திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/032.நன்காஞ்சி மாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫32. காஞ்சி மாலை
தொகுஇலக்கணம்:-
ஒரு அரசனின் பகைவேந்தன் படையெடுத்து வந்து ஊரின் புறத்தே தங்க, அவனை எதிர் கொண்டு போரிட எண்ணிய அரசன் காஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு மாற்றரசனை எதிர் கொள்ளப் படையொடு ஊர்ப்புறத்தே வந்து தங்கியிருத்தல் காஞ்சி மாலை எனக் கூறப்பெறும்.
காஞ்சி புனைந்து கருதார் ஊர்ப்புறம் ஊன்றலை யுரைப்பது காஞ்சி மாலை - முத்துவீரிய 1074
மலர்க்காஞ்சி மாலைசூடிப் பகைவர் ஊர்ப்புறத் ததினூற்றல் காஞ்சி மாலை - பிரபந்த தீபிகை -16
காஞ்சிப்பூ மாலையே காஞ்சித்தார் சூடிக் கருதலர் ஊர்ப்புறம் கைப்பற்றல் செப்பலே - பிரபந்த தீபம் - 46
மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சிப்பூ மாலை சூடி யூன்றலைக் கூறுவது - தொன்னூல் விளக்கவுரை - பா - 203
வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன் காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று - புறப்பொருள் வெண்பாமாலை கொளு 61
கலியரசன் தனது படைத்தளபதிகளாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், ஆணவம், மாயை, கன்மம் என்பவர்களைக் கொண்டு மாந்தரினத்தின் மீது படையெடுத்து முற்றுகையிடவும், முழுமுதற் பொருளாகிய எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தங்கள் தபோபல சன்னதங்களாகிய சூலம், வில், வேல், பராங்குசம், பட்டயம், சங்கு, சக்கரம், தண்டாயுதம், பாசம், துடியுடுக்கை, மோதகம், கிள்நாமம் என்னும் பன்னிரு சன்னதங்களின் வலிமை கொண்டு காஞ்சி மாலை சூடி மாற்றானை எதிர்த்து நிற்பதைக் கூறுமுகத்தான் இயன்றது இப்பனுவல்.
நன்காஞ்சி மாலை
காப்பு
நேரிசை வெண்பா
பொங்கியெழு வெங்கலியன் தங்குலத்தின் சங்கையற
மங்கா தவத்தங்க மாமன்னா! - இங்கெதிர்ந்து
சாவுக்குச் சாவு மணியடித்த சாலையண்ணல்
தேவர் திருத்தாள்காப் பாம்
நூல்
கலி விருத்தம்
கலியரசன் இயல்புகள்
ஏழ்ச துர்யுகம் தன்னில் கடைச்சனி
வாழும் காலம் கலியர சாட்சியே
பாழும் தீமை படர்செறிந் தேறியே
ஆழும் மாந்தர் அவலக் கடற்குளே (1)
அரசு பீடத் தமர்ந்த கலிமன்னன்
முரசு தன்னை முழக்கிப் புவியினில்
பரசு கம்எனும் பண்பைக் கெடுத்துமே
நரக வாழ்வினில் நலிய விடுத்தனன் (2)
ஆணவம், கன்மம், மாயை
ஆணவம் மாயை கன்மமெ னுமூன்று
பேணு முப்படை கொண்டு உலகிடை
வீணர் நெஞ்ச விளைநிலந் தன்னிலே
கோண லும்கு யுக்தி விதைக்குமே (3)
காமம்
காம மென்னும்கு ருட்டரக் கர்படை
சேம நன்மைகள் யாவும் தொலைத்தது
தீமைக் கஞ்சாச் செயல்பல செய்யவே
பூமி முற்றும் பழிகொளப் புக்கது (4)
கோபம்
கோப மென்னும் செவிட்டவு ணர்படை
பாப மென்றெ தையும்பா ராதது
ஆபத் தென்ப தெட்டுணையும் எண்ணா
தீபம் குன்றிடும் தீங்கது ஓங்கியே (5)
மாயை
மாயை யென்னும் மயக்குவல் ஊமையர்
தீய செய்யும் திறன்மிகு சூரர்கள்
தேய முற்றுமே தீமையின் ஆணிவேர்
தீயெ றிபோலும் சீவர்க்கி டர்செய்வர் (6)
மதவெறி
மதம்ம றலிவெல் மார்க்கமென் றோர்கிலார்
மதம்இ தந்தரு மெய்ப் பொருள் கற்றிலார்
மதவெறி கொண்டு மாந்தரை மாய்க்கிறார்
முது கலியனின் வெல்லற்க ரும்படை (7)
சாதிவெறி
சாதி சாவின்மீள் சாதனை சாதித்தல்
சாதி யின்குறி என்றறி யாதவர்
சாதி யின்வெறி கொண்டலை மாந்தர்காண்
சாதி யின்வெறி வெங்கலி யாயுதம் (8)
மொழிவெறி
சிந்தை யின்கருத் தைப்பரி மாறவே
தந்த சாதனம் தம்மொழி ஓர்கிலார்
எந்த னின்மொழி யேயுயர் வென்பர்காண்
விந்தை யேமொழிப் போர்செய்வர் பாரினில் (9)
இனவெறி
எம்மி னம்உல காளப் பிறந்தது
எம்மி னம்முயர் வென்று இனவெறி
தம்முள் மாறுகொள் தாழ்வுடை இச்செயல்
இம்மை வெங்கலி யாயுதத் திலொன்றாம் (10)
நிறவெறி
நிறவெ றிகொடு நீள்புவி மாந்தர்கள்
அறநெ றிமறந் தாங்காங்கே போர்செயும்
மறலி யின்கையுள் மாள்வுறும் செய்கையாம்
இறப்பி னைத்தாம் எதிர்கொண் டழிவரே! (11)
நானெனும் அகந்தை
நானெ னும்அகந் தைகொடு வல்லவர்
தீன ரைக்கொடு மைசெயும் தீங்குகள்
நானி லத்தினில் எங்கு மலிந்துமே
ஊனம் செய்யும் அறநெறி யாளரை. (12)
செல்வச் செருக்கு
செல்வம் சேர்த்துச்சில் லோர்கள் வறியரை
பல்வ கையி னும்இடர் செய்யுமால்
வல்லவன்கலி யன்கொள் படைக்கலம்
செல்வத் தின்செருக் காமெனச் செப்புமே! (13)
போதை வஸ்துக்கள்
மதிம யக்கும்கள் போதைசெய் வஸ்துக்கள்
இதம்செ யல்போல் இடர்செயும் மாந்தரை
கதிக டைநர கேகிடச் செய்துபின்
விதியி துவென்பர் வீணர் செயலிதே! (14)
பொய், சூது, களவு
பொய்யும் சூதும் களவும்செய் தன்மையில்
வைய கத்தினர் வீழ்வர் நரகிடை
வெய்ய வெங்கலி யின்கொடும் போர்ப்படை
ஐய! மேலே குறித்தவை ஓர்மினே! (15)
பிறன்மனை நயத்தல்
பிறர்ம னைதனைப் பேதுற எண்ணுதல்
அறம்வ ழுவிய அற்பர்தம் செய்கையாம்
திறமி தென்றுயிச் செய்கைசெய் வீணர்கள்
உறுவர் வெந்நர கென்றறி மின்களே! (16)
புகை
புகையெ னும்பகை புன்மை தருமெனும்
வகைய றிந்திடார் வலைப்படு மாந்தர்கள்
தகையி லாதது நாகரி கம்எனப்
பகைக் கலியனும் பாழில் விடுத்தனன் (17)
சினிமா
திரையின் காட்சிகள் காணில் உயிரினில்
திரைவி ழச்செயும் தீமையென் றோர்கிலார்
மரைவ லையினில் வீழ்வது போலவே
விரைவர் மாந்தர் விளக்கினில் விட்டில்போல் (18)
இங்ங னம்கலி மன்னன் உலகினில்
எங்கெ வரும்எ திரின்றி ஆள்கையில்
செங்கம லத்திரு சேவடித் தெய்வமே!
பொங்கு நற்புக ழோடவ தாரமே! (19)
சிந்தை சொல்செய லாதிய வற்றினால்
முந்தை யோர்நெறி மக்கள் மறந்திட
விந்தை பல்செயும் என்பன் கலிமன்னன்
எந்த னுக்கெதிர் யாருளர் என்றனன் (20)
கலியன் படை எடுத்தல்
எண் வகைப்பாவ வெம்படை கொண்டுமே
மண்ணு லகெலாம் வெற்றிகொள் வெங்கலி
திண்ண மாய்தனக் கீடிலை என்றெண்ணி
விண்ண வர்பதி மேற்படை மேயினான். (21)
தெய்வ ஆற்றல்
எத்த னையோஅரக் கர்குலம் தோன்றியே
மெத்த நானென் றகங்காரம் கொண்டுமே
உத்த மர்தமக் கின்னல் புரிந்தனர்
அத்தன் தெய்வத்தின் ஆற்றலால் வீய்ந்தனர். (22)
உத்தி யோங்கிடு சத்திய மெய்வழி
சித்தி கானகச் சாலைக்குப் போரிட
பித்தன் வீணன் பெருங்கலி பாதகன்
சித்தம் கெட்டுச் சினமொடு மேவினான் (23)
சாலை
சுற்றி அக்கினி யால்மதில் ஆர்ந்துமே
வெற்றிச் சாலை அனந்தர்கள் வாழ்பதி
முற்று கையிட வெங்கலி நாடுதல்
கொற்ற வர்சாலை தெய்வம் அறிந்தனர் (24)
அனந்தாதி தேவர்கள்
சத்ய சீலர்கள் சற்சனர் சீடர்கள்
நித்ய மெய்வரம் நேர்மை அனந்தர்கள்
பத்யம் கைப்பிடி பாங்குமா ணாக்கர்கள்
அத்தன் தாள்பணிந் தார்ந்தெழுந் தார்த்தனர் (25)
சுத்தம் தன்னை வடித்துத் தெளித்தநற்
சித்தர் சீருயர் சீடர் தொழும்இறை
முத்தர் மாதவர் மெல்ல நகைத்தனர்
பித்தன் பொய்க்கலி போயொழிந் தானரோ! (26)
திரிபுரம் சிரித் தேயெரி தென்னவர்
எரிகொள் நோக்காலவ் வீணன் நடுங்கினான்
தரிக்கி லான்புறங் காட்டிப் பறந்தனன்
விரி சடைஇறை வெற்றிகைப் பெற்றனர் (27)
பன்னிரு சன்ன தம்இலங் கெம்பிரான்
தென்னன் மெய்வழி ஆண்டவர் ஆற்றல்காண்
வின்ன வெங்கலி வீறிட் டலறியே
தன்குதிகால் பிடறிபட ஓடினான் (28)
பாக்கியம் எங்கள் பண்டைமெய் வேதியர்
நோக்கி னால்கலி நீர்ந்து பொடிந்தது
வாக்கினால் கலி மாய்ந்து ஒழிந்தனன்
ஆக்கும் மெய்வழி ஆண்டவர் வாழ்கவே! (29)
பொங்கு மும்மத கரியினை வெல்லவே
அங்கு சம்கொண் டடக்கிய வாறுபோல்
எங்கள் நாயகர் அங்குசச் சன்னதம்
இங்கு சர்வ மதபேதத் தைவெல்லும் (30)
கோடி கோடி கொடும்பவ வெவ்வினை
வாடி டும்குரு மெல்லருள் நோக்கினால்
நாடி நம்பிவந் தோர்கள் பவப்பிணி
ஓடி மாயும் அமுதமாம் வாக்கினால் (31)
பாத கங்கள் பலசெய்த மாந்தரும்
பாதம் பற்றிப் பரவியே உய்ந்தனர்
சேதம் செய்திடும் தீக்குணப் பேழைகள்
நீதர் நோக்கினால் நிர்த்தூளி யாகிடும்! (32)
ஒலிக்கும் துந்துமி ஓசை வலுத்துமே
நலியும் பேய்மை நசிந்திடும் மாட்சியே
கலி புருஷன் வலிமை அழிந்திடும்
ஒலிமு ழங்கும்சங் கோசையை கேட்டுமே! (33)
அக்கி ரமங்கள் யாவும் அறுத்தெறி
சக்க ரம்இலங் குகையர் அண்ணலே
திக்கு மற்றும்தி காந்தமும் வான்புகழ்
எக்க ளிப்புடன் ஏற்றியே போற்றுவோம்! (34)
இருபு றமும் கருக்குடை பட்டயம்
திருவ ருள்அமு தம்தரு செம்மலர்
குருபெ ருந்திரு நாவின் மொழிமறை
பெருகி யேவிளங் கியின்பம் பொங்குமே! (35)
பொய்யன் வன்கலிப் பேதை வலுவறும்
ஐயன் மெய்ம்மொழி ஆரமு தீகையால்
துய்ய வாழ்வு துலங்கும் தொடர்ந்துகொள்
வைய கத்தினோர் வான்செல்வம் கொள்ளுமே! (36)
கள்ளம் கருகிடும் காருண்யர் தம்திரு
வுள்ளம் இரங்கிடில் ஓங்கும் திருவெலாம்
வெள்ள மெனும்திரு வாக்கொலி கேட்டிடில்
அள்ளும் சிந்தை அமுதம் பெருகிடும் (37)
பொய்ம்ம லிந்து புலைகலி ஆளுநாள்
வைய கம்ம யங்கிய காலையில்
மெய்வழி தெய்வம் வந்தவ தாரம்செய்(து)
உய்வழி அருள் பாலித்து உய்த்தனர். (38)
முழுமு தற்பொருள் ஓர்திரு மேனிகொண்(டு)
எழுந்த ஞானப்ர காசமெய் ஞாயிறு
பழுத்த செங்கதிர் பாய்ந்தது திக்கெலாம்
அழிந்த துகலி வல்லிருள் வீய்ந்தே! (39)
குன்றுடை யாரெங்கள் கோமான் தயாநிதி
நன்றிந் நானில முற்றுமே நித்தியம்
வென்று வெற்றிமே டேறும் நலந்திகழ்ந்
தென்று மேயினி மெய்வழி ஓங்குமே! (40)