திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/042.திருவருட்கோவை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
42. கோவை
தொகுஇலக்கணம்:-
கோவை எனும் சொல் முறையாகக் கோக்கப் பெறுவது என்னும் பொருள் தரும். இக்கோவை இலக்கியம் பொருளிலக்கணத்துள் அகத்துறை சார்பாக களவியல், கற்பியல், பொருளியல் ஆகியவற்றை விதந்தோது முகத்தான் பாடப்பெறுவது.
தூண்டும் அகப்பொருள் துறைவளர்ந் தமையக் கருதி நானூறு கலித்துறை யாகக் காதலன்புறு காந்தருவ மணத்திற் கொடிச்சியும் ஊரனும் குலவுநெறி நடப்பது அகப் பொருட் கோவை யாமென மொழிப. - பிரபந்த மரபியல் . 7
இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணும் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே - தொல்காப்பியம் பொருளதிகாரம் . 89
பொருளதிகாரத் திறத்தைப் புகன்று கலித்துறைகள் வருவது நானூறு கோவை யென்றாகும் - நவநீதப்பாட்டியல் . 54
கலித்துறை நானூறா வகப்பொருண்மேற் காட்டி வலித்துரைத்தல் கோவை - பிரபந்தத் திரட்டு 42
தன்னேரிலாத தலைவராகிய எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின்பால் எட்டுணையும் எவ்விதத்தும் தகுதியற்றவளாகிய எளியாள் கொண்ட காதலும், இரக்கம் அடைபடுத்த இருதிருநோக்குடைய தனிப்பெருங்கருணைத் தயாநிதி ஏற்றுக் கொண்டருள் பாலித்த திறமும் அமையப் பாடப்பெற்றது இப்பனுவல்.
திருவருட்கோவை
காப்பு
கட்டளைக் கலித்துறை
பூமணத் தாளிணை யேசிரம் சூடிமி கப்பணிந்தே
வாமண மாதவர் மெய்வழி ஆண்டவர் வான்புகழை
நாமண மெய்திடத் தேமது ரத்தமிழ்க் கோவையெனப்
பூமிசைப் பேதையும் போற்றும வர்பதம் காப்பெமக்கே!
பணிவுரை
காத்தருள் எங்கோன் கடைப்பிள்ளை ஏழையேன் சொன்மழலை
மாத்திற மாதவ மாமறை மாமணி வான்தலைவர்
கோத்திறங் கூற விழைமொழி ஏற்பர் குறைநவிலார்
மூத்துள மேதகு வானனந் தர்திருக் கோத்திரரே!
நூல்
பொழில் வளம்
ஏரெழில் மிக்குயர் இன்பஉத் யோவன மாம்பொழிலே
ஓர்தரு பன்மலர் பல்கனி ஈந்திடு விந்தையதாம்
சீருயர் காயா நறுமலர் கற்பகம் பூத்தொளிரும்
பாருல கின்நய னம்மிது காணில் பரவசமே! (1)
மேதினி மாமறை வான்மலர் மந்திர வாசமொளிர்
சீதன மேயருள் செண்பகம் தாதவிழ் சீர்மணமே!
கோதகல் சாலைவ ரிக்குயில் வானகச் சேவலுமே
மாதிரு வண்ண மயில்களும் கூவியும் ஆடிடுமே! (2)
தலைவர் பொழிலிடைச் சேரல்
ஆடிடும் அம்பொன் மலரடி மண்மகள் ஆர்த்திடவே!
வாடிடும் ஆருயி ராம்பயிர் தாமும் செழித்திடவே!
தேடிடு கூடகர் நாடுத போதனர் உய்வுறவே!
பீடுயர் இப்பொழில் போதர வானோர்க ளித்தனரே! (3)
வானக மெய்யினை வையகத் தோர்க்குவ ழங்கிடவே
தேனகம் பூத்ததி ருமிகு மெய்வழித் தெய்வமெனும்
கோனிவர் கொண்டற் கொடைநிகர் பொற்கரர் வான்தலைவர்
ஆனகம் இன்புற அம்பொழில் மேவும்அ ருள்மணந்தே! (4)
அருளொளி வீசிட ஆதவர் ஆர்பொழில் ஆர்ந்திடவே
ஒருமதம் ஒன்றுகு லம்மெனும் ஓர்மையும் ஓங்கினமெய்ப்
பொருள்பெறும் பூதலத் தெம்முயிர் இன்பம் பொழிதரவே
கருணையர் காதலர் கானக மேவுநற் காட்சியதே! (5)
காட்சிபெறுந் தரு வாதிய ஏழ்வகை யும்இனிதே
மாட்சிபெ றவருள் வான்தனி கைமணி வள்ளல்சுதர்
ஆட்சிசெ யும்முயர் அன்புத ரும்முயிர்க் கின்பமிகும்
மீட்சித ரும்வரு காவரு கைக்கிலை ஈடிணையே! (6)
பாங்கி பொழில் வளம் கூறல்
ஈடிணை யற்ற எழில்மிகுத் யோவன மொன்றுளகாண்
ஏடி! இளங்கலை மென்மயி லேஅது காணுறவே
நாடி மகிழ்விளை யாடிடு சேடியர் கூடுவமே!
வாடித யக்கமி லாதுயி ரின்பமி கப்பெறவே! (7)
பெறலரும் பேறறி பூம்பொழில் போதரல் பூதலத்தே
அறமிளிர் அன்பினர் அங்குறும் அந்தமில் இன்புறவே
நறுமண நன்மலர் நற்றுள பம்இனி தேயிலகும்
மறுவில ராகிய வானவ ரும்மவண் வந்துறுமே! (8)
வந்துறு வோருயி ரின்பமி கப்பெறும் வான்பொழிலே!
சிந்தையி லாகுலம் தீரவு மாரண தாகமொழி
விந்தைந றுஞ்சுவை நீர்த்துறை யங்குள மென்மயிலே!
செந்திரு வங்கினி தங்கிடப் பொங்கிடு மின்பமதே! (9)
தேவரு மூவரு மேவிட ஆர்வுறு பூவனமே!
நாவல ராதியர் நண்ணிம கிழ்ந்திடு நல்வனமே!
ஆவலி னாலிதை யண்மிய பேருயு மார்வனமே!
பூவையர் தேவைப் பொருந்திட நல்குத் யோவனமே! (10)
உத்தினி றைந்தொளிர் சித்திநி லைப்பிட மிப்பொழிலே!
அத்திபு ரத்தினர் வித்தகர் நத்திய சீரெழிலே!
முத்திபெ றத்தகு பத்திநி லைத்திடு பேரெழிலே!
சித்தர்கள் முத்தர்கள் சித்தம ளாவிய வான்பொழிலே! (11)
தலைவியுரை
வான்பொழில் மாட்சியு ரைத்தது கேட்டுக்க ளித்துளமே
தேன்செவி பாய்ந்தது போலும கிழ்ந்தது தோழியரே!
ஏனினித் தாமதம் இன்பவ னம்மினி தேகிடலாம்
மானனை யீருடன் வம்மின்ம கிழ்ந்தவண் ஆடிடலாம். (12)
தலைவி பொழிலிடைச் சேரல்
ஆடிடு மன்பினர் கூடிடு மிப்பொழில் சேர்ந்ததுமே
வாடுப யிர்க்கொரு வான்மழை பெய்திட ஆர்த்ததுபோன்ம்
ஏடி;எ னக்கொரு இன்பமு கிழ்த்தது இன்கனியே!
தேடிவ ருங்குவை செல்வமெ னப்பொலி கின்றதுவே! (13)
இன்று எனக்கெழி லார்பரி சொன்றுறும் என்றுளத்தே
நன்றுகு றிப்பு நிகழ்கிற தேதென நானறியேன்
தென்றிசை யிப்பொழில் சார்ந்தனம் நாளைவ ரும்நிகழ்வை
மன்றில்நடம்புரி வார்திரு வுள்ளம றிந்திடுமே! (14)
மேதினி நீர்த்துறை பூத்துசெந் தாமரை மிக்கிலங்கும்
ஏதுனி லத்திடை பங்கயம் பூத்தன இங்கினிதே
பூதலத் தேயிது போலொரு காவிலை பேரெழிலாய்
கோதறு கோமள மாதினி யேநற் குறிப்புரையே! (15)
தலைவரைக் காணல்
ஏரெழில் மிக்குஇ லங்கும தோஅவர் யாவர்கொலோ!
பாருயர் மன்மத னோ!அரி யோ!அய னோ!சிவனோ!
பேரர சோ!எனப் பேதையுள் எண்ணுதும் பாங்கியரே!
நேரில ராயினர் நீதமெ னக்குநி கழ்த்திடுமே! (16)
மேரெனப் பொன்னொளிர் மேனியர் வான்மதி போல்வதனர்
சீர்கதிர் போல்விழி நோக்கினார் செம்பவ ளத்திருவாய்
ஆரெழில் பங்கயத் தாளினர் இத்துணைப் பேரழகர்
யாரறி யேனென துட்புகுந் தாட்கொளு மாயமிதே! (17)
தேர்ந்திவண் செப்புமின் தோழியரே!யிவர் தேவர்கொலோ!
ஆர்ந்திவண் காண்பது காட்சிகொலோ!கன வோ?நினைவோ?
தார்புனை மன்னவர் தாள்புவி மீதுற லாயினவே!
பூரணர் சீருரை பேருயர் பண்பன் பின்மலரே! (18)
பாங்கியுரை
மலர்நிகர் மென்மை மலைநிகர் திண்மைமு கிற்கொடையர்
துலைநிகர் நீதியர் புவிநிகர் பொறைஅற வாழியிவர்
கலைஎழில் மேனிக் கருணையின் வாரிதி கோடிநிதித்
தலைவரெ மன்படர் தாட்டிடும் ஆற்றலர் மன்மதரே! (19)
மதவெறியு முயர் குலநினை வும்கொடு வையகத்தே!
அதமிக வேபுரி அல்லல்க ளைந்தோர்கு லம்மதமாய்
இதமிக வேபுரி ஏந்தலர் வான்தவ மேருயிவர்
நிதம்புதி யோரிவண் நீள்புவி போந்தருள் நல்லிறையே! (20)
இறைவ ருயிர்க்குயிர் என்பத றிந்திலர் இவ்வுலகில்
உறைதிரு மாதவர் உத்தமர் மந்திரச் சொல்லழகர்
மறைமுதல் வானவர் வானிதி மிக்ககு பேரரிவர்
நிறைமொழி நீதியர் ஆதியர் மெய்யர் முழுமுதலே! (21)
முதல்வர்த வத்திரு வான்தனி கைமணி வள்ளலருள்
புதல்வரு மாதிபு ராதன ராகிய நாயகர்காண்!
இதமறிந் தின்பொடு ஏந்தலர் தாள்மலர் நாம்பணிவோம்
மதிமுக மெல்லியல் கொள்க மலர்கனி கையுறையே! (22)
தலைவியுரை
ஏதுரை நீபுகல் வாயெனி னும்மவர் ஆணலவோ?
மாதுஎ னக்குளம் நாணுறு கின்றது என்சகியே!
ஏதுநி னைத்திடும் இத்தரை மாந்தர்கள் என்செயலைக்
காதலி னாலிவள் செய்தன ளென்றலர் தூற்றிடுமே! (23)
பான்கியுரை
தூற்றுத லென்செயும் தோகையு னக்குளெ ழுந்தமயல்
ஆற்றரி தேயவர் அம்புயத் தாள்பணி அஞ்சலொழி
மாற்றரி யாதபொன் மேனியர்க் கேற்றவள் நீயலவோ!
ஏற்றருள் வாரிதற் கேதிணை காணுமிப் பூதலத்தே! (24)
பூதல ரால்வரு தீதுரை என்றுமு ளஃதறிவாய்
காதல ருக்கது ஓர்கடு கொப்பது கோகிலமே!
ஆதலி னாளுள மச்ச மொழிந்தவர் தாளணைவாய்
மாதர்கு லத்தணி யே!குயி லே!மட மாமயிலே! (25)
தலைவர் தரிசனை
மயிலவள் வாச நறுமலர் நற்கனி கள்பலவாய்
தயவொரு மேனியர் தாள்முனர் வைத்துவ ணங்கினளே!
கயிலையர் காதலர் கண்டரு ளன்புமி கக்கனிந்தே
துயரறு நல்லமு தீந்தெழில் தோகையை நோக்கினரே! (26)
நோக்கொடு நோக்குற நீதியர் நாயகர் நாயகியின்
ஆக்கையும் ஆருயி ரும்அருள் நோக்கத னால்தடவி
தேக்கெழில் செம்பவ ளத்திரு வாக்கமு தாலணைத்து
சேக்கையெ னும்மவள் சிந்தையு ளின்பசு கந்தருமே! (27)
தலைவி மயக்கம்
தருசுக முற்றவள் தானவர் மாண்பினைத் தானறிந்தே
பெருமகிழ் வெய்தின ளாயினும் பேதைமை மிக்குறவே
திருமகன் சிந்தையு ளேற்றிடு மோ?இலை கைவிடுமோ?
வருநிலை பின்னது யாதென எண்ணிம யங்கிடுமே! (28)
தலைவர் ஏற்பு
ஏற்றனம் நின்னுயிர் என்னுயிர் அன்புடை ஏந்திழையே!
கூற்றமும் நிற்குறு காதினி காத்திடும் கோதறவே!
போற்றியெ னைப்பணி பொன்மயில் நின்னன் பேபெரிதே!
தேற்றிம னந்தணிந் துன்னக மேகிமீண் டும்வருகே! (29)
தலைவி வருந்துதல்
வருகென ஏகென மாதவர் சொற்கணை காதிலுற
உருகிடு நெஞ்சமு குத்தன கண்ணில்நீர் விம்மினளே!
பெருகிய வேதனை யால்பிரி வஞ்சிம யங்கினளே!
கருகும லரிதழ் போலவும் வாடிமெ லிந்தனளே! (30)
தலைவர் ஆற்றுதல்
அனலிடு ஓர்மெழு காயினை அன்பின் கனிமொழியே
எனதுளும் நிற்பிரி வேற்றில னாயினும் இன்றினிதே
மனையக மேகிவ ரல்முறை மாகடல் நீர்குறைமோ?
நினைப்பயந் நோருள் நடுங்கிட லின்றியில் சேர்ந்திடுமே! (31)
சேர்ந்தனை யின்புறு சேயிழை நின்னொடு என்னுறவு
ஆர்ந்தனை இன்றல முற்பிற வித்தொடர் பாகலினால்
நேர்ந்தனை என்னை நெருங்கிய ணைந்தனை நீள்விழியே!
கூர்ந்தனை அன்புகொ ழுங்கனி மாதுகு லக்கொடியே! (32)
கொடிதுனை யேகெனக் கூறுதல் கோதகல் காரிகையே!
நெடிதுவ ளர்ந்திட வேண்டுன மக்கிடை யன்பறிவாய்
படிமிசை நீயெனைப் பற்றிய பற்றுமி கப்பெரிதே!
குடிவிளங் காயிழை கூர்மதி வான்குலத் தேயிணைந்தே! (33)
இணைதுணை கூறவு மிங்கெளி தோஎன தாருயிரே!
அணையுடை வெள்ளமெ னப்பெரு கன்பினை என்னிடமே
அணையுனை யீன்றவர் ஆன்றவர் புண்ணியர் நற்குலத்தோர்
குணமணி நின்னொடு கூடியுள் ளின்பம்கொ ழிக்கிறதே! (34)
தலைவியுரை
கொழிபழ மைப்புது வானமு தாற்சுவை கீதமெனும்
மொழியழ காலெனுள் மோகமெ ழுப்பிய மாமணியே!
விழியழ காலெனை வென்றடிமை கொளு வேந்துமக்கே!
பழியல வோஎனைப் போவெனக் கூறுதல் பாரிடையே! (35)
பாரிடை ஏகெனில் பேதுறும் பேதையுள் மன்னுயிர்தான்
காரிடி ஏமன்க ரத்துறு மோஅறி யேனரசே!
சீரடி நன்னிய சிந்தையள் தேவுளம் சற்றிரங்கி
ஈருடல் ஓருயி ராகிஇ ணையஇ றைஞ்சுதுமே (36)
தலைவர் உரை
அஞ்சலொ ழிஎன தாருயிர் நாயகி நீயலவோ!
வஞ்சஎ மன்படர் வந்துற லில்லைநிற் கென்றறிமின்!
நெஞ்சமி டங்கொளு நேரிழை யேயறி நீர்மையிதை
துஞ்சலொ ழித்தனை தாயக மேகிடு மீண்டிவர்வாய்! (37)
தலைவி செயல்
மீண்டிவர் வாயெனு மாமணி நாயகர் மாண்புரையைத்
தாண்டிலள் தோன்றலர் சீர்திரு மேனியைப் பன்முறைபின்
காண்டினி தேகினள் காதலர் பாலுயிர் தங்கிடவே!
கூண்டுன டந்தது கூடிடு தோழியர் ஐயுறவே! (38)
தோழியர் ஐயம்
ஐயுறு தோழியர் அண்மினர் பாங்கியை யாதுகொலோ!
மையுறு கண்ணினள் நந்தலை விக்குறு மாற்றமிது
மெய்யதி லேபச லைகொடு காணுறும் மேவியிவள்
மையலொ டாடவர் யாரொடு மாவிக லந்தனளோ! (39)
அனனடை யில்தடு மாற்றமும் கொண்டனள் அன்பினியாள்
புனலுள தாமரை வெயிலிடு மாறென வாடினளே
நனியிவள் வெண்கல மணிகள் குலுங்கிடல் போல்நகுவாள்
இனிதிவட் குற்றது யாதென ஆய்குவம் அன்புறவே! (40)
நற்றாய் வினவல்
உறுபிணி யாதுகொல் ஒண்டொடி யே!கனி யே!இனியே!
மறுகினை பாலடி சில்அயின் றாயிலை கிள்ளையொடும்
உறவிலை ஒண்முகம் நற்றெளி விங்கிலை யாவரொடும்
குறுகிலை அச்சுறு காட்சிகண் டாய்கொலோ கோமளமே! (41)
மேவியி வட்கிட ராவி புகுந்தது போலுமிவண்
தேவரின் ஆட்டியை வேலனைச் சென்றழை தீங்ககல
ஆவது செய்குவம் என்றுநற் றாயும் செவிலியுமே
பூவல மார்குறி கேட்டனர் தேவரை நோற்றனரே! (42)
தலைவி நகுதல்
ஏதிவர் செய்கைகள் யானுறு நோயைஅ றிந்திலரே!
மாதென தாருயிர் நோயும தன்மருந் தானவரே!
மாதன வானவர் கோனவர் ஆர்மொழித் தேனவரே!
காதலர் சீரடி யானணைந் தாலுயிர் இன்புறுமே! (43)
திருவுரு வெளித் தோற்றம்
இன்புற என்னுயிர் மேவிய நாயகர் பொன்னொளிரும்
அன்புயர் ஆரெழில் தோற்றமிங் கெங்கணும் காண்கிறதே
என்பினி லூடுரு விக்கலந் தன்புயர் என்னிறைவர்
இன்னமிழ் தாம்வடி வென்னுளம் புக்குயர் மாண்பிதுவே! (44)
இதமுயர் ஏந்தலர் வெண்பரி யேறியெ ழில்மிகவே
மதிவத னத்திடை மென்னகை பொங்கிட இன்மொழியால்
புதுமைபு கன்றிடு காட்சிக ளெங்ஙனெ வர்க்குரைப்பேன்
பதியவ ரும்எளி யாளு மறிந்திடு பான்மையதே! (45)
தலைவி உறக்கம் வாராது தவித்தல்
மையலெ ழுந்தது துஞ்சலொ ழிந்தது வான்தலைவர்
தையலெ னையணை தாபமி குந்தது அம்பொழிற்கே
மெய்யர்வ ருங்கொலோ மெல்லிய லெந்தனை மேவிடவே
வெய்யது அன்னவ ரைப்பிரிந் திங்குறல் என்செயுமே! (46)
தலைவர் தலைவியை நினைத்தல்
என்செயும் ஏந்திழை இன்னுயி ரிற்கலந் தன்புடையாள்
பொன்மகள் போல்பவள் எற்பிரிந் தேகவ ருந்தினளே!
என்னுள மும்அவள் எண்ணமி குந்துந லிகிறதே!
தன்னையும் தந்தனள் என்னையும் கொண்டனள் தண்மதியே! (47)
தலைவி நெஞ்சொடு கிளத்தல்
மதியேயு னக்கிந்த மாயம்னி கழ்ந்தது யாதுகொலோ?
கதிவேறி லையந்தக் கானவர் வானவர் காட்சிதரும்
பதியேக னவிலும் போதந்த ணைந்தனர் பேரருளார்
நிதியேயெ னக்கவர் நெஞ்சக மேவி நிலைத்தனரே! (48)
நிலையாது நெஞ்சே அலைகின்ற தேன்கொலோ நீதியர்தாம்
குலையாத இன்பம் கொளவே அருட்செயும் கோமகனார்
கலையாவு மிங்கோர் உருவான நாதர்க ரம்பிடிப்பார்
நலம்யாவும் நிற்கு நிலையாகு மஞ்சிடேல் நன்னுதலே! (49)
தலைவி மீண்டும் பொழிலிடைச் சேரல்
ஏனோஅ வர்பால் இடையீடில் எண்ணம் இழைகின்றதே
நானேஇவ் வல்லில் நலிகின்ற தில்லை பொழில்புகுவேன்
தானேவந் தென்னைத் தனியாளு மின்பத் தலைமகனார்
தேனேர் மொழியர் திருத்தாள ணைந்திடச் செல்குவனே! (50)
தலைவியைக் கண்ட தலைவருரை
செல்கென என்னித யங்கொடு சென்றனை சேயிழையே!
அல்பக லாயுமென் னாவியுள் ளார்ந்தனை அன்னமென
ஒல்கின டந்திடு ஓர்கனி யுன்னைஇ னிப்பிரியேன்
நல்கிடு நல்லமு தாருயி ரின்பம்ந னிதருமே! (51)
தலைவி வரைவு (திருமணம்) வேட்டல்
இன்பம் நனிதரு மென்னுயிர் நாயக! இங்கெளியாள்
அன்பில் நனைந்தன ளாயினும் அம்புவி காணுறவே
பொன்னின்ம லர்க்கரம் மங்கள தாரகை பூட்டியருள்
நன்மண நாளதை நாடிவி ழைகுதென் நெஞ்சகமே! (52)
தலைவர் தலைவியை ஆற்றுதல்
அகமென தாகினை அஞ்சுத லேனென தாருயிரே!
சுகமண மார்திரு நாளது சேணிலை காந்தருவம்
நிகழ்ந்திடு மின்றறி நேரிழை நீமகிழ் கொண்டிடுமின்
அகமதி லுற்றவை யாவைகொல் அன்பின் எழிலுருவே! (53)
தலைவி உரை
உருவதில் மாற்றம் உணர்ந்தனர் தோழியர் ஐயுறலும்
அருமையென் அன்னைசெ விலியும் என்னியல் பாய்ந்தறிந்து
வருகென தேவரின் ஆட்டியை வேலனை வேண்டியிவண்
வெருவின ளோஎன வீண்செயல் மேவினர் உள்நகுமே! (54)
தலைவர் கலந்துழி மகிழ்தல்
உள்ளமெ னக்கென ஆக்கிய ஒண்டொடி ஓங்குணர்வின்
வெள்ளம திற்திளை மெய்யுற எண்ணமு தேற்றிடுவாய்
கள்ளமி லாஎழிற் காரிகை நின்னைம ணம்புரிவோம்
தெள்ளிய சிந்தையொ டேகுக தேம்பொழில் மீண்டுறுவோம்! (55)
தலைவர் பாங்கரொடு சார்தல்
மீண்டிறை யோடும கிழ்ந்தணை மெல்லியல் ஏகிடவும்
ஆண்டுகொள் நாயகர் அன்புறு பாங்கரும் அங்குறவும்
ஈண்டிவ ணேகிய ஏந்திழை என்னவள் அன்னவளை
ஆண்டு மணங்கொள ஆர்ந்தனம் ஆய்ந்துக ருத்துரையே! (56)
பாங்கர் தனியே நினைத்தல்
ஏந்தலர் இன்ப வடிவினர்க் கேற்றவள் இன்னவளோ!
ஏந்திழை எங்குளள் யாதவள் மாட்சிமை யாய்ந்தினிதே!
மாந்தளிர் மேனியர் மாமறை நாயகர் வான்தலைவர்
ஆர்ந்ததன் நீதமும் ஆய்ந்துரை கூறுதும் அன்னவர்க்கே! (57)
அன்னமெ னும்நடை அன்பொளிர் கண்படை நாற்குணத்தாள்
சின்னஇ டைமதி யார்வத னம்உயர் பண்புடையாள்
கன்னல் மொழியினள் கண்ணிய மார்ஒழுக் கம்உடையாள்
என்னரு நற்றலை வர்க்கிவள் ஏற்றபொன் ஆயிழையே! (58)
தலைவர்க்குப் பாங்கர் உரை
ஆய்கெனும் ஆண்டகை யீர்!எழில் ஆரணங் கேற்றவளே!
தூய்மையள் தோகையள் சீர்குணம் யாவையின் கோவையவள்
வாய்மையள் வானவர் சேயவள் மெல்லியல் அன்பொளிரும்
ஆய்கலை ஆற்றலும் தோற்றமும் ஆர்குண மோங்கியதே! (59)
தலைவி தலைவரைச் சந்தித்தல்
ஓங்கிய தேம்பொழில் உள்ளமு வந்தெழில் ஒண்டொடியாள்
பாங்கியொ டாங்குறத் தேங்கமழ் தாரொளிர் பொன்னரங்கர்
ஆங்குயர் அம்புயச் சீர்பதம் அன்பினர் ஆர்ந்துதொழத்
தேங்கிய அன்புயர் சேயிழை சாரம கிழ்ந்தனரே! (60)
திருமண நிகழ்வு
மகிழ்ந்து கனிந்து வணங்கி யிணங்கிய மாதரசி
நெகிழ்ந்திறை முன்னுற நீதியர் ஏற்றனர், “நன்னுதலே”!
இகந்தனி லின்புறு இச்சக மேவிநின் ஆருயிர்க்காம்
சுகம்பெறு மெய்ந்நெறி சார்ந்ததின் நாள்முதல் தேர்ந்தறியே! (61)
மங்களதாரகை தரிப்பித்தல்
(காஷாயம், மூலமந்திரம் அருளல்)
அறியுன தாகமும் அம்புவி வாழ்வும டங்கியபின்
வெறியர்கொ டுங்கரம் வீழ்ந்துஎ ரிபுக லின்றியொரு
நெறியுயர் காவியின் நித்திய மாலைநி னக்கருளும்
செறியுயிர் சிந்தையில் மந்திர மூலம் தெளிகனியே! (62)
இன்ப இரவுக் குறிப்பு
(பிரம்மோபதேச உத்திரவு)
இனியை உனக்கொரு இன்பமி குத்திடு நாளிரவில்
நனியுயர் வானக வாழ்வினில் ஏற்றிந லங்கனிந்த
கனியைநி கர்த்துயிர் தெளியப ரஞ்சுடர் இல்லறமே
இனிதுபு ரிந்திட எத்திடும் ஒத்தினி தின்புறுவாய் (63)
பேரின்பத் திருநாள் (பிரம்மோபதேசம்)
இன்புறு என்மயி லேயிது என்பதி வானகம்காண்
என்புனெ கிழ்ந்திட யான்தவ மாற்றிடும் தேனகம்காண்
துன்பமி லானெறித் தூயவர் போற்றிடும் கோனகம்காண்
தென்பொடு நோற்றுயர் தேவர்கள் சன்னதம் பூணகம்காண் (64)
காணிது மந்திர மாமறை ஆகம காவியமும்
தோணுறு மெய்ப்பதி சீர்கயி லைப்பதி யாவுமிதே!
மாணெழில் கற்பக வான்தரு மாநிதி யார்துறையே!
ஆணெனு யானுறு ஆடக மாளிகை அன்பணியே! (65)
அணிதிகழ் ஆயிழை யேயிது ஆன்றபெ ரும்பொருளே!
கணித்தருக் கேஇய லாதபெ ரும்முதல் காண்மயிலே!
பணிமனு தேவரென் றாகப் பிறப்புறும் பேருதரம்
பிணிதவிர் வானமு தம்தரும் க்ஷேத்திரம் தீர்த்தமுமே! (66)
மேவரு மேனிலை வைப்புக ளோங்கிடும் சீர்தலமே!
தேவரும் மூவரும் வாழ்ந்திடு மாபதி இப்பதியே!
தூவெளி ஏழ்நிலை மாடமு மாதவர் வாழ்பதியே!
நாவதி னால்முழு மாட்சிமை செப்பிட யார்வலரே! (67)
ஏந்திழைக் கிவ்வண்ணம் எத்தனை யோஅமு தீந்தருள
மாந்திய மாமகள் வாமணர் மாட்சிமை தானறிந்தே
வேந்தரின் மெல்லடி மிக்கவ ணங்கம ணாளருமே
தாந்துணை யாகுமென் றேவரம் தந்திடப் பெற்றனளே! (68)
பாங்கியுரை
பெற்றனை வானிதி பேறிதற் கீடிலை பொன்மயிலே!
உற்றனை நாயக ராயவர் ஓங்கு பரம்பொருளே!
மற்றுமெய் யாண்டகை ஆதியும் அந்தமும் ஆனவரே!
தெற்றெனத் தேர்ந்தறி தெய்வவ ரோதயர் சர்வமுமே! (69)
சர்வமும் ஆகிமுன் ஆதிசி வம்மெனத் தேர்ந்தவரே!
சர்வவ சேதன சேதன மாமதன் வித்தவரே!
சர்வம தங்குல உற்பவத் தாயகர் ஆனவரே!
சர்வவ ரங்களும் சன்னதம் தாங்கிய கோனவரே! (70)
கோகுல மேவிய ஸ்ரீஉறரி பிரம்மன் கணநாதர்
மாகும ரேசரும் புத்தர்கி ரேக்க ரிஷிமோசே
ஆகுநல் அன்புயர் இயேசுமு கம்மது சல்ஆலம்
மாகதி தந்திடு மெய்வழி ஆண்டவர் தாமிவரே (71)
தாமனைத் துள்ளும் அனைத்தையும் தம்முளே கொண்டவரே!
கோமகன் மெய்வழி ஆண்டவர் என்றோர் குருதிலகம்
நாமகள் ஓர்திரு மேனிகொண் டன்ன கலையரசர்
பூமகள் பூரிக்கப் பொற்றாள் நடமிடல் போற்றுவையே (72)
வாய்ந்த துனக்கொரு மாபெரும் செல்வம் வளர்மதியே!
தாயொடு தந்தையும் சற்குரு தெய்வமாம் நின்கணவர்
தூய்மையி னோடவர் தாள்பணிந் தேத்துக இன்பமதே!
ஓய்வில தாகும் உடலுயிர் முத்தியைப் பெற்றிடுமே! (73)
பெறுபலன் ஓன்றல நான்மறை ஆகம சாஸ்திரங்கள்
உறுதம துள்ளக மெய்மையொ ளிர்ந்திடும் சர்வமதம்
மறுவில தாயொரு மைகொளு மாட்சிமை காணுறலாம்
மறுமையி லிம்மையில் மாபெரு நற்றுணை கொண்டனையே! (74)
கொண்டனை கோதறு வாழ்வினில் உய்திபெருந்திருவே!
விண்டுரை மந்திர மத்தனை யும்எழிற் காட்சிதரும்
கண்டனை மெய்ந்நெறி காதலர் என்றுநிற் காத்தருள்வார்!
உண்டனை மெய்யமு தொண்டொடி யேயினி தோங்கிடுவாய! (75)
தலைவி இல்ல மடைதல்
ஓங்கிட வென்றுரை உத்தமி பாங்கியு ரைத்திடவும்
ஏங்கிய சிந்தையள் ஏந்தல ரைப்பிரிந் தில்லுறவும்
ஆங்குறு தாயரும் தாதையும் சுற்றமும் கண்டிவளின்
பாங்குயர் மங்கள தாரகை கண்டுசி னங்கொளுமே! (76)
சினமெழு நோக்கின ராங்கவ ராகலும் சேயிழையாள்
புனலெழு கண்ணினள் பெற்றவள் பால்தனி யேகியவள்
எனையணை நாயகர் இணையிலர் வானவர் காண்குவையேல்
நனியெனை வாழ்த்துவீர் நல்வினை கூட்டிடப் பெற்றனனே! (77)
பெற்றவ ரும்உடன் உற்றவ ரும்சினத் தல்இயல்பே!
நற்றவ ரும்கலை கற்றவரும் பணி நாதரவர்
கொற்றவ ரும்நிதி யுற்றவ ரும்பெற லாகுவதோ!
மற்றினி யான்பெறு பேறுஎன் நாயக ரின்தயவே! (78)
தயவுடை யார்திற புயமுடை யாரவர் தண்ணளியார்
நயமுடை யாரவர் நண்ணிய பேரெமன் பயமடையார்
இயல்பதில் வானவர் ஏரெழில் கோனவர் எய்தியவர்
துயரறு வாழ்வுறு சீர்வரம் நல்குமி றையவரே! (79)
இறையவர் தன்னை மணந்தனை யென்றினி யாவருமே
நிறைவுறு நெஞ்சின ராகுவிர் நீள்புவி யாவினுமே
மறைபல வும்புகழ் மாயவர் தூயவர் மாதவரே
கறையல உய்திகொள் துறையிது காணுமின் அன்னையரே! (80)
ஊர் அலர் தூற்றுதல்
அன்னியர் யாவரை யோயிவள் ஆர்மணம் கொண்டனளாம்
என்னியல் பின்னவள் செய்கைபு வியிது ஏற்பதுவோ!
தன்னியல் முன்னவர் தானறி யாதொரு காரியமோ!
மின்னியல் பாள்மனம் மிக்குரம் கொண்டது போலுமதே! (81)
அதுவழி யென்றுளம் அன்பகச் செல்வியர் தாம்துணியப்
புதுவழி காட்டின ளோசிறு பேதையும் என்னாம்கொல்?
இதுகலி காலமே இப்படி யும்ஒரு பெண்ணுளளோ?
மதிவலி கொண்டவள் மற்றினி வந்துறல் என்னாமோ! (82)
மோகமி குத்தவ ளாயினும் பெற்றவ ருற்றவர்பால்
சோகமி குத்தவள் போற்குறி காட்டித் திறம்பேசி
ஆகுநெ றிச்செலு மோஇது வோமுறை யாரவரோ
பாகுமொ ழிச்சிறி யாள்மிகு நெஞ்சுரம் கொண்டவளே! (83)
அவளுரை கேட்டிடில் விந்தைய தாம்தனை ஆர்கணவர்
சிவனயன் மாலொரு மேனியர் என்றுரை செப்பினளாம்
தவமுனி வோர்துதி வானவர் மன்மதர் என்றனளாம்
அவநெறி மாற்றிடு ஆண்டவர் என்றும்ந வின்றனளே! (84)
ஏதிது காலமும் இப்படி யானது ஊரீரே!
மாதவர் வானவர் கோனவர் தேனவர் வன்மறலி
சேதமி லாநெறி சேர்த்திடு வன்புய ஆற்றலினோர்
மாதெனை ஏற்றவர் என்றுத லைக்கனம் கொண்டனளே! (85)
பெற்றோர் தலைவரைக் காணல்
கொண்டனள் செந்நெறி கோதறு நாயகர் பாற்குறுகி
கண்டவர் மாட்சியும் காண்திற நீட்சியும் வானமுதம்
விண்டருள் மாதிறம் வேந்தரின் பேரெழி லார்தயவும்
மண்டிணி வையகத் தீடிலை யென்றுவி யந்தனரே! (86)
அந்தண ரோ?யிவர் செந்தண லோனெனும் ஆரியரோ?
கந்தர்வ ரோ?குக னோ?மத னோ?குழல் நாயகரோ?
நந்தமர் காணுறல் நல்வினை யே!பெரும் பாக்கியமே!
விந்தையி லைநமர் மெல்லியல் சார்ந்தது நீதமதே! (87)
தலைவர் திருவருளுரை
நீதியர் சன்னிதி நண்ணினர் கையுறை கொண்டினிதே!
ஆதியர் அன்பெழ நோக்கிய வர்நலம் ஆன்றறிந்து
மேதினி யில்எழில் மாதினியள்தனை ஈன்றவரோ!
சீதனம் நாம்தரும் நீர்பெறும் விந்தைய தாமிதுவே! (88)
வேணியள் கோகிலம் நீரடை காத்தளி காகமனை
காணியெ னத்தகும் கண்மணி போல்பவள் தன்னைமிகப்
பேணிந லந்தரும் பேதுறல் வேண்டிலம் பெற்றவரே!
பூணணி சீர்மதி பூட்டி மிகுந்த சுகந்தருமே! (89)
தருமெய்ந்நெ றிக்குளே சார்ந்தனள் தாரகை யன்னவளை
அருமையெ மக்கென ஆக்கினம் அஞ்சிடல் நீரொழிமின்
பெருமையு மக்குறும் பெண்மணி யெந்தமக் கீந்ததனால்
திருமெய் வரந்தரும் சிந்தையுள் ஏற்றுமிக் கோங்குமினே! (90)
தலைவர் திருவுள்ளம் தலைவியை நினைத்தல்
ஓங்கிய அன்பினள் உற்றனள் என்பதம் வானமுதம்
ஈங்கருள் போதினில் ஏகின ளென்றவ ளைநினைத்தே
ஏங்குள மாயினன் யாண்டுறு வாளிவள் ஏந்திழையாள்
பாங்குடை யாளெனைப் பற்றிய பற்றுமி கப்பெரிதே! (91)
பெரிதெனைத் தேடிய கூடக மாந்தருள் அன்னவளும்
இரீஇய லாயினள் இன்பன லங்கனி பண்பினளே!
தெரியிழை என்னுளும் யானவ ளுள்ளிலும் ஆயினமே!
பரிசென மெய்யமு தேற்கவ ருங்கொல்வி ரைந்தினிதே! (92)
தலைவி திருமுன் வருதல்
இனியவ ளங்குற ஏற்றவ ரோதயர் இன்கனிவாய்த்
தனியமு தந்தரத் தான்பெறு மாதுனெ கிழ்ந்தனளே!
தனியுன துற்றவர் நண்ணி மகிழ்ந்தவ ணேகினரே!
கனிமொழி யேயவர் யாது கழறினர் கூறிடுமே! (93)
தலைவிக்கு வாழ்த்துரை
மேதகு வானவர் தன்னைம ணந்தனை மெல்லியலே!
தீதல செந்நெறி யேகினை மாண்பின லாகினையே!
ஈதுனின் நாயகர் இன்கரு ணைத்தய வாலறிவாய்!
நீதியர் பற்றில் நிலைத்தினி உய்கென வாழ்த்தினரே! (94)
தலைவர் திருவுரை
வாழ்த்தின ராயின் அவர்க்குமென் ஆசிவ ழங்கிடுமே
ஆழ்த்திநின் னுள்ளம் அன்புடன் ஈங்குறை ஆயிழையே!
சூழ்த்துவ ருந்துயர் நீங்கிசு கோதய மோங்கிடுமே!
பாழ்த்தஇ ருவினை மும்மலம் தாபமும் நீங்கிடுமே! (95)
திக்விஜயப் பிரிவு
நீங்கியிங் கேயுனை ஏகிடும் எண்டிசை யும்விஜயம்
ஆங்குறு மன்பர்கள் ஆருயிர்க் கேயருள் பெய்திடவே
ஏங்கலை மாதுநீ என்னுளம் நின்னொடு தானுறையும்
பாங்கிய ரோடிவண் பான்மறை பாடிம கிழ்ந்திருவே! (96)
தலைவி நிலை
திருவெனு மாதவர் திக்விஜ யம்செலத் தேன்மொழியாள்
அருளெனும் ஆதியர் ஆய்ந்தருள் ஆர்மறை நான்கினையும்
பெருமகிழ் வோடினி தோதிம கிழ்ந்தன ளாயிடினும்
திருவுரு காண்கில லாலுளம் தேம்பி நெகிழ்ந்தனளே (97)
நெகிழ்ந்துறு நெஞ்சினள் நேரியர் செல்திசை நோக்கினிதம்
சுகந்தரு சோதியர் சீர்திருப் பொன்னடியே வணங்கும்
அகந்தனி லின்புற ஆருயிர் நாதர்இ லங்கிடினும்
சகந்தனில் பொன்னெழில் மேனிகண் டாரெழில் தானுறுமோ! (98)
திக்விஜயம் சென்று திரும்புதல்
தானவர் சற்சனர் சூழ்புடை தேசிகர் தாமெழிலார்
கோனவர் பூரணர் ஆரெழில் பொங்கிடக் கோகுலரும்
வானவ ரும்நனி வாழ்த்திட வந்தருள் செய்தனரே
தேனவ ளும்எழில் சேவடி போற்றினள் வையகத்தே (99)
தலைவியின் செயல்கள்
திருவவதாரத்திருநாள் கொண்டாடுதல்
வையகம் உய்யவே வான்முதல் தானொரு மாண்புருவாய்
மெய்யெழில் கொண்டிவண் உற்றத னமதி நன்நிறைநாள்
துய்யர்அ வதரித் தாண்டருள் செய்ததி ருநாளை
தையல் அமுதுப டைத்தும கிழ்ந்துகொண் டாடினளே! (100)
பொங்கல் படைத்தல்
கொண்டல்கொ டைக்கரர் கோமக னார்மெய் அவதாரம்
கொண்டது போற்றிட உண்மதி தன்முதல் நன்நாளில்
விண்டும கிழ்ந்தினி மைநிறை பொங்கல்ப டைத்தனளே!
அண்ட ரின்நாயகர் பானைப் பலியேற் றாரினிதே! (101)
காணும் பொங்கல்
இனியந றுஞ்சுவைப் பொங்கமு தாவின மும்பெறமா
முனிவர் தனிகைம ணிமலை மைந்தர் அமுதருளும்
கனிவுபெ ருக்குறக் கும்மிகள் ஆடலும் பாடலுமெய்
முனிவர் மதலைகள் கூடிட ஆடினள் நன்மதியே! (102)
பங்குனித் திருவிழா
நன்மதி பூரணை நாளினில் நாயகர் தாதையுடன்
பொன்திரு மேனிதேன் மாவொடு பாலமு தார்ந்ததுவும்
இன்னருள் விண்ணுறு பேருப தேசம தேற்றதுவும்
நன்னய நல்லமு தம்படைத் தின்பமிக் கோங்கினளே! (103)
ஆடுமேய்ப்புத்திருக்கோலம் காணல்
ஓங்கிய வானவர் ஜீவரை மேய்த்திடு முற்கூறாய்
பாங்கொடு ஆடுகள் மேய்த்தது மாமொரு நற்பணிகொள்
தாங்கரு சிந்தைத கர்ந்துற ஏழையர் கோலமிறை
ஆங்குற விண்மதிப் பூரணை நாளினிற் காட்டிடுமே! (104)
பாசுபத தவசன்னதக் கோலம் காணல்
காட்டிடு கோலமும் ஆருயிர் வாட்டிடும் காசினியை
ஆட்டிடும் வெங்கலி மாற்றிட மாதவச் சன்னதங்கள்
பூட்டிட சீர்பரங் குன்றினில் மேவுத வக்கோலம்
தேட்டுயர் சன்னதக் கோலமும் கண்டினி துய்ந்தனளே! (105)
கருமானக் குடிக்காட்சி காணல்
உய்ந்திடு மாந்தர்கள் ஓர்நெறி பெற்றிட மெய்யருள
ஐயர்மு னைந்திடப் பொய்த்துற வாளர்தம் வேடமெலாம்
மெய்யரு ணர்ந்ததும் மேல்புனை காவியை நீத்ததுவும்
துய்யரின் ராஜகம் பீரமும் கண்டுக ளித்தனளே! (106)
பிச்சையாண்டவர் திருக்கோலம் காணல்
கண்டுக ளித்தனள் காமலி தேக விழைவதனால்
மண்டுபி ணிக்குவை பாவம னைத்து மிரிந்திடவே
தொண்டர்கு ழாத்தொடும் பிச்சை மெய்யாண்டவர் கோலமுற
அண்டர்தம் நாயகர்க் காரமுதம் படைத் துய்ந்தனளே! (107)
கார்த்திகைத் திருவிழா
உய்ந்திடு மெய்வரம் ஓங்கிஉ லகளந் தார்தருவார்
நைந்திடு ஜீவரைக் காத்திடும் கார்த்திகைக் கங்கையரே!
ஐந்தெழில் ஆர்விளக் காலயம் அங்கண்ஒ ளிர்ந்திடவே!
பைந்தொடி போற்றிப் பணிந்து வணங்கிநெ கிழ்ந்தனளே! (108)
புனல் ஜென்மம் கொண்டாடல்
நெகிழ்ந்து இனியவள் நீதியர் மெய்ப்பொரு ளீந்திடவே!
மகிழ்ந்துகொ ளும்மவள் மாதவ நாள்புனல் ஜென்மமென
உகந்துகொண் டாடிஒ ளிதிகழ் மேனியர் ஆழியருள்
அகழ்ந்து தரஉயிர் ஆர்பதம் பெற்றுச்சி றந்தனளே! (109)
பெற்றோர் அங்கத்தினராதல்
சிறந்தநற் பண்பினள் தாயொடு தாதையும் மெய்ந்நெறிசார்
அறந்திகழ் ஆழியர் அம்பொன் மலரடி ஆர்ந்ததுவும்
நிறைந்தனள் நெஞ்சகம் நீதியர் வான்புகழ் நீடினிதே
உறைந்தனள் உத்தமர் ஓங்குபொன் னார்கழல் போற்றினளே! (110)
தலைவர் விராட்தவம் ஏகத் திருவுளம் கொள்ளல்
போற்றிவ ணங்கிடப் பொற்பதி மேவிய ருள்அரசு
ஆற்றிய மெய்வழிச் சாலையின் ஆண்டவர் ஆர்திருவுள்
நோற்றவி ராட்தவம் இப்புவி நற்புவி யாக்கிடவே
ஏற்றனர் ஓர்முடி பெங்கள் இதயம் பொடிபடவே (111)
இறுதித் திருக்காட்சி அருளல்
வேதம ணிக்குயில்வேணியர் மெய்த்திரு மாளிகைமுன்
மேதினி வந்துறு வானவர் கோனெழில் காட்சிதரும்
நீதிநி றைந்தப ரம்பொருள் யாவரும் காண்மினென
ஆதியு ரைத்துவி ராட்தவ மேகின ராருயிரே! (112)
தலைவி எண்ணி இரங்கல்
“ஆருயிர் நாதர் அருளெழ நோக்கலும் அன்பொழுக
சீர்திரு வாய்மொழித் தேன்கட லாழ்த்தும் திருவழகும்
தேரசை வாடிடு பேரெழி லாரும் திருநடையும்
நேரினிக் காண்பது என்றுகொல் ஏழையென் நெஞ்சகமே (113)
நெஞ்சக மேயவர் நேரியல் சீரெழில் மென்னகையும்
கொஞ்சுமொழியருள் போதினிற் காண்சிர சின்அசைவும்
துஞ்சலி லாத்தவப் பொற்றிரு மேனியின் மின்னொளிவும்
தஞ்சம டைந்தவென் நெஞ்சகம் நேரினிக் காணுறுமோ! (114)
காணுறு மோஎழிற் காட்சிக ளெத்தனை கோடியுறும்
மாணுறு வானிதி ஈந்திடு போதுறு கோலமதும்
பூணெழில் ஆரணர் பொன்னரங் கென்னையர் பேர்தயவும்
சேணுள தாயின சிந்தைம கிழ்ந்திட வந்துறுமோ (115)
வந்தனை யோவென வாய்நிறை யச்செவி யேகுளிர
சிந்தைக னிந்துயி ருந்தளி ரவரும் தேன்மழையே!
எந்தனி லத்திடை யாவரு ரைத்திடும் இத்திறமே!
சிந்தைக லங்குது தேற்றுவ தாரினி சொல்சகியே! (116)
எத்தனை பேருரை யாடிடி னும்மவர் எஞ்சலிலா
தத்தனை பேரைவெல் ஆர்திறம் தந்தவ ரோதயரே!
வித்ததி லேவிளை வேற்றிய மாபெரு வித்தகரே!
மெத்தயி ங்கேகொடி ஏங்கிடும் தாங்குகொ ழுங்கொம்பே! (117)
கொம்பினைச் சீவிய காளைதி ரிவதுபோலுரமாய்த்
தெம்புட னுங்களின் சேவடி சேவித் தினிதுறுவோம்
வம்பெதிர் பேசிட வாய்க ளிலாதுரம் தந்தவரே!
செம்பொருளேனும் திருவொளிர் காட்சிகட் கெங்குறுவோம்! (118)
ஏடெடுத் தாலெழுத் தாணிமு னையினி லேறியினி
தூடிருந் துகவி மாரிபொழிந் திடுமோர் துணையே!
கோடி நிதிக் குவை கொண்ட தயானிதியே!”எனவே
பாடியிளங்கலை சிந்தை மெலிந்திவண் வாடினளே! (119)
வாடிட வேண்டுதில் என்றமு தம்திரு மான்மியமும்
தேடிடு கூடகம் வாக்கியம் பூரண வேதாந்தம்
நாடிம கிழ்ந்திட நல்கிய பொற்பதம் வாழியரோ!
கோடிக டந்தகு ரீஸ்வரர் வான்புகழ் வாழியரோ! (120)