சாரியெனப் புளுகுவார்
பரமர் மெய்வழியைப் பற்றிலாது உயிர்
பாழ்த்துவார் நரகில் ஆழ்த்துவார்
(16)

ஆடையின்றி நிரு வாணமென்றுளறி
அறிவழிந்துழலும் வெறியெமன்
வாடையாலுயிரை வாடவைக்குமிடர்
வழியினர் நெடிய பழியினர்
(17)

சங்கு சக்கரம்த ரித்த லென்றுடலிற்
சூடு போடும் கெடுபாடுகள்
இங்கு தீமைபுரி வார்கள் வாதுபுரி
ஈனர்கள் கொடிய மாடுகள்
(18)

எச்சிற் பாலதனைத் தந்த தன்செயலை
இறைமு ரீதெனவும் உளறுவார்
துச்சிலில் உயிரைத் தொய்ய வைத்திடுவர்
தீங்கினர் கொடிய பாங்கினர்
(19)

குறிகள் சொல்லியிறை யானெனக் குளறி
குவலயத்தில் சிலர் திரிகுவார்
வெறிகள் கொண்டதனை நம்பி வீணுலகர்
வீழுவார் நரகில் ஆழுவார்
(20)

வித்தை செய்யும்சில எத்தர் தெய்வமெனும்
வஞ்சகம் கொடிய நெஞ்சகம்
மெத்த நம்பிடுவர் மறலிகையில் விழ
மேவுமே நரகில் தாவுமே
(21)

பொய்ய ராலுலகர் நலிகிறார்களுயிர்
பொற்றிரு வுளது ஏற்குமோ
மெய்ய தோங்க நெறிகாட்டி சாலைவழி
யேற்குமே வினைகள் தீர்க்குமே
(22)

சமய சாதிஇன வெறிகளா லுலகில்
சாகிறார் உடலம் வேகிறார்
எமையு மோர்பொருளென் றேற்று மெய்வழியர்
ஆக்குவார் அருளைத் தேக்குவார்
(23)

அங்கமேநனைய ஆடை சற்றுநனை
யாதஸ்நான முயர் ஸ்நானமே
தங்கமே அனையர் கொண்டமாட்சிதனைத்
தருகுவார் எமதுள் உருகவே
(24)

மண்ப டாதஎழில் பாத பங்கயம
கிழ்ந்து மெய்நடன மாடவே
விண்விடா துலவு வாசியேறிவிளை
யாடவே எமதுள் கூடவே
(25)

இக்கரங் கள்கொடு செய்வணக்கமது
ஏற்றிலிர் எமையு மாற்றியே
அக்கரங்களெமக் கருளிமெய்த் தொழுகை
புரியவே அருளைத் தெரியவே
(26)
சத்தியோடு விடையேறி வந்தினிய
தரிசனம் அருளும் கரிசனம்
முத்தி ஜீவனொடு தேகமும் பெறவே
வழங்கு மெய்வழியின் ஐயரே!
(27)

அறிவு காணுறுதல் அதுமெய் பேணுறுதல்
அறிகிலாதவர்கள் வறியவர்
செறியு மெய்யமுது பொழிய மெய்யறிவு
அருளுநீர் உயிருட் பொருளுநீர்
(28)

ஒருசொல் கீதைஅருள் உயர்வினால் மறைகள்
ஒளிருமே தெளிவு மிளிருமே
திருமெய் மார்பினி லிலங்க எம்முயிரைத்
தேற்றுவீர் கலியை மாற்றுவீர்
(29)

வேதம் யாவுமொரு உருவமாக வரு
போதமே அருளு நீதமே
நீதமெய்வழியின் சாலை ஆண்டவரே
நித்யமே நிகரில் சத்யமே
(30)

அனந்தர்களைப் பாடியது

படிமிசைமெய் மதமருள் செய்
பரமரெங்கள் சாலையண்ணல்
அடியவர்மெய் அனந்தர்கள்தம்
அருள்திறத்தைப் பாடுதுமே!
(1)

ஐந்தெழுத்தினை ஓதுவர் ஓர்நெறி
ஆறெழுத்தினைப் போற்றுவர் ஓர்துறை
விந்தை எட்டு எழுத்துணர் ஓர்மதம்
மெய்யனந்தர்கள் யாவுணர் ந்தோதுவர்
(2)

மந்திரம்மது சொல்லெனும் வையகம்
மந்திரம்மது ஓர்பொரு ளென்பதும்
எந்திறம்மது ஏந்தல் திறம்மென
எண்ணிநன்குணர்ந் தோதும் அனந்தர்கள்
(3)

கர்வமாய்ச்சிலர் மந்திர மோதுவர்
கனிவொடே அதன் மூலமுமோர்கிலர்
சர்வ மூலமாம் மந்திரம் காணுறும்
சற்குணாநிதி சாரணந் தர்கள்
(4)

வேதமேமறை யென்றுல கம்சொலும்
வேதமோருரு வென்று தெளிந்திடார்
நீதர் மெய்வழி ஆண்டவர் சீடராய்
நீணிலத்துறு மாந்த ரனந்தர்கள்
(5)

ஐம்பொறிச் செலும் ஆவல் உலகமே
அஃதடக்கியே ஆண்டவர் தாள்பணி
தெம்புயர்திற மோங்கு மனந்தர்கள்
சீர்மைக் கீடிணை செப்பலாகுமோ
(6)

ஒருபி றப்புபின் னுறுதல் சாவென
உலக மிங்கு மயங்கு காலையில்
இருபிறப்புள ஏந்தல் தாளினில்
என்றுணர் அனந் தர்கள் சாலையில்
(7)

சாதல் துன்பமென் றேதுயர் கொள்புவி
சாவிலின்பம் தெரிந்தது சார்பவர்
நீதி மெய்வழி ஆண்டவர்தாள் பணி
நித்யர் சாவினை வென்ற அனந்தர்கள்
(8)

கரண மோய்ந்திடு மரணமே கதி
கவலை வாழ்வெனக் கருது மாந்தருள்
மரணமேயிலா வாழ்வு ஈந்திடும்
மாதவர் அடி யாரனந்தர்கள்
(9)

எம்மதம்பெரி தென்று வழக்கிடும்
எங்கணும்கல கங்கள் மிகுத்திடும்
சம்மதம் மதுசார்ந்நதறி சாலையர்
தயவுகண்டுணர் சீடர் அனந்தர்கள்
(10)

சாதிசாதியென் றேவெறி கொள்ளுவார்
சாதிக்கும் திறம் தானுணர்கிற்றிலர்
ஆதி மூலமெய் நீதிவேந்தர் தம்
அருள்திறம் தெரிந் தோர்கள் சாதியர்
(11)

சமய மொன்றினில் பிரிவு பல்கொளும்
சழக்கர் வாழ்புவி தன்னில் மெய்யிறை
தமையறிந்துணர் சாலை வாழ்பவர்
தங்கமேயனை செல்வர னந்தர்கள்
(12)

கடவுளென்பது வெளியிலே எனக்
கையை வானுறச் செய்பொய்போதகர்
கடவுளைத் தம்முள் கண்டுணர்ந்தவர்
கர்த்தர் சாலையர் சேயனந்தர்கள்
(13)

மூர்த்தியும் தலம்தேடி யோடிடும்
மூகையர்க்குளே மெய்யுணர் ந்திறை
கீர்த்தி நீதியர் சாலை ஆண்டவர்
கேண்மை யுள்ளடி யார்அனந்தர்கள்
(14)

ஒழியும் மண்ணிதி தேடியுழல்பவர்
உலக மாந்தர்கள் உயரு மெய்வழி
அழிவி லானிதி அருள்வர் சாலையர்
அதுகண் டுய்வர் அனந்தரென்பவர்
(15)

ஓரூரேகப் பலவழி என்றுமே
உளறு பேதையர் பொய்ம்மை யழிந்திடப்
பேரூர் சென்றிட மெய்வழி ஒன்றென
புரிந்துணர்ந்துறை பொன்ன னந்தர்கள்
(16)

வேர்கள் மேலுற வாதுகீழுறு
விளங்க விஸ்வச் சுலாதருகண்டவர்
பேரனந்தர்கள் பெற்றி செப்பிடல்
பெருகு மன்பொடு பெரியஇன்பமே
(17)

உயிர்ப் பயிர்வளர் சாலைமெய் ஆண்டவர்
ஒளிசி றந்தபொற் பூவடிபோற்றுளம்
உயிரைக் காண்பது உண்டது நன்றெனும்
உண்மை கண்டுணர் வோர்களனந்தர்கள்
(18)

அறிவு ஆறெனும் ஆறது வாழ்தலம்
அறிகிலாரிந்த அவனி மாந்தர்கள்
அறிவதன் தலம் ஆய்ந்ததின்துறை
ஆண்ட வர்தர ஏலுமனந்தர்கள்
(19)

இங்கு வாழ்பவர் ஏகுமோர்துறை
இன்ப நாடதன் ஈடில் மாட்சியே
அங்கு சேர்ந்திட அண்ணல் காட்டிட
அறிந்து சீர்கொளும் அன்பரனந்தர்கள்
(20)

வேறு

மூவாமுதல் இறைசாலைமெய்
வழிஆண்டவர் பதமே
ஓவாதுறை அனந்தாதியர்
இயல்போதிடும் இனிதே
(21)

பொன்னாரெழில் மின்னாரொளிர்
திருமேனியர் சாலை
மன்னாதிமன் னவர்ஆண்டவர்
மகவாயினர் அனந்தர்
(22)

செந்தாமரை மலர் பூத்தொளிர்
திருவார்குள மெனவே
சிந்தாமணி சிரபூஷணம்
அணிபாகையின் அழகே
(23)

தேவாலய மதிற்கூடிய
திருவோங்கிடு இனியர்
நாவோதிறை பாவாயினர்
சாவாவர முடையார்
(24)

சாகாத்தலை போகாப்புனல்
தனைக்கண்டவர் இவர்காண்
பாகார்மொழி வேதாந்த மெய்ப்
பதிநெஞ்சினர் சுரர்காண்
(25)

வேறு

அருந்தவர்கள் வைகறையில் அன்பொ டார்ந்து
ஐயர்திருப் பஞ்சணையின் எழுச்சி பாடி
விருந்துயிர்க்கு வழங்குவரம் வேண்டும் காட்சி
வையகத்தில் வானகத்தை வந்து காண்மின்
(26)

வேண்டுவரம் மிக்கருள்செய் வள்ளல் சாலை
மாதவரின் ஆதியுயர் மான்மி யத்தை
ஈண்டனந்தர் இன்னிசையோ டினிது ஓதி
இன்பவடி வேற்குமெழில் காண்மின்காண்மின்
(27)

நன்கற்ப காலமிறை நற்றாள் நண்ணி
நலந்திகழும் குலந்தழுவி நாதர் போற்றி
சங்கற்ப மினிதுரைக்கும் திருவார் காட்சி
சற்சனர்காண் சிந்தைகனிந் தினிதே காண்மின்
(28)

ஆதிவிராட் கன்னிதவம் இயற்றிச் சீரார்
அனந்தர்குலம் கரமேந்த வரங்கள் ஈவார்
நீதிநிறை ஆலயத்தை அனந்தர் கூடி
நல்லறமாம் வலம்புரிதல் காண்மின் காண்மின்
(29)

சாலைஉத்தி யோவனத்தில் சான்றோர் கூடி
தருமதுரை எமதிறைவர் பொன்ன ரங்கர்
ஏலவல்லார் பாசுரங்கள் இனிது பாடி
இன்புறுவார் இனிதிசைவோர் கேண்மின் கேண்மின்
(30)

இறைநயநன் னேரமெனும் மாலைக் காலம்
எம்பெருமான் திருக்கோவில் மணிமுற்றத்து
மறைவல்லார் அனந்தர்குலம் மகிழ்ந்து கூடி
வணக்கமது புரிகின்றார் வம்மின் சேர்மின்
(31)

ஆக்கியெம தாருயிர்க்கு அமுதம் ஈந்து
அருட்கடலுள் ஆழ்த்திவளர் சாலைதெய்வ
வாக்கியங்கள் செவியேற்று இதயம் பூத்து
வன்பிறவிப் பிணிதவிர்க்க வம்மின் வம்மின்
(32)

பாடகர்கள் பண்ணிசைத்துப் பரமர் பொற்றாள்
பணிந்திறைவர் திருவருளைத் தெய்வத் தேடு
கூடகத்தை குலஞ்செழிக்கப் பாடும் காட்சி
குவலயத்தீர் வந்தினிது கேண்மின் கேண்மின்
(33)

எக்காளம் துந்துமிகள் இனிதி சைத்து
இனியதவ முனியரசர் எழிற்றாள் போற்றி
தக்கோர்கள் அனந்தர்செயும் வணக்கம் சார்ந்து
தவப்பலன்பெற் றினிதுய்ய வம்மின் வம்மின்
(34)

சீராரும் தவத்தரசர் சாலை தெய்வத்
திருப்புகழை இரவெல்லாம் விழித்துப் பாடிப்
பாரவணக் கம்புரியும் பலன்சேர் சாலைப்
பக்தரொடு பண்ணிசைக்க வம்மின் வம்மின்
(35)

யுகத்தீர்ப்பு நடத்திபுது யுகவித்துக்கள்
உவந்தெடுத்து வானகத்து வைப்பாய்க் கொள்ளும்
சுகத்தீர்ப்பர் சுதந்திரமாய் ஓங்கி வாழத்
துணைதருமெய் வழிதெய்வம் வாழி!வாழி!
(36)

வேறு

குழல்யாழ் தாளம் மத்தளமும்
கூடியி சைத்துத் துதிபாடி
எழிலாய் எம்மான் புகழ்போற்றி
இன்புற்றி ருப்பார் ஒருசாரார்
(37)

பொன்னின் அரங்கர் திருவாக்யம்
பெற்றோம் இதுவே பெரும்பாக்யம்
என்னே இதற்கு ஈடென்று
இனிதே களிப்பார் ஒருசாரார்
(38)

விண்ணோர் தீர்க்க தரிசனங்கள்
விளம்பும் எம்மான் வருமாட்சி
பண்ணேர் மொழியால் நெகிழ்வோடு
பாடிக் களிக்கும் ஒருசாரார்
(39)

வெள்ளம் பெருகி வரல்போலும்
மெய்யர் தெய்வத் திருமுன்னே
உள்ளம் உருகித் துதிபாடி
உவந்தே நிற்கும் ஒருசாரார்
(40)

வேதப் பொருளாம் எம்மையர்
மேலாம் கருணைப் பெருக்கெண்ணி
பாத மலரைப் பணிந்தேத்திப்
பரவிப் புகழும் ஒருசாரார்
(41)

பொன்னின் அரங்கக் கும்மிதனைப்
பூரித் திசைத்துக் குதித்தாடி
தென்னன் சாலை இறைமாட்சி
செப்பிக் களிக்கும் ஒருசாரார்
(42)

தூங்கா ஆண்மைத் தவமாட்சி
சீரார் பெருமை அருட்தன்மை
ஆங்காங் கமர்ந்து புகழ்ந்தேத்தி
அகமே களிக்கும் ஒருசாரார்
(43)

பொற்றேர் அசைந்து வருதல்போன்ம்
பொன்னின் அரங்கர் வருங்காலை
கற்றா போலும் கசிந்துருகிக்
கண்டே களிக்கும் ஒருசாரார்
(44)

ஆதிதேவன் எம் தெய்வம்
அருள்செய்திட்ட திருவேதம்
ஓதி உணர்ந்து உளம்பூரித்
துவந்தே நிற்கும் ஒருசாரார்
(45)

பாதம் பணியும் ஒருசாரார்
பண்க ளிசைக்கும் ஒருசாரார்
நாதர் திறம் போற்றொருசாரார்
நலஞ்சேர் புகழ்போற் றொருசாரார்
(46)

கலி சங்கார உலக மகா யுத்தம்

கலி என்னும் அரக்கனின் ஆட்சி முதிர்விளைவேறி உலகினை அழிதுயருள் ஆழ்த்தும் வெறிமீக்கொண்டு எங்கணும் கொடுமை நிகழும் இதுகாலம், அகில மனுக்குலம் ஜென்ம சாபல்யம் பெறச் செய்வழி காட்டி உய்வழி கூட்டும் கலி சங்காரகரணமகா புருடோத்தமராகிய முழுமுதற் பொருள் கோளரி வாட்கை ஆழிவாழ் ஐயர் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் எண்ணரும் சன்னத அலங்கிருதம் மிளிரும் திருப்பெருஞ்சீர் வரந்தரும் அருட்கரம் கோடாயிதங்கொடு வெங்கலி மாற்றி நங்குல முய்விக்கும் மாட்சி கூறுவாம்.

காப்பு

ஒளிதிகழ் திருமல ரிணையடி
உயர்துணை தரநனி பணிகுவாம்
தெளிவருள் தயைநிறை இறையவர்
துயர்கலி அழிசமர் புகலுவாம்
(1)

கலியன் இயல்பு

கலியர செனுமிகு கொடியவன்
கசடுகள் நிறைகொடு முடியினன்
வலிமைகள் கொடுஉல குயிர்களை
வதைத்தெரி நரகினில் விடுபவன்
(2)

பொறிபுலன் உணர்வுகள் கெடுவகை
புரிசெயல் தனில்மிகு திறனொடு
நெறியழி பலமுடை தறுகணன்
நலங்கெடச் சகதியில் அமிழ்த்துவன்
(3)

கலியர சாயுதம் கணக்கில
கடுஞ்சின ராக்கதர் துணைபல
மலிவுடை சுகமென மயக்குற
வதைத்திட தந்திரம் மிகப்பல
(4)

நோக்கினில் அனலெழ மண்ணுயிர்
நடுங்கிடக் கொடுமையை ஏற்றுவன்
தீக்கொளும் காமுறு காட்சியுள்
சிந்தைய ழிந்திட மாய்க்குவன்
(5)

நன்மைதொ லைத்திடு காட்சியை
நல்லுயிர் கெட்டிடக் காட்டுவன்
புன்மையு லகினிற் பொங்குற
பொய்க்கலி யன்படை பல்குமால்
(6)

வாக்கினில் வன்மொழி வெம்மையார்
வசவொடு சுடுதிறன் வஞ்சகம்
நாக்கினில் நாய்வெறி யாக்குவன்
நஞ்சுண வைநல மென்னுவன்
(7)

உணவதன் வெறிதனி லாழ்த்துவன்
உயிர்வதை வேட்கையில் வீழ்த்துவன்
கணமதும் இரக்கம தெண்ணிடா
குணமது வளரவும் செய்குவன்
(8)

பிணமது உணவெனும் மாமிசம்
பெருகிடு ருசிவெறிப் புலையராய்
குணமது ராக்கதர் எனவர
கோட்டிடும் ஆருயிர் வாட்டிடும்
(9)

தானொரு பிணக்குழி ஏகுமுன்
தானேபி ணக்குழி ஆகுதல்
தானொரு சாம்பிணம் உண்டிடல்
தான்விலங் காம்கடைத் தன்மையாம்
(10)

கொள்ளியை வாய்கொளு பேயென
கனலொடு புகைவிடு வாயினன்
துள்ளுற ஜீவனை வதைசெயும்
தீநர கதன்இடர் தெரிகிலன்
(11)

நாசியில் மூச்சது வெளியுற
நல்வய ததுகெடு நெறியினில்
வீசுதுர்க் கந்தமும் இனிதெனும்
வெங்கொடு வழிதனில் கூட்டுவன்
(12)

செவியினுள் சுடுமொழி வாளென
சிந்தையி ருட்புக கேளுற
சுவையினி தெனத்தலை ஆட்டுவன்
தெய்வ மறைசொலில் பொத்துவன்
(13)

வஞ்சகம் சூதுகள் பொய்ம்மையும்
வாதுகள் தீதுசெய் புன்மையும்
நெஞ்சக மதுனிறை வாகிட
நிந்தை வளர்ந்திடும் வெவ்வுரை
(14)

இறைவனை இல்லையென் றோதுவன்
எரிநர கின்விற காக்குவன்
மறைமொழி செவிபுகில் தீதென
வஞ்சக மாயதை நீக்குவன்
(15)

பெருநெறி யொழுக்கமும் வேண்டிலன்
பெரியரைத் தூஷணை செய்குவன்
குருநெறி மாற்று துரோகமே
குவலய நன்னெறி என்னுவன்
(16)

அரசினை இகழுவன் வெறிகளில்
அடர்ந்துபு குந்துயிர் மாள்வதை
பெரிதுதி யாகமென் றேற்றுவன்
பொய்வடி கட்டி பரப்புவன்
(17)

காம னெனும்கொடு வஞ்சகன்
காசினி முற்றழி நெஞ்சகன்
ஏமனை வாவென ஈர்ப்பவன்
இன்னல் தரும்கலித் தூதுவன்
(18)

கோபனெனும் அனல் கோளகன்
கொல்லுவன் அன்பினை வெல்லுவன்
பாபமி யற்றிடப் பாழ்நெறி
பொய்ம்மலி யும்கலி ஆயுதம்
(19)

மதுவது மதிதனை மாய்த்திடும்
வன்கொடு ராக்கதன் வையக
மதுகெடச் செயவல ஆயுதம்
வன்கலி கைக்கொள்வா ளாயுதம்
(20)

இளையவர் முதியவர் மாதர்கள்
எனுமொரு பேதமி லாதுயிர்
தளைபட மதுசெயும் சூதுகள்
துயர்தரு கலியனின் சூலமாம்
(21)

தன்னுயிர்க் கேதனை யேபகை
தீநர கேகிடும் மாள்வகை
வின்னமி யற்றிடு வெங்கலி
வேந்தனிய ல்பிவை காணுதி
(22)

கலி சங்காரம்

எழுசதுர் யுகங்களிற் கடையுகம்
இதுதனில் கலிசெயும் கொடுமைகள்
வழுமிகு திமிரமும் பொடிபட
வியனுல குறுமிறை புரிசமர்
(23)

இதமொடு எதிரிகள் அழிவுற
எடுபடை யதன்கரு விகள்பல
மதிமணி புனைசிர மகுடரென்
மறையர சுயர்வலிக் கிணையிலை
(24)

ஈரெழு உலகவ ரெதிர்வெலும்
இருபுறம் கருக்குடை பட்டயம்
பாருல குய்த்திடப் பலிகொளும்
பதமது சீர்முக்கூர் கத்திகாண்
(25)

அருளெழ விழிபொழி கருணையில்
அருகணை பவர்பவ வினையற
திருமிகும் எமதிறை சுகனிதி
தரிசன மெனும்சமர் புனிதமே
(26)

பூமிய திர்ந்திடும் ஓசைகொள்
பொற்கர மேந்திய சங்கது
சேமமெய் நாதமும் ஓமென
சிந்தையுட் கள்ள மொழித்திடும்
(27)

இறைவர்தி ருக்கையி லங்கிடும்
ஈடில்சு தர்சனச் சக்கரம்
கறைகொளு வஞ்சக நெஞ்சகக்
கசடற ஈர்ந்து எறிந்திடும்
(28)

அன்பு அறாததோர் தூணியும்
ஆர்ந்து வளைந்திடு வில்லது
என்பு நெகிழ்ந்திடப் பாய்ந்துமே
ஈனகு ரோதனை எற்றிடும்
(29)

சேல்விழி நோக்கெனும் வேலது
சிந்தையுள் ஊடுரு வித்தினம்
கோலம யக்கிடர் கள்ளதை
கூறிடும் வீறிட வோட்டுமே
(30)

மும்மத வெங்கரி வெஞ்சினம்
வீறிய மர்புரி மதவெறி
சம்மத நல்லருள் ஓங்கிடத்
தீர்க்கும் பராங்குச மாட்சிகாண்
(31)

படிமிசை “யானெ”ன் அகந்தையைப்
பற்றி நொறுக்கி நலந்தரும்
துடியதன் ஓசைதி ருவரம்
தந்தருள் மெய்வழி தெய்வமே
(32)

வேறு

கொலைபுரி கொடுமையைத் திறமென எண்ணிடு
கொடியவர் பண்பதைக் கொத்தொட ழித்திடும்
அலைவுறு நெஞ்சொடு களவுசெய் வேட்கையின்
ஆணிவே ரைத்துணி ஆற்றலைப் போற்றுவோம்
(33)

தகைநலம் அழிவுறப் பகைபுரி புகைப்பிடி
தீங்கதாம் கொள்ளிவாய்ப் பேயெனும் வகைப்பிடி
புகுமவர் கருவமும் பொசுங்கிடச் செய்திடும்
பெருந்தகை நலமது அவரிடை எய்திடும்
(34)

வையக மிசைவரு மெய்யதின் மாற்றமாய்
வந்திடர் தந்திட வல்லமை மிக்கதாம்
பொய்யுரை பேதகப் போதகம் மாய்ந்திட
பொன்னரங் கையர்செங் கோல்கொடு வென்றிடும்
(35)

திரைப்படம் மானுடச் சாத்விகம் தீய்த்திடும்
தரணியர் கலியனைச் சார்ந்துறு ராக்கதர்
தரைமிசைக் கொடியஅச் சழக்கனை எம்மிறை
செந்நிற வாள்கொடு சாய்த்திடும் மாய்த்திடும்
(36)

வேறு

இரக்க மேஅ டைப டுத்த
இனிய நோக்க தாக்கினர்
சுரக்கும் அன்பு பொழியும் பார்வை
சுரருள் இன்பம் தேக்கினர்
(37)

மூச்சடங்கு இடத்தி ருக்கு
மெய்ந் நெறிக்குள் உய்த்தனர்
பேச்சு மூச்சிலாத ஓர்மை
பெருந்தி றத்துள் வைத்தனர்
(38)

செல்வ வாநிதி துலங்கு
செவியுணவு ஈந்தனர்
நல்வழிக்குள் ஜீவன் உய்ய
நல்வரம் வழங் கினர்
(39)

மெய்ம்மறை முழங்க வாயில்
வேதமே புகுத்தினர்
வையகத்துள் வானகத்தை
வந்து ஈந்த மாண்பினர்
(40)

உண்பதன் வெறி கெடுத்து
ஒப்பிலா அமுதமே
பண்பதாய் உணக் கொடுத்து
பாருள் உய்க்கும் சீரதே
(41)

மும்மலம் கருகி நைய
மெய்வரம் கொடுத்தனர்
மெய்ம்மையார் நெறியு ளோங்கு
விந்தை யுட்பு குத்தினர்
(42)

எங்குலம்ம தம்பெரி தென்
றின்னல் செய் குறும்பற
செங்கரத்து வாள் கொண்டேது
ணித்து மெய்நி றுத்தினர்
(43)

கற்று ளோம்எனும் செருக்கு
கால்பிடறி பட்டிட
முற்று ஓட்டமே எடுக்க
மெய்ய றிவுள் எற்றுவர்
(44)

சாவினின்று மீட்டு ஜீவர்
சாயுச்யத்தில் ஏறவே
தேவதேவர் செய்த ஆற்றல்
செப்ப லாவ தெங்கனே
(45)

தாபமூன்று மின்றி உய்ய
செய்கு பொன்ன ரங்கரின்
மாபலம்வ ரைந்து ரைக்க
வல்லர் யாருமில் லையே
(46)

வேறு

பெரியோரென புனைவேஷர்கள்
புலைகாமுக நெறியர்
சரியாரெனத் தெரிதோதுகள்
தருநீதியின் அரசர்
(47)

புரிவாதுகள் பொடியும்மறை
புரியாதன விடியும்
அரியும்சிவன் அயனும் ஒரு
அருளார்உரு இறையால்
(48)

ஒன்றேகுலம் ஒருதேவனென்
றுரைசெய்தது நிசமாய்
நன்றே நிறுவிய வானவர்
நன்மெய்வழி தெய்வம்
(49)

மதஜாதிகள் இனபாஷைகள்
வெறியாலுல கிடர்கள்
நிதமே நிகழ் கெடுபாடுகள்
ஒழியஅருள் பொழிவார்
(50)

பலமாமறை நெடுநாள்பயில்
பலவான்களும் அறியா
நலவான்மறை ஒருசீர்நொடி
நனிகற்றிட அருளும்
(51)

புதிதாயின இசையில்மறை
புகழ்வார்அது தெளிவோர்
தெரியாதன ஒருசொன்மொழி
தெளிவாகிட அருளும்
(52)

வெறிமேவிட குணதோஷங்கள்
வெருண்டோடிட உயர்மெய்
நெறிகூட்டிடும் நிறைவான்மொழி
சுவையால்உயிர் வளரும்
(53)

அமுதம்பொழி முகிலாமுயர்
அறம்பொங்கிடு நதியாம்
எமதின்னுயிர் புகலாம்வளர்
இறைசாலையர் பதியாம்
(54)

ஏழ்பாதகம் தீர்த்தேஉயிர்
வாழ்தோதகம் தருவார்
பாழ்போகிட லிலைமூச்சது
பண்போங்கிட அருளும்
(55)

வேறு

பிணக்குற்றுப் போர்புரிந்த மதங்கள் ஜாதி
பெருக்குற்ற அருளமுதால் உண்மை ஓர்ந்து
இனக்குற்றுக் கரங்கோர்த்திங் கிணைந்து வாழும்
இன்பமிகும் காட்சியினைக் காண்மின் காண்மின்
(56)

பொய்வேடப் புலையர்களால் அலைப்புண் டுள்ளம்
பெரிதயர்ந்து நெறிகாணா தேங்கி னோர்க்கு
மெய்ம்மாண்பு விளங்கிடச்செய் சாகாக் கல்வி
மிகக்கற்பித் தனந்தர்களாய் ஆக்கல் காண்மின்
(57)

தெய்வங்கள் பலவென்று தியங்கி னோர்க்கு
திருவரங்கள் அருளரங்கர் மெய்ம்மை காட்டி
உய்வித்த உயர்மாண்புக் கிணையில் காண்மின்
ஒன்றிறையும் குலமென்ற உண்மைகாண்மின்
(58)

கல்லாரும் கற்றவரும் ஒருங்குகூடி
கலையனைத்தின் தலைவர்திருத் தாளைநாடி
எல்லாரும் இன்புறுமெய்ந்நெறி யுள்ளோங்கும்
இனியதிருக் காட்சியினைக் காண்மின் காண்மின்
(59)

இறையிலையென் றிடர்விளைக்கும் நாத்திகர்க்கு
இறைமை யுணர்இனியகலை இருப்பில்காட்டி
துறையறிவித் தின்பநெறி துணைகூட் டெங்கள்
தேவாதி தேவர்பதம் பணிவம் யாமே
(60)

மாறாத வாழ்வுவரம் வழங்கி மெய்யை
வழிகாட்டி எழிலூட்டும் தேவ கோமான்
பேறான பெருந்தனிகை மணியர் செல்வர்
பொற்றாளைப் பணிந்துபிறப் பறுப்போம் வாரீர்
(61)

வந்துபணி நரர்மனுவாய் தேவ ராய்த்தம்
மதம்குலத்தின் மாண்பறிந்து மற்றும் தேர்ந்து
விந்தைமிகுந் தின்புற்றெக் களிப்பு மீறி
வையாளி போடுவதைக் காண்மின் காண்மின்
(62)

மூர்த்திதலம் தீர்த்தமெலாம் தேடியோடி
மெய்காணா திங்குற்று மயக்கம் தீர்ந்து
கீர்த்திமிகு தலைவரையும் தனையும் கண்டு
கிளர்ந்தெழுந்து களித்தாடல் காண்மின் காண்மின்
(63)

எங்குறுவோம் என்புரிவோம் இறைகாண் கில்லோம்
என்றயர்ந்து இறைநயத்தோர் அலைந் திங்குற்று
தங்குருநற் றயவதனால் தரிசித் தின்பம்
தளிர்த் தோங்கிக் குதித்தாடல் காண்மின் காண்மின்
(64)

மெய்யுணர்ந்த அனந்தரெனும் வேந்தர் தம்மை
வேடமிட்ட பொய்ஞ்ஞானப் புலையர் கண்டு
வையமிதில் இவர்வாக்கை வெல்லற் காகா
வம்பெதற்கென் றோட்டமிடல் காண்மின் காண்மின்
(65)

மோனமது ஞானவரம் பென்று ஓரார்
மூகையராய் மூச்சடக்கி பிறரை ஏய்த்து
ஞானமணிச் செல்வர்திறம் உரைப்பக் கேட்டு
நமக்கேன்வம் பெனவிலகி யோடல் காண்மின்
(66)

வாசியென்றால் மூச்சென்று திரித்துக் கூறி
வையமிதில் குதிரையைப்போல் திரியும் பொய்யர்
தேசிகர்தம் திருக்குரமர் கூட்டம் கண்டு
திகைப்புற்று திசைக்கொருவர் ஓடல் காண்மின்
(67)

மந்திரங்கள் மெய்ப்பொருளென் றுணரார் வாயில்
வலமிடமாய்த் திரிகையைப் போல் சுழற்றிக் கூறி
மந்திரங்கண் டனந்தர்குலம் வளர்தல் கண்டு
மதிப்பைவிட மறுத்தோடல் காண்மின் காண்மின்
(68)

மங்காத திருநீற்றைச் சாம்பலென்று
வழங்கி அதைப் பூசுவதே மாட்சியென்னும்
தம்கோன்மெய் தானறியார் மெய்யர் கண்டு
தலைதெறிக்க ஓடுவதைக் காண்மின் காண்மின்
(69)

ஐந்தெழுத்தும் மூன்றெழுத்தும் எட்டெழுத்தும்
அறுபுரிநூல் முப்புரிநூல் அனைத்தின் மாண்பை
நைந்துருகித் தரிசிக்கா நலிந்தோர் கூட்டம்
நல்லனந்தர் தமைக்கண்டு நாணல் காண்மின்
(70)

மூச்சடங்கும் இடமருள்மெய் வழி தெய்வத்தின்
வரம்பெருமு மூச்சுகளாம் அனந்தர் காணில்
மூச்சடங்கி விழிபிதுங்கும் வீணர் கூட்டம்
மூலையிலே போயொடுங்கும் காட்சி காண்மின்
(71)

சாதியெனில் சாதித்தல் எனக்காண் கில்லார்
சாதிக்குள் பலபிரிவும் பொய்யும் கூறி
சாதிவெறி மூட்டுகின்ற சழக்கர் கூட்டம்
சற்சனரைக் காணுறுங்கால் எடுக்கும் ஓட்டம்
(72)

வாயினிலே மந்திரங்கள் சொல்லி மாந்தர்
வஞ்சஎமன் காணுறுங்கால் மயங்கும் காண்மின்
ஆயகலைக் கதிபர்திரு மந்த்ரம் கண்டு
அகம்களிக்கும் அனந்தர்குலம் காண்மின் காண்மின்
(73)

யானெனது எனும் செருக்கால் அலைந்திடாமல்
“யாமகதி” மாட்சிகளை ஓர்ந்து உய்ந்து
வானவராய் மெய்க்கல்வி கற்று வாழும்
மெய்யனந்தர் சாலைவளர் வாழ்வைக் காண்மின்
(74)

யுகப் பிரளய காலம்

உலக முழுமையும் தோற்று வித்தவர்
உலக உயிர்களைக் காத்த வானவர்
உலகில் கலிமுதிர் விளைவு ஏறல்கண்(டு)|r}}
உலகு அழிவுற ஓர்தி றஞ்செயும்
(1)

உலக மனுவினம் செய்கொ டுஞ்செயல்
உடற்று வஞ்சகம் புன்மை வெஞ்சினம்
கலக மதுமிகப் புரிதலால் இறை
கலிய ழித்திடக் கருதி டும்உளம்
(2)

அறம்ம றந்துஅ நீதி யோங்கிடும்
அரசு வெங்கொடுங் கோல்பு ரிந்திட
மறமி கும்துயர்மறலி சார்நெறி
வளர்த லால்இறை கலிய ழித்திடும்
(3)

எரிம லைகளும் குமுறி வீறிடும்
இடிகள் மின்னல்பூ கம்ப மெங்கணும்
எரிந்து தாரகை இறைந்து வீழ்ந்திடும்
எங்கும் கந்தகப் புகையும் மண்டிடும்
(4)

தீத்தண் ணீரதுஊற்று பொங்கிடும்
தரணி எங்கணும் எரிகொ ளுவிடும்
பூத்த பொய்ப்பவ கோள்கள் விஞ்சலால்
பூமி யெங்கணும் அழிவு வீறிடும்
(5)

பகைகொள் நாடுகள் போர்பு ரிந்திடும்
பட்ச மின்றிபல் லழிவு நேரிடும்
தகையில் தீநெறி சாரும் தேயங்கள்
தம்மை தாம்அழி வுட்ப டுத்திடும்
(6)

இமய மால்வரை உருகி வெள்ளமே
எங்குமே பரந்தழிவு செய்திடும்
அமைவில் வன்பவ இருள னாம்கலி
அழிவி னில்இந்த அகிலம் மூழ்குமால்
(7)

துருவம் அசைவுறும் திசைகள் மாறிடும்
சிகரம் மலைகளும் துகள்க ளாகிடும்
உருமும் விண்மண்ணும் உள நடுக்குறும்
உளறி அலறியே உயிர்பி ரிந்திடும்
(8)

புவியில் விளைவிலை புசியும் உணவிலை
பொலியும் அழகிலை அழிவின் பெருநிலை
அவியும் அனலினில் அரனின் நினைவிலை
அடியில் துளைபடு கடலும் சுவறிடும்
(9)

அமலி யதுமிகும் அவனி அழிவுறும்
அமைதி குலைவுறு அலறும் நரகவர்
சமர்கள் பலவரும் தமிழ்வாழ் புவியினுள்
சுரர்கள் மகிழ்வுறசுகமும் நிலைபெறும்
(10)

வேறு

கதிரொடு மதியதும் ஒளிகெடும்
காரிருள் கனத்தர சாண்டிடும்
மதிகுறை வுறும்வெறி கடிதுறும்
மனுவினம் அழிதுயர் பெருகிடும்
(11)

கொடியன புயல்பல எழும்மலைக்
குவடுகள் அசைவுறும் துகள்படும்
மடிவுற இடர்புவி பிணிபல
மகிதல மிதில் பலதுயர் தரும்
(12)

இனியிலை உயிரினம் எனும்வகை
இடமகல் புவியிது நடுக்குறும்
தனித்தனி யவரவர் துடித்திடும்
தமர்பிற ரெனஅறி நினைவறும்
(13)

விலங்கினம் நகரிடை திரிதரும்
விலைமிகு அணிபல தெருவுறும்
கலங்கிடும் உயிர்மிக அழிவுறும்
கடல்நிலம் நிலம்கடல் எனவரும்
(14)

இறைநெறி நகலென மருவிடும்
எமபடர் உயிர்வதை பலசெயும்
மறையுணர் திறமது இலையெனும்
மனுமகன் மகதியை வருகெனும்
(15)

இதுவரை நிகழ்துயர் இனியறும்
இடரிலை சுகமெனும் நிலைவரும்
மதியர சிறைவரும் அருள்மிகும்
மறலியின் அமலியின் முடிவுறும்
(16)

புதுயுகம் கிருதமும் இனிவரும்
பொலிநலம் புதுமைகள் நிலைபெறும்
இதமொடு மகஜரில் தீர்ப்புநாள்
எழில்மிக வளம்தர வருகுதும்
(17)

சுரரினம் அழிவிலர் கயிலையர்
சுகநிறை நெறியினர் இவரெனும்
நரகினில் துயருறும் நலிவினர்
நமனிடர்ப் படுபவர் இவரெனும்
(18)

வருயுகம் தனில்மழை மும்முறை
வருஷியும் எங்கணும் செழிப்புறும்
தருக்கினம் எழுதினம் கனிதரும்
தளிர்பயிர் ஒருதினம் பலன்தரும்
(19)

விடமிகு தருக்கினம் இனியிலை
விரிவுறு நலன்பல விளைவுறும்
நடம்புரி எமதுயிர் நாயகர்
நலந்திகழ் அமுதுகு உரையிதாம்
(20)

வேறு

இருபத் திரண்டு வயதளவாய்
என்றும் ஆண்கள் இனிவாழும்
இருஒன் பதெனும் அகவையொடு
எழிலார் பெண்கள் நனிவாழும்
(21)

பொன்னின் அழகார் எழில்மேனி
பூசும் களபம் அதன்வாசம்
மின்னும் பச்சை நவரத்னம்
மிளிரும் அங்கக் குலமெல்லாம்
(22)

மலர்கள் புனுகு கஸ்தூரி
மருசவ் வாது கற்பூரம்
துலங்கும் அங்கம் ஒவ்வொன்றும்
திகழும் வாசம் பொற்பூரும்
(23)

பசியோ ஒன்பான் ஒருபங்கு
பகர்தற் கெளிதோ சுவையின்பம்
முசியா வாழ்வு யுகங்கோடி
விளங்கும் வாழ்வை விழையீரோ
(24)

முன்னாள் இந்நாள் வருநாளும்
முதலும் முடிவும் ஆண்டவரே!
பொன்நாள் அவர்கள் பெருமாண்பைப்
புகழும் திருநாள் பெருநாளே
(25)

அறமும் பொருளும் இன்பம்மெய்
அருள்வீ டதுவும் எம்தெய்வம்
திறமும் தயவும் சுகம்யாவும்
சீரார் சாலை ஆண்டவர்காண்
(26)

என்றும் சாவா வரமருளும்
எம்மான் சாலை ஆண்டவர்கள்
நன்றே திகழும் மாட்சியினை
நாவே இனிக்கப் பாடுவமே!
(27)

பாடீரோ! ஆடீரோ!

மானும் புலியும் ஒன்றாக
மருவிச் சாலை ஊரணியில்
தேனுண் ணீர்கொள் திறம்பாடித்
தெய்வம் பரவி ஆடீரோ!
வானின் றிவர்ந்து மண்ணுயிர்க்கே
வரங்கள் வழங்கும் வள்ளல்எம்
கோனின் ஓங்கும் திருப்புகழைக்
களித்துத் துதித்துப் பாடீரோ!
(1)

தேனும் கைக்கும் சுவையாரும்
திருவாரமுதம் அருள்செய்து
ஈனப் பிறவிப் பிணிமாய்த்து
இமையோ ருள்ளே இனிதேற்றுத்
தானம் வழங்கும் தனிகையர்
தனயர் புகழைப் பாடீரோ!
ஊனம் தவிர்த்தே உயிர்காத்தார்
உயர்வைப் பாடி ஆடீரோ!
(2)

வருஆண் தன்னைப் பெண்ணாக்கி
வலியக் கூடிக் கருவாக்கி
குருஆண் என்றே தமைமாற்றிக்
கோதில் இன்பத் தலத்தேற்றி
பெருமாண் புருவைப் பெறுகென்ற
பெருமான் புகழைப் பாடீரோ!
குருமாண் பருள்சேர் திறம்போற்றிக்
குலவிக் களித்து ஆடீரோ!
(3)

மாட்டின் இடையர் எனப்போந்து
மொழிந்தார் பகவத் கீதையினை
ஆட்டின் இடையர் எனப்போந்து
அருளோர் மொழியின் கீதையினை
பாட்டின் பொருளாம் பரமர்புகழ்
பணிந்து பரவிப் பாடீரோ!
தேட்டிற் சிறந்தார் தென்னாடர்
தயவிற் களித்து ஆடீரோ!
(4)

பொருளென் றுலகோர் சொற்சாலம்
புகலும் புன்மை தனைமாற்றி
பொருள்மெய் தரும்பொன் னரங்கர்தம்
பெரிய தயவைப் பாடீரோ
பொருளுட் புக்கித் திளைத்தினிமை
பெற்றே களித்து ஆடீரோ!
பொருளே தாமாய் நின்றாரைப்
புகழ்ந்து மகிழ்ந்து ஆடீரோ!
(5)

அமுதம் எனவாய்ச் சுவையுணவை
அறியா துண்டு களித்தேற்கு
அமுதம் மறலி கைதீண்டா
ஆண்மை அருள்கை அண்ணல்தம்
குமுத மலர்வாய் முத்தீனும்
கோதில் புகழைப் பாடீரோ!
இமையோ ருள்ளே இனிதேற்றம்
இறையைப் போற்றி ஆடீரோ!
(6)

சாதிசமய மொழி வெறியால்
சமர்செய் தழியும் மாந்தரினம்
பேதம் பேசிப் பெருங்கலகம்
புரிந்தே திரியும் புவிமீதில்
ஏதம் அறுத்தே உயிரறிந்து
இணைந்தே வாழும் திறம்போற்றி
நீதர் பெருமை பாடீரோ!
நித்தம் போற்றி ஆடீரோ!
(7)

மறைகள் யார்க்கும் தெளிவின்றி
மக்கள் மயங்கும் செல்காலம்
மறைவில் தெளிவாய் உருக்காட்டும்
மணிநா வேந்தர் திருவருளால்
நிறைமெய் மொழியால் ஒளிதுலங்க
நிலவும் சீர்மை பாடீரோ!
மறையா தொளிரும் வான்புகழை
மகிழ்ந்து பாடி ஆடீரோ!
(8)

தம்மைப் பெரியோ ரெனக்கூறித்
தரணி மீது பலபேரும்
மெய்ம்மை யறியார் குறிசொல்லி
மக்களிடையே திரிதரு வார்
மெய்ம்மை நெறியை அறிவித்து
மேலாம் பதத்தில் புகுவித்த
மெய்யாம் தெய்வப் புகழ்பாடி
மகிழ்ந்தே களித்து ஆடீரோ!
(9)

உய்யும் நெறியைத் தேடீரோ!
உயர்மெய் வழியிற் கூடீரோ!
தெய்வத் தயவை நாடீரோ!
திருவார் புகழைப் பாடீரோ!
செய்யா மற்செய் தருமர்தம்
சீரார் பெருமை பாடீரோ!
ஐயர்சாலை ஆண்ட வர்கள்
அருளார் திருவைப் பாடீரோ!
(10)

அமுது

அறிவறிந்த அமரரினம் அனந்தர்குலம் அரன்திருமுன்
அறங்கனிந்து அமுதுபடைத் தமுதுபெறும் அழகினைக்காண்
விதிகடந்த விமலேசர் மலர்த்திருத்தாள் விழைஅனந்தர்
மதிபடிந்து வளர்ந்துயர்ந்து வரம்பெறும்மாண் பதுகாண்மின்
இதம்கனிந்த எமதிறைவர் எழில்நிறைந்து களிமிகுந்து
பதம்விழைந்து பல்லுயிர்க்கும் பரிசருளும் திறம்காண்மின்
உயிர்ப்பயிர்செய் உழவரசர் ஒருதனிமெய் வழியிறைவர்
துயர்தருசா வினைவெல்லத் தவப்பலனைத் தரும்கொடையாய்
(1)

திருதரிசனை அமுது

விண்ணின் அரசர் தரிசனையை
விழையும் அனந்தர் மலர் கனிகள்
அண்ணல் திருமுன் சமர்ப்பித்து
அமுது பெருஞ்சீர் காண்மின்கள்
(2)

திருஅவதாரத் திருவமுது

அரங்கர் திருவோங் கவதாரம்
அருள்செய் திருநாள் தனில்மக்கள்
கரங்கள் இனிப்பும் கருப்பட்டி
கனிந்த தேனும் சமர்ப்பிக்கும்
தெய்வம் கஜ்ஜூர் கனியுடனே
சுவையார் இனிய அமுதருளும்
வையம் செழிக்கும் மழை போலும்
வளரும் கருணை பொழிவாரும்
(3)

கோளரிசாலையர் பொங்கல் அமுது

கோளின் அமலாள் கைகோமான்
குலமாந் தர்பொங் கல்படைக்கும்
வாளாம் முக்கூர் கத்திகொண்டு
வள்ளல் பானைப் பலியேற்கும்
(4)

காணும்பொங்கல் திருவமுது

பொங்கல் திருநாள் அமுதளித்துப்
பொன்னின் அரங்கர் ஆவினம்சீர்
பொங்கல் காணும் பொங்கலிடும்
பேரார் தயவால் அமுதருளும்
(5)

பிறவானாட் பிறப்புத் திருவமுது

வேறு

எங்கள் நாயகர் தங்கள் தாதையைப்
பொங்கு மன்பொ டிணைந்த நன்மதி
பங்குனிப்பவு ரணைத்தி னத்தினில்
அங்க வர்க்கமு தப்பம் தேனும்பால்.
(6)

வான வர்திரு வுள்ளம் கனிந்திடும்
தேனளைந் தமா வமுது அருள்தரும்
கானி லிந்தக் களிப்புறு காட்சியை
வானோர் கண்டு மகிழ்ந்தினி தேற்றிடும்
(7)

பிச்சையாண்டவர் திருக்கோலத் திருவமுது

இச்சை யால்விளை வெவ்வினை பாவத்தாற்
துச்சி லிற்தமர் செல்லல் தடுக்கவே
மச்ச மாமுனி பேரர் திருவுளம்
(8)

பிச்சை யாண்டவர் கோலங்கொண் டாளுமே:8

வேறு

அரிசி பருப்புக் காய்கறிகள்
அனைத்தும் படைத்து அருள்வேண்டும்
அரியும் சிவனும் மாலாம்எம்
ஐயர் அதனை ஏற்றருளும்
(9)

அனைத்தும் ஒன்றாய் அமுதாக
அனைத்தும் ஆனார்க் கேபடைக்க
தனைத்தந் தெமையேற் றிடுமையர்
தருகும் கிருபை அமுதெமக்கே.
(10)

கார்த்திகைத் திருஅமுது

கார்க்கும் தீகைக் கொண்டருளும்
கர்த்தர் திருநாள் அமுதருள்வார்
ஆர்க்கும் பிறவிப் பிணிய கற்றும்
அண்ணல் மாண்பைப் போற்றுவமே
(11)

நாவின் சுவைக்கே நல்லமுதம்
நல்லா ருயிர்தான் வளரமுதம்
தேவன் அருளும் செவியமுதம்
ஜீவன் செழிக்க மணம் அமுதம்.
(12)

நினைவால் விளைவ தோஷங்கள்
நாவால் விளைவ குற்றங்கள்
வினைசெய் உடலால் பாவங்கள்
விலக்கும் தெய்வத் தவத்தமுதே
(13)

தேக ரோகம் தரித்திரியம்
சடுதிச் சாவு துர்மரணம்
சாகும் இறுதித் துன்பமதும்
தீரும் எங்கோன் தவத்தமுதால்
(14)

வேறு

திருவுரு தரிசனை பெறுவதே அமுதமாம்
திருவிழி நோக்குறல் வினைதவிர் அமுதமாம்
திருமொழி, செவியுறல் உயிர்வளர் அமுதமாம்
திருவருட் தயவினுக் காட்படல் அமுதமாம்
(15)

குருதிரு நாமமே உரைத்தலே பெருந்தவம்
குருமணி திருவுரு சிந்தித்தல் வான்தவம்
குருமகான் திருப்புகழ் போற்றுதல் மாதவம்
குருபிரான் சத்யமெய்ந் நெறிப்படல் உயர்தவம்.
(16)
பிரம்மோதய மெய்வழிசாலை ஆண்டவர்கள் திவ்யத் திருவடிகளே சரணம்
தேனார் பொழில்சூழ் திருவோங்கும்
சாலைப் பதியில் தவம் ஓங்கும்
வானோர் தலைவா! வளவரசே!
மதிமா மணியே! மண்ணுயிர்க்கு
கோனே! நும்பொற் கழலொன்றே
கதியெவ் வுயிர்க்கும் கனிந்தருள்செய்
தேனார் சிந்தைத் திருவாளா!
சரணம் சரணம் அடைக்கலமே!
(1)

கலமென் சிந்தை நிறைந்தினிதே
கனிந்து நெகிழ எழிற் கொவ்வை
மலர்வாய் திறந்து அமுதுகு மெய்
வழங்கும் வள்ளால் பணிந்துய்ந்தேன்!
நலமே அருளும் நன்னிதியே!
நாயிற் கடையேன் எனையேற்றீர்!
வலமே ரெனும்வான் கற்பகமே!
வாழ்த்தி வாழ்த்திப் போற்றுதுமே!
(2)

போற்றி நும்தாள் புகழ்ந்திருத்தல்
பணியாய் எளியேற் கமைந்திடுக!
ஏற்றி இறைநும் திருக்கோவில்
இனிதே வலஞ்செய் பெருந்தவமே!
ஆற்றி அடியார் திருக்கூட்டம்
அதனுட் கலந்தே இன்பத்தேன்
ஊற்றிப் பருகும் உவப்புறவே
உள்ளம் விழைந்தேன் ஒண்சுடரே!
(3)

சுடர்கட் கெல்லாம் முதற்சுடரே!
தூய்மைக் கெல்லாம் பிறப்பிடமே!
திடமெய்ஞ் ஞானத் தவமேரே!
தேவ தேவே! அருளாலே
புடமிட் டெனையே வேதித்தீர்
பொற்றாள் ஒளிகுன் றாதளியே!
படிந்து பணிசெய் தின்புறுமோர்
பெரும்பேறருள வேண்டுவனே!
(4)

வேண்டும் வரங்கள் அருள்வள்ளால்
மெய்ம்மா தவமே மலரடிகள்
ஈண்டு வருந்த நடம்புரிந்தீர்
எளியேம் உய்ந்தேம் எம்கோவே!
யாண்டும் தங்கள் திருவுருவே
எதிலும் காண விழையுளத்தேன்
மீண்டும்பிறக்கில் நின்னடியான்
எனவே பிறக்க விழைந்தேனே!
(5)

விழையும் நீதம் யாவும்நான்
விழைந்த வாறே தரும்கோனே!
மழையாய் எமது உயிர்ப்பயிர்க்கு
வந்தே பாய்ந்து செழிப்பித்து
தழையச் செய்த தனிக்கருணைத்
தன்னே ரில்லாத் தகையினரே!
குழையும் நெஞ்சில் நீங்காமற்
குடிவாழ் அரசே எனையேற்பீர்!
(6)

ஏற்றும் அடியார் திருக்கூட்டத்
திருத்திக் காத்தீர் நெறியல்லா
ஆற்றில் கிடந்தேன் தடுத்தாண்டு
அமுதம் அருளி பேரின்பச்
சேற்றில் அழுத்தி மூச்செல்லாம்
செறியச் செய்த திறமேதோ
கூற்றின் கூற்றே குலதேவே!
குன்றா நிதியே! வணங்குவனே.
(7)

வணங்கிப் பணிந்து தன்மழலை
மொழியா லுளறும் எளியேனை
இணங்கி மணங்கொண் டிறவாத
இன்பத் தேற்றும் இனியோனே!
கணங்கள் தவறா தும்புகழே
கழறும் திறத்தை அருள்வீரே!
மணங்கொள் திருவார் பொழில் சாலை
மதிமா மன்னே நாயகரே!
(8)

நாயேன் தன்னைப் பணிகொண்டு
நமன்செய் யிடர்தீர் நல்லரசே!
ஓயா தின்பம் உவந்தீயும்
ஒருமெய்த் தலைவா! பிறவியெனும்
தீயார் பிணியைத் தீர்த்தருளும்
திருவே! செல்வச் செழுநிதியே!
நேயம் அனைத்தும் நும்தாளில்
நிலைக்கச் செய்வீர் நித்தியரே!
(9)

நித்தி யத்தின் நிலைப்பேறே!
நிலமீதினிலே அவதரித்த
சத்தி யத்தின் திருவுருவே!
தவமே தனிகைத்தவ முதலே!
எத்திக் கும்நின் புகழ்பாடி
எளியேன் திரிய வேண்டுவனே
முத்திக் கொருநல் வித்தகரே!
வணங்கிப் பணிந்து போற்றினனே!
(10)

கட்டளைக் கலித்துறை

வாழிய தெய்வம் வழங்கிய மெய்வழி வான்கருணை
வாழிய தெய்வ மலர்வாய் திறந்துகும் வானமுதம்
வாழிய தெய்வ மலர்த்தாள் பணிந்துயர் வான்குலத்தோர்
வாழிய தெய்வத் திருப்புகழ் என்றும் நிலைத்தினிதே! (1)

நீடுக சாலைத் தமிழிந்த நீள்புவி முற்றிலுமே
நீடுக சாலைத் திருநெறி சார்ந்துயிர் முற்றிலுமே
நீடுக சாலைத் தவவேந்த ருள்வேதம் முற்றிலுமே
நீடுக சாலை அனந்தரைச் சார்ந்தவர் முற்றிலுமே! (2)

பாடுக மெய்வழி தெய்வத்தைப் பண்ணொடு பாணர்களே
பாடுக மெய்யர் திருப்புகழ் பைந்தமிழ்ப் பாவலரே
பாடுக தெய்வத்தைத் நூற்றெட் டென்னும் ப்ரபந்தத்தும்
பாடுக வையகம் வானகம் முற்றும் துலங்கிடவே! (3)

ஆடுக அண்ணல் அமுதருந் திகளித் தானந்தமாய்
ஆடுக ஆண்டவர் சாவா வரந்தந்தார் ஆர்ப்பரித்தே
ஆடுக ஆண்டவர் மக்கட் குழாம்முழு தன்புகொண்டே
ஆடுக ஆருயிர்க் குய்தி விழைந்தவர் யாவருமே! (4)

சூடுக தெய்வத் திருவடிப் பொன்மலர் நும்சிரமே
சூடுக தெய்வம் திருவாய் மலர்ந்தருள் தேனமுதம்
சூடுக தாள்மலர் பூசித்து தீவினை தீர்ந்திடவே
சூடுக அண்ணல் திருக்கடை நோக்கால் உயிருய்யுமே (5)

கூடுக சாலையில் மெய்யர் குழாத்திடைக் கோதறவே!
கூடுக சாலை உத்யோவ னத்திடைக் கூற்றறவே
கூடுக சாலையில் வெம்பிற விப்பிணிக் கட்டறவே
கூடுக ஜீவனும் தேகமும் முத்திப் பதம்பெறவே! (6)

தேடுக சிந்தை செழித்திட செஞ்சொல் அமுதமழை
தேடுக வானத் தமரர்தம் கேண்மை பெருந்துணையே!
தேடுக தெய்வத் திருப்பணிப் புண்ணியம் செய்துயவே!
தேடுக பார வணக்கம் பெரும்பலன் சீர்பெறவே! (7)

ஆளுக அண்ணல் அருளர சாட்சி அகிலமெங்கும்
ஆளுக ஐயர் அம்புவி மக்களின் சிந்தையெல்லாம்
ஆளுக அத்தனின் நித்திய மாவரம் யாவர்க்குமே
ஆளுக தெய்வத் திருப்பதப் பேரருள் யாமுய்யவே! (8)

பேணுக செந்நெறி சாதிம தம்குலம் தான்கடந்து
பேணுக ஓர்நிறை ஓர்குலம் என்றமெய் தானறிந்து
பேணுக மெய்வழித் தெய்வப் பதாம்புயம் வான்பெறவே
பேணுக மெய்யடி யார்களை வான்குலம் ஓங்கிடவே! (9)

வாழிய மெய்தொடர்ந் தோர்குலம் என்றுமே நித்தியமாய்
வாழிய பொன்மலர்த் தாளினை போற்றி வழிவழியே!
வாழிய நித்தியம் வையகம் வானகம் முற்றிலுமே
வாழிய மெய்வழி ஆண்டவர் வான்புகழ் வாழியவே! (10)

யுக உதயப் பரணி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!