திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/037.ஞானக் குழமகன்



ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



37. குழமகன்

தொகு

இலக்கணம்:-

அஃதாவது குழவிப் பருவத்தானாகிய ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு படைக்கப்பெறும் இலக்கிய வகை இஃது.

திறம்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென் - றறைந்தகலி
வெண்பா வுலாவாங் குழமகன்மேன் மேவிரைவ்
வெண்பாக் குழமகனா முற்று.
- வெண்பாப் பாட்டியல் 49
கலிவெண் பாவாற் கையினில் கண்ட
குழமக னைச் சொலின் குழமக னாகும்
- இலக்கணவிளக்கம்   870
குழமக னென்பது கோள்வனை மாதர்கள்
இன்புறக் கண்ட இளவலைப் பாடலே
- பிரபந்த தீபம் 78
கலிவெண் பாவாற் காரிகை யார்கரங்
கண்ட விளமைத் தன்மை யுடைய 
குழமகன் தன்னைப் புகழ்ந்து கூறுவது
குழமக னாமெனக் குறிக்கப் படுமே 
- முத்துவீரியம்  - 1114

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தாங்கள் அவதாரம் செய்துவளர் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் அழகினை திருவீதி உலாவாகப் பாடப்பெறுகின்றது.

ஞானக் குழமகன்

காப்பு

நேரிசை வெண்பா

முழுமுதல்மெய்த் தெய்வம் முத்தியருள் வித்து
தொழுதகையார் நாயகமே மெய்யார் - குழமகனே
பாடிப் புகழ்போற்ற பற்றினன்பா தம்மூலம்
நாடிப் பணிந்தேன் நிதம்.

நூல்

கலிவெண்பா

ஆழி துயின்றோரே ஆர்கயிலை நாடரெனும்
ஊழி நடத்தவந்த உத்தமரே - வாழியரோ!
ஆதி இருட்கோள மாயிருந்து அன்றியங்கி
மேதினிமற் றெல்லாம் மிகப்படைத்து - நீதி
நெறியிந்த நீடுலகில் நின்று நிலைக்கவென்று
அறிவார்ந்த நான்மறைகள் ஈந்தும் - வெறிசார்ந்து
மக்கள் வழிகெட்டு மாள்கின்றார் என்றறிந்து
தக்கார் இறைதூதர் சான்றோரை - மிக்கனுப்ப
அன்னவர்கள் நன்னெறியை ஆர்ந்துரைத்தும் கேளாது
வின்னம் அவர்க்கியற்றி வேதனைசெய் - வன்னெஞ்சர் (10)
செய்கொடுமை எண்ணிய தேவாதி தேவரிந்த
வையகத்தே ஓர்மெய் வழிகாட்டத் - துய்ய
திருவுள்ளம் கொண்டார் திருஅவதா ரம்செய்ய
ஒருதீர்க்கம் கொண்டு உவந்தார் - திருவார்
யுகம்படைக்க வென்று உவந்தோர்நன் மேனி
சகத்தெடுக்க வந்துற்றார் சாமி - புகழ்புரியும்
ஆசியாக் கண்டத் தருள்நா வலந்தீவில்
மாசில் தமிழ்வழங்கும் மண்டலத்தே - ஆசகன்ற
திண்டுக்கல் சார்ந்து திகழ்கல் மலிக்குறிஞ்சி
விண்தொடுவோம் என்றுயர்ந்த வெற்புகளும் - மண்டியங்கு (20)
சூழ்ந்திருக்கும் நங்காஞ்சிச் சிற்றாறான்நல் வளங்கள்
ஆழ்ந்திருக்கும் வேளாண்மை ஆன்றோர்கள் - வாழ்ந்திருக்கும்
மார்க்கம்பட் டியென்னும் மல்லல் திருவூர்மெய்
ஆர்க்கும் அறவோர்கள் அங்குறைவர் - பார்க்குள்
பகவான் அவதரிக்கும் பாக்கியம்பெற் றோங்கித்
திகழும் திருவூர்அச் சீரூர் - தகையோங்கு
வேளாண்மை யாற்றும் மிகஉயர்ந்த பண்பாளர்
தாளாண்மை மிக்குடையார் தண்ணளியர் - தோளாண்மைச்
சீரார் ஜமாலுசேன் என்னும் திருவாரும்
பேராளர் பல்லறங்கள் பண்புடன்செய் தாளாளர் (30)
அன்னவர்க்கு வாய்த்த அருமைமிகு வாழ்வரசி
பென்னம் பெரியதாய் பேருடையாள் - மன்னுமெழில்
நல்லறத்தாள் நாற்குணத்தாள் நற்பொறையாள் கற்பரசி
இல்லறத்தில் சீரோங் கெழிலுடையாள் - நல்லபல
பண்புகளும் சேர்உருவாள் பத்தரைமாற் றுத்தங்கம்
பெண்கள் குலதிலகம் பெண்மானாள் - மண்பொறையாள்
அன்புக் கணவர்பணி அட்டியின்றிச் செய்திடுவாள்
இன்பக் கனிபெண் மகவிருவர் - பொன்பதுமை
போல்வார் எனினும்ஓர் புத்திரனை வேண்டி
சீலர் இருவருமே சிந்தைநெகிழ்ந்(து) ஆலயங்கள் (40)
எங்கெங்கும் சென்று இயல்நேர்த்தி கள்செய்து
தங்கள் பிரார்த்தனைகள் சார்த்திடுவர் - தங்கங்கள்
மெய்வைத்த சிந்தைஇறை மேல்வைத்த பக்திநிறை
உய்வைத் தரும் அரனை உன்னிநின்றார் - தெய்வம்
இத்தகையோர் தாங்கள் எழுந்தருளிப் போதரற்கு
ஒத்தயிடம் என்றுதிரு வுள்ளத்தே - மெத்தநினைந்(து)|r}}
அன்னை கருவமர்ந்தார் ஐயிரண்டு திங்கள்வளர்
முன்னை முதல்வர் அவதரித்தார் - இன்னமுதே
நாழியோர் மேனி கடிகையோர் வண்ணமென
ஆழியான் அண்ணல் அரிதுவளர் - பூழியின் (50)
தாலாட்டுத் தாய்பாட பொன்குமுத வாய்பாட
சீலர்கேட் டெழிலார் திருக்கண்வளர் ஏலவல்லார்
மென்மலரின் மெல்லிதழ்போல் மெல்லிமைகள் மெல்லெனவே
பொன்பதுமை கண்வளரும் பேரழகை - நின்திருவைக்
காணக்கண் கோடி யிருந்தாலும் போதாது
மாணெழிலே! மாதவமே! மாமணியே! பூணரிய
தங்கத் திருவுருவே! தன்னேரி லாஇன்பம்
பொங்கிவரும் வான்கங்கைப் பூரணமே! - மங்காத
வான்சுடரே! மாமேரே! வண்ண மலர்க்குவையே!
தேன்பிழிவே! தெள்ளமுதே! தேடரிய வானிதியே! (60)
தத்தி எழுந்து தளர்நடையும் தான்பயின்று
முத்தாடி இன்பத்துள் மூழ்குவித்து - பித்தாக்கிச்
செம்பவள வாய்மலரும் சிந்தையள் ளும்மழலை
பைம்பொன் சிலையோ எனத்திகழ்ந்து - உம்பர்தொழும்
பாலகராய் மார்க்கநகர் பண்பாளர் எல்லாரும்
சீலமிகு 'தம்பி'எனச் சீர்பேர்சொல் - கோலமிகு
ஆதியொரு மேனிகொடு அம்புவியில் வந்துயிந்த
நீதிவிளை வாடல் நிகழ்ந்துமுயிர்ச் - சேதியிதன்
பிற்காலம் தான்நிகழ்வ பேர்செயல்கா ணாரெனினும்
தற்காலம் சேயின் திறன்வியந்தார் - நற்காலம் (70)
கண்டோர் மயங்கிக் களிப்பெய்தும் தூரிகையில்
விண்டெழுதாச் சித்திரந்தான் மிக்குயிரும் - கொண்டதுவோ
நன்றுதிண் ணைப்பள்ளி நாடிப்பொற் குன்றொளிரும்
தெள்ளிய பொற்பனையின் சீரேடு தான்சுமந்து
வெள்ளி மணித்தேர்தாள் வீதிவழி - ஒள்ளிதின்
சீராய் அசைந்துநடம் செய்ததுவோ - பாரில்
செம்பொன் சிலையெழுந்து சின்ன நடைநடந்து
இன்பம் திரண்டெழுந்து ஏகியதோ - பைம்பொழிலில்
ஆடிநிற்கும் பூங்கொத் தசைந்துவரும் தென்றலிதோ
ஈடிணையில் தந்தத் தியல்பதுமை - கோடி (80)
நிலவொளியைக் கூட்டி அழகொளிரச் செப்பனிட்ட
கலைமதியக் கற்றைத் திருவுருவோ - விலைநிகரில்
கட்டாணி முத்தோ கனவயிர மாமலையோ
தொட்டணைத்து முத்தியிடச் சிந்தைவிழை - கட்டித்
தங்கமோ செம்மைத் தரளமணிப் பெட்டகமோ
இங்ஙண் வருணித்து எல்லோரும் பொங்குணர்வால்
கண்டோமே இந்தக் கனிச்செல்வக் கண்மணியை
எண்டிசையும் நந்தமக்கு இன்றுநன்றே - கொண்டிடுவோம்
தங்கமுகம் கண்டவர்க்கு எங்கு(ம்)நலம் தேடிவரும்
துங்கத் திருமணியைத் தூயஒளித் - தங்கணியை (90)
விண்டுரைக்க மாட்டாத மெய்த்திருவை மன்பதையில்
அண்டர் வணங்கும் அருண்மணியைத் தண்டேன்
தான்துளிர்க்கும் கற்பகமே! கற்கண்டே! அஞ்சுகமே!
வான்மலர்ந்த பொற்பகமே வாழியென - தான்வாழ்த்தும்
உலாப்பாடி வைத்தோர் உவந்தியற்று காலை
உலாவரும் உத்தமனைக் கண்டோர் - குலவும்
பேதைமுதல் ஏழ்பருவ மாதர்களும் கண்டற்றே
காதல் மிகுந்து கருத்தழிந்தார் - ஆதலால்
இடைமெலிந்தார் பூண்ட வளைகழன்றார் செல்லும்
நடைதளர்ந்தார் நெஞ்சும் கலங்கி - உடைநெகிழ்ந்தார் (100)
என்றுரைப்பார் ஆயின் எம்பெருமானைக் கண்டோர்
நன்றெல்லாம் பெற்றார் நலிவற்றார் - மன்றில்
ஒத்த வயதுடையோர் ஒன்றித்தோள் சேர்வார்கள்
மற்றவர்கள் 'தம்பி'யென மிக்கழைப்பர் - மெத்தவுமே
தாய்மை வயதுடையோர் தாவிமுத் தாடிடுவர்
ஆய்ந்த முதியோர்கள் ஆசீர்செய் - வாராய்ந்து
ஊர்க்குப் புதியோர் உவந்துகண்டு செல்லமிது
ஆர்குழவி என்று அதிசயிப்பர் - சீராரும்
ஆசிரியர் பாடம் அறிவொளிரச் செப்பிடுங்கால்
மாசறியா மாணிக்கம் வாய்மலர்ந்து - தேசொளிர (110)
துள்ளிவரும் சொற்கள் தொடர்ந்துவரும் பாசுரங்கள்
அள்ளும் மணியோசை ஆர்ந்திடுங்காண் - வெள்ளமென
ஆன வயதுக்கு அப்பாலே நுண்ணறிவு
ஞானம் உருவெடுத்த நன்மேனி - தேனைக்
குழைத்தினிது சொல்லாடும் கோமான்காண் கன்னல்
கழைபிழிந்த சாற்றின் சுவையாம் - இழைந்தோடும்
மென்னடையால் மண்மாது பூரிப்பாள் விண்மாது
பொன்பொழிவாள் பூமாதும் நாமாதும் - இன்பமுற்று
அன்பொருவர் கூட்டும் அறிவுவளர் தேட்டின்
பொன்பதுமை போதருமோர் பேரெழிலைத் - தென்பாண்டிச் (120)
சிங்கக் குருளை சிறுநடைதான் செய்ததுபோல்
தங்கமா னின்மென் தளர்நடைபோன் - எங்கள்
குலத்தின் அருட்ஜோதிக் கோமான் இளவல்
நலமாகச் செய்யும் உலா

ஞானக் குழமகன் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!