திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/019.திருப்பொன்னூஞ்சல்


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



19.ஊசல்

தொகு

இலக்கணம்:-

ஓங்கியதோர் மரத்தின் கிளையில் பிணித்த கயிற்றினால் அமைந்த ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னுமாக உந்தி உந்தி ஆடிக் களிக்கும் விளையாட்டு ஊஞ்சல் என்பதாகும். இதனைக் கருவாகக் கொண்டு பாடப் பெறும் இலக்கியம் ஊசல் எனப்பெறும். பாட்டுடைத் தலைவனின் புகழைப்பாடி ஆடும் பொருண்மை உடையது 'ஊசல்' என்னும் இப்பனுவல்

ஆசிரிய விருத்தம் கலித்தாழிசையில்
ஒன்றா ஒன்பான் தாழிசை போக்கிற்
சுற்றத் தளவில் சொல்வது ஊசல்
- பிரபந்தமரபியல் -10
ஊசல் என்பது ஒத்த மக்களைச்
சுற்றம் பொலியச் சுகமொடுவாழ்க என்று
ஆசிரிய விருத்தம் கலித்தாழிசையில்
ஆடீர் ஊசல் ஆடோமோ ஊசல் என்று
ஐயிரு செய்யுள் அறைதல் முறையே
- பிரபந்ததீபம் -19
அகவல் விருத்தம் கலித்தாழிசையால்
பொலிதரு கிளையொடும் புகலுவது ஊசல்
- இலக்கண விளக்கம் -845
சொற்கலித்தா ழிசையகவல் விருத்தமாதல்
சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்லுவது ஊசல்
- சிதம்பரப் பாட்டியல் -32

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் பொருண்மையால் அமைந்தது இப்பனுவல்

திருப்பொன்னூஞ்சல்

காப்பு

நேரிசை ஆசிரியப்பா

என்னுயிரின் நாயகரை என்னிதய மென்னுமெழில்
பொன்னூஞ்சல் தன்னிலே வைத்தாட்டி - மன்னுதவ
பேரருளைப் பெற்றிடவே பொன்னரங்கர் தாள்காப்பு
சீரூஞ்சல் ஆட்டும் சிறந்து.

நூல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாமறைகள் அத்தனையும் பலகை யாக்கி
மாதவர்சொல் ஆரணங்கள் வடங்க ளாக்கி
ஓமுதலா மந்த்ரநவ ரத்னம் பூட்டி
ஓதரிய ஆகமவி தானம் மாட்டி
போதலரும் செண்பகப்பூ வாச மேனி
பொன்னரங்க நாயகரே ஆடிர் ஊஞ்சல்
மாதவர்கள் மாமுனிவோர் தொட்டு ஆட்ட
மார்க்கநன் நாதரையா! ஆடீர் ஊஞ்சல்
(1)

அனந்தர்களின் ஆருயிர்கள் பலகை யாக்கி
அன்பர்நெகிழ் பக்திமலர் வடங்க ளாக்கி
தினங்குழைவ ணக்கநவ ரத்னம் பூட்டி
சிந்தைகனிந் தின்பவிதா னத்தில் மாட்டி
இனந்திருவோங் கித்தவத்தோர் இதய மாட்ட
இணையில்கரு ணைக்கடலே ஆடீர் ஊஞ்சல்
வனந்தனில்உம் மக்களுளம் பூரித் தாட்ட
வாசவரே! மகதியையா! ஆடீர் ஊஞ்சல்
(2)

மதிகதிர்கள் அத்தனையும் பலகை யாக்கி
வான்விளங்கு மீன்களைவ டங்க ளாக்கி
புதுமலரின் வண்ணங்கள் வாச மூட்டி
பொங்குமெங்கள் உயிர்களுங்கள் பாதம் பூட்டி
இதமருளும் எங்கள்தெய்வம் ஆடீர் ஊஞ்சல்
ஏற்றமுயர் மாதவரே! ஆடீர் உஞ்சல்
பதுமலர்ப் பொற்றாள்கள் உயிர்கள் பற்றப்
பரகதியைத் தரும்வள்ளால்! ஆடீர் ஊஞ்சல்
(3)

அபரஞ்சித் தங்கத்தைப் பலகை யாக்கி
அழகுநவ ரத்தினங்கள் மணிகள் பூட்டி
சுபமங்க ளங்கள்வளர் சாலை நாட்டில்
சற்சனர்கள் அன்புநதிக் குளிய லாட்டி
தபோதனர்கள் பொற்கரம்தாள் பணிந்து ஆட்ட
தனிகையர்தம் வான்கொடையே ஆடீர் ஊஞ்சல்!
அபிராமி அருள்சாமி ஆடீர் ஊஞ்சல்
அனந்தர்குல வான்கதியே ஆடீர் ஊஞ்சல்!
(4)

சாதிகுலம் அத்தனையோர் பலகை யாக்கி
சகலமத மொன்றாக்கி வடம தாக்கி
நீதிதவ நித்யநவ ரத்னம் பூட்டி
நெறியனைத்தும் மெய்வழிக்குள் நேர தாக்கி
ஆதியுகம் தொட்டுவந்த முனிவ ரெல்லாம்
அழகுகரம் தொட்டசைக்கஆடீர் ஊஞ்சல்!
மேதினிவந் தாளிறைவா! ஆடீர் ஊஞ்சல்
மெய்த்தவசா யுச்யரசே! ஆடீர் ஊஞ்சல்
(5)

மண்தீண்டா மலர்ப்பதங்கள் இந்த மண்ணில்
வருந்தநடம் புரிந்தஉங்கள் தயவை எண்ணில்
கண்ணகங்கள் நீருகுக்கும் கரையும் நெஞ்சம்
கழலிணையைச் சிரஞ்சேர்க்க உயிர்கள் கெஞ்சும்
அண்ணல்திரு மேனிஎன்பு இளகி வாட
அருங்கானம் நைமிசா ரண்யம் மேவி
விண்ணரங்கர் தவம்புரிந்த மேன்மை எண்ணி
மெல்லடிகள் தொட்டசைப்போம் ஆடீர் ஊஞ்சல்!
(6)

ஊணுறக்கம் விட்டுதவக் கச்சை கட்டி
உயிர்ப்பயிர்செய் மாமேரு ஆடீர் ஊஞ்சல்!
காணரிய காட்சியெலாம் காட்டி எம்மைக்
கைபிடித்த காதலரே ஆடீர் ஊஞ்சல்!
வேணியரே! வேதாவே! ஆடீர் ஊஞ்சல்!
வெங்கலிதீர் மெய்த்தவமே ஆடீர் ஊஞ்சல்!
பூணெழிலார் பொன்னரங்கள் ஆடீர் ஊஞ்சல்
பெருங்கருணைப் பெருஞ்சோதி! ஆடீர் ஊஞ்சல்!
(7)

நாதா!நும் திருநாமம் பாடி நின்றால்
நாவினிக்கும் மெய்சிலிர்க்கும் ஆடீர் ஊஞ்சல்!
தாதா! உமைத்தொழுத மேனி யெல்லாம்
தங்கமென ஆகிவிடும் ஆடீர் ஊஞ்சல்!
மாதா!நும் மணிவயிறீன் மகவு நாங்கள்
மனங்கனிந்து வணங்குகின்றோம் ஆடீர் ஊஞ்சல்!
நீதா!நும் நினைவகலா வரங்கள் தந்து
நித்தியத்தில் சேருமையா ஆடீர் ஊஞ்சல்!
(8)

தேவாதி தேவரையா! ஆடீர் ஊஞ்சல்
திருவரங்க நாதரையா! ஆடீர் ஊஞ்சல்!
மூவா முதல்வரையா ஆடீர் ஊஞ்சல்
முழுமுதலே! ஆதியையா ஆடீர் ஊஞ்சல்!
சாவா வரந்தருமெம் சாமி உங்கள்
திருப்பாதம் முகம் சேர்த்தோம் ஆடீர் ஊஞ்சல்!
தேவர்கள்பூ மாரிபெய்ய ஆடீர் ஊஞ்சல்!
தேன்தமிழில் பாட்டிசைக்க ஆடீர் உஞ்சல்!
(9)

கற்பகமே! நற்றவமே! ஆடீர் ஊஞ்சல்!
கனவயிர மாமலையே! ஆடீர் ஊஞ்சல்!
நற்பதத்தின் அற்புதமே! ஆடீர் ஊஞ்சல்!
நவமணிப்பொற் பெட்டகமே ஆடீர் ஊஞ்சல்!
தற்பரமே! தவமேரே! ஆடீர் ஊஞ்சல்!
தனிகைவள்ளல் தருபரிசே! ஆடீர் ஊஞ்சல்!
சற்குருவே! சர்வேசா! ஆடீர் ஊஞ்சல்!
செண்பகப்பூ மேனியரே! ஆடீர் ஊஞ்சல்!
(10)

திருப்பொன்னூஞ்சல் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!