திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/048.திருச் செவியறிவுறூஉ


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 48. செவியறிவுறூஉ தொகு

இலக்கணம்:-

செவிக்கு அறிவுறுத்தல் என்பது செவியறிவுறூஉ என்பதாயிற்று. அதாவது ஒருவற்கு அறிவுரை கூறுதல் எனப்பொருள் பெறும்.

பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண்
நவிறல்கட னெனவவை யடக்கியற் பொருளு
மருட்பாவா லுரைப்பது செவியறிவுறூஉவே 
- முத்துவீரியம் 1118

இவ்வகை வெண்பாவும் ஆசிரியமும் புணர்ந்து மயங்கிய மருட்பாவான் பாடப் பெறும்

செவியறிவுறூஉவே செப்புங்காலை
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனென அவையடக்கியல் பொருள் 
வெண்பா ஆசிரியம் இரண்டினும் விளம்பலே
- பிரபந்த தீபம்  - 85
செவியுறை தானே
பொங்குதலின்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே
- தொல்காப்பியம் பொருளதிகாரம் 419

இப்பிரபந்தத்தின்கண் எம்பெருமானின் திருவருகையும் அவர்களைச் சார்வதான் விளையும் நிகரில் மாட்சியும் உலக மக்கட்கு அறிவுறுத்தி அவர்தாமும் இவ்வழியைச் சாருமாறு கூறுதல்.

திருச் செவியறிவுறூஉ

காப்பு

புவியுயிர்கள் பொல்லானாம் கூற்றன்கைப் பட்டுத்
தவியாமல் தண்ணளிசெய் தெய்வம் - தவத்தரசர்
செம்மலர்த்தாள் காப்பாய்ச் செவியறிவு றூபாட
எம்முயிர்க்குள் நின்றார் துணை.

கலி வெண்பா

விண்ணகத்தி னின்றுவந்து மெய்வழியாம் சாலைவளர்
அண்ணல் பதாம்புயமே காப்பாக - மண்ணகத்தீர் (1)

ஆதி முழுமுதலே அம்புவியிற் போந்த
சேதி யறியீரோ சீராரும் - நீதி (2)

திருமேனி தாங்கிவந்து ஜென்மசா பல்யம்
அருள்வாணி காணீரோ! அத்தன் - குருவடிவாய் (3)

காணா தனகாட்டிக் கேளாத கேட்பித்து
பூணாரம் பூட்டிப் பெருவரங்கள் - மாணாக்கர் (4)

பெற்றுப்பே ரின்பம் பெருகி இகபரச்சீர்
உற்று உவந்தார்காண் ஒப்பில்சீர் - நற்றேவர் (5)

ஆதிஅ னாதிநிலை அண்ட சராசரங்கள்
மேதினியின் உற்பவமும் விண்டுரைத்துத் - தீதின்றி (6)

நாலாம் பிறப்பிடத்துள் ஏழான தோற்றமதும்
கோலமாம் ஒன்பதுக்கொன் பான்மூன்று - கோலஉயிர் (7)

செப்பி நரர்மனுவாய்த் தேவரென ஆம்துறையும்
ஒப்பில் திருஞானம் ஓங்கியலும் - முப்பாழுக்(கு) (8)

அப்பாலும் காட்டி அதுகடந்த அற்புதமாம்
முப்பாலும் காட்டி மதிவிதியும் - ஒப்பில்லா (9)

அன்புசிவம் காட்டி ஆருயிர்கள் தாமுறுபேர்
இன்பநிலை பூட்டி இங்கிதமாய்த் - தன்பொற்றாள் (10)

நந்தம் சிரம்சூட்டி நற்றவர்க்கு என்றென்றும்
சொந்தம் இதுவென்று சுட்டியிறை - பந்தம் (11)

புகலும் பெருங்கருணைப் பேர்தயவை என்றும்
அகலா நெறிகாட்டி ஐயன் - அகவினமாய் (12)

ஆக்கிவைத்த வானமுதச் சேமநிதி தான்தழைக்க
ஊக்கம் அருள்பொழியும் உத்தமரே - தாக்கும்அவ் (13)

வெம்பிறவிக் கட்டறவும் வேதநெறி - ஓங்கிடவும்
எம்பெருமான் ஈகைக் கிணையுளதோ - செம்பொருளைச (14)

சிந்தை களிக்கச் செவியினிக்க வாய்மணக்க
எந்தை அருளியசீர் என்னுரைப்பேன் - விந்தைமிகும் (15)

தேவ ரகசியங்கள் தேர்ந்தறிவித் தாண்டுகொண்டு
பாவப் பிறப்பொழித்த பாங்கறிமின் - நாவரசர் (16)

கோல எழில்மிளிரும் கோதில்சீர் பொங்கிவரும்
சாலைத் தமிழ்மணத்தைச் செப்புவனோ - ஏலவல்லார் (17)

சிற்றம் பலத்தரசர் தென்னா டுடைசிவனார்
கொற்றவர்பே ரம்பலத்திற் கூட்டுவித்து - நற்றாள் (18)

ஓவா நடம்புரியும் உள்மெய்த் திடம்புரியும்
சாவா வரந்தந்த ஜீவகனார் - தேவாதி (19)

வைகுண்டம் தன்னையந்த வையகத்திற் கேகொணர்ந்து
மெய்குண்ட மென்றார்காண் வானமுதைக் - கைக்கொண்டு (20)

வந்த தயவுரைக்க வல்லேனோ என்சாமிக்(கு)|r}}
எந்தவிதம் என்கடனிங் கேதியற்றும் - கந்தையனேன் (21)

என்எலும்பைக் கூராய் எழுதுகோல் ஆக்குவித்து
என்னுதிரம் கண்ணீரை மையாக்கி என்தோல் (22)

உரித்தெடுத்து ஏடாக்கி உள்ளம் உருகி
வரித்தடங்கள் மாறாது எங்கோன் - சரித்திரத்தை (23)

பாடி மகிழேனோ பைத்தியம்போல் ஓய்வின்றி
ஆடிக் களியேனோ அம்பொற்றாள் - சூடிச் (24)

சென்ற விடங்கள் திருநாமம் செப்பேனோ
நின்றவிடம் நெக்குருகி நில்லேனோ - கன்றாய்க் (25)

கதறி யழுகேனோ கண்ணீரான் பொன்தாள்
பதுமம் கழுவேனோ பண்ணின் - இதமோங்க (26)

உச்சந் தலைத்தோலை ஒப்புடனே செப்பனிட்டு
அச்சன்தாள் பாதுகையாய் ஆக்கேனோ - பட்சமதாய் (27)

நாசிவெளி யேமூச்சு ஓடாத் தவத்தாலே
வாசி யடங்குமொரு மாண்பருளி - தேசுடைய (28)

வெட்ட வெளிகாட்டி வேதநெறி தாம்துலங்கக்
கிட்ட வழிகூட்டி கேடிலியர் - எட்டாத (29)

மேனிலைக்கு ஏற்றினார் மாதவத்தார் பாதமதிற்
தானிலைக்க வைத்துத் தவப்பலனைத் - தானளித்து (30)

சாகாதே என்று சபித்துவிட்டு வெந்தணலில்
வேகாதே என்று வரையறுத்து - மாகாதல் (31)

கொண்டு திருநாமம் கூவித் திரியென்று
பண்டு பழுத்த பழமொழியால் - விண்டெமக்கு (32)

ஞான நெறியிதுதான் நால்யுகத்தும் நற்றவத்தார்
மோன வழியிதென்று மிக்குரைத்தார் - ஆனான (33)
பாட்டையர் தம்முடன்தம் பாடெல்லாம் பட்டலைந்து
தேட்டைத் திரவியத்தை எற்களித்தார் - ஏட்டில் (34)

எழுத முடியாது என்சாமி மாண்பனைத்தும்
அழுது தொழுதுரைத்தால் ஆமாம் - பழுதில்லா (35)

ஜீவன்முத் திஎன்று செப்பினார் தேகமுத்தி
தேவாதி தேவன் திருவருள்காண் - ஆவா (36)

அதிசயம் அண்டத் தகிலத்தும் அன்றோ
பதிஜெயம் தந்தார் பரிவால் - கதிபெற்றோம் (37)

எக்காலத் தும்காணா ஏரார் புதுமையெலாம்
எக்காளம் ஊதி இனிதுரைத்தார் - முக்காலம் (38)

கண்ட கருணைநிதி எண்டிசையும் எவ்வெவரும்
விண்டறியா மெய்ம்மை விறல்வேந்தர் - தொண்டுபுரி (39)

அன்பனந்தர்க் கண்மை ஆணவத்தோர்க் குச்சேய்மை
வம்பர்க்கு வாளானார் வானாட்டு - உம்பர் (40)

பணிந்தேத்தும் பாதமலர் பற்றிச் சிரத்தே
அணிந்தே மகிழ்வார் அறத்தோர் - துணிந்தே (41)

செல்நெறிஇந் நல்நெறிகாண் வல்பிணியாம் ஏமனமல்
கொல்நெறியாம் காசினியோர் தாமயங்கி - பல்நெறியுள் (42)

ஏகிப் பலியானார் மோகக் கலியானார்
ஏகன் தடுத்தாண்டு எம்மை - சாகாது (43)

காத்த அருமைதனைக் கண்டுமகிழ்ந் தென்னிதயம்
பூத்த புதுமையினைப் போற்றிசெய்து - ஏத்தி (44)

இறைஞ்சிடுவோம் வம்மின்கள் இப்புவியீர் உய்யும்
துறையறிவீர் சீரோங்கும் எல்லா - மறைதெளிவீர் (45)

சாயுச்யம் என்னும் திருப்பதவி பெற்றிடுவீர்
மாயும் இடருக்கோர் மாற்றறிவீர் - நேயமெலாம் (46)

வேறு

வைத்தார்கள் தாதைஅதில் வானவர்கோன் வென்றதுவும்
பைந்நார் துளபர்தம் பற்றுறுதி பார்த்தபிரான் (47)

தாய்ப்பறவை குஞ்ஞைத் தனிப்பிரிக்க எண்ணியபோல்
வாய்த்த குருகொண்டல் வான்தனிகை வள்ளலவர் (48)

ஆய்மதிச் சிந்தையரின் அற்புதநற் பண்புணர்ந்து
சேய்பிரிக்க எண்ணித்தம் சிந்தை துணிந்தார்கள் (49)

ஆடுகளை மேய்க்கவென ஆக்ஞை பிறப்பித்தார்
ஈடிணையில் எம்சாமி ஏற்றார்கள் அப்பணியை (50)

ஆபரணம் என்று அணிந்தார்கள் அத்தொழிலை
கோபுரத்தின் பொற்கலச மாகத் திகழ்ந்தார்கள் (51)

சோதனையில் வென்றார்கள் சுத்தநெறிச் சத்தியத்தார்
போதனையில் நின்றார்கள் பாட்டையர் தாம்கனிந்து (52)

பரனே உருவாகப் பாரகத்தில் வந்திருக்கும்
அரனார்க்கோர் கட்டளையை அண்ணல் பிறப்பித்தார் (53)

“சீரார் பரங்கிரிக்குச்” செல்அங்கோர் நற்குகையில்
பேராப் பெருந்தவஞ்செய் பொன்மகவே என்றுரைக்க (54)

எக்காலும் எவ்வெவரும் ஆற்றா அருந்தவத்தைச்
சொக்கேசர் தாமும் துணிந்தாற்றிச் சன்னதங்கள் (55)

மிக்கத் திருக்கரங்கள் மிளிர அணிந்தார்கள்
தக்க தருணமிது சீர்ஞானச் செங்கோலை (56)

முக்காலம் தானுணர்ந்த முனியரசு ஏற்பதற்கு
இக்காலம் இத்தருணம் இனிதாம் சிறப்பாகும் (57)

என்று தெளிவுற்று இன்பவுரை ஒன்றுதவக்
குன்றாக நின்றிலங்கும் கோமகனார் ஆண்டவரை (58)

நெடுங்காலம் காத்திருந்து தான்பெற்ற செல்வர்தமை
கொடுங்கலியை மாற்றவந்த கோவா மணியணியை (59)

இந்நாட் டெமபடரை எல்லோர்க்கும் தீர்ப்பவரை
அந்நாட்டு வித்தெடுக்க அவதரித்த ஆண்டகையை (60)

செய்பணியைச் சீராகச் செய்த திறத்தாரை
எய்துவிக்க எல்லா வரங்களையும் ஈந்தார்கள் (61)

விண்ணுலகில் அன்றுரைத்த வாக்கு நிறைவேற்ற
மண்ணுலகில் வந்தபெரும் வான்தனிகை வள்ளல்தாம் (62)

தன்னுலகு ஏகத் தனிச்சிந்தை தாம்கொண்டு
பொன்னரங்கர் எம்மான் பொன்மேனி யைத்தழுவி (63)

என்மகவே! செல்வமே! ஈடில் தவமேரே!
நன்மணியே! கண்மணியே! நற்றவத்து மேரேறே! (64)

சொற்றவறாச் சத்தியனே சுத்தசிவ மெய்வழியை
வெற்றிபெறக் காட்டவந்த வேதாவே நாதாவே (65)

நின்னாமம் இன்றிருந்து நன்மார்க்க நாதரெனும்
நின்மலர்வாய் தான்திறப்பாய் என்று நவின்றிடவும் (66)

தென்னன் பெருந்துறையார் செவ்வாய் திறந்தருள
அன்னையினும் மிக்கார் அருட்கரத்தால் ஆண்டவர்நா (67)

தொட்டினிது வாழ்த்தி தூய மறைமணிநா
வாணி குடியிருக்கும் வானாடு நின்னெழில்நா (68)

வேதா கமம்அனைத்தும் வட்டாடும் சீர்மதிநா
சேதம் தவிர்த்தருள்செய் தேன்பொழியும் கூர்மதிநா (69)

பேதம் களைந்தருள்செய் பேரருளின் கூர்வாள்நா
சாதிமதச் சிக்கறுத்து சாயுச்சயம் ஈந்நருள்நா (70)

இருள்மதங்கள் தம்பேதம் ஏகிடச்செய் செங்கதிர்நா
அருள்பெருகிப் பொங்கிவரும் ஆகாய கங்கைநா (71)
வரண்ட கொடும்பாலை வளங்ஙொழிக்கும் வானகத்தே
திரண்ட முகில்பொழியும் தேன்மாரி நின்செந்நா (72)

வேதக் கனிகுலுங்கும் விஸ்வச் சுலாவிருட்சம்
நாத நவமணிகள் நன்கிலங்கும் நன்னிதிநா (73)

என்று பலவாறாய் இன்பமொழி தான்புகன்று
நன்றினிது வாழ்த்தி நற்றனிகைப் பாட்டையர் (74)

சென்றார்கள் தன்தேயம் தெய்வமணி எம்சாமி
கன்றதுவும் தாய்ப்பசுவைத் தான்பிரிந்து துன்புறல்போன்ம் (75)

துடித்துக்கண் ணீர்வடித்து தோகையுதிர் வண்ணமயில்
நடிக்கத் தடுமாறும் நீள்துன்பம் போல்கவன்று (76)

தாதை உரைத்தபடி தன்னிகரில் மெய்வழியை
நீதர்க் கருள்புரிய நீணிலத்தில் போந்தருள (77)

வன் கணரும் வம்பும் இடர்புரிய வந்துற்றார்
பொன்மேனி யைஅழிக்க போந்நார் கொடும்அரக்கர் (78)

இன்னல்கள் செய்ததெண்ணில் இரும்புநேர் நெஞ்சுருகும்
வன்னெஞ்சர் செய்கையெண்ணில் வரையேமும் நெக்குருகும் (79)

ஆனாலும் ஆண்டவர்கள் அத்தனையும் வெற்றிகொண்டு
தேனா லியன்றமொழி செப்பிச்சீர் மெய்வழியைத் (80)

தாபித்து நம்மையெலாம் தாங்கிக் கருவீன்று
ஆபத்து நீக்கி அருள்மழையைத் தான்பொழிந்து (81)

முத்தாபம் நீக்கி முமூச்சு மாராக்கி
எத்தாப மும்இன்றி இணையில்வரம் கொடுத்து (82)

ஒன்றே குலமென்றும் ஓரிறைவர் தானென்றும்
நன்றே நிரூபித்து நற்சீவன் முத்தியொடு (83)

தேகமுத்தி யுண்டென்று செப்பி நிலைநாட்டி
ஆகமங்கள் வேதமெல்லாம் அருளோர்சொல் லால்தெளிய (84)

பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழவைத்தார்
சீரின்ப முத்திச் சுகவாழ்வில் ஆழவைத்தார் (85)

எப்படிநம் நல்உயிர்கள் இன்பநன்றி தான்செலுத்தும்
ஒப்புயர்வில் வேந்தர்க் குவந்து பணிபுரியும் (86)

சாமிதெய்வ பாதம் தஞ்சம் சரணமென்போம்
வாமிதனைப் போற்றி வாழ்த்திசிரம் தாழ்த்திடுவோம (87)

பாடிப் பராவிடுவோம் பார்போற்றும் வேதாந்தம்
நாடி மகிழ்ந்தோதி நல்லுயிர்கள் உய்ந்திடுவோம் (88)

கண்ட எழிற்காட்சி கனிந்துரைக்கக் கூடுதில்லை
விண்ட ரகசியங்கள் விதந்துரைக்க வன்மையில்லை (89)

மின்வீசும் பொன்மேனி தன்னை மறைத்தார்கள்
மன்னாதி மன்னர் விராட்தவத்திற் கேகினர்தன் (90)

இன்னா டகத்தே இழிதகையர் புன்மையினால்
வன்செயல்கள் செய்தும் வெம்மைப் பழிமொழியும் (91)

எண்ணில் இதயதில் இரத்தம் கசிந்திடுங்காண்
மண்ணில் தடுமாற்றம் மயக்கம் வரும்காண்மின் (92)

பித்த ருரைகேட்டுப் பேதித்துயிர் வாடும்
அத்தனாய் நந்தமக்கு அன்புவளர் தென்பருள்வார் (93)

காத்து உயிர்வளர்க்கும் கர்த்தாதி கர்த்தரிவர்
பூத்தே உளம்செழிக்கப் பொங்கும் வரமருள்வார் (94)

அன்னையாய்தா னிலங்கி ஆதரவு காட்டிவார்
இன்னிசை யால்பாட இனியவரம் தந்தருள்வார் (95)

பாதமலர் போற்றப் பாங்ஙாய் திறமருள்வார்
சீதமலர்ப் பாதம் சிரம்சேர்க்கத் தந்திடுவார் (96)

பெற்றுப்பே ரின்பம் பெரிதுற்று வாழ்வடைமின்
நற்றுணையே நற்றாள் அறிமின்கள் நல்லிரே! (97)

கற்றோர் இதயம் களிக்கும் அமுதருள்வார்
எற்றே இவர்க்கு இணைகூற லாகும் காண் (98)

கூற்றுவனை வென்றார் குவலயத்தில் இல்லா
ஆற்றலினால் எம்மான் அவந்தன்னை வென்றாரால் (99)

போற்றிப் பதம்பணிந்து பொன்னடியே சார்வீரேல்
ஏற்று அருள்வார் இனிது. (100)

திருச் செவியறிவுறூஉ இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!